வெள்ளி, 2 ஜனவரி, 2026

விடாது விஜய்’ . ஆட்டம் ஆடும் காங்கிரஸ்… மிரட்டும் ஸ்டாலினின் ‘லாஜிக்’ ரியாக்‌ஷன்! what going on

 minnambalam.com - Mathi  : வைஃபை ஆன் செய்ததும், “ஆடும் வரை ஆட்டம்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எந்த கட்சி ’ஆட்டம்’ பலமா இருக்குது?
திமுக கூட்டணியில காங்கிரஸ் கேம்தான் செம்ம சூடா இருக்குதுய்யா.. திருச்சியில இருந்து வைகோ இன்னைக்கு சமத்துவ நடைபயணத்தை தொடங்கி இருக்கிறாரு இல்லையா?
இந்த நடைபயணத்தை சிஎம் ஸ்டாலின் தொடங்கி வைச்சாரு.. இதுல செல்வப்பெருந்தகை கலந்துக்குவாருன்னு இன்விடேஷன்ல பேரு இருந்துச்சு.. ஆனா திடீர்னு அவரு புறக்கணிச்சுட்டாரு..
என்ன காரணம்னு கேட்டா, “இந்த நடைபயண இன்விடேஷன்ல பிரபாகரன் போட்டோ போட்டுட்டாங்க.. அதனால காங்கிரஸ் புறக்கணிக்குதுன்னு” சொல்லி இருக்காங்க..
இதுக்கு முன்னாடி சிஎம் ஸ்டாலினை, செல்வப்பெருந்தகை புத்தாண்டை முன்னிட்டு நேத்து சந்தித்து பேசுனாரு.. அப்ப 2 முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்காரு..



இந்த சந்திப்புல, “டெல்லியில என்ன சொல்றாங்க?”ன்னு செல்வப்பெருந்தகைகிட்ட சிஎம் ஸ்டாலின் கேஷுவலா கேட்டாரு..

அப்ப, ”திருச்சியில வைகோ அண்ணன் நடைபயணம் தொடக்க விழாவுல கலந்துக்க வேணாம்னு சொல்லி இருக்காங்க.. அவங்க இன்விடேஷன்ல பிரபாகரன் படத்தை போட்டிருக்கிறதால போக வேண்டாம்னு சொல்லி இருக்காங்க”ன்னு செல்வப்பெருந்தகை தயக்கத்துடன் சொன்னாரு…

அப்படியா?ன்னு சிஎம் ஸ்டாலின் கேட்டுகிட்டாரு..

அப்புறமா கூட்டணி பத்தி பேசுறப்ப, ”ஏற்கனவே கிரிஷ் சோடங்கர் சொன்னமாதிரி ஆட்சியில பங்கு வேணும்கிறதுதான் பார்ட்டி ஸ்டேண்ட்னு சொல்லி இருக்காங்க அண்ணே”ன்னு கொஞ்சம் மைல்ட் வாய்ஸிலேயே செல்வப்பெருந்தகை சொல்ல.. சிஎம் ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டுகிட்டு சகஜமா பேசி அனுப்பி வைச்சிருக்காரு

ஓஹோ சிஎம் ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்னவாம்?

காங்கிரஸ் கட்சியோட ஒவ்வொரு குடைச்சலையும் ரொம்ப கவனமாகவே கவனிச்சுகிட்டு இருக்கிற சிஎம் ஸ்டாலின், செல்வப் பெருந்தகை தன்னை சந்திச்சுட்டு போனதுக்கு அப்புறமா சீனியர் லீடர்ஸ், மினிஸ்டர்ஸ் கிட்ட சீரியஸா டிஸ்கஷன் நடத்தி இருக்காரு.. இதை பத்தி சீனியர் அமைச்சர்கள் கிட்ட நாம பேசுனப்ப, “காங்கிரஸ் கட்சியோட, ஆட்சியில பங்கு தரனும்கிற டிமாண்ட் பத்திதான் சிஎம் ஸ்டாலின், எங்ககிட்ட விரிவாக பேசுனாரு.. அப்ப சில விஷயங்களை சிஎம் சொன்னாரு.. அதாவது அதிமுகவை எடுத்துகிட்டா ஓபிஎஸ் இல்லை.. சசிகலா இல்லை.. டிடிவி தினகரனும் இல்லை.. இப்ப செங்கோட்டையனும் இல்லை.. இவ்வளவு பலவீனமாத்தான் அதிமுக இருக்கு..

அதே நேரத்துல அதிமுக கூட்டணியில இருக்குற பாஜகவோ, மத்தியில 3 முறை தொடர்ச்சியாக ஜெயிச்ச கட்சி.. 25 மாநிலங்களில் இன்னைக்கும் ஆட்சியில இருக்கிற கட்சி.. அதுக்கும் மேல அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைன்னு விசாரணை ஏஜென்சிகளையும் கையில வெச்சு மிரட்டுற கட்சி..

ஆனாலும் அதிமுகவை பாருங்க… பாஜகவோட மெயின் டிமாண்டான, ”கூட்டணி ஆட்சி”ங்கிறதை ஏத்துக்கவே இல்லையே.. அதிமுக தலைமையில்தான் ஆட்சின்னு உறுதியா சொல்லுது.. ரொம்பவே பலவீனமா இருக்கிற அதிமுக, ரொம்பவே பலமாக இருக்கிற பாஜகவோட டிமாண்ட்ஸ்க்கு ஒத்துக்கவே இல்லையே… தன்னோட முடிவுல அதிமுக உறுதியா இருக்குதானே.

இப்ப நம்ம கூட்டணியை எடுத்துக்குங்க.. காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து தோல்வியைத்தான் சந்திக்குது.. ஆட்சி அதிகாரத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் இழந்துகிட்டே இருக்கு.. இங்கேயும் தமிழ்நாட்டுலயும் பாஜகதான் வளர்ந்துகிட்டே இருக்கே தவிர காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒன்னும் பெருசா வளர்ச்சியும் இல்லை.. உள்ளதும் போச்சுங்கிற கதைதான்..

நாம வலிமையான கட்சி.. ஆட்சி அதிகாரத்துல இருக்கிறோம்.. ரொம்பவே பலவீனமான காங்கிரஸ் கட்சி கேட்குற மாதிரி ’ஆட்சியில பங்கு’ டிமாண்டை எப்படி ஒத்துக்குவோம்னு எதிர்பார்க்கிறாங்கன்னு தெரியலை..” என லாஜிக்காவே விளக்கம் தந்தாரு..

அதுமட்டுமல்ல இன்னொரு விஷயத்தையும் கூட சிஎம் ஸ்டாலின் எங்கிட்ட ஷேர் செஞ்சாரு… டெல்லியில பார்லிமெண்ட் கேம்பஸில பாஜக மினிஸ்டர்ஸ்கிட்ட, “ஏங்க தமிழ்நாட்டுக்கான நிதியை தராம இழுத்தடிக்கிறீங்கன்னு” கேசுவலா டிஆர் பாலு, கனிமொழி எல்லோரும் கேட்டப்ப, “காங்கிரஸ் கட்சியை ஏன்தான் திமுக தூக்கிட்டு சுமக்கிறீங்கன்னு எங்களுக்கும் தெரியலை.. எங்களுக்கு எதிரியே காங்கிரஸ்தானே.. உங்களுக்கு எங்களுக்கும் என்ன பிரச்சனை? காங்கிரஸை கழற்றிவிட்டுதான் பாருங்க.. எல்லாமே சுமூகமாகவே போகும்”ன்னும் சொல்றாங்க.. ஆனாலும் கூட்டணி தர்மம்னு காங்கிரஸை நாம கூடவே வெச்சுகிட்டு, மாநில அரசுக்கு வந்துசேர வேண்டிய நிதியை வாங்குறதுக்கு மத்திய அரசோட மல்லுக்கட்டிகிட்டுதான் இருக்கோம்.. நாம இவ்வளவு தூரம் காங்கிரஸுக்காக கூட நின்னாலும் அவங்க கூட்டணி ஆட்சி, விஜய்கூட பேச்சுவார்த்தைன்னு குடைச்சல் கொடுக்கிறாங்களேன்னு சிஎம் சொன்னாரு” என்றனர்.

காங்கிரஸ் தரப்புல என்ன சொல்றாங்கய்யா?

காங்கிரஸ் மூத்த தலைவர்கள்கிட்ட நாம கேட்டப்ப, “போன எலக்‌ஷனில 10 வருஷமாக ஆட்சியில தொடர்ந்து இருந்ததால அதிமுக எதிர்ப்பு அலை அதிகமா இருந்துச்சு.. ஆனாலும் 66 சீட் ஜெயிச்சாரு எடப்பாடி.. கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 75 சீட்டு கிடைச்சது.. அப்படி டஃப் பைட் இருந்த நேரத்துல நாங்க கூட்டணியில இருந்ததால மட்டும்தான் திமுகவால ஆட்சியில உட்கார முடிஞ்சது.. இல்லைன்னா நிலைமை வேற மாதிரி ஆகியிருக்கும்..

ஆனா திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்களை பத்தி கவலையே படலையே.. இந்த ஆட்சிக்காலத்துல ரேஷன் கடைகளில வேலை வாய்ப்பு, சத்துணவு திட்டத்துல ஆர்கனைசர்ஸுக்கு வேலைவாய்ப்பு, கூட்டுறவு சங்கத்துல வேலைவாய்ப்புன்னு நிறைய பேருக்கு வேலை கொடுத்தாங்க.. எங்க எம்.எல்.ஏக்கள் சொன்னவங்க யாருக்குமே இந்த ஆட்சியில எந்த வேலைவாய்ப்புமே தரலையே..
அரசு வழக்கறிஞராகட்டும் அறங்காவலர் பதவியாகட்டும்.. ரொம்ப பெருசா ஒன்னும் எங்களுக்கு செய்ய்லையே..

ஆனா 2006-ல் கலைஞர், பாமக ஆதரவோட ஆட்சி நடத்த முடிஞ்சப்ப கூட, மினிஸ்டர்ஸ் மூலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தேவையான நிதி உதவியை செஞ்சு கொடுத்தாரு.. இந்த ஆட்சியில எங்க எம்.எல்.ஏக்கள் யாரையும் யாருமே கண்டுக்கலையே.. நாங்க மட்டும் திமுகவுக்காக உழைச்சுகிட்டே இருக்கனும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்? நாங்க உழைக்கிறோம்னா அதுக்கு பலன் கிடைக்கனும்.. அப்படின்னா ஆட்சியில பங்கு தரனும்தானே.. நாங்க கேட்கிற மூணு பேருக்கு மினிஸ்டர் போஸ்ட் கொடுத்துட்டா திமுகவுக்கு என்ன இழப்பு வந்துடப் போகுது?”ன்னு கேள்வி கேட்கிறாங்கய்யா..

சரி..சரி.. திமுக- காங்கிரஸ் சலசலப்பு முடிவுக்கு வந்துடுமா?

”அப்படி எல்லாம் அவசரப்படக் கூடாது மேன்..” விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்திச்சு பேசுனதையே திமுக ரசிக்கலை.. காங்கிரஸ் மேலிடமும் அவர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலைன்னு திமுகவுக்கு அதிருப்தியும் இருக்கு..

அடுத்ததா, உ.பி.யோட தமிழக அரசை ஒப்பிட்டு பிரவீன் விமர்சனம் செஞ்சு போட்ட ட்வீட்டுல செம்ம கடுப்பாகிடுச்சு திமுக..

இந்த பின்னணியில, பிரவீன் மேல காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கனும்னு அத்தனை திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பேட்டி கொடுக்க, காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் வெளிப்படையாகவே, கண்டனம் தெரிவிக்க.. அவருக்கு திமுக கூட்டணி கட்சிகள் பதில் சொல்லன்னு.. திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் உறவு ரொம்பவே விரிசலாகிட்டுதான் இருக்கு..

காங்கிரஸ் மேலிடத்தைப் பொறுத்தவரைக்கும், “பிரவீன் சக்கரவர்த்தி மேல நடவடிக்கை எடுக்கனும்னு கூட்டணி கட்சி தலைவர்களை பேட்டி கொடுக்கச் சொன்னதே திமுகன்னு கன்பார்ம் செஞ்சுகிட்டுதான் மாணிக்கம் தாகூர் மூலமாக கண்டனம் தெரிவிக்க வைச்சது”ன்னு சத்தியமூர்த்தி பவன் தகவல்கள் சொல்லுதுய்யா..

சரி… காங்கிரஸ் அடுத்து என்னதான் செய்ய போகுதாம்?

இதையும் காங்கிரஸ் கட்சி சீனியர்கள்கிட்ட கேட்டப்ப, “என்னங்க சார் நீங்க.. ராகுல்ஜி சொல்லித்தான் விஜய்யே கட்சி ஆரம்பிச்சாரு.. இப்பவும் விஜய்கூட ராகுல்ஜி பேசிகிட்டுதான் இருக்காரு.. நாங்க ஒரு ஸ்டேட் மட்டும்னு பார்க்க முடியாதுல்லையா.. நாங்க அகில இந்திய கட்சி.. பக்கத்து ஸ்டேட்ல இருக்கிற பாலிட்டிக்ஸும் எங்களுக்கு ரொம்ப முக்கியம் இல்லையா..

இருந்தாலும் இன்னொரு விஷயமும் நடக்கலாம்.. கடைசிநேரத்துல சோனியாஜி மூலமாக திமுக ஏதாவது முயற்சி செஞ்சு பார்க்கவும் வாய்ப்பு இருக்கு” என பொடிவைத்து பேசுகின்றனர்.

இவ்வளவு களேபரத்துக்கும் காரணமான பிரவீன் சக்கரவர்த்தியோ, இப்ப , காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பலரையும் கான்டாக்ட் செஞ்சு பேசிகிட்டு இருக்காரு.. அவங்ககிட்ட எல்லாம், “திமுக கூட்டணி வேண்டாம்னு முடிவெடுக்கலாம்.. மெட்ராஸுக்கு வாங்க.. நாம விஜய்யோட கூட்டணிக்கு போகலாம்னு சொல்வோம்”னு அழைச்சிருக்காரு..

ஆஹா.. காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் என்ன சொல்றாங்களாம்?

காங்கிரஸ் கட்சியில புதுசா மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு வரப்போகுது.. அதுல நம்ம பேரு நிச்சயம் இருக்காதுன்னு நினைக்கிறவங்க பலரும் பிரவீன் கோஷ்டியில சேர்ந்துடலாம்னு யோசிக்கிறாங்களாம்.. அதனால அடுத்தடுத்த நாட்களில் திமுக கூட்டணியில காங்கிரஸ் குடைச்சல் ரொம்பவே உக்கிரமாத்தான் இருக்கப் போகுதுன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: