![]() |
![]() |
திரு பிரபாகரன் சச்சிதானந்த குருக்கள் அவர்கள்
யாழ் இந்திய துணை தூதுவரகத்தில் பணியாற்றியவர்
இவர் குடும்பத்தோடு இந்திய பயணத்தை முடித்து கொண்டு இலங்கை வந்து கொழும்பு யாழ் வீதி விபத்தில் சம்பவம்நடந்தது.
அவரது இறுதி பதிவு இதுவாக இருக்கலாம்!.
மனைவியும் ஒரு மகனும் மனைவியின் சகோதரனும் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள்
Prabhaharan Satchithananthakurukkal : தேவபிரயாக் என்பது பாகீரதி மற்றும் அலக்நந்தா ஆகிய இரண்டு புனித நதிகளின் சங்கமமாகும்.
இந்த புகைப்படத்தின் பின்னணியில் அந்த தேவப்பிரயாக் என்று சொல்லப்படும் இடத்தை பார்க்கலாம்.
பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள முதல் பிரயாக் இதுவாகும்.
இந்த சங்கமத்திற்குப் பிறகு, இந்த நதி கங்கை என்று அழைக்கப்படுகிறது
மொத்த நீளம்: 2,510 கி.மீ.
அதேபோல் ஐந்து பிரயாகைகள் காணப்படுகின்றன. அவையாவன:
•தேவபிரயாக் - பாகீரதி நதியும் அலக்நந்தா நதியும் சந்திக்கின்றன.
•ருத்ரபிரயாக்கில் மந்தாகினி நதியும் அலக்நந்தா நதியும் சந்திக்கின்றன.

•நந்தபிரயாக்கில் நந்தாகினி நதியும் அலக்நந்தா நதியும் சந்திக்கின்றன.
•கர்ணபிரயாக்கில் பிண்டார் நதியும் அலக்நந்தா நதியும் சந்திக்கின்றன.
விஷ்ணுபிரயாகில், தௌலிகங்கா நதியும் அலக்நந்தா நதியும் சந்திக்கின்றன.
அதே போன்று அந்த இடத்தில் அமைந்துள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தையும் (Central Sanskrit University) காணலாம்.

![]() |
![]() |







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக