சனி, 27 ஆகஸ்ட், 2022

18 மாத குழந்தையை நரபலி கொடுத்த பெண்..உத்தர பிரதேசம்

 கலைஞர் செய்திகள்  : இந்தியாகுழந்தை நலமாகப் பிறக்க 18 மாத குழந்தையைப் பெண் நரபலி கொடுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்திற்குட்பட்ட மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். அவரது 18 மாத ஆண் குழந்தை திடீரென காணவில்லை. இதையடுத்து குழந்தையைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக ஒருவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை என்று தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது போலிஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கினார்

ரஞ்சன் அருண் பிரசாத்      பிபிசி தமிழுக்காக  : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கையின் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முற்பகல் கையெழுத்திட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த ஆவணங்கள் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால், அந்த ஆவணங்கள் சிறைச்சாலை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகல்! ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

ுதுடெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.
அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார். எனினும், ராகுல் காந்தியே நிழல் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷால் நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

hindutamil.in :  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார்.
இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது.
இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஷால் இதையடுத்து, பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் வராது : சீமான்

மின்னம்பலம்  Prakash  : “நான் இருக்கும்வரையில் பரந்தூரில் விமான நிலையம் வர விடமாட்டேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதற்கு அந்த ஊரைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதற்கு அம்மக்கள் போராட்டமும் நடத்திவருகின்றனர்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 26) காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்துக்கு நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்,

இந்தியாவின் சிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில்! நீதிக்கட்சி போட்ட விதை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் செய்திகள்  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.8.2022) கோயம்புத்தூர், பூ.சா.கோ. (PSG) கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
மூன்று நாள் பயணமாக, இந்த மேற்கு மண்டலத்திற்கு வருகை தந்த நான், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இயக்கத்தினுடைய நிகழ்ச்சிகள், அதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இப்போது இங்கே வந்திருக்கிறேன், உங்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறேன்.
இது ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியாக இருந்தாலும் – ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. எல்லோலாருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகத்தான் நான் இதை உணர்ந்து கொண்டிருக்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாரதிராஜாவிற்கு என்ன பிரச்சனை? நேரில் பார்த்த கவிஞர் வைரமுத்து பேட்டி

 நக்கீரன்  : இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கடத்தல்’.. ‘1.5 கோடி அபேஸ்’.. சொந்தக் கட்சி நிர்வாகி?

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  : ஈரோடு : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து ரூ.1.50 கோடி பணத்தைப் பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், தன்னை ஒரு கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தைப் பறித்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியவர்களில் ஒருவர் மட்டும் அடையாளம் தெரிந்ததாகவும், அவர் அதிமுக நிர்வாகி என்றும் அவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பாசி நிதி நிறுவன அதிபர்களுக்கு தலா 27 ஆண்டு சிறை!

 மாலைமலர் : கோவை: திருப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றினர். இது தொடர்பாக புகார் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
விசாரணையில் 58 ஆயிரத்து 571 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட (டான்பீட்) சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார்! சீனா தயாரா?

hirunews.lk  :  இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு டோக்கியோ தயாராக உள்ளது.
எனினும் அதில் இலங்கையின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அத்துடன் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை இன்னும் உள்ளதாக ரொயட்டர் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் இலங்கையின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழ்நாட்டில் 28 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு! ஒன்றிய அரசின் தமிழகம் மீதான பொருளாதார வன்முறை

 tamil.oneindia.com  : சென்னை  தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்க சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் கார், வேன்களுக்கு ரூ.5 டிரக், பஸ், போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ஏற்கெனவே 22 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது.
Are you a traveler at the following customs booths? Toll hike at 28 toll booths in Tamil Nadu

நீருடன் நெருப்பை உமிழும் தண்ணீர் பம்பு... மத்திய பிரதேசம் ..குழம்பித் தவிக்கும் கிராம மக்கள்!

நக்கீரன்  : நீருடன் நெருப்பை உமிழும் அடிபம்பு... குழம்பித் தவிக்கும் கிராம மக்கள்!
மக்களால் பயன்படுத்தப்படாத அடிபம்பு குழாயிலிருந்து தண்ணீரோடு தீயும் சேர்ந்து வெளியாகும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பஜ்வாஹா அருகே உள்ள கச்சார் என்ற கிராமத்தில் அடிபம்பு குழாய் திறக்கப்பட்ட நிலையிலிருந்தது. இந்நிலையில் அதனுள்ளே இருந்து திடீரென தண்ணீர் பீறிட்டுக் கொண்டு வெளிவந்ததோடு அதனுடன் நெருப்பும் சேர்ந்து வெளியானது.
அதுவும் பள்ளி வளாகத்திற்கு அருகிலிருந்த அடிக்குழாயில் நீரும் நெருப்பும் ஒரு சேர வெளியேறியது அந்த பகுதியிலிருந்த கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு ஒன்றிய மற்றும் குஜராத் அரசுகளுக்கு நீதிமன்ற உத்தரவு

தினத்தந்தி  : பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. அப்போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 21 வயதான கர்ப்பிணியை கற்பழித்து, அவரது 3 வயது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேரை படுகொலை செய்த கும்பலை சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து குஜராத் மாநில அரசு விடுவித்து விட்டது. இது நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் - கலைஞரை வீழ்த்த ஜெயலலிதா, வைகோ திருமா கம்யூனிஸ்டுகளின் .. யூஸ் அன்ட் த்ரோவான நல்ல மனிதர்

 Pugalendhi Dhanaraj : சில நடிகர்கள் ஷூட்டிங், டப்பிங் சமயங்களில் ஓரிரு டேக்கிற்கு மேல் போய்விட்டால் டென்ஷனாகி விடுவார்கள்,
அதிலும் பப்ளிக்கில் நடக்கும் ஷூட்டிங் என்றால் அவ்வளவு தான்,
அதெல்லாம் டேக் ஓகே தான் நெக்ஸ்ட் ஷாட்டிற்கு போயிடலாம் என இயக்குநரை கட்டாயப் படுத்துவார்கள்,
உண்மையில் அந்த ஷாட் நன்றாகவே வந்திருக்காது, காரணம் பொதுமக்கள் தனக்கு நடிக்கத் தெரியாது என நினைத்து விடுவார்களாம்? டப்பிங் தியேட்டரிலயே இயக்குநரிடம் ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் விஜயகாந்த் அப்படியில்லை, இன்டோரோ, அவுட்டோரோ, டப்பிங்கோ எத்தனை டேக் என்றாலும் இயக்குநர் திருப்தியாகி ஓகே சொல்லும் வரை திரும்ப, திரும்ப செய்து கொண்டே இருப்பார்.
ஷுட்டிங் ஸ்பாட் வந்து விட்டால் ஒவ்வொரு ஷாட்டிற்கும் கேரா வேனுக்குள் புகுந்து கொள்ளும் பழக்கமெல்லாம் இல்லை, ஒரு ப்ளாஸ்டிக் சேரை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கயே உட்கார்ந்து விடுவார்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி

May be an image of 1 person and text that says 'Paying homage to the great patriot & Tamil poet Mahakavi Subramania Bharati on his 100th Punyatithi. Inspired by ancient Bharat ideals, Bharathiyar, through his powerful nationalist 'Swadeshi' and other immortal poems and writings aroused the intense pride and emotions for Bharat. A towering social philosopher Bharathiyar's fire in his thoughts and writings was rekindled among youth for the cause of freedom. Nation gratefully remembers and bows before his memory. -Dattatreya Hosabale Sarkaryavah, RSS'

  வாலாசா வல்லவன்.  :   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
 இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

சொத்துக்காக தாயை விஷம் வைத்து கொன்ற மகள்.. - கேரளாவில் அதிர்ச்சி

 கலைஞர் செய்திகள்  : சொத்துக்கு ஆசைப்பட்டு மகளே தாய்க்கு விஷம் கொடுத்த கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை அடுத்துள்ள கீழூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி - சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு இந்துலேகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில், மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவர் தனது பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு

 மாலை மலர்  :   சென்னை:   அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடும்போது, யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார் என்றும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும் குறிப்பிட்டார். தனி நீதிபதி ஜெயச்சந்திரன்,

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கில் இன்று இறுதி விசாரணை

தினத்தந்தி  : சென்னை,அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்,
 "ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

குஷ்பு : மனித குலத்திற்கு அவமானம்: பில்கிஸ் பானு வழக்கு

மின்னம்பலம் : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மனித குலத்திற்கும், பெண் இனத்திற்கும் அவமானம் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது 21 வயதான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2002, ஜனவரி 21-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.
இவர்கள் கோத்ரா கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 15 ஆண்டுகள் இவர்கள் சிறைவாசம் அனுபவித்ததால், தண்டனை குறைப்பு கொள்கையின்படி, குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

புதன், 24 ஆகஸ்ட், 2022

இலங்கையில் LGBQT உரிமைகளை அங்கீகரிப்பதற்கான திருத்த சட்டமூலம்


madawalaenews.com : இலங்கையில் LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான  சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பிரேம்நாத் சி டோலவத்த எம்.பி  சமர்ப்பிக்க உள்ள நிலையில் அதன் நகலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  அவர் கையளித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் LGBTQ+ சமூகம் அனுபவிக்கும் துன்புறுத்தல்களைத் தடுப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் மற்றுமொரு நோக்கம் இலங்கையை நவீன உலகிற்கு இணையாக மாற்றுவது எனவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் ., வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

latest tamil news

தினமலர் : தஞ்சாவூர்: தஞ்சாவூர், பேராவூரணி தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் நடந்த மொய்விருந்து, காதணி விழாவில் 10 கோடி ரூபாய் அளவிற்கு மொய் பணம் வசூலான நிலையில், அப்பகுதியில் இவ்விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு,மாங்காடு,கீரமங்கலம், ஆலங்குடி வரை மொய் விருந்து தடப்புடலாக நுாறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில், வசதிக்கு ஏற்ப உணவு மொய் செய்வார்களுக்கு பரிமாறப்பட்டது. ஆனால் தற்போது மொய் விருந்து என்றால், கிடா வெட்டி கறிக்குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பது தான் முறையாக மாறி விட்டது.

பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !

கலைஞர் செய்திகள் -ரேஷிமா  : 22 வருடமாக பா.ஜ.க மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி கோவையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முன்னணியில் திமுகவில் இணைந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர்.
‘பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !
அந்த வகையில் பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு அவர் பேசும்போது, "கடந்த 1999 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் மாவட்ட அணியின் பொதுச்செயலாளராக இருந்தேன். இப்படி படிப்படியாக பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக பணிபுரிந்து வந்தேன். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜகவில் பணபடைத்தவர்களுக்கே பதவி என்று மாறியது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல்

மாலைமலர் : சென்னை: பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன.
வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தனர்.

பாரதிராஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி

நக்கீரன் : இயக்குநர் பாரதிராஜா, சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து தொடர்ச்சியாக வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க முக்கிய ராஜ தந்திரி சமந்தா பவர் இலங்கை வருகிறார்

வீரகேசரி  - லியோ நிரோஷ தர்ஷன்  :  அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது  விஜயம்  அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை  அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சமந்தா பவரின் விஜயம் அமைகின்றது.