ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

காற்று வெளியிடை உப்புமா? மணிரத்னம்தான் தயாரிப்பாளர் என்பது ஆறுதல்!


தேச பக்தி, போர் விமானங்கள், ராணுவ முகாம்கள், ராவல்பிண்டி சிறை, காஷ்மீர் மருத்துவமனைகள் ஆகியவைகளுடன் ஒரு லூசுத்தனமான காதலையும் சேர்த்து கிண்டப்பட்ட காஸ்ட்லியான உப்புமா தான் காற்று வெளியிடை. உப்புமாவில் கதை, லாஜிக் எனும் உப்பும், எண்ணையும் மிச்சிங். ஒரே படத்தை வேறு வேறு நடிகரக்ளை வைத்து எடுத்து பார்வையாளர்களின் மணி பர்சுக்கு உலை வைக்கிறார் மணி ரத்தினம். புதிய காமிராமேன் என்பதால் புதிய புதிய லோக்கேசன்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் ஆனால் நாம் என்ன காஷ்மீர் பள்ளத்தாக்குகள், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை பார்க்கவா திரையரங்கிற்கு சென்றோம். நாம் பார்க்க சென்றது சினிமா அது மிச்சிங். இந்த நிலக்காட்சிகளை நேசனல் ஜியோகிராபி சேனலில் இதை விட துள்ளியமாக பார்க்கலாமே.


கார்கில் என்பது படத்தில் ஒரு ஊறுகாய் போல் பயண்படுத்தப்பட்டாலும் படத்தின் ப்ரமோசன்களில் தேசியம் ஒரு விற்கும் சரக்கு என்பதால் அள்ளி அள்ளி வாசல் தெளித்தார்கள். கார்கில் காலம் என்பதற்கு ஆர்ட் டைரெக்டர் செய்த ஒரே விசயம் ஒரு பழைய KINETIC HONDA வை காட்டியது மட்டுமே.

ராவல்பிண்டி சிறையில் கைதிகள் கொடுமைப்படுத்தும் காட்சிகளை ரத்தமும் சதையுமாக காட்டி பாகிஸ்தானில் இருப்பவர்கள் எப்படி பட்டவர்கள் என்று பாருங்கள் என்று காட்டுகிறார் மணி, ஆனால் பாவம் அவருக்கு தமிழக காவல்நிலையங்களில் இதை விட கொடுமைகள் பல டிசைன்களில் நடப்பது எப்பொழுதும் தெரியாது என்பதும், இந்தியாவில் நிகழும் லாக்-அப் சாவுகள் குறித்து எந்த விபரமும் போய் சேருவதேயில்லை என்பதும் டிசைன் தான் போல.

அண்ணண்-அன்னி தங்களின் திருமண நாளிலேயே மணக்கோலத்தில் பிரசவத்திற்கு செல்வதும், கார்த்தி திருமணம் செய்யமலேயே தன் நான்கு வயது குழந்தையை (அந்த பெண்குழந்தையை ஒரு ஈராணிய படத்தில் இருந்து டவுன்லோடு செய்திருக்கிறார்கள், உடை உட்பட) இறுதி காட்சியில் பார்ப்பது மட்டுமே படத்தில் துணிச்சலான காட்சி என்று நினைகிறேன். எப்படியும் இது மணி ரத்தினம் படம் என்பதால் ஆர்.எஸ்.எஸ் கலாச்சார காவலர்கள் இந்த படத்திற்கும் மட்டும் விலக்கு அளிப்பார்கள் என்பது யதார்தம் என ஏற்போம்.

மணிரத்தினம் படத்தின் பெண்கள் அறிவார்ந்தவர்களாகவும் கோபக்காரர்களாகவும் மறுபுறம் வடிகட்டிய முட்டாள்களாக, முதல் பார்வையிலேயே காமத்திற்கு செல்ல ஆசைப்படுபவர்களாகவும் இருப்பது விந்தையாக இருக்கிறது. உப்புமாவில் உப்பு இல்லை என்றால் பெண்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வாழ்கை முழுவதும் தொடரும் என ராணுவ மருத்துவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழையும் அந்த சேசிங் தான் படத்தில் பலமே. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆறு ஆயுதம் ஏந்திய வண்டிகளை கார்த்தி முதலில் லாரி ஓட்டியும் அதன் பின் பெட்ரோல் குண்டுகள் செய்தும் வீசும் காட்சியை நீங்கள் உங்கள் மூளையை கழற்றி வைத்து பார்த்தால் அப்படியே அசந்து போவீர்கள். என்ன இந்த காட்சியை பார்த்துவிட்டு மூளையை மீண்டும் மாட்டினால் சரியாக பிட் ஆகாது.

ரவி வர்மாவையும் ஏ.ஆர்.ரகுமானையும் ஆர்.ஜே.பாலாஜியை போல் காமெடியன்களாகவே பயண்படுத்தியிருக்கிறார் மணி.

இந்த உப்புமாவின் சுவையை அறிய முடியவில்லை. இது விமான படைக்கு ஆள் சேர்க்க எடுக்கப்பட்ட விளம்பர படமா அல்லது திருமணத்திற்கு முன் பிள்ளை பெற்றுக்கொள்ளுங்கள் என்கிற பிரச்சார படமா, மருத்துவர் ஆவதற்கு இதயம் வேண்டும் ராணுவத்தில் சேர்வதற்கு முரட்டு முட்டாளாக இருந்தால் போதும் என்று வேறு அழுத்தமாக கூறுகிறார். இதில் எதை போதிக்க வருகிறார் மணி என்பது குறித்து உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை.

இந்த உப்புமாவுக்கு மணிரத்தினம் தான் ப்ரோடியுசர் என்பது தான் ஒரே ஆறுதல். மணி ரத்தினத்திற்கு உடன் அரசு ஓய்வூதிய திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், அதற்கு மணி ரத்தினம் உடன் அவரது ஆதார் அட்டையை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும். ஜெய் ஹிந்து.

குறிப்பு:
1.இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் ஒவ்வொரு நாளும் எப்படி திரைகதையை அமைக்கலாம் என்று முடிவு செய்தாராம் மணி ரத்தினம், அப்படி அடுத்து என்ன காட்சி எடுப்பது என்று யோசித்த ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட காட்சி தான் இது என்பதை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் நண்பர்களே.

2. நாங்கள் இரண்டாம் ஆட்டம் படம் பார்த்த திரையரங்கில் ஒரு சண்டை “நான் பாட்டுக்கு வீட்டுல சீரியல் பாத்துட்டு தூங்கியிருப்பேன், என்னைய ஏண்டா இந்த படத்துக்கு கூப்பிட்டு வந்தீங்க்” என்று ஒருவர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கத்திக்கொண்டே இருந்தார். அவர் கத்தும் சத்தம் என் காதில் இன்னும் கேட்கிறது.

 பாலு மகேந்திராவின் நாயகிகள், பாரதிராஜாவின் நாயகிகள் இப்படி காமத்திற்காக தங்களின் சுயமரியாதையை அடகு வைக்க மாட்டார்கள், இதுக்கு லவ்வுனு பெயராம், காதல் பற்றி எங்களுக்கே பாடம??.

பாலுமகேந்திரா, பாரதிராஜாவின் நாயகிகள் அந்த ராணுவ மெஸ்-இலேயே செருப்பை கழற்றி அடித்து திரும்பி பார்க்காமல் சென்று இருப்பார்கள்.

ஒரு பெண் கேவலபடுத்தப்படும் போது அதுவும் பொது இடத்தில் வைத்து அசிங்கப்படுத்தும் போது அந்த ராணுவ கூடத்தில் ஒருவனுக்கும் கோபம் வரவில்லை, அதை போல் இந்தியர்கள் எல்லோருமே அமைதி காக்க வேண்டுமா??


மணிரத்தினம் இப்போ திராவிட இயக்க அறிஞர் ஆயிட்டாரா? கமலை கட்டி சுமக்கிறது போதாதுன்னு.. அவர் மருமகனையும். ரோஜா, பம்பாய் முஸ்லிம்கள் மீது மணிரத்தினம் காட்டிய பேரன்பு. ‘இருவர்’ படம் திராவிட இயக்கத்திற்கு அவர் செய்த சேவை. சினிமாவில் திராவிட இயக்கம் உருவாக்கி வைத்திருந்த முஸ்லிம் ஆதரவை, தனது ரோஜா படத்தின் மூலமாகச் சிதைத்து, இஸ்லாமியர்களைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்த கிரிமினல் மணிரத்தினம். இஸ்லாமியர்களை வில்லன்களாக தேசத்துரோகிகளாக காட்டிய முதல் படம் ரோஜா.  முகநூல் பதிவு முத்துகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: