சாமளாபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சாமளாபுரம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது. அதற்குப் பதிலாக, சாமளாபுரம், நான்கு சாலை சந்திப்பு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிய மதுக் கடை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. அந்த மதுக் கடையை மூடக் கோரி, சாமளாபுரம் பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நான்கு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்கலம் போலீஸார் சாலைமறியல் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.
போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து சாமளாபுரம் ஈஸ்வரன் கோயில் அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 பேரை அதிகாலையில் கைது செய்தது போலீஸ் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக