திங்கள், 10 ஏப்ரல், 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ள நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.&>டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
;தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
<">அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்.
பணப்பட்டுவாடா ஆதாரங்கள் வருமான வரி ஆய்வில் தெரியவந்தன. மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-ல் தேர்தல் ரத்துக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு முன் அரவக்குறிச்சி,தஞ்சை தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்டது. நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. பணப்பட்டுவாடா புகார்களை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. தமிழகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் பல மூத்த அதிமுக அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பணப்பட்டுவாடா குறித்த தகவல் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் அமைச்சரின் உதவியாளர் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் இன்ன பிற பிரமுகர்களின் வீடுகளில் நடந்த ரெய்டில் லட்சக்கணக்கில் ரொக்க பணமும் சிக்கியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்தது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்டது. இதனை போல தற்போதும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது."
;இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.&n;">முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லக்கானியின் அறிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. வருமான வரித்துறை மற்றும் விக்ரம் பத்ராவின் அறிக்கைகள் குறித்தும் பரிசிலீக்கப்பட்டது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: