திங்கள், 10 ஏப்ரல், 2017

அமைச்சர் விஜயபாஸ்கர் ,சரத்குமார் மீது பலமணி நேரம் கிடிக்கி பிடி விசாரணை ... நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் ..


அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர், ஏப்ரல் 10ஆம் தேதி காலை 11மணியளவிலிருந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதேபோல, கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடு உள்பட 36 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின,மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர்கள் இல்லத்தில் 3 கோடிக்கு மேல் பணமும் சிக்கியுள்ளது. இதுதொடர்பான,ஏப்ரல் 10ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு கடந்த 8ஆம் தேதியன்று வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 10ஆம் தேதி (இன்று) காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும், நடிகர் சரத்குமாரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். தொடர்ந்து, இவர்களிடம் வருமான வரித்துறையினரின் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இவர்களிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் வருமான வரித்துறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கான முழுப் பட்டியலும் முன்னரே தயார் செய்யப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: