புதன், 12 ஏப்ரல், 2017

தினகரன் உள்ளே போவார்,, எடப்பாடியும் பன்னீரும் பாஜகவுக்கு கூஜா ... பின்கதவால் RSS ...?

நாட்டுநடப்பை உற்று நோக்கும் பொது சில உண்மைகள் புரிகின்றன.
தினகரன் எதுக்கோ சிறையில் அடைக்கப்படுவார் விரைவில்..
பன்னீரும் எடப்பாடியும் நண்பர்கள் ஆவார்கள்.
பன்னீர் முதல்வர் எடப்பாடி துணை முதல்வர் ஆவார்.
ஒன்றுபட்ட அதிமுக பெரும்பான்மையுடன் ...
"ஒரு பொம்மை ஆட்சி " நடக்கும்
இரட்டை இல்லை திரும்பவும் கிடைக்கும்.
கருப்பு வெள்ளைசிவப்பு கரைந்து காவியாக மாறும்.
ஆர் எஸ் எஸ் திட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் ஓபிஎஸ் எடப்பாடி தீவிரமாக நிறைவேற்றுவார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் இலையும் தாமரையும் கூட்டு...சரி பாதி..

திமுகவினர் மீது ரைடு பொய் வழக்குகள் பாயும்...
திகவினர் தேச விரோதிகளாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் குண்டர்த்தடுப்பு சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாவார்கள்...
ஊடகங்கள் வளர்ச்சி வளர்ச்சி ...ஊழல்... குடும்ப ஆட்சி ...
ஒழிந்தது என்று உரக்க கத்துவார்கள்...
மக்கள் எது எப்படி போனால் நமக்கென்ன என்று
ஹிந்தி படிக்கவும் நீட்டுக்கு தயாராகவும் கோவில் குளங்களில் நேர்த்திக்கடன் செலுத்தவும் போய்விடுவார்கள்...
தமிழ்நாட்டில் சாத்தான்கள் வேதம் ஓதும்...
குத்தாட்டம் போட்டு கும்மி அடிக்கும்...
இதுவெல்லாம் இப்போது அதீத கற்பனையாக தெரியும் சிலருக்கு...போக போக உண்மையாக அரங்கேற காண்பீர்...
தமிழர்கள் பொறுப்பற்று தூங்குவதால்..
இதைவிட மோசமான கொடுமைகள் நடக்கும்...விரைவில்.
தமிழர்கள் நன்றாக குறட்டைவிட்டு தூங்குங்கள்   தாமோதரன்  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: