செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மத்திய அரசு :விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை

அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தின் ஸ்கீர்ன் ஷாட்.அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தின் ஸ்கீர்ன் ஷாட். விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதாக அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 29-ம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. tamilthehindu.com

கருத்துகள் இல்லை: