‘அமைச்சர் விஜயபாஸ்கர் தலை உருண்டுகொண்டே இருக்கிறது. விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வைக்கப்படும் செக் எல்லாமே தினகரனுக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் என்றே தேவைப்பட்டால் விஜயபாஸ்கரை கைது செய்யவும் தயங்க மாட்டோம். அடுத்த கட்டமாக விஜயபாஸ்கரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருது' என்று, டெல்லியில் உள்ள பிஜேபி பிரமுகர் தினகரன் தரப்பில் ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.
சொல்கிறார்கள். விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'பன்னீர் தரப்புல எந்தச் சிக்கலும் இல்ல. நீங்கதான் நாங்க சொல்றது எதையும் கேட்கிறது இல்ல. இப்பவும் எதுவும் கெட்டுப் போயிடல. நாங்க சொல்றதுக்கெல்லாம் ஓ.கே.ன்னா சொல்லுங்க... நான் பேசுறேன். உங்க சப்போர்ட் பிஜேபி-க்கு வேண்டும். டெல்லியில் உங்கள் எம்.பி.,க்கள் யாரும் எங்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது. அடுத்து வரப்போற தேர்தலில் நாம கூட்டணி அமைக்கணும். தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் இருந்தே கூட்டணிக்கு நீங்க ஓ.கே. சொல்லுங்க. மற்றதையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். எங்களை எதிர்த்து அரசியல் பண்ணனும்னு நினைச்சா சிக்கல் வரத்தான் செய்யும்.
அதற்கு தினகரன் தரப்பில், 'கூட்டணி பற்றியெல்லாம் நான் உடனே எந்த முடிவும் எடுக்க முடியாது. சின்னம்மாகிட்ட பேசணும். கட்சியில் முக்கியமானவங்க இருக்காங்க. எல்லோருடனும் பேசிட்டு சொல்றேன். எனக்கு உங்களோடு இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்ல' என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் தினகரன்" என்று முடிந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். "ஆனால் திருச்சி வட்டாரத்தில் இன்னொரு தகவலும் உலா வருகிறது. ரெய்டு நடவடிக்கைகள் எல்லாமே முன்கூட்டியே விஜயபாஸ்கருக்குத் தெரியும். பிஜேபி ஆபரேஷனில் விஜயபாஸ்கருக்கும் பங்கு உண்டு என்கிறார்கள். 'உங்களுக்காகத்தான் இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டேன்’ என்று தினகரனிடம் சொல்லிவருகிறாராம் விஜயபாஸ்கர். தினகரனிடம் நல்ல பெயரை வாங்குவதுபோலவும் ஆகிவிட்டது. அதே நேரத்தில், பிஜேபி நினைப்பதை செய்துமுடிக்கும் ஒரு நபராக விஜயபாஸ்கர் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். தினகரனால் இப்போதைக்கு முதல்வர் ஆக முடியாது. தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக விஜயபாஸ்கர் மாறும்போது எடப்பாடியின் இடம் தனக்குக் கிடைக்கும் என அவர் நம்புகிறார். அதாவது, முதல்வர் கனவில் விஜயபாஸ்கர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கும் விஜயபாஸ்கரே போட்ட பிளான்தான் இந்த ரெய்டு டிராமா என்றும் ஒரு தரப்பில் சொல்கிறார்கள். இதையெல்லாம் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை" மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக