தாராபுரம்: சென்னையில் வருமான வரித்துறையினரின் விசாரணையை முடித்துவிட்டு
நேற்று தாராபுரம் வந்த தொழிலதிபர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியது:
நிலக்கடலை, கொப்பரை, சாக்கு போன்ற வியாபாரங்களைச் செய்து இந்த தொகையை நான்
சம்பாதிக்கவில்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. ஏமாற்ற வேண்டிய அவசியமும்
எனக்கு கிடையாது. என்னிடம் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் 10
மணிநேரம் விசாரணை செய்தனர். உண்மையை நிரூபிக்கும் வகையில் பதிலளித்துள்
ளேன். அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 11.1.2013
வெள்ளிக்கிழமை காலை 10-15க்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
நிச்சயம் கலந்து கொள்வேன்.
கடந்த 31.12.2012 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் என்வீட்டை சோதனையிட்டனர். அப்போது என்னி டமிருந்த இன்டர் நேஷனல் பில் ஆப் எக்சேன்ஜ் (ஐபிஓஇ) ல் பெறப்பட்ட 5 பில்லியன் (யுஎஸ்ஏ) டாலர் மதிப்புள்ள (இந்திய முகமதிப்பு தொகையில் ரூ.27,500 கோடி) பில்லை எடுத்துச் சென்றுள்ளனர். மொத்தம் 5 பில்கள். ஒரு பில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. அனைத்தும் எனது சொந்த பெயரில் அதாவது திருமலையம்மாள் மயில்சாமி ராமலிங்கம் என்ற பெயரில் உள்ளது. (முதலில் வருவது அம்மா, அப்பா பெயர்) அனைத்து தொகையும் எனக்கு சொந்தமானது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டேனியல் என்பவருடன் எனக்கு தொடர்பு இருப்பது உண்மை. அவர் எனது நண்பர் அல்ல. வியாபார ரீதியான தொடர்பு மட்டுமே உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி செலுத்தவில்லை என்பது என்மீதுள்ள குற்றச்சாட்டு. அதற்கான அனைத்து ஆவணங்களையும் நான் கொடுத்துள்ளேன். எனக்கு எந்த அரசியல்வாதிகளுடனும் தொடர்பு இல்லை. அரசியல் செல்வாக்கு எல்லாம் எனக்கு கிடையாது. நான் யாருக்கும் பினாமி கிடையாது.
எனது லட்சியமே தமிழகத்தில் ஒரு பெரிய தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். பரணீதர்ஸ் ரீபைனரீஸ் பிரைவேட் லிமிட்டெட் (எனக்கு பப்ளிக் லிமிடெட்டில் விருப்பம் இல்லை) என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலையை ரூ.1.5 லட்சம் கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியிருந்தேன். அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இது எப்படி சாத்தியம் என்கிறார்கள். எனது முயற்சியின் பயனாக எனது தேடல் விரிவடைந்தது. வெளிநாடுகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் துணையோடு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக ஓயாது உழைத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக