வெள்ளி, 14 ஏப்ரல், 2017

மைனா கைதாவாரா? நந்தினியின் முன்ஜாமீன் மனு தள்ளுட்படி

முன்ஜாமீன் மனு தள்ளுபடி கார்த்திக் தற்கொலை சென்னை: கணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இன்று நந்தினி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. நீதிபதி நசீமா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார். இதனையடுத்து அவர் மைனா நந்தினியானார். ஜீ தமிழில் டார்லிங் டார்லிங் சீரியலில் நடித்து வரும் அவர், ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நந்தினிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்தது. சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளார் கார்த்திக். இவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

கணவர் மரணம் குறித்து நடிகை நந்தினி கூறியபோது, தனது கணவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். மேலும் இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டினார். பெற்றோர் வீட்டில் இருந்த நந்தினி டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் பிசியானார். விவாகரத்து கேட்டு அவர் வற்புறுத்தினாலும் கார்த்திக் விவகாரத்து தர சம்மதிக்கவில்லை. வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்று கார்த்திக் கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு நந்தினி சம்மதிக்கவில்லையாம். இதனையடுத்தே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை கலைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தினியின் தொடர் வற்புறுத்தலே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்று கார்த்திக்கின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.< இதனையடுத்து விருகம்பாக்கம் போலீசார் நந்தினி மற்றும் அவர் தந்தை ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். 

கைதுக்கு பயந்து நந்தினியும் அவர் தந்தையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.< இதனால், நந்தினியும் அவர் தந்தையும் எந்நேரத்திலும் கைதாகலாம் என தெரிகிறது. இதையடுத்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது   tamiloneindia

கருத்துகள் இல்லை: