புதன், 12 ஏப்ரல், 2017

தி இந்து’வின் பார்ப்பனத் திமிரை திமுக எதிர்கொள்ளுமா?. தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவர் கனிமொழி

Thirumurugan Gandhi : சந்தோசம்ம்ம்ம்… ’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்…
தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( ‘தி இந்து’ என்.ராம் ஒரு கம்ம்யூனிஸ்ஸ்ட் ஆச்சே, மேலும் சி.பி.எம்மின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் கம்பெனியாயிற்றே?). அல்லது தொழிலாளர்கள்-ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கி உழைக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்படுகிறதா?

‘தி இந்துவின்’ மனித குல விரோத, தமிழின விரோத, சிங்கள ஆதரவு-பார்ப்பனிய ஆதரவு செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுமா?
‘இட ஒதுக்கீடு’ குறித்தும், ‘தலித்துகள் வேலைவாய்ப்பு” குறித்தும் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் ‘தி இந்துவில்’ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு பெரும்பான்மை இட ஒதுக்கீடு வேலையில் கிடைக்குமா?  நீண்ட நாட்களின் பின் வெளியாகும் கலைஞரின் புதிய படம் இது

குறைந்த பட்சம் இனிமே ‘தி இந்து’ அலுவலகத்துல அசைவ உணவாவது சாத்தியமாகுமா?…
‘பெரியார் திராவிட இயக்கத் தோழர்களை” தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தாலும் ’திராவிட சித்தாந்த்தை கைவிடவில்லை’ என்று சொல்லும் திமுகவின் தலைமை, ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிரை எதிர்கொள்ளுமா?.. thetimestamil.com

கருத்துகள் இல்லை: