புதன், 12 ஏப்ரல், 2017

சாமளாபுரம் தடியடி வழக்கை ஊத்தி மூடிய உயர்நீதிமன்றம்

திருப்பூர் சாமளாபுரம் போலிஸ் தடியடி: வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்! நேற்று திருப்பூர் சாமளாபுரத்தில் மதுபானக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு மற்றும் ட்ராஃபிக் ராமசாமி ஆகியோர் ,உடனடியாக விசாரிக்கக்கோரி இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை அமர்வின் முன்பு முறையிட்டனர். இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் அமைக்கப்படாது என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போராட்டதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையின் தடியடியால் காயமடைந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த போராட்டத்தில் காயமடைந்த பெண்ணின் உடல்நிலை குறித்த தகவல்களை உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. -ஜீவா பாரதி நக்கீரன்

கருத்துகள் இல்லை: