ரூல்ஸை மாற்றியது யூடியூப்!
வீடியோ பதிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் யூடியூப் இணையதளத்தில் வீடியோவை பதிவேற்றி பலர், அதில் கிடைக்கும் விளம்பரம் மூலம் வருமானம் பார்த்துவந்தநிலையில், தற்போது யூடியூப் நிறுவனம் விளம்பரம் வெளியிடுவதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 10000 பார்வையாளர்களுக்கு குறைவான பார்வையாளர்களைப் பெற்றுவரும் வீடியோக்களுக்கு இனி விளம்பரத்தை நிறுத்த யூடியூப் முடிவு செய்தது. இதனால் காப்பி செய்த வீடியோக்கள் மூலம் வருமானம் பார்த்தவர்களை முற்றிலும் ஒதுக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில நிறுவனங்கள், தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றிவருவதாகவும், இதுபோன்ற விளம்பர யுக்தி மற்றும் பிறருடைய வீடியோவை காப்பி செய்து பதிவு செய்யப்படும் வீடியோக்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து யூடியூப் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்த செய்தியில் இந்த நடவடிக்கையின் மூலம் தகுதியான சேனல்கள் மட்டுமே யூடியூப்பில் அனுமதிக்கப்படும் நிலை வரும். அந்தவகையான சேனல்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாக மதித்தாலேபோதும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் யூடியூபில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு யூடியூபில் பதிவாகும் வீடியோக்களில் எந்த வீடியோ 10000 பார்வையாளர்களுக்கும் மேல் பெறுகிறதோ அந்த வீடியோக்களை ஆய்வு செய்து, அந்த வீடியோக்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாகப் பின்பற்றுகிறதா என்பதை ஆய்வுசெய்த பின்னரே அந்த வீடியோக்களில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.//minnambalam.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக