புதன், 12 ஏப்ரல், 2017

மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்

Actor Mayilsamy condemns Tirupur police
சென்னை: ஒரு காட்டுமிராண்டிதான் பெண்களை அடிப்பான். மனிதனாக இருப்பவன் செய்ய மாட்டான். மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிக்காதீங்க. திருப்பூரில் பெண்ணை அடித்த போலீஸ்காரர் அவரது தங்கச்சியாகவோ, அம்மாவாகவோ இருந்தால் அப்படி அடித்திருப்பாரா என்று நடிகர் மயில்சாமி கேட்டுள்ளார்.
திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர் போலீஸார். போலீஸாரின் இந்த கேவலமான செயல் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணைக் கன்னத்தில் பளார் என அறைகிறார்.
அவரது செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது. அத்தனை பேரின்
கோபத்தையும் திருப்பூர் போலீஸார் சில மணி நேரத்தில் வாங்கிக் கட்டியுள்ளனர்.
இந்த கொடும் செயல் குறித்து நடிகர் மயில்சாமி ஆவேசமடைந்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
  • காட்டுமிராண்டிதான் இப்படி செய்வான்.
  • மனிதனாக இருப்பவன் இவ்வாறு செய்ய மாட்டான்.
  • மதுக் கடையைத் திறக்கக் கூடாது என்றுதான் மக்கள் போராடினார்கள்
  • மக்களை கேட்டுத்தான் கடையை வைக்க வேண்டும்.
  • உன் இஷ்டத்திற்கு வைக்க அதிகாரம் கிடையாது
  • மக்களுக்குப் பிடிக்காவிட்டால் அது எதுவாக இருந்தாலும் வைக்கக் கூடாது.
  • நான் பகிரங்கமாக சொல்கிறேன். நேர்மையான போலீஸுக்கு கோபம் வராது
  • பெண்களை, தலையில் முடியே இல்லாத போலீஸ்காரர் கன்னத்தில் அடிக்கிறார்.
  • அந்தப் பெண்ணைக் கட்டிய புருஷன் கூட அடித்திருக்க மாட்டார்.
  • அப்பெண்ணைத் தாக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார். வன்மையாக கண்டிக்கிறேன்.
  • மக்கள் கொந்தளித்தால் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலம் தாங்க முடியாது. கதை வேறு மாதிரி ஆகி விடும்
  • என் தங்கையோ, அம்மாவோ இருந்தால் எப்படி பீல் பண்ணுவேனோ, அந்த உணர்வுதான் எனக்கு உள்ளது.
  • போலீஸ் சம்பந்தப்பட்ட பெண்கள் போராடியிருந்தால் இப்படி அடித்திருப்பார்களா
  • அவர்களது அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவியாக இருந்திருந்தால் அடித்திருப்பார்களா
  • போலீஸ் மக்களின் நண்பன். அது மாதிரி நடந்து கொள்ளுங்கள். இவர்களால் நல்ல போலீஸாருக்கும் கெட்ட பெயர் வருகிறது.
  • மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு கெட்ட பெயர் வாங்கிக்காதீங்க.
  • ஏற்கனவே தமிழன்னு வெளியில் சொல்லவே வெட்கக் கேடா இருக்கு.
  • மக்களை நிம்மதியா இருக்க விடுங்க, மக்களை தொந்தரவு பண்ணாதீங்க.  tamiloneindia

கருத்துகள் இல்லை: