புதன், 12 ஏப்ரல், 2017

சாமளாபுரம் மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவு ... பெண்கள் பெற்ற வெற்றி !

போலீஸ் அறைந்ததால் கேட்கும்  திறனை இழந்த பெண் ஈஸ்வரி என்பவர் என்று தெரிய வந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே சாமளாபுரம் மதுக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சாமளாபுரம் மதுக்கடையை மூட வலியுறுத்தி நேற்று நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது.  பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது தினகரன்
 திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



போலீஸ் அதிகாரி தாக்கிய அந்தப் பெண் ஐயம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பது பின்னர் தெரியவந்தது. போலீசாரின் தாக்குதலுக்கு பின்னர் அவர் கோவை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: