புதன், 12 ஏப்ரல், 2017

திமுகவின் இந்தி திணிப்புக்கு எதிரான போர்முழக்கம் ஓய்கிறதா?

:வங்கி ஏடிஎமில் இந்தி வந்துவிட்டது என பொங்க தொடங்கிவிட்டார்கள், ஆனால் ஏடிம் எந்திரத்தில் தார்பூசும் துணிவு யாருக்கும் வரவில்லை, வரவும் வராது...
மைல்கல், தபால் பெட்டி எல்லாம் பூசும் தாரினை, ஏடிஎமில் ஏன் பூசமாட்டார்கள் என்றால் அப்படித்தான்
மத்தியில் தேசிய கட்சி தனிபெரும்பான்மையுடன் அமரும்பொழுதெல்லாம் இம்மாதிரி காட்சிகள் , இந்தி திணிப்புகள் நடைபெறும், மாநில கட்சிகள் கை ஓங்கும்பொழுதெல்லாம் அது பின்வாங்கும்
இப்போது பாஜக மிருகபலத்துடன் ஆளும் காலம் அல்லவா? அதே காட்சிகள் திரும்பிவிட்டன..
தென்னக மாநிலங்கள் எல்லாம் இந்தியில் இருந்து தங்கள் மொழியினினை காக்க கவசம் அணிய தொடங்கிவிட்டன, கேரள அரசின் அறிவிப்பு அதனைத்தான் சொல்கின்றன‌.

தமிழக அரசிடம் ஏதும் எதிர்பார்க்கமுடியாது, காரணம் அது கொள்கையில் ஆட்சிக்கு வந்த கட்சியே அல்ல, ஏதோ விபத்தில் உருவான கட்சி, இன்று அழிந்துகொண்டிருக்கின்றது அவ்வளவுதான், அதனிடம் ஒரு மாநில நலனையும், உரிமை போராட்டத்தையும் எதிர்பார்ப்பது பாஜக பாபர் மசூதியினை திரும்ப கட்டும் என எதிர்பார்ப்பது போன்றது..
ஆனால் 1950களிலே இந்தி எதிர்ப்பு என் பொங்கிய திமுகவில் சத்தமில்லை
குலகல்வி திட்டத்திற்கு எதிராக ராஜாஜியினை கதற வைத்த திமுக, இன்று நீட் தேர்விலும், புதிய கல்வி கொள்கையிலும் ஒரு தடுப்பும் கொண்டுவரமுடியவில்லை,
கலைஞர் ஓய்ந்தால் அந்த குரலும் ஓயும் என்ற கணிப்பு மிக சரியாகிகொண்டிருக்கின்றது, அவரும் தன் கட்சிக்கு வாரிசு உருவாக்க்கினாரே ஒழிய, திமுகவின் போர்குணத்திற்கு ஒருவரையும் உருவாக்காமல் சென்றுவிட்டார்
மு.க ஸ்டாலின் கலைஞரின் மகன் அல்லவா? தந்தையினை போல் ஏன் இல்லை என கேட்கமுடியுமா? முடியாது
காரணம், கலைஞர் என்ன? அவர் தந்தை முத்துவேலர் போலவா இருந்தார?, அப்படி இருந்தால் அவர் திருக்குவளையினை தாண்டியிருப்பாரா?
தந்தையினை போலவே மகன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் திமுகவின் தற்போதைய தலைவர் கொஞ்சமாவது அந்த கட்சிக்குரிய‌ போர்குணத்துடன் இருந்தால் மிக நன்றாக இருக்கும்  முகநூல் பதிவு  ஸ்டான்லி ராஜன்

கருத்துகள் இல்லை: