டி கே எஸ் இளங்கோவனின் பேச்சு தருண் விஜய் பேச்சை விட அபத்தமானது.
. இளங்கோவனுக்கு கறுப்பு என்று நிறபேதம் காட்டுவது நிறவெறி என்பது விளங்கவில்லை . நம்ம ஆள் கருப்பு இல்லை கொஞ்சம் வெளுப்பு என்று அடிமைகளுக்கே உரிய அற்ப பெருமை கொள்கிறாரா? சுயமரியாதை பற்றி ஒரு திராவிட முன்னேற்ற கழக தலைவருக்கே விளங்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி?
சென்னை: ஜெயலலிதா கறுப்பு நிறம் கிடையாது... திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், இந்தியர்கள் நிறவெறி கொண்டவர்கள் கிடையாது. இத்தாக்குதல் அதற்காக நடந்திருக்காது என தருண் விஜய் விளக்கம் அளித்தார். அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம். தென் இந்தியாவில் கறுப்பு நிறம் அதிகம். அதற்காக நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்றும் அவர் கூறினார்.
. சோஷியல் மீடியாக்களிலும் கண்டிப்புகள் குவிகின்றன. இதையடுத்து தனது பேச்சுக்கு தருண் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது பேச்சின் அர்த்தம் வேறு என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், தருண் விஜய் பேச்சு நகைச்சுவையானது. அனைத்து தென் இந்தியர்களும் கறுப்பு நிறத்தவர்கள் கிடையாது. எங்கள் கட்சி தலைவர் கருணாநிதியோ, மறைந்த ஜெயலலிதாவோ கறுப்பு நிறம் கிடையாது. வடக்கு மற்றும் தென் இந்தியா நடுவே பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது தருண் விஜய் பேச்சு என்றார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக