சனி, 15 ஏப்ரல், 2017

அணி மாறும் அமைச்சர்கள்... ஜெயலலிதா சமாதி காட்சிகள் மீண்டும் அரங்கேற்றம்

பத்து அமைச்சர்கள், ஜெ., நினைவிடம் வந்து வணங்கிய பின், அ.தி.மு.க., - பன்னீர் அணியில் இணையப் போவதாக வெளியான தகவலால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்தது தெரிய வந்தது.; இதன் தொடர்ச்சியாக, ஏப்., 9ம் தேதி நள்ளிரவு, ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் அடிப்படையில், ஆட்சியை கலைக்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.  கொள்ளை கோஷ்ட்டி ரெண்டா பிரிஞ்சு, மீண்டும் ஒண்ணாகுது.. ஒண்ணா சேர்ந்து கொள்ளை அடிப்பது மீண்டும் தொடரும்.. வித்தியாசம் ஒண்ணுமில்லை.. மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலஆக்கிரமிப்பு, டெண்டர் கொள்ளை, மாமூல், வசூல், கட்டப்பஞ்சாயத்து வழக்கம் போல ஆயாம்மா பேரை சொல்லி முழுங்குவாங்க..

அதன்பின், அது வதந்தி என, தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்து, தினகரன் மீது அதிருப்தியில் உள்ள, 10 அமைச்சர்கள், ஜெ., நினைவிடம் வருவதாகவும், பின், பன்னீர் அணியில் இணையப் போவதாகவும், தகவல் பரவியது. இதனால், நேற்று அ.தி.மு.க.,வின் இரு அணி வட்டாரத்திலும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உளவுத்துறை போலீசார், ஜெ., நினைவிடத்தை வலம் வந்தபடி இருந்தனர். இறுதியில், அதுவும் வதந்தி என, தெரிய வந்தது.  தினமலர்

கருத்துகள் இல்லை: