சென்னை: தலைசிறந்த இந்துத்துவாவாதியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வளர்ந்து வருகிறார் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.
நியூஸ் 7 டிவி சேனலின் வியூகம் நிகழ்ச்சியில் சீமான் குறித்து அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
தமிழ்த் தேசியம் வேறு... இந்து தேசியம் வேறு அல்ல.. இரண்டுமே ஒன்றுதான். நாங்களும் நாம் தமிழர் கட்சியும் எந்த புள்ளியிலும் வேறுபடவில்லை.
பெரியாரை படித்ததால் விளைவு
ஒருகாலத்தில் நாத்திகர்... அன்பு சகோதரர் சீமான் ஒரு காலத்தில் மேடைகளிலே இந்து சமயம் மற்றும் கடவுள்கள் குறித்து பேசியிருக்கிறார். பெரியார் புத்தகங்களை படித்ததால் ஏற்பட்ட விளைவு அது.
சீமான் தலைசிறந்த இந்துத்துவாவாதி
இப்போது சீமானே பெரியாரை தமிழராக ஒத்துக் கொள்வதில்லை.
அண்ணாவையும் அவர் தமிழராக ஒத்துக் கொள்வதில்லை. ஒரு அரசியல் பரிணாம வளர்ச்சியாக இப்போது சீமான் ஒரு தலைசிறந்த இந்துத்துவாவாதியாக, தமிழ்த் தேசியவாதியாக வந்து கொண்டிருக்கிறார். இணைந்து செயல்படுவோம் இந்த முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கைத் தமிழர், தமிழீழ விடுதலை, தமிழக உரிமை, தமிழர் பண்பாடு, கலாசாரம் இதுபோன்ற விஷயங்களில் நாம் தமிழர் கட்சியும் இந்து மக்கள் கட்சியும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஏற்கனவே ஒரு சில மேடைகளை நான் சீமானோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக