இலங்கையை சேர்ந்த 12 பெண்களின் சடலங்கள் சவுதி அரேபியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்களாக சென்று உயிரிழந்த 12 பேரின்
சடலம் சவுதி அரேபியாவின் ஒலேயா வைத்தியசாலையின் பிரேத அரையில்
வைக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரத்துக்கான பெண்கள் தேசிய இயக்கத்தின்
அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்னமும் அதிகாரிகளின்
அவதானம் செலுத்தப்படவில்லை எனவும், பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான
இலங்கை பெண்கள் தினமும் ஒலேய்ரா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அழைத்து
வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதென அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த
நாமலி பெரேரா என்ற பெண்ணின் சடலம் இந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த
நிலையில் கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கொடூரமாக பெண்கள் மரணிக்கின்ற போதிலும்,
அதிகாரிகள் குறைந்தபட்சம் அவர்களின் வீட்டிற்கு சென்று தேடிப்பார்ப்பதில்லை
எனவும், ஏஜன்சி நிறுவனங்களின் அவசியத்திற்கமைய அதிகாரிகள்
செயற்படுவதாகவும், அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஸ்கெலிய தோட்ட பெண்கள் நால்வர் இந்த
முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் மூவரின் சடலம் இந்த நாட்டிற்கு
கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பெண்களின் சடலங்கள் இதுவரையில்
இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ilakiyaa info
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக