ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது லண்டன் டாக்டர் பீலேவுடன் அப்பல்லோ
நிர்வாகம் மல்லுக்கட்டிய கதையை அம்பலப்படுத்தியுள்ளார் டாக்டர் பாலாஜி.
By: Mathi :ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது லண்டன் டாக்டர் பீலேவுடன் அப்பல்லோ
நிர்வாகம் மல்லுக்கட்டிய திடுக்கிடும் தகவலை டாக்டர் பாலாஜி
வெளியிட்டுள்ளார். ஆர்கே நகர் பணப்பட்டுவாடா
விவகாரம் தொடர்பான வருமான வரி சோதனை பூதாகரமாக வெடித்துள்ளது.
வாக்காளர்களுக்கு ரூ89 கோடி பணம் பட்டுவாடா செய்த சர்ச்சை ஒருபக்கம்
விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் கை ரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜிக்கு ரூ5 லட்சம் கொடுக்கப்பட்ட ஆவணமும் புயலை கிளப்பி வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ய ரூ5 லட்சம் வாங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
ரூ5 லட்சம் வாங்கியது உண்மை அதேநேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ5 லட்சம் வாங்கியது உண்மை என்றும் அதற்கான ஒரு காரணத்தையும் விவரித்திருக்கிறார் டாக்டர் பாலாஜி.
இது தொடர்பாக டாக்டர் பாலாஜி கூறியுள்ளதாவது: லண்டன் டாக்டர் பீலே லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க 4 முறை சென்னை வருகை தந்தார்.
இதில் 3 முறை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் பீலே தங்கியிருந்தார். அப்பல்லோ அட்வைஸ் அக்டோபர் மாதம் 23-ந் தேதி 4-வது முறையாக சென்னைக்கு பீலே வந்தார்.
அப்போது பீலே குடும்பத்துடன் சென்னை வருகை தந்தார். இதனால் அப்பல்லோ நிர்வாகம், ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்க கூறியிருந்தது.
மறுத்த பீலே ஆனால் மீண்டும் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில்தான் பீலே தங்கினார். அதனால் அவர் தங்கிய ஹோட்டல் கட்டணத்தை செலுத்த முடியாது என மல்லுக்கட்டியது அப்பல்லோ நிர்வாகம்.
ரூ5 லட்சம் கொடுத்த விஜயபாஸ்கர் இதையடுத்தே அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
அவர்தான் உதவியாளர் மூலமாக ரூ5 லட்சம் கொடுத்தனுப்பினார்.
இதற்குத்தான் பணம் பெறப்பட்டது. இவ்வாறு டாக்டர் பாலாஜி கூறியுள்ளார்
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக