செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அமெரிக்க விமானத்தில் பயணி தரையில் இழுத்து சென்ற அதிகாரிகள்


அமெரிக்காவை மையமாக கொண்ட ஏர்லைன் நிருவனம் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம். இதிலிருந்து பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு விமானம் லோயிஸ்வேலிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் சில பாதுகாப்பு அதிகாரிகள் ஏறினர். அப்போது விமானத்தில் உட்கார இடம் இல்லாததால், ஜன்னல் ஓரம் அமர்ந்திருட்ந்த ஆசியாவை சேர்ந்த மருத்தவர் ஒருவரை தரதர வென இழுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை ஒருவர் தன் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனால் பலரும் விமான நிறுவனத்தை வருத்தி எடுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது மாலைமலர்

கருத்துகள் இல்லை: