முதன் முறையாக மும்பை மாநகராட்சியில் காங்கிரஸ் மாநகராட்சி உறுப்பினர் ரவிராஜா மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை மாநகராட்சி சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை ! மகிழ்வோம்! பாராட்டுவோம்!<;நாட்டின் நிதி தலைநகரான மும்பை மாநகராட்சிக்கு கடந்த பிப்ரவரி 21-ந் தேதி
தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா அதிகபட்சமாக 84
வார்டுகளில் வெற்றி பெற்று மேயர் மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்றியது.
82 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா மும்பை மாநகராட்சியில் தங்களுக்கு எந்த
பதவியும் வேண்டாம் என தடாலடியாக அறிவித்தது.
இதையடுத்து 31 வார்டுகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. அதன்படி, காங்கிரசை சேர்ந்த மூத்த கவுன்சிலர் ரவிராஜா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. எனினும் பா.ஜனதா தங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் என எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. எனவே ரவிராஜாவை எதிர்க்கட்சி தலைவராக அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் பா.ஜனதா நேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் என எழுத்து பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து ரவிராஜா மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரவி ராஜாவின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆகும். இவர் தற்போது 4-வது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தற்போது மும்பை மாநகராட்சி பெஸ்ட் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். இதற்கு முன்பும் மாநகராட்சி கமிட்டிகளில் உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
நாட்டின் பணக்கார மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை. இது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
முன்னதாக மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரவிராஜாவிற்கு மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், துணை மேயர், நிலைக்குழு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரவிராஜா கூறுகையில், “மாநகராட்சியில் ஆளும் கட்சி ஏதேனும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால் அதற்கு எதிராக போராடுவேன். மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்றா மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக