ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சிரியாவில் மீண்டும் அமெரிக்க விமான தாக்குதல்!

சிரியாவில் மீண்டும் விமான  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதோடு, லட்சக்கணக்கான மக்கள் சிரியாவைவிட்டு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு எதிராகச் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் ஏப்ரல் 4ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் அப்தெல் ஹமீது அல்யூசுப் என்பவர் தனது மனைவி, இரு இரட்டைக் குழந்தைகள், இரு சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்துவிட்டார்.

இந்த ரசாயன தாக்குதலுக்குப் பின்னர், சிரியா மீது அமெரிக்கா வான் வழி தாக்குதல் நடத்தியது. குறைவான சேதம் ஏற்படும் வகையில் சிரியா விமானப் படை தளத்தின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு தாக்குதலுக்கும் உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது, கான் ஷேக்கான் மீது மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய மற்றும் சிரிய ராணுவத்தினர் மட்டுமே கான் ஷேக்கான் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இந்த புதிய தாக்குதலுக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியவில்லை.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: