வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை: ராமதாஸ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். கட்சிகள் பெறும் ஓட்டுகள் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களை கட்சி நியமிக்கும். அப்படி நடை பெறும்போது இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை. பணச்செலவு ஏற்படாது. திருச்சி மேற்கு தொகுதியில் பா.ம.க. போட்டியிடவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துகிறோம். உள்ளாட்சி தேர்தலில் இரண்டு, மூன்று ஓட்டுகள் போடனும். அதனால் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்வது போல ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவரையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

மோனோ ரெயில் திட்டத்தால் நன்மை கிடையாது. அதை கைவிட வேண்டும். அரசு உறுதியாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, மது விலக்கை கேட்கிறவர்களே கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று கூறியுள்ளார். கள்ளச் சாராயம் விற்பது யார் என்று அவர் கூற வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை. ம.தி.மு.க.வில் திராவிட என்ற வார்த்தை உள்ளது. அதை ஏற்க முடியாது. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்.

அரசு அமைக்கின்ற துணை நகரம் அரசு சொந்த நிலத்தில் அமைகிறது. அதனால் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பா.ம.க. மட்டுமே மக்களுக்காக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் முறைகேடு நடக்க வழி வகுக்கும். அதனால் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றார்.


நடிகர் நடிகைகள் டைரக்டர்கள் சம்பளம் வாங்குவதில் போட்டி:பஞ்சு அருணாசலம் வேதனை


சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் நந்தா நந்திதா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை பட அதிபர் பஞ்சு அருணாசலம் வெளியிட, பட அதிபர் கேயார் பெற்றுக்கொண்டார். நடிகர் நாசர், பட அதிபர் கேயார், டைரக்டர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள். டைரக்டர் ராம்ஷிவா நன்றி கூறினார்.
விழாவில், பஞ்சு அருணாசலம் பேசியதாவது:
முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.
ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80 ல் இருந்து 120 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன.<
அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்.
ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்
யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருந்து வருகிறது.'' இவ்வாறு பஞ்சு அருணாசலம் பேசினார்.


நடிக நடிகையர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி அதிகளவு பணம் வாங்க வைத்தவர்களே இந்த ரசிகர்கள்தான்.எல்லாவற்றையும் விட முட்டள்தனமானது நடிகர்களின் பாணர்களுக்கு பால் ஊற்றுவது.நடிக நடிகைககள் எந்தவிதத்தில் முக்கியமானவர்கள்.ஒரு விவசாயையும் நடிகனையும் தராசில் வைத்தல் விவசாயின் பக்கமே தராசு சாயும். இந்த உலகில் மதிக்கப்பட வேண்டியவன் கையொப்பம் வாங்கப்பட வேண்டியவன் விவசாயியே.சன் தொலைக்காட்சியில் ஆக ஓகோ என்று விளம்பரம் செயப்படும் மன்காத்தாவே ஒரு வெற்று போத்தல்.புதிய அறிமுகங்களை போட்டு படங்களை எடுங்கள்.தமிழகம் எங்கும் நடிக்கக்கூடிய இளம் தலைமுறையினர் நிறையவே இருக்கின்றார்கள்.

அழகிரி, மனைவி, மகனுக்கு மதுரை கலெக்டர் சகாயம் சம்மன்!

மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி மற்றும் மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார்.

மூவரும் வரும் 16ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டி வருகிறார். இதற்காக அப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளார் அழகிரி.

இந் நிலையில் கல்லூரிக்கு அருகில் உள்ள வயல்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி இந்தப் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் எம்.ராமலிங்கம், இது தொடர்பாக கலெக்டர் சகாயத்திடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தயா பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் காரணமாக பாசன கால்வாய்கள் சேதமடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கல்லூரியின் நிறுவனத் தலைவர் மு.க.அழகிரி, அறக்கட்டளையின் உறுப்பினர்கள் காந்தி, துரை தயாநிதி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளார் கலெக்டர் சகாயம்.

அதில், ஏழை விவசாயிகள் இந்த கால்வாய் பாசனத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கால்வாய் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நீர்ப்பாசன பணிகள் சட்டம் 1959 பிரிவு 7ன் கீழ் இது குற்றமாகும். மேலும் இந்த பாசன கால்வாய் மேம்பாட்டுக்கு 38.87 லட்ச ரூபாயும், வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 50.74 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏரிகள் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

தயா அறக்கட்டளை கட்டிய கல்லூரி காரணமாக அரசு செலவழித்த பணம் விரயமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாய பணிகள் சட்டம் 1959 தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன நிர்வாகச் சட்டம் 2000, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை அழகிரி கல்வி அறக்கட்டளை செய்திருக்கிறது.

எனவே இது குறித்து விளக்கம் அளிக்க வரும் 16ம் தேதி காலை 11 மணிக்கு என் முன் ஆஜராகவேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்மன் கடந்த 6ம் தேதியே அழகிரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Director ஜனநாதன்:பன்னாட்டு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமாண்ட சினிமா Anna Hazare

Some 500 ex Tigers visit South



An Army soldier seems to be extending a hand of friendship to rehabilitated ex-Tiger members at the Fort Railway Station yesterday during their five-day visit to the South. Pic by Pradeep Pathirana
By Olindhi Jayasundere
Some 500 rehabilitated ex-LTTE cadres who are on a five-day trip visited the Fort Railway Station yesterday while on their way to the south, as part of the final phase of their rehabilitation programme at the Vavuniya rehabilitation camp.
They began their trip from the Omanthai railway station and after their visit to Colombo would proceed to Kalutara and Kataragama. The ex LTTEers will travel by bus to Matara and Galle and later travel to Embilipitiya before they return to Vavuniya.
One of those who had been with the LTTE for ten years told Daily Mirror they were happy to visit the southern parts of the country. “Most of those in the rehabilitation camp have not been to other parts of the country or even stepped on a train. Many of them have not spoken to a Sinhalese apart from Army officials in the camp,” ex LTTE cadre Adhrani Newton said.
He said he followed a counselling course at the rehabilitation camp after which he was selected to study for a diploma, which he will complete in about months and added that he also took part in a 12-day rehabilitation programme in Colombo.  “After I finish the rehabilitation programme I will start working. My ambition is to become a counselor,” he said. “We want to thank the authorities for organising this trip. We did not think we will have the opportunity to visit the south,” Selvarasa Selvadeevan another former LTTEer told those who had gathered around him.
Army Chief of Staff Daya Ratnayake said the rehabilitated cadres were brought to the south as the final stage of the rehabilitation programme and added that such programmes would be carried out in the future as well.
“We have been planning this reintegration process for a long time. It has been a challenge but it has finally come together after two years of rehabilitation. This is what we have been working for all along,” Major General Ratnayake said.
Rehabilitation and Prison Reforms Minister Chandrasiri Gajadeera said initially the rehabilitation camp had 11,000 ex-LTTE cadres and now there are only 2,700 who would also be reintegrated into society.

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !


அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும், மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கொலை செய்யப்படுகின்றனர்









உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் மருத்துவம்  ஒரு ‘புகழ்’பெற்ற துறை.  இங்கு கிடைக்காத மருத்துவ வசதிகளே இல்லை. ஆபரேஷன் செய்த தடம் கூட இல்லாமல் சிறு துளைமூலம் அறுவைசிகிச்சை,  இதய சிகிச்சைக்கான சிறந்த வல்லுநர்கள், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனிசிறப்பு பெற்ற “ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள், குழந்தை பேறுக்கான சிகிச்சை மையங்கள் என்று இந்தியாவில்தான் மருத்துவங்கள் எத்தனை வகை! மருத்துவமனைக்குச் சென்றால் வீட்டுக்கு திரும்பி வரக்கூட விரும்ப மாட்டீர்கள் என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன.
வெளிநாட்டினரை கவந்திழுக்க தனியாக மருத்துவ சுற்றுலா – அதாவது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட குறைந்த செலவில் இங்கு மருத்துவம் பெறுவதற்காகவே இதனை அரசாங்கம் தனியாகவே விளம்பரப்படுத்துகிறது. பெரியவர்களிலிருந்து கைக்குழந்தை வரை அதில் அடக்கம்.  அவ்வப்போது, செய்திதாள்களில் கூட பார்த்திருக்கலாம், ஒரு வெளிநாட்டுக் குழந்தை தாய் தந்தையின் அரவணைப்பில் சிரித்துக்கொண்டிருக்கும் – மருத்துவத்துக்காகவே இந்தியாவுக்கு பறந்து வந்த குழந்தையென்று தனியாகக் கட்டம் கட்டிப் போட்டிருப்பார்கள்.
ஆயினும் இந்த வசதிகளும் வாய்ப்புகளும் ஏழைகளுக்கு இல்லையென்றுதான் கடந்தவாரம் ஆந்திராவில் உயிரழந்த குழந்தைகள் மூலம் நிருபணமாயிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 11 குழந்தைகள், பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் இறந்திருக்கின்றன. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில்தான்  மனதை பிசையும் இந்த கொலைகள் நடந்திருக்கின்றன. அதே ஆந்திராவில் சாகக்கிடந்த சாயிபாபாவை உயிர் பிழைக்க வைத்த  அந்த ஆந்திராவில் 11 குழந்தைகள் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா?  கடந்தவாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்  48 மணிநேரங்களுக்குள்ளாகவே   இக்குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்திருக்கின்றன.
இது தங்களது கவனக்குறைவினால் ஏற்பட்டதல்ல என்று ஆரம்பத்தில் மருத்துவமனையின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் உண்மை வேறாக இருந்தது. ஆக்சிஜன் போதாமையால் மூச்சடைத்து குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள்.மருத்துவமனை நிர்வாகத்துக்கு  இதனை சொல்லியும்  அவர்கள் கண்டுக்கொள்ளவேயில்லை.  குழந்தைகளை மிகவும் அபாயகரமான நிலையில்தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர்களது ஆபத்தான நிலைதான் சாவுக்குக் காரணம் என்றும் வாதிட்டார்கள்.   இந்த மருத்துவமனையில் மொத்தம் 20 படுக்கைகள் இருக்கின்றன. ஆனால், எப்போதும் 30 குழந்தைகளாவது இருக்கும்.  அதோடு, ஆக்சிஜனுக்கான சாதனங்களில் இரண்டுதான் வேலை செய்யும். மீதி இரண்டு பழுதானவை.
“இது ராயலசீமாவின் பகுதியின் ஒரே  மருத்துவமனையாக இருப்பதால் நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களிலிருந்து வருகிறார்கள்.  போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்களை திருப்பி அனுப்ப முடியாமல்  கவனித்துக்கொள்கிறோம். தேவையான மருத்துவ வசதிகளுக்காக  அரசாங்கத்தை அணுகியிருக்கிறோம் மேலும் இது குறித்து விசாரணை நடக்கும்” என்கிறார்  கர்னூல் மாவட்டத்தின் கலெக்டர் ராம்ஷங்கர் நாயக். ஆனால், அரசாங்கமோ இதற்கு நேர்மாறாக  சொல்கிறது.  ஆந்திராவின் குடும்பநல அமைச்சரான  ரவீந்திர ரெட்டி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கலெக்டர் அனுப்பிய ரிப்போர்ட்டில் டூட்டியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் தங்களது சொந்த கிளினிக்கில் இருந்திருக்கின்றனர். இந்த கவனக்குறைவே குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்றுசொல்லியிருப்பதாகக் கூறுகிறார். மேலும், இது மருத்துவர்களின் தவறாலேயும் கவனக்குறைவாலும்  நிகழ்ந்ததுதானென்றும் சொல்கிறார்
இப்படி இவர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கையில்  மருத்துவமனையிலிருந்து  ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறது, பிரபல மருத்துவர்களைக்கொண்ட குழுவொன்று.
அதாவது, மருத்துவமனையில் 16 இன்குபேட்டர்களும், 4 சூடேற்றிகளும், 4 வெண்டிலேட்டர்களும் பிற சாதனங்களும் இருக்கின்றன.  போதுமான அளவுக்கு மருந்துகளும் இருப்பில் உள்ளது,  கடந்த ஆக்ஸ்டு 30 -ஆம் தேதியும் செப்டம்பர் 1-ஆம் தேதியும் இறந்த 10 குழந்தைகளுள் ஒரு குழந்தைதான் அங்கேயே – அதாவது அந்த மருத்துவமனையிலையே பிறந்த குழந்தை.  அதில் 4 குழந்தைகள் குறிப்பிட்ட காலத்துக்கு முந்தி பிறந்தவை. மூச்சுத்திணறலின் காரணமாகவே  அனைத்துக் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்று பிரபல  குழந்தை மருத்துவர்களைக் கொண்டு முதலமைச்சருக்காகத் தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட் கூறுகிறது.
இந்தியாவின் மருத்துவ வசதிகள் என்னதான் உலகமே மெச்சக்கூடியதாக இருந்தாலும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இந்த வசதிகள் இல்லை. எங்கிருந்தோ வந்த குழந்தையானாலும் வசதியும் கையில் பணமிருந்தால் எந்த சிகிச்சையும் கிடைக்கும்.
இப்படி எவ்வளவோ வசதிகள் இங்கிருந்தும் அமெரிக்காவுக்கு பறக்கிறார் சோனியா. அவரைப் பற்றி கவலைப்பட  எத்தனை மீடியாக்கள், அரசியல்வாதிகள்!  ராமச்சந்திராவில்  மருத்துவம் பார்த்துவிட்டு மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பறந்தார் ரஜினி. அவர் இட்லி சாப்பிட்டதும்,  தண்ணீர் குடித்ததும்,  நடந்ததும் தலைப்புச் செய்திகளாயின. அதோடு சிகிச்சை முடிந்து அவர் தனியாக நடந்து வந்ததை பார்த்து கோபமும் ஆவேசமும் கண்டனமும் தூள் பறந்தன.  செத்துப்போய் பலநாட்களான சாயிபாபாவுக்குத்தான் அலங்காரங்களும் அலப்பரைகளும் எத்தனை!
அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும் மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கால்நடைகளை கொட்டடியில் அடைப்பதுபோல அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை என்பதைவிட கொலை செய்யப்படுகின்றனர் என்பதே பொருத்தமாக இருக்கும்.
உள்நாட்டில் மருத்துவர்கள் விகிதாச்சாரம் மிகக்குறைவாக இருந்தாலும் வெளிநாட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. இந்தியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்கின்றனர். அதிலும், ஊரகப்பகுதிகளுக்கு ஒரு வருடம் பணிபுரிய வேண்டுமென்று சொன்னதற்கே மருத்துவ மாணவர்கம் ஸ்டிரைக் செய்தனர். மருத்துவம், ஆசிரியர்  போன்ற தொழில்கள் அவற்றின் மகத்துவத்தை இழந்து பணம் பண்ணுவதற்கான தொழிலாக மாற்றியிருக்கிறது முதலாளித்துவம்.
ஆரம்பத்தில் சொல்லிய மருத்துவ சுற்றுலா வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளிநாட்டு பணம் படைத்த நோயாளிகள் மூலம்  அரசாங்கமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது.   இன்னும் வரும் வருடங்களில் இவர்களின் வரவு அதிகரிக்கலாமென்று  அதற்கான் முதலீடுகல், சொகுசு பங்களாக்கள், கலாச்சார சுற்றுலாக்கள் திட்டமிடப்படுகின்றன.  ஆனால், உழைக்கும் மக்களோ போதுமான வசதியின்றி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பந்தாடப்படுகின்றனர். ஏனெனில், உழைக்கும் மக்களிடமிருந்து பறிப்பதற்கு எதுவுமில்லை உயிரைத்தவிர!

பாலசந்தர்: இளம் கலைஞர்களின் சாதனை என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது


தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் கே. பாலசந்தரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார் முத்தமிழ்ப் பேரவை இரா. முகுந்தன்.
புது தில்லி: செப்.8: திரைத்துறையில் இளைய தலைமுறையினர் செய்து வரும் சாதனைகள் என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என இயக்குநர் கே.பாலசந்தர் கூறினார்.இந்தியத் திரையுலகின் உயரிய விருதான பால்கே விருது பெறும் இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் தேசிய விருது பெறும் திரைக்கலைஞர்கள் ஆகியோருக்கு தினமணி நாளிதழும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து தில்லியில் வியாழக்கிழமை பாராட்டு விழாவை நடத்தின.
நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.
இந்த நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் பேசியதாவது:தமிழர்கள் பொதுவாக புத்திசாலிகள்; தில்லித் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். அரசு எங்களுக்கு விருதும் பாராட்டும் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே தினமணி நாளிதழும் தில்லித் தமிழ்ச் சங்கமும் எங்களைக் கௌரவித்துப் பாராட்டு விழா நடத்துவதுதான் அதற்குச் சாட்சி.இங்கு பேசியவர்கள் அனைவரும் என்னைப் பாராட்டியே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமா விருது வாங்கியிருக்கிறேன். பல இளம் கலைஞர்களும் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் இந்த முறை தமிழ்க் கலைஞர்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்திருப்பது, தமிழ் சினிமாவின் வீச்சு அதிகரித்திருப்பதைக் காட்டியுள்ளது."ஆடுகளம்' படத்திற்காக வெற்றிமாறன் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் ஆகியவற்றுக்காக இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். நான் அப்படி இதுவரை இரண்டு விருதுகள் வாங்கியதேயில்லை. தனியாக சிறந்த திரைக்கதைக்கோ, இயக்கத்துக்கோ பெற்றிருக்கிறேனே தவிர ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளைப் பெற்றதில்லை. இதை நான் வெற்றிமாறனிடமும் சொல்லி நானும் இதுபோல ஒரே நேரத்தில் இரு விருதுகளை வாங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டிருக்கிறேன்.

நல்ல படைப்புகளுக்காக இளம் கலைஞர்கள் விருது பெறும்போது "அட, இப்படி நாம் எடுக்கவில்லையே' என அவர்கள் மீது எனக்கு உண்மையிலேயே பொறாமை ஏற்படுகிறது. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவர்களைப் போல நல்ல படைப்பை நாமும் தரவேண்டுமே என்ற நல்ல எண்ணம்தான் காரணம். இளம் திரைக்கலைஞர்களின் சாதனை என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என்பதுதான் உண்மை.தனுஷ் சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கிறார். அது ஏதோ விளையாட்டுக்குக் கிடைத்த விருதல்ல. அவருடைய திறமையான நடிப்புக்குக் கிடைத்த விருது. இந்த சிறு வயதில் தேசிய விருது பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. "உனக்கு தேசிய விருது வாங்கும் எண்ணமே இல்லையா' என நான், ரஜினியிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் "ஜனங்களின் விருது போதும்' எனக் கூறிவிட்டார். ரஜினிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்ததாகவே நான் கருதுகிறேன்.இங்கு எல்லோருக்கும் நடைபெற்ற இந்த சிறப்பான பாராட்டு விழாவில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை விட்டுவிடுங்கள்... இளைய தலைமுறையினரின் திறமையை அங்கீகரித்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் உயர்ந்தால் தமிழ் சினிமா உயரும்.தமிழ்த் திரைப்படத்துறையிலிருந்து மேலும் பல புதியவர்கள் விருதுகளைப் பெறவும் இங்கு விருது பெற்றவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துகிறேன் என்றார் பால்கே பாலசந்தர்.

யாழ் மாநகரசபையில் எதிர்க்கட்சிக்குள் குத்து வெட்டு!எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு!

யாழ் மாநகரசபையில் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் முடியப்பு றெமீடியஸ் அவர்களால் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது. கீறீஸ் பூத விவகாரம் குறித்து பொது மக்கள் அனுபவித்து வரும் அசௌகரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் சபையை பகிஸ்கரிக்க வேண்டும் என றொமீடியஸ் அவர்கள் தெவித்திருந்தார்.
இது குறித்து அங்கு கருத்து தெரிவித்திருந்த றொமீடியஸ் அவர்கள் சார்ந்த எதிர்க்கட்சியினரும், மற்றும் ஆளும் தரப்பு அணியினரும் கருத்து தெரிவிக்கையில் ஏற்கனவே .இது குறித்து மாநகரசபை கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியிருந்ததாகவும், இதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஏகமனதாக அனைவரும் ஏற்றுக்கொண்டு கண்டனத்தை தெரிவித்திருந்தனர் என்றும், ஆகவே இது குறித்த சபை பகிஸ்கரிப்பு தற்போதைக்கு தேவையற்றது என்றும் தெரிவித்திருந்தனர்.

சினிமா தொழிலாளர்கள் அறிவிப்பு பிலிம் சேம்பர் முடிவு எங்களை கட்டுப்படுத்தாது



சென்னை : பிலிம் சேம்பர் எடுத்துள்ள எந்த முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து பெப்சி தலைவர் ராமதுரை, பொது செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிலிம் சேம்பர் நிர்வாகம் தற்போது நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையை வேறு கோணத்தில் திசை திருப்புவதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் கடந்த 2000ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்தத்தை எங்களுடன்தான் போட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ள படி, இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில்தான் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் எதிர்ப்போ மறுப்போ தெரிவிக்காத பிலிம் சேம்பர், இப்போது திடீரென்று கூட்டம் போட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்த வகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் அந்தந்த மாநில மொழி தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி, தொழிற்சங்கங்களோடு சம்பள ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல முறையில் தொழில் நடத்தி வருகிறார்கள். மற்ற மாநில தொழிலையும் தொழிலாளர்களையும் பெப்சியையும் பாதிக்கும் வகையில் பிலிம்சேம்பர் அறிக்கை வெளியிட்டிருப்பது ஏதோ உள்நோக்கத்துடன் உள்ளது.  எனவே படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு நியாயமான புதிய சம்பளத்தை வழங்கி வருவதால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அதே போல மீதமுள்ள சங்கங்களின் சம்பளம் பற்றி பேச எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

-இந்திய இலங்கை கடற்படை பேச்சுவார்த்தை!SLN and IN Joint Staff Level Talks at Colombo

இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் பொருட்டு, இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று ஆரம்பமானது.

இந்திய கடற்படையில் இருந்து 6 அதிகாரிகளும், இலங்கை தரப்பில் இருந்து 10 அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இதில் இந்திய தரப்பில் ரியல் அட்மிரல் முருகேசன் தலைமை வகிக்கிறார்.

பொருள் பறிமாற்றம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் இந்த பேச்சவார்த்தை இடம்பெறவுள்ளது.

The joint staff level talks between the Sri Lanka and Indian Navies began at Navy Headquarters today and will continue till 09th September 2011. A wide range of issues of bilateral importance will be discussed with a view to strengthen the friendly ties between the Navies of the two neighbouring countries.

The Indian Navy delegation is led by Rear Admiral P Murugesan AVSM, VSM, the Assistant Chief of Naval Staff (Foreign Cooperation) of the Indian Navy and is comprised of six members. On arrival, the head of the Indian delegation made a courtesy call on the Commander of the Navy Vice Admiral Somathilake Dissanayake, WV,RSP*,VSV,USP,ndc.

The Sri Lankan Navy delegation of ten members is led by Rear Admiral Jayantha Perera, USP, ndc, psc, the Director General Operations of the Sri Lanka Navy.
Delegates will focus on operational and training as well as logistics and technical matters concerning the two Navies. They will also share views on preventive measures to curb potential threats of drug trafficking, arms and human smuggling in Palk Bay and Palk Straits to enhance maritime security.

வெள்ளையருக்கு பக்கவாத்தியம் வாசிப்பவரா கொழும்புக்குத் தேவை ரணில் கேள்வி .

கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுக்கும் நபரிடம் ஒப்படைப்பதா? அல்லது வெள்ளையர்களுக்காக பேசுபவருக்குக் கொடுக்கப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாநகரசபைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகுமெனவும் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய கொழும்பில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியின் மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது; ஐக்கிய தேசியக் கட்சி சகல இன மக்களையும் உள்வாங்கிய தேசியக் கட்சியாகும். இக்கட்சியில் மட்டுமே சிங்கள மக்களுக்குரிய அதே சம உரிமை ஏனைய தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சியை ஆரம்பிக்கும்போதே ஸ்தாபகத் தலைவர் டி.எஸ்.சேனநாயக்க தமிழ், முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக் கொண்டே ஆரம்பித்தார். அவர் அன்று எந்தவொரு சமூகத்தையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அனைவரையும் இலங்கையர்கள் என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்தினார். அந்த தேசியக் கோட்பாட்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று வரை விடுபடவில்லை. தேசிய அடையாளத்திலிருந்து இக் கட்சி பலம் பொருந்திய ஜனநாயக அரசியல் கட்சியாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னரே ஏனைய சகல அரசியல் கட்சிகளும் உருவாகின. அவை காலத்துக்குக் காலம் அவற்றின் அடையாளத்தை இழந்து போனது மட்டுமன்றி மக்கள் பலத்தையும் இழந்து விட்டன. இனவாதத்தை முற்றாக நிராகரித்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமேயாகும். திறமைசாலிகளுக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்குமே நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இந்த விடயத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை. கொழும்பு மாநகரசபைக்கு மேயராக வரக்கூடிய சகல தகுதிகளும் முஸம்மில் ஹாஜியாரிடம் காணப்படுகின்றது. அதனால்தான் அவரை மேயர் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றோம். அவர் சாதாரண மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர். கொழும்பு மாநகர மக்களை புரிந்து வைத்துள்ளவர். மக்கள் ஆதரவும் அவருக்குகிட்டி வருகின்றது. ஆளும் தரப்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் மக்களுடன் நெருக்கமாக செயற்படுகிறாரா எனக் கேட்க விரும்புகின்றேன். சாதாரண பொதுமக்களுக்காக குரல்கொடுப்பவரை மக்கள் ஆதரிக்கப் போகின்றார்களா அல்லது வெள்ளையர்களுக்காகவும் மேற்குலகத்துக்கு பக்கவாத்தியம் வாசிப்பவருக்கு ஆதரவளிக்கப்போகின்றீர்களா எனக் கேட்கிறேன். கொழும்பு வாழ் மக்களின் வீடுகளை உடைத்து, காணிகளைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்குத் தாரை வார்ப்பதுதான் மகிந்த சிந்தனையின் தேசியத்துவமா என்று கேட்கிறேன். உழைக்கும் வர்க்கத்துக்கும் சாதாரண மக்களுக்கு அடிவயிற்றிலடிக்கும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தின் ஆரம்பமாக இந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தல் அமையப்போகிறது. கொழும்பு மாநகர வெற்றியுடன் மக்கள் போராட்டத்தை நாடெங்கும் முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கின்றோம். கொழும்பு மாநகரில் முஸம்மில் ஹாஜியார் தலைமையில் நாம் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் படையாகும். கொழும்பு வாழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாகவே இந்த மாநகரசபைத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். ஆளும் தரப்பினால் கொள்ளையடிக்கப்பட்ட காணிகளை நாம் அதிகாரத்துக்கு வந்ததும் அந்த மக்களிடமே திருப்பி ஒப்படைப்போம். மக்களின் அனுமதியின்றி விற்கப்பட்ட காணிகளின் உறுதிகளைக் கிழித்தெறிவோம். ஒப்பந்தங்களைத் தீவைத்துக் கொளுத்துவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஐ.தே.க.பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரும் உரையாற்றினர்

அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்

hakkeemவிசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்
 நிலுவையிலுள்ள விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கும் அதே நேரம் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மேலும் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குமென அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் விளக்கமளித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதிலுள்ள கெடுபிடிகளை நீடிப்பதற்கான மறைமுக செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் இங்கு கூறுகின்றன. எனினும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாலும் அதேநேரம் யுத்தத்தின் பின்னரான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வினை எட்டுவதற்கும் இந்த விதிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன். நீதி அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பில் இதனை தெளிவுபடுத்த வேண்டியவனாக இருக்கின்றேன். அவசரகாலச் சட்டமானது கடந்த 30 வருடங்களாக அமுலில் இருந்து வந்தது. இந்த சட்டம் அமுலில் இருந்தமையால் சாதாரண சட்டம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் பொலிஸார் பலர் இருந்தனர். தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. (மேலும்

புதிய சட்ட ஏற்பாட்டை ஹக்கீம் சமர்பிப்பு - ரணில் எதிர்ப்பு


குற்றவியல் வழக்கு கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட சட்ட ஏற்பாடுகள் அடங்கிய பிரேரணை ஒன்றை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார். இதன்படி அவசரகாலசட்டம் இல்லாது செய்யப்பட்ட நிலையில் சாதாரண சட்டத்தின் கீழ் நாட்டின் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலத்தினுள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். எனினும் விசேட காரணங்களுக்காக குற்றவியல் வழக்கு கட்டளைச் சட்ட புதிய விசேட ஏற்பாடுகளின் மூலம் சந்தேகநபர் ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருக்க பொலிஸாருக்கு அதிகாரமுண்டு. இரண்டு வருடங்களுக்கு இந்த சட்ட ஏற்பாடு அமுலில் இருக்கும் எனவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து நீதிமன்ற அனுமதியின்றி 48 மணித்தியாலங்கள் மாத்திரமே தடுத்து வைத்திருக்க முடியும் என புதிய சட்ட ஏற்பாடு குறிப்பிடுகிறது. இந்த புதிய சட்ட ஏற்பாடுகள் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றில் அமளி துமளி ஏற்பட்டதை அடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சட்டத்திற்கு முரணானது என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அவையில் எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த புதிய விசேட சட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவென சபை நடவடிக்கைகள் 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் புலிகளின் 500 பேர் தென்னிலங்கைக்கான 5 நாள் சுற்றுலா

ltte cadres-southவவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் தென்னிலங்கைக்கான 5 நாள் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இன்று மாத்தறையை சென்றடைந்தனர்.

ரயில் மூலம் மாத்தறையை வந்தடைந்த இம்முன்னாள் போராளிகளை வரவேற்கும் நிகழ்வு மாத்தறை சனத்சூரிய விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் சிங்கள மக்களையும் சந்தேகத்துடனேயே நோக்குகின்றமை இல்லாதொழிய வேண்டும் எனக் கூறினார்.

அமைச்சர் அங்கு தொடர்டந்து உரையாற்றுகையில்........"வடக்கில் இது வரை காலமும் இடம்பெற்றது அரசியல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறித்த யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் தமிழ் மக்கள்; சிங்கள மக்களையும் நோக்குவது சந்தேக உணர்வுகளுடனேயே இந்நிலைமை நாட்டில் இல்லாதொழிய வேண்டும் என்பதோடு மக்கள் மனதிலிருந்து நீக்கப்படவும் வேண்டும்.

அதற்காகவே பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கு முன்னாள் போராளிகள் 500 பேர் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொருட்டு நட்புறவு பயணமாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 வாழ்க்கையிலேயே முதல் தடவையாக புகையிரத வண்டி முதலானவற்றை ஆகியவற்றை முன்னாள் போராளிகள் சிலர் பார்த்துள்ளார்கள். ஏன் இந்த நிலைமை?
எங்கள் நாடு 23 ஆயிரத்து 300 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டது. பேசுவது இரண்டு மொழிகள் மாத்திரமே, 10 மணித்தியாலத்திற்குள் தெய்வேற்திர முனையிலிருந்து பருத்திதுறை வரையிலான பயணத்தை மேற்கொள்ள முடியும். இப்படியான நாட்டில் ஏன் இவ்வாறான ஒரு பிரிவு ஏற்பட்டது?

எனக்கு உங்களது தாய்மொழி பேச முடியாது. உங்களுக்கு எனது தாய்மொழி பேச முடியாது இந்நாட்டில் அப்படி இருக்க முடியுமா?

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமக்குள் காணப்படுகின்ற சந்தேகத்தினை அகற்றுவது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான காரணியாக அமையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாக அமைந்துள்ளது.

இனங்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்துமாறு அமைச்சராகிய எனக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை வரவேற்பதுடன் நாட்டில் இனி ஒரு யுத்தம் ஏற்படாமலிருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்' என்றார்.

தமிழ்த் தரப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

தமிழ்த் தரப்புக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தரப்பில் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் பொலீஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது வடக்கிலும் கிழக்கிலும் கிறிஸ் மனிதரால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போது முழுமையாக வடக்கிலே இடம்பெறுகின்ற கிறீஸ் மனிதர் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் தமிழ்த் தரப்பினர் விரிவாக எடுத்துரைத்தனர். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தான் இதுபற்றி அறிந்திருப்பதாகவும், அதற்காகவே தான் அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்தவை தான் அங்கு அனுப்பிவைத்து விசேட கூட்டமொன்றை நடத்தியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தரப்பு, கிறீஸ் மனிதர் விடயமாக ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியபோது, கைதுசெய்யப்பட்ட தமிழ்ப் பொதுமக்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறும், பின்பு ஒரு சமாதான நடவடிக்கை எடுத்து அவர்களுடைய வழக்குகளை முடிந்தளவுக்கு இல்லாமற் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்படியும் பொலீஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இது தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பூரணமாக விசாரணை நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் வருகின்ற 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாது

சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு
mano-ganesan1ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும். இத்தகைய கருத்தை சம்பிக்க ரணவக்க உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத் தலைவர்கள், எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினார்களோ, அந்த நாடுகளுடனையே பேசி தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுகளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இழுக்கக்கூடாது. அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கக்கூடாது என ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவிற்கு பதிலளித்துள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்பதுவே சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை கருத்தாக அமைகின்றது. முதலில் இத்தகைய ஒரு ஆபத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போவது யார் என்பதை சம்பிக்க ரணவக்க பகிரங்கப்படுத்தவேண்டும். (மேலும்

வியாழன், 8 செப்டம்பர், 2011

மங்காத்தா. உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது

ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தமிழில் படங்களே இல்லையே என்ற ரசிகர்களின் குறையைப் போக்க வந்துள்ளது மங்காத்தா. பாடல்களில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. விளையாடு மங்காத்தா பாடலுக்கு அஜித் தொப்பையைக் குலுக்கி ஆடுவதைவிட தியேட்டரில் இருக்கும் தாத்தா பாட்டிகள் அதிகமாக ஆடுகிறார்கள்.
ஒளிப்பதிவு அபாரம். அதுவும் முக்கியமாக கோவா காட்சிகள் எங்கேயோ போய்விடுகின்றன.

ஒரு சிக்கலான கதையை எப்படி எடுத்துக்கொண்டு போகப்போகிறார் வெங்கட் பிரபு என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். மக்கு ரசிகர்களுக்குக் கதை புரியாமல் போய்விட்டால் என்ன ஆவது என்பதால் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக், கதை நாயகர்களே கதையை அவ்வப்போது விளக்கிச் சொல்வது, கடைசி சீனில் வெகுநேரம் அர்ஜுனும் அஜீத்தும் போனில் பேசி விளங்கவைப்பது போன்ற தைரியமான சில முயற்சிகளை வெங்கட் பிரபு கையாண்டுள்ளார்.

பிரேம்ஜி அமரனின் நகைச்சுவை வசனங்கள் அருமை. ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட் என்றால் சும்மாவா. ஒவ்வொருமுறை அவர் வயிறு கலங்கும்போதும் நம் வயிறு குலுங்குகிறது. ‘நூடுல்ஸ் தலையா’ என்பது கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழுக்கு வழங்கிய பல சொற்களுக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கும் அருமையான வசைச் சொல்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது லட்சுமி ராயை. சும்மா குலுக்கித் தளுக்கி நடனம் மட்டும் ஆடிவிட்டுப் போய்விடுவார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பில் மண். கதையின் மிக முக்கியமான திருப்பமே இவரிடமிருந்துதான் வருகிறது. அதைச் சூசகமாக உணர்த்துவதற்காகவே, ஆரம்பத்திலேயே ரயில் நிலையத்தில் ஒரு காட்சியை ஏற்பாடு செய்கிறார் வெங்கட் பிரபு. அந்தக் காட்சி மட்டும் இல்லையென்றால் ரசிகர்கள் குழம்பிப் போய்விடுவார்கள்.

அர்ஜுன் வேடம் மிக முக்கியமானது. அவர் கடைசிவரையில் வேடம் போடுகிறார் என்பதை யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

திரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரேயொரு முறை கொஞ்சமாக தண்ணி போடுகிறார் என்றாலும் அது தவிர பாந்தமாக உடையுடுத்தி நடிக்கிறார். இனி குணசித்திர வேடங்களாக அவருக்கு வந்து குவியும் என்பதில் ஐயமே இல்லை.

பணம் என்பது பேய்; அது மனிதர்களுக்கு இடையிலான அன்பை முறித்து, கொலையில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்ற அற்புதமான தத்துவம் படத்தில் ஊடுபாவாகச் சொல்லிக்காட்டப்படுகிறது. நண்பனே நண்பனைக் கொல்வது, காதலித்து ஏமாற்றுவது, காதலியின் தந்தையிடமிருந்தே கொள்ளையடிப்பது, தேசத் துரோகி ஆவது, காவல்துறையின் உள்ளேயே இருந்து ஏமாற்றுவது, பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சோறு போட்டு வேலை கொடுத்திருக்கும் முதலாளியின் பணத்தை ஆட்டையைப் போடுவது - இத்தனையும் எதற்காக? பணத்துக்காக. இந்த உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது, இல்லையில்லை சென்றுவிட்டது, இனி இந்த உலகத்துக்கு விடிவே இல்லை என்பதை முகத்தில் அறைந்தார்போலச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கடைசியாக நம்ம தல. இது அவருக்கு ஐம்பதாவது படம் என்றதிலிருந்தே நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பட ஆரம்பத்தில் அவர் நடித்த ஐம்பது படங்களிலிருந்தும் ஸ்டில்ஸ் காட்டப்படுகின்றன. மீசைகூட முளைக்காத இளம் பருவத்திலிருந்து தாடி, நரை, தொப்பை வரை அஜீத் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை மிக அழகாகக் காட்டியுள்ளனர்.

படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாட்டில் குடியரசுத்தலைவர் ஒரு டம்மி, ஏன், பிரதமரே ஒரு டம்மி என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். இருந்தும் குடியரசுத் தலைவரிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யக்கூடிய ஒரு காவலர் குழு - அதன் தலைவர் ஒரு ஏ.சி.பி (அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்) என்பது கொஞ்சம் நெருடுகிறது. அதேபோல துப்பாக்கி கிராஸ்ஃபயரில் வயிற்றில் மட்டும் ஒரு தாமிரத் தகடை வைத்துக்கொண்டால் எளிதில் உயிர் தப்பிவிடலாம் என்று சொல்வதை ஒருவித கவித்துவ பீலா என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் படங்கள்கூட ஊத்திக்கொள்ளும்; ஐவரி மெர்ச்சண்ட் படங்களும் சத்யஜித் ரே படங்களும் மட்டுமே பிழைக்கும் என்பதால் விட்டுவிடுவோம்.

சென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படம் பார்க்க ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் வந்திருந்தனர். படத்தில் ஓரிடத்தில் ஆண்-பெண் ஜோடி உடையில்லாமல் மெத்தையில் புரளுவதை (சிறிது நேரம்தான்!) காட்டுகிறார்கள். அது தவிர கோவா குலுக்கு டான்ஸ், டப்பாங்குத்து டான்ஸ், ஆரம்ப நைட்கிளப் டான்ஸ், அஜீத்துக்குமுன் லட்சுமி ராய் உடையை அவிழ்த்துப்போட்டு மாற்றிக்கொள்வது என்று கலக்கலாகப் பல காட்சிகள் உள்ளன. மேலும் கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கு U/A என்பது, தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி அமெரிக்காவின் தரத்தை அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

மங்காத்தா: பாருங்க, பாருங்க, பார்த்துக்கிட்டே இருங்க

பிரெஷர் குக்கரில் என்னதான் நடக்கிறது?அபூர்வமான அறிவியல் பொதிந்துகிடக்கிறது


அரிசிச் சாதம் சாப்பிடும் நம் அனைவர் வீட்டிலும் பிரெஷர் குக்கர் இல்லாமல் இருக்காது. உண்மைதானே? ஆனால், இந்தியா தவிர பிற நாடுகளில் இந்தச் சமையல் கருவி அவ்வளவாக உபயோகத்தில் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏன், நம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் அரிசிச் சோறை அவ்வளவாகச் சாப்பிடாத இடங்களிலேயே இந்த குக்கரை நீங்கள் பெரிதும் பார்க்கமுடியாது.


 இந்த பிரெஷர் குக்கரில் அரிசி தவிர, துவரம் பருப்பு, பிற பருப்புகள், உருளைக் கிழங்கு, இன்னபிற கிழங்குகள், சுண்டலுக்கான பல்வேறு பயறு வகைகள் ஆகியவற்றை உங்கள் அம்மா சமைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரெஷர் குக்கரில் என்னதான் நடக்கிறது? எதற்காக நம் அம்மாக்கள் அதை விரும்பி வாங்கி வீட்டில் வைத்துள்ளார்கள்? இதில் அபூர்வமான அறிவியல் பொதிந்துகிடக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஒரு பொருளைச் சமைக்கவேண்டுமானால் அதற்கு வெப்பத்தைக் கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அரிசியை நீர் விட்டு வேகவைத்தால் சாதமாகிவிடும். முதலில் நீர் பொங்க ஆரம்பிக்கும். அந்தப் பொங்கும் நீரில்தான் அரிசி வேகும். பொதுவாக கடல் மட்டத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட் என்று இருக்கும்.

ஆக, அரிசி இந்த 100 டிகிரி செண்டிகிரேட் நீரில் கொதிபடுகிறது. திறந்த பானையில் கொதிக்கும் நீரால் இந்த வெப்பத்தைத் தாண்டிச் செல்லமுடியாது. இதற்கு மேல் நீங்கள் நெருப்பை - சூட்டை - அதிகப்படுத்தினாலும், நீரின் வெப்பம் ஏறவே ஏறாது! மாறாக நீர் நீராவியாகி பாத்திரத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. இந்த 100 டிகிரி நீரில் கொதிக்க அரிசிக்கு அதிக நேரம் ஆகிறது. இன்னும் வேகமாக அரிசியைக் கொதிக்கவைக்க என்ன செய்யலாம்? எப்படியாவது நீரின் கொதிநிலையை அதிகப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் வழி.

நீரின் கொதிநிலை அதன் அழுத்தத்தைச் சார்ந்தது. கடல் மட்டத்தில் (அதாவது சென்னையில்) இருக்கும்போது நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட். ஆனால் பெங்களூருவில்? ஊட்டியில்? 93 அல்லது 95 டிகிரி செண்டிகிரேடிலேயே நீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். இமயமலைமீது ஏறிக்கொண்டே போனால், நீர் அங்கே 70 டிகிரியிலேயேகூட கொதிக்க ஆரம்பிக்கும். இதனால் வெங்கலப் பானையில் அல்லது மண் பானையில் அரிசி பொங்கும்போது, சென்னையில் எடுக்கும் நேரத்தைவிட ஊட்டியிலும் பெங்களூருவிலும் அதிக நேரம் எடுக்கும்! (சோதனை செய்து பாருங்கள்.)

இதற்குக் காரணம், உயரம் அதிகமாக அதிகமாக அழுத்தம் (பிரெஷர்) குறைந்துகொண்டே போவதுதான். பிரெஷர் குறையக் குறைய கொதிநிலை குறைகிறது. அப்படியானால், பிரெஷர் அதிகமானால்? சரியாக யோசித்துவிட்டீர்கள். அழுத்தம் அதிகமானால், நீரின் கொதிநிலையும் அதிகமாகும்.

சரி, அழுத்தத்தை எப்படி அதிகரிப்பது? அதைத்தான் பிரெஷர் குக்கர் செய்கிறது. பிரெஷர் குக்கரில் முக்கியமாக மூன்று பாகங்கள் உள்ளன. ஒன்று கேஸ்கெட் எனப்படும் ரப்பர் வளையம். இரண்டாவது சேஃப்டி வால்வ் எனப்படும் பகுதி. மூன்றாவது, விசில்.

பிரெஷரை அதிகப்படுத்துவது இந்த கேஸ்கெட்தான். கீழ்பாகம், மேல்மூடி ஆகியவற்றுக்கு இடையே கேஸ்கெட் பொருத்தப்படுகிறது. மேல்மூடியின் உட்புறம் கேஸ்கெட்டைப் பதியவைத்து கீழ்ப்பகுதியோடு வைத்து அழுத்திப் பூட்டுகிறோம். குக்கரின் உள்ளே நீர் கொதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் நீர், நீராவி ஆகிவிடுகிறது. திறந்த பாத்திரமாக இருந்தால் இந்த ஆவி வெளியேறிவிடும். ஆனால் பிரெஷர் குக்கரில் இந்த ஆவியால் வெளியேற முடியாது. கேஸ்கெட் சற்றே அகலமாகி, இடைவெளியை நிரப்பி, இந்த நீராவி வெளியேறிவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் ஆவி உள்ளேயே தங்கி உள்ளே இருக்கும் நீரின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகமாக அதிகமாக, நீரின் கொதிநிலை அதிகமாகிறது. மேலும் மேலும் வரும் நீராவி, அழுத்தத்தை அதிகமாக்கிக்கொண்டே போகிறது.

இப்படி அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனால் என்ன ஆகும்? பாத்திரம் வெடித்துச் சிதறிவிடும். அப்படி ஆகாமல் தடுக்கத்தான் இருக்கிறது விசில். விசில் என்பது தடியான ஒரு குண்டு எடை. இந்த எடை ஒரு மெல்லிய துளைக்கு மேலாக வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்த விசிலைப் போடாவிட்டால், நீராவி இந்தத் துளைவழியாக வெளியேறிவிடும். ஆனால் விசிலை அந்த ஓட்டையின்மீது வைத்துவிட்டால் நீராவி, விசிலை மேலே தூக்க முயற்சி செய்யும். ஆனால் ஆரம்பத்தில் அதனால் முடியாது. காரணம், விசில் கனமாக உள்ளது. அழுத்தம் அதிகமாக அதிகமாக, நீராவி விசிலை மேலே தள்ளுகிறது. இதனால் அந்தத் துளை வழியாகக் கொஞ்சம் நீராவி வெளியேறுகிறது. குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. உடனே விசில் கீழே விழுந்துவிடுகிறது. இப்படி ஒரு ‘ரிலீஸ்’ இருப்பதால், குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் ஓரளவுக்கு மேல் செல்லாமல் இருக்கிறது. பாத்திரமும் வெடிப்பதில்லை.

அப்படியும் ஏதோ பிரச்னை காரணமாக நீராவியால் வெளியேற முடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது விசில் பகுதியில் உள்ள துளையில் பருப்போ அரிசியோ சிக்கிக்கொள்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சேஃப்டி வால்வ் எனப்படும் பகுதி இயங்கும். பாத்திரத்தின் பிற பகுதிகளைப் போல அல்லாமல், இது மட்டும் சற்றே இலகுவான உலோகத்தால் ஆனதாக இருக்கும். நீராவி மிகவும் அதிகமான அழுத்தத்தை உருவாக்கிவிட்டால், இந்தப் பகுதி பிய்ந்து வெளியே அடிக்கும். இதனால் ஏற்படும் ஓட்டை வழியாக நீராவி முழுதும் வெளியேறிவிடும். பாத்திரமும் சமையலறையில் வேலை செய்யும் நம் அம்மாவும் பிழைப்பார்கள். சமையலறைக் கூரை மீதுதான் சாதமும் பருப்பும் அடித்துச் சிதறியிருக்கும்!

இப்படி பிரெஷர் குக்கர், உள்ளே இருக்கும் அழுத்தத்தை அதிகமாக்குவதால், நீரின் கொதிநிலை 125 டிகிரி செண்டிகிரேட்வரை செல்கிறது. இதனால் அரிசி, பருப்பு, கிழங்குகள் ஆகியவை வேகமாகச் சமைக்கப்படுகின்றன. ஆனால், இதில் வேறு ஒரு பிரச்னை உள்ளது. பசிக்கிறது என்று உடனடியாக குக்கரைத் திறக்கமுடியாது. அமைதியாக உட்கார்ந்து, உள்ளே உள்ள நீராவி முழுதும் வெளியேறும் வரை பொறுமையாக இருக்கவேண்டும்.

ஆனாலும், பசிக்கு வேகமாகச் சோறிட, பிரெஷர் குக்கரைவிட்டால் வேறு வழியில்லை. குழம்புக்கு பருப்பு வேகவைக்க, பிரெஷர் குக்கர் வேகத்துக்கு வெறும் திறந்த பாத்திரத்தால் ஈடுகொடுக்கவே முடியாது.

சென்னை அருகே துணை நகரம் : ஜெயலலிதா அறிவிப்பு


முதல்வர் ஜெயலலிதா,சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும்110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார்.
அவ்வறிக்கையில் இருந்து,சென்னை மாநகரம் வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்குவது என்பது கடினமானதாக உள்ளது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லா தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ள புதிய வீட்டு வசதித் திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
சென்னை-பெங்களுர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 311.05 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்த நிலத்திற்கு முறையான அணுகு சாலை அமைப்பதற்கு தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நிலத்தின் உரிமையாளர்களிடம் உரிய கலந்தாலோசனை செய்து பெறப்பட உள்ளது.

மேற்கண்ட நிலம் பெறப்பட்ட பின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 2160 கோடி ரூபாய் செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தாம் பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய "திருமழிசை துணைக்கோள் நகரம்", அதாவது திருமழிசை சாடிலைட் டவுன்ஷிப் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துணைக்கோள் நகரம், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக் கூடம், பள்ளி, மருத்துவ மனை, பேருந்து நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு அமைக்கப்படும்.

இந்த நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும்.

சென்னை அசோக் பில்லர் அருகில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், வாரியத்திற்குத் தேவையான மர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப் பெற்று, பின்னாளில் அந்தத் தொழிற்சாலை பயன்பாடு இன்றி போனதால், இந்த இடம் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக எவ்வித பயன் பாட்டிற்கும் உட்படாமல் இருந்து வந்தது.

சென்னை மாநகரத்தில் வீட்டுத் தேவையை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள இந்த 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 554 குடியிருப்புகள் கொண்ட பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமத்தில் 5.6 ஏக்கர் காலி நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வசம் உள்ளது. இந்த நிலம், சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தை ஒட்டியும்; உள்வட்டச் சாலை முகப்பிலும் உள்ளது. தற்போது, இந்தக் காலி இடத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4.66 லட்சம் சதுர அடி பரப்பளவில், பன்னடுக்கு வணிக வளாகம் ஒன்று கட்டப்படும்.
மேலும், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.44 லட்சம் சதுர அடி பரப்பளவில் 120 குடியிருப்புகள் கட்டப்படும்.

2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டு ஆகும். பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் சென்னை, நந்தனத்தில் 15.78 மனை நிலம் உள்ளது. நந்தனத்தில் அலுவலகக் கட்டடங்களுக்கான தேவை உள்ளது. எனவே, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் தற்போது காலியாக உள்ள இடத்தில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில், பசுமைத் திட்ட அம்சங்களுடன், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், 17 மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்’’ என்று தெரிவித்தார்
 கலைஞர் இதே போன்ற ஒரு திட்டத்தை அறிவித்த பொது வானுக்கும் மண்ணுக்குமாக குதித்து அதை வரவிடாமல் குட்டிச்சுவராக்கிய பாமக ராமதாஸ் தற்போது கப் சிப் என்று இருக்கிறார். வைகோ ராமதாசு நெடுமாறன் சி சீமான் போன்றதுகள் எல்லாம் ஜெயாவுக்கு முன்னால் வாலை சுருட்டிவிடுகின்றன. இனம் அறியும் இனத்தை.

முன்னணி நடிகைகளை???? வருமான வரி அதிகாரி Andasu Ravinda

ரவீந்தருக்கு தமிழ்மொழி பழக்கமாவதற்கு முன்பே தமிழ் நடிகைகளின் கணக்கு வழக்குகள் அறிமுகமாயின

தமிழகத்தின் குக்கிராமத்தில் தமிழக வருவாய்த்துறையில் கடைநிலை ஊழியராக இருப்பவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரைப் பாய்ந்து சென்று பிடித்து தினசரி பத்திரிகைகளில் செய்தியாக்கிவிடுவார்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார். அதற்கு நேர் மாறாக மத்திய வருமான வரித்துறையில் கூடுதல் கமிஷனராக இருந்த ரவீந்தர் என்கிற ஐ.ஆர்.எஸ். அதிகாரி கடந்த பதினோரு வருடங்களாக தினமும் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கி தனது அலுவலக அறையையே மண்டி வியாபார அறையாக மாற்றி ஆட்டம் போட்டுக்கொண்டி ருந்தார். அவரைப் பொறி வைத்து பிடிக்க பல மாதங்களாக சி.பி.ஐ. காத்துக்கொண்டிருந்தது. 2005-ஆம் ஆண்டு சென்னையில் அதிகாரியாக பதவியேற்ற ரவீந்தருக்கு தமிழ்மொழி பழக்கமாவதற்கு முன்பே தமிழ் நடிகைகளின் கணக்கு வழக்குகள் அறிமுகமாயின. அவர்கள் வரிஏய்ப்பு செய்த பணத்தில் ஒரு கோடி வரி ஏய்ப்பு என்றால் பத்து லட்சம் கமிஷன் என கணக்கில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய காசு கொடுத்தார்கள். கூடவே இலவச இணைப்பாக தங்களையும் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் கமிஷனையும் இலவச இணைப்பையும் பெற்றுவந்த ரவீந்தர், கமிஷன் தொகையில் ஈ.சி.ஆர். சாலையில இலவச இணைப்புகளை தினமும் பெற ஒரு பண்ணை வீட்டையே விலைக்கு வாங்கினார். 2007-ஆம் ஆண்டு ஸ்னேகமான நடிகை யின் கணக்கை ஆராய்ந்த ரவீந்தரை "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ' என அவருக்கு தன்னையே இலவச இணைப்பாக ரவீந்தரின் பண்ணை வீட்டில் வைத்துப் பரிமாறினார். எதேச்சையாக பண்ணை வீடுகளை வீடியோ கேமராவோடு சோதனை செய்த நீலாங்கரை ஏ.சி.யிடம் ரவீந்தர் நடிகையுடன் சிக்கியதுதான் இவரது லீலைகளை பற்றிய முதல் பதிவு என்கிறார்கள் சி.பி.ஐ. போலீஸார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ரவீந்தர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை நிரந்தரமாக செட்-அப் செய்துகொண்டார். அந்த வீட்டின் முன்பு ரவீந்திரனின் சொந்த உபயோகத்திற்கு மத்திய அரசு அளித்த அவரது பதவியின் பெயர் பொறித்த நான்கு சிவப்பு சுழல் விளக்கு கார்கள் எப்போதும் நின்றுகொண்டிருக்கும். இதுதவிர மேலும் 2 கார்களை தனது அலு வலக உபயோகத்திற்கு பயன் படுத்துவார். இந்த 6 கார்களுக்கும் தனித் தனி டிரைவர்கள் உண்டு. இந்த டிரைவர்களை வித்தியாச மான வேலைகளை செய்யச் சொல்வார் ரவீந்தர். அந்த வித்தி யாசமான வேலைகள் எங்களுக் குப் பெரிய தலைவலியாக மாறி யது என சொல்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.தன்னிடம் கணக்கு சமர்ப்பிக்க வரும் கம்பெனிகள், நடி கர், நடிகைகள் மற்றும் தனிப் பட்ட நபர்களை தனது வழிக்குக் கொண்டுவர, ஒரு செட் வருமான வரித்துறை ஊழியர்களை தனது காரில் அனுப்பி வைப்பார். அவர்கள் போய் ரெய்டு போன்ற நாடகத்தை கணக்கு சமர்ப்பித்த நபர்களின் வீடு, அலுவலகத்தில் அரங்கேற்றுவார்கள். "எதுக்குப் பிரச்சினை, ரவீந்தர் சாரை போய் பாருங்க, எல்லாம் நல்லபடியா முடியும்' என தங்கள் பங்குக்கு கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். இப்படிப் போலியான ரெய்டுகளை பழைய சிம்ரன் தொடங்கி லேட்டஸ்ட் அனுஷ்கா வரை ரவீந்தர் நடத்தியுள்ளார். ஒருமுறை இதுபோன்ற ரெய்டை ஒரு பெரிய நடிகர் வீட்டில் நடத்த முயல... அவர் மத்திய நிதி அமைச்சரிடமே போன் போட்டு ரவீந்தரைப் பற்றி புகார் செய்தார் என விவரிக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். வருமானவரி மோசடி என்பது ஒரு கணக்கு வழக்கு விவகாரம். அதில் தவறு என்றால் அபராதம் கட்டினாலே போதும். சிறைத்தண்டனை எல்லாம் கிடையாது. ஆனால் வரி கட்டாத கறுப்புப் பணத்தை அரசுக்கு வரியாக அழவேண்டுமே என்பதால் அதிலிருந்து தப்பிக்க பிரபலங்கள் ரவீந்தரின் லஞ்ச கணக்கு வழக்குக்கு ஒத்துவந்தார்கள். தன்னிடம் சிக்கியவர்களிடமெல்லாம் டெக்னிக்கலாக மாட் டிக்கொள்ளாமல் விளையாண்ட ரவீந்தர், துறை அமைச்சர்களாக வருபவர்களிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வார். மற்ற நேர்மையான அதிகாரிகள் போல அவர்களிடம் எதையும் செய்ய முடியாது என சொல்லமாட்டார். அரசியல்வாதி களுக்கு கூடுத லாக சினிமா நடி கைகளையும் இல வச இணைப்பாக அனுப்பி வைப்பார் என ரவீந்தரைப் பற்றி நினைவு கூரும் வருமான வரித்துறை ஊழியர் கள், ""இப்படி இவர் 200 கோடி வரை சேர்த்திருக்கிறார். அந்தப் பணத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ஒன் றிற்கு ஃபைனான் சும் செய்திருக் கிறார்'' என விலா வாரியாக ரவீந்தரைப் பற்றி விளக்குகிறார்கள். கடைசியாக அவர் 50 லட்சம் லஞ்சம் வாங்கினார் என சிக்கிய "எவரான்" கல்வி நிறுவன வழக்கில் கூட சி.பி.ஐ. யால் உடனடியாக அவரை கைது செய்ய முடியவில்லை. சுமார் 116 கோடிக்கு வரி கட் டாத எவரான், தனது வரி கட்டாத கணக்கை 56 கோடியாக மாற்றிக் காட்டியது. இதை கண்டுபிடித்த ரவீந்தர், சௌகார்பேட்டை யைச் சேர்ந்த உத்தம்சந்த் மூலம் எவரான் அதி பர் கிஷோரிடம் 5 கோடி கேட்க... கிஷோர் 50 லட்சம்தான் தரமுடியும் என மத்திய அரசு பணியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி மூலம் பேரம் பேசினார். அந்த 50 லட்சத்தை ரவீந்தரின் வீட்டுக்கு 28-ம் தேதியே உத்தம்சந்த் கொண்டுபோய் கொடுத்தார். இந்தத் தகவலை அறிந்த சி.பி.ஐ. ஒரு நாள் முழுவதும் காத்திருந்து மறுநாள் 29-ம் தேதி அந்தப் பணத்தை ரவீந்தரின் வேலைக்காரர் வெளியே கொண்டுவரும்போது கையும் களவுமாகப் பிடித்தார்கள். இவ்வளவு திருவிளையாடல்கள் நடத்திய ரவீந்தரை கைது செய்த சி.பி.ஐ., அவரை தற்கா லிக வேலை நீக்கம் செய்ய கொடுத்த வேண்டு கோளை இரண்டு நாள்கள் கழித்துதான் வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாம். பிரகாஷ் thanks nakkeeran+raj,trichy

ஜெயாவை தோற்கடிக்க முயன்றதால் ராமஜெயதிற்கு சிறை

  ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா தேறுவார என்று அதிமுகாவினரே பயப்படும் அளவிற்கு அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் சூறாவளியாக வேலை செய்தார். அந்த கோபம் அடங்காத அம்மா ராமஜெயத்தை பந்தாட தொடங்கிவிட்டார்

முன்னாள்  அமைச்சர் கே.என்.நேரு, கலைஞர் அறிவாலயம் கட்ட இடம் வாங்கியது தொடர்பாக டாக்டர் சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவரோடு முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கைப் பதிவு செய்தது காவல்துறை. கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேருவின் ஒரே மகனான அருணின் திருமண நிச்சயதார்த்த விழா குறிஞ்சிப்பாடியில் 2-ந் தேதி நடந்தது. இதற்காக ஒரு நாள் பரோலில் வந்து மகனின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார் நேரு. குடும்ப விசேஷத்துக்கு போலீஸ் பாதுகாப்போடு நேரு வந்ததைக் கண்ட உறவுப் பெண்கள் உட்பட பலரும் கண் கலங்கினர். நேருவைப் பார்க் கும் ஆவலில் ஆயிரக்கணக்கான உ.பி.க்களும் அங்கு குவிந் திருந்தனர். மீண்டும் சிறைக்கு கொண்டுபோகப்பட்ட நேருவை போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவரை 5-ந் தேதி காலை திருச்சி ஜே.எம். நான்காவது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் காக்கிகள். காவல்துறை ஏ.சி.மாதவன் மாஜிஸ்திரேட் புஷ்பராணி முன் ஆஜராகி ‘நேருவிற்கு மட்டுமே தெரிந்த சில தகவல்களை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவரை 5 நாள் கஸ்டடி விசாரணைக்கு அனுப்பவேண்டும்’ என்றார். பி.பி.யான தனபாக்கியம் இதை வலியுறுத்தி தனது வாதத்தை வைத்தார். நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களான அருள்மதி வர்மனும் ஓம் பிரகாஷும், ‘இவர் மீதான சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றும் நோக்கத்தில் கஸ்டடி விசாரணைக்குக் கேட்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது’ என்றனர் அழுத்தமாய். மேலும், ""கலைஞர் அறிவாலயம் நிலத்திற்காக டாக்டர் சீனிவாசன் 69 லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அதில் 3 லட்சத்து 50 ஆயிரத்தை வரு மான வரியாக கட்டியிருக்கிறார். பணம் வாங்கவில்லை என்றால் எப்படி வரி கட்டியிருப்பார்?'' என்று நேரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் வைக்க, ""பணம் கொடுக்காமல் மிரட்டியது போலவே, வருமான வரி கட்டும்படியும் மிரட்டி கட்ட வைத்து விட்டார்கள்'' என்று சமாளித்தது சீனிவாசன் தரப்பு. இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் மாலை 5 மணிக்கு இது தொடர்பான தீர்ப்பைத் தருவதாக அறிவித்தார். இந்த நிலையில் கட்டுக்கடங் காத அளவிற்கு உ.பி.க்கள் கோர்ட் வளாகத்தில் திரண்டதால் காவல்துறை, சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறியது. இதைக்கண்ட நேரு, தானே போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி கொந்தளிப்பில் இருந்த உ.பி.க்களைக் கட்டுப்படுத்தினார். இதற்கிடையே 5-ந் தேதி அதிகாலை நேருவின் தம்பியும் அ.தி.மு.க.வின ராலே எம்.டி. என்று அழைக்கப்படுபவருமான ராமஜெயத்தை கொச்சி யில் வைத்துக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். காரணம் ஜெ.’ இவர் மீது கொண்டிருந்த வன்மம். கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் ஜெ.’ நின்றபோது, தனது அண்ணன் நேரு நின்ற திருச்சி மேற்குத் தொகுதியில் கூட அதிகம் தலைகாட்டாமல் அ.தி.மு.க.வினரே மிரளும் வகையில் களவேலை பார்த்தார் ராமஜெயம். ஒரு கட்டத்தில் ஜெ’கரையேறுவாரா என்று இலைத்தரப்பு கவலைப்படும் அளவிற்கு இவரது தீவிரப் பணி இருந்தது. இதனால் கார்டனின் கடும் கோபத்திற்கு ஆளானார் ராமஜெயம். இதே போல் தேர்தல் நேரத்தில் இலைத் தரப்பினருக்கு மட்டும் காவல்துறை முக்கியத்துவத்தைக் காட்ட, இது தொடர்பாக சிட்டி கமிஷன ரான மாசானமுத்துவுக்கும் ராமஜெயத்துக் கும் இடையே வாக்குவாதமே ஏற்பட்டது. இதன் எதிரொலியால் மேலிடத்தின் கோபத்தோடு கமிஷனரின் கோபமும் கூடுதலாகச் சேர்ந்துகொண்டது. இதனால் நில அபகரிப்பு வழக்கில் நேருவோடு சேர்க் கப்பட்ட ராமஜெயம் சரண்டராகும் முடி விற்கு வர... அவரது வழக்கறிஞர்களோ, ’இப்போதைக்கு சரண்டர் வேண்டாம். முன்ஜாமீனை வாங்கிவிடலாம். அதன்பின் போலீஸ் என்ன செய்கிறது என்று பார்க்க லாம்’ என தடுத்தனர். இதனால் தலைமறை வாகவே இருந்தார் ராமஜெயம். இந்த நிலையில் ‘வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய ராமஜெயத்தை ஏன் கைது செய்ய வில்லை?’ என காவல்துறையிடம் மேலிடம் காட்டம் காட்ட, அவரை தீவிரமாகத் தேடத்தொடங்கினர். இந்தியாவில் இருக் கும் அத்தனை விமான நிலையத்துக்கும் அவரது பாஸ்போர்ட் எண்ணை அனுப்பி உஷார்படுத்தினர். தன்னைச் சுற்றி கடுமை யான வலை பின்னப்பட்டிருப்பதை அறி யாத ராமஜெயம், துபாய் போகும் டிக்கட் டோடு 5-ந் தேதி அதிகாலை 3.45-க்கு கொச்சி ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தார். அங்கு இமிக்கிரேஷன் அதிகாரிகளிடம் தனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பரிசோதிக்கும்போது ரெட் லைட் எரிய.. அப்போதே மடக்கப் பட்டுவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டார். ரெட் லைட்டைக் கண்ட அதிகாரிகள் உள்ளறைக்குப் போய் யாரிடமோ பேசிவிட்டு "உங்கமேல் வழக்கு இருக்கு. நீங்கள் வெளிநாடு போகமுடியாது. கொஞ்சம் உட்காருங்க' என்றனர். ராமஜெயத்தை அருகில் இருக்கும் காவல்நிலை யத்தில் ஒப்படைக்கும்படி தமிழக போலீஸிடமிருந்து தகவல் வர.. அவரை அங்குள்ள நெடுமஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நள்ளிரவில் திருச்சிக்கு அழைத்து வரப் பட்டார் ராமஜெயம். வையம்பட்டி அருகே தொழிலதிபர் துரைராஜும் டிரைவர் செந்திலும் சில வருடங்களுக்கு முன் காரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் ராமஜெயத்தை சிக்கவைக்கத் துடிக்கும் காக்கிகள், ரவுடி கர்ணன் தற்கொலை வழக்கு போன்ற வழக்குகளைக் கூட, கொலை வழக்காக ஜோடித்து ராமஜெயத்தின் தலையில் வைக்க, போலீஸ் தற்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் திருச்சி இடைத்தேர்தல் முடியும் வரை ராமஜெயம் வெளியே வராத வகையில் பல மாவட்டங்களிலும் புகார்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேருவை கஸ்டடி கேட்ட விவகாரத்தை விசாரித்த மாஜிஸ்திரேட் புஷ்பராணி ’போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி இல்லை’ என காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இது உ.பி.க்கள் மத்தியில் பலத்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.’போலீஸோ அடுத்த வழக்குக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. -ஜெ.டி.ஆர். thanks nakkeeran+raj,trichy

EPDP: உதயன் குகநாதனை கூட்டமைப்பினரே தாக்கினர்

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதனின் கொலை முயற்சிக்கு சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரே என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், ஈ.பி.டி.பி. உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் நேற்று சபையில் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை தொடர்பான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் நல்லவர், மிகவும் பண்பானவர். ஆனால் அந்தப் பத்திரிகை உண்மைகளை எழுதுவதில்லை. உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளையே வெளியிடுகின்றது. குகநாதன் தாக்கப்பட்டதற்கு ஈ.பி.டி.பி.க்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாகாண சபை உறுப்பினர் ஒருவரே பின்னணியில் இருந்தார் என விசாரணையில் தெரியவந்தது எனக் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் இடைமறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ்.மாவட்டத்தில் மாகாண சபை என்று ஒன்று இல்லை. அப்படியாயின் எவ்வாறு மாகாண சபையின் உறுப்பினர் எவ்வாறு பின்னணியில் இருந்தவர் என்று சொல்ல முடியும் என்று கேட்டார். தனது தவறை உணர்ந்து கொண்ட சந்திரகுமார், மன்னிக்கவும். மாகாணசபை என்று தவறுதலாகக் கூறிவிட்டேன் நான் கூற வந்தது யாழ்.மாநகரசபை உறுப்பினர். இந்த விடயம் வழக்குகளுடன் தொடர்புபட்டது என்பதால் மேலதிகமாக பேச விரும்ப வில்லை என்றார். குறிப்பு: குகநாதனைத் தாக்கியவர்களின் பின்னணியில் மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி ஒருவர் உள்ளார் என அமைச்சர் டக்ளஸýம், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.எனினும் அந்த நபரிடம் பொலிஸார் இதுவரை விசாரணை நடத்தவோ, அவருக்கு எதிராகக் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யவோ இல்லை. ஏற்கனவே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கும் சந்தேக நபர்களை இதுவரை இந்த வழக்கு விசாரிக்கப்படும் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தவும் இல்லை.இதேவேளை அண்மையில் லக்பிம பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், செய்தியாசிரியர் குகநாதன் உதயன் நிர்வாகத்துடன் முரண்பட்டுக் கொண்டதை அடுத்தே தாக்கப்பட்டார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

200 அடி ‌கு‌ழி‌யி‌ல் ‌விழு‌ந்த ‌சிறுவ‌ன் ‌பிணமாக ‌மீ‌ட்பு


குடிநீருக்காக போடப்பட்ட 200 அடி ஆழ்துளை கிண‌ற்‌றி‌ல் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 15 ம‌ணி நேர போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பிறகு ‌பிணமாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டா‌ன். இ‌ந்த சோக ‌நிக‌ழ்வு நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம் நா‌ங்குநே‌ரி அருகே நட‌ந்‌து‌ள்ளது.
நாங்குநேரி தாலுகா உ‌ள்ள வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற ‌கிராம‌த்‌‌தி‌ல் மலையரசன் சுவாமி கோவில் கொடை விழா இன்று தொடங்க உ‌ள்ளதா‌ல் த‌ண்‌ணீ‌ர் வச‌தி செ‌ய்து தரு‌ம்படி செ‌ன்னையை சே‌ர்‌ந்த ‌ரிய‌ல் எ‌ஸ்‌டே‌ட் அ‌திப‌‌‌ரிட‌ம் பொதும‌க்க‌ள் கே‌ட்டு‌ள்ளன‌ர்.இதையடுத்து கோவில் முன்பு ஆழ்துளை கிணறு அமைக்க நேற்று முன்தினம் நள்ளிரவில் போர்வெல் போடப்பட்டது. 200 அடிக்கு மேல் தோண்டிய பின்னரும் தண்ணீர் வராததால் ஏமாற்றம் அடைந்த பொதும‌க்க‌ள், தோண்ட வேண்டாம் என்று நினைத்து போர்வெல் போடுவதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனா‌ல் 200 அடி வரை தோ‌ண்ட‌ப்ப‌ட்ட ‌‌கிணறு மூடப்படாமல் அப்படியே ‌வி‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று ‌வி‌ட்டன‌ர். இத‌‌னிடையே கோவிலில் பந்தல் போடப்பட்டு இருந்ததால் சிறுவர்கள் பலர் நேற்று அ‌ந்த பகு‌தி‌யி‌ல் விளையாடி கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது விளையாடி கொண்டு இருந்தவர்களில், சுதர்சன் என்ற 5 வயது சிறுவன் ‌கிண‌ற்‌றி‌ல் விழுந்துவிட்டான்.
இதை பா‌ர்‌த்து அங்கு விளையாடி கொண்டு இருந்த மற்ற சிறுவர்கள் ஊருக்குள் சென்று சுதர்சன் பெற்றோரையும், ஊர் மக்களையும் அழைத்து வந்தனர். வெளியில் இருந்தபடி சுதர்சனிடம் பேச்சு கொடுத்த போது கிணற்றுக்குள் இருந்து அவனது சத்தம் வெளியே கேட்டது. அவன் "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்'' என்று சத்தம் போட்டுக் கொண்டு இருந்தான்.
உடனே ஒரு கயிற்றை போர்வெல் கிணற்றுக்குள் இறக்கி அவனிடம் கயிற்றை பிடிக்கும்படி கூறினர். சுதர்சன் கயிற்றை பிடித்ததும் மேலே தூக்கினார்கள். கொஞ்ச தூரம் மட்டுமே அவனால் மேலே வர முடிந்தது. அதன் பின்னர் கயிற்றை விட்டுவிட்டான். இதனால் மீண்டும் கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.
இதற்குள் தகவல் அறிந்து வடக்கு விஜயநாராயணபுரம் காவ‌ல்துறை‌யின‌ர், தீயணைக்கும் படை வீரர்கள், தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தள வீரர்கள் ‌விரை‌ந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆழ்துளை கிணறு அருகே நிறுத்தப்பட்டு, அதில் இருந்து கிணற்றுக்குள் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.

20
அடி ஆழத்தில் ‌‌சிறுவ‌ன் சிக்கி இருக்கலாம் என்று க‌ண்டு‌பிடி‌‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் போர்வெல் குழி அருகே பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 7 அடி ஆழம் வரை தோண்ட‌ப்ப‌ட்ட கு‌ழி பாறை இருந்ததால், அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதற்கிடையே பகல் 11 மணி வரை பேச்சு கொடுத்து கொண்டு இருந்த சிறுவன் சுதர்சனிடம் இருந்து, அதன்பின்னர் எந்த பதிலும் வரவில்லை

சிற்பி கணபதி ஸ்தபதி உடல் மாமல்லபுரத்தில் தகனம் கணபதி ஸ்தபதி

பிரபல சிற்பி வி.கணபதி ஸ்தபதி நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், பூம்புகார் கண்ணகி கோட்டம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் ஆவார். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்
மறைந்த கணபதி ஸ்தபதியின் உடல் நேற்று மாமல்லபுரம் வடகடம்பாடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம்,  நக்கீரன் கோபால், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம்,முத்தையா ஸ்தபதி, விஸ்வ ஜனசக்தி கட்சி தலைவர் பொன்.பரமகுரு உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சிற்பிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கணபதி ஸ்தபதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாமல்லபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஊட்டியில் மோகன்லால் வீட்டில் சோதனை



கேரள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் வீடுகளில் மத்திய வருமானவரித்துறையினர் கடந்த மாதம் 22-ந்தேதி சோதனை நடத்தினார்கள்.

கேரளாவில் உள்ள இரு நடிகர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், ஊட்டி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2-வது முறையாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இதேபோல் கேரளாவில் உள்ள மோகன்லால் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.