திங்கள், 3 ஆகஸ்ட், 2020
விஜயலட்சுமி தர்ணா போராட்டம் நடத்த வீட்டுக்கு வெளியே வந்தார் .. - தடுத்து நிறுத்திய போலீஸ்.. வீடியோ
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். எனக்கு பா.ஜ.க வினர் யாரும் உதவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து என்னை தெரியாது என்று சொல்லும் சீமான், என்னை திருமணம் செய் வேண்டியதில்லை. ஆனால் என்னுடனான தொடர்பை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். சீமானுக்கும் எனக்குமான உள்ள உறவு இயக்குநர் அமீருக்கு தெரியும் அவர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.
கோவையில் இலங்கை தாதா சடலம் எரிப்பு .. இரு பெண்கள் உட்பட மூவர் கைது
தினமலர்: கோவை: போலி ஆவணங்களின் மூலம், இலங்கை தாதாவின் சடலத்தை எரித்த இரு பெண்கள் உட்பட மூவரை கோவை போலீசார் இன்று கைது செய்தனர்.; மதுரை
மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, 36. இவர், 'கோவை சேரன் மாநகர்
கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங், 35,
என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்' என, பீளமேடு போலீசாரிடம் புகார்
செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை
வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார்,
பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும்
உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, 27,
இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இந்நிலையில்,
இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது.
இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர்,
ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்
தினத்தந்தி : ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா
ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்
எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.
அயோத்தி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு
வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும்
நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்
பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களை தவிர்த்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கடியார் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பில் பங்கேற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.
வடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை! கே.பி
இலங்கைநெட் : வடக்கில்
முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக
வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ள புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கேபி
எனப்படும் குமரன் பத்மநாதன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவேண்டுனெ
அரசியல்வாதிகள் மாத்திரமே விரும்புவதாகவும் மக்கள் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.
Daily FT என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளதுடன் அச்செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
புலம்பெயர் தமிழர் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் இருப்பை
தக்கவைத்துக்கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பற்ற நாடு என காண்பிக்க
முனைகின்றனர். அதற்காக இங்குள்ள மக்களை வன்செயலுக்கு தூண்டுகின்றனர்.
பயனற்ற யுத்தமொன்றில் தமது வாழ்வை தொலைத்த பெரும்பாலான முன்னாள் புலிகள்
அமைதியான வாழ்வையே விரும்புகின்றனர். ஆனாலும் தொழில்வாய்புகள் இன்றி
வறுமையிலிருக்கின்ற சில முன்னாள் புலி உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழரின்
வலையில் சிக்குகின்றனர். இதனூடாக இலங்கையில் பிரச்சினை உண்டு என காண்பிக்க
நினைக்கும் புலம்பெயர் தமிழரது தேவைநிறைவேறுகின்றது.
ஆ.ராசா : 3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால் நானே படிச்சு வழக்கறிஞராகி இருக்கமாட்டேன்...
: அண்ணன்
ஆ.ராசா அவர்கள் 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின்
மிகப்பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ
வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா
வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு
அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என
நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். எம் எஸ் செல்லசாமி காலமானார்! மலையக தோட்ட நிர்வாகங்களை உலுக்கிய தொழிற்சங்கவாதி..!
அன்று தி.மு.க. வில் அண்ணாவுக்கு கலைஞர் கருணாநிதி எவ்வாறு துணையாக நின்று கழகத்தை வளர்த்தாரோ… அதே போன்று அமரர் தொண்டமானுக்கு செல்லசாமி அவர்கள் துணையாக நின்று காங்கிரசை வளர்த்தார். அன்று இ.தொ.கா.வின் அதீத வளர்ச்சிக்கு அமரர் செல்லசாமி… துடிப்பு மிக்க…. துணிவு மிக்க… கட்சி விசுவாச மிக்க தொண்டனாக விளங்கினார். எங்களது கல்லூரி காலத்தில் அட்டன் நகரில் காங்கிரஸ் கூட்டம் நடந்தால்¸ செயலாளர் செல்லசாமியின் மேடைப் பேச்சை கவனித்து வரும்படி எங்களது ஆசிரியர்களான இர.சிவலிங்கம்¸ எஸ்.திருச்செந்தூரன் இருவரும் அனுப்பி வைப்பார்கள்.
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020
ஊழல் நீதிபதிகளுக்கு பிரசாந்த் பூசண் ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் ...
பெண் என்ஜினீயர் தற்கொலை... சீதனம் கேட்டு சித்திரவதை .. சென்னை
நக்கீரன் :
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா.
என்ஜினீயங் படிப்பு முடித்த இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம்
காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமா
ர் என்பவருக்கும் கடந்த
ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சாஃப்ட்வேர் என்ஜினீயரான நிரேஷ்குமார்
ஐதராபாத்தில் பணியாற்றி வந்ததால், இருவரும் அங்கு வசித்து வந்தனர். திருமணமான சில வாரங்களிலேயே கணவன்- மனைவி
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்கா தனது கணவரைப்
பிரிந்து, பெற்றோருடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். திருமணமான 3
மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டுக்கு
வந்தததால், மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் கடந்த 29-ஆம் தேதி வீட்டில்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்
வந்தனர். துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர்
மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன்
தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று
நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தை- மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு ... கேரளா
மாலைமலர் : கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது
குழந்தையை, மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், பரிதாபமாக உயிரிழந்த
சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரிதாஸ் வீட்டில் போலீசார் 5 மணிநேரம் சோதனை.. மதுரையில் ..
ரஷ்யாவில் அக்டோபரில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்
இதையொட்டி அவர் கூறுகையில், கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.
வைரமுத்து : தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்
அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்
இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால் அதில் எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும் இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று ஆர் எம் வீரப்பனோ அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும் செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால் ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.
சனி, 1 ஆகஸ்ட், 2020
தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி
தஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி மோசடி
பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !
வினவு புகைப்படச் செய்தியாளர்: கொரோனா நோய்த்தொற்று, குறிப்பாக
உழைக்கும் பெண்களை உயிரோடு வதைக்கிறது. குடும்பத்தின் மொத்த பாரத்தையும்
தனியொருவராக தன்மீது சுமக்கிறார்கள். எப்போது இந்தப் பாரம் இறங்கும் என்று
திசை தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.நோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!
கனிமொழிக்கு எதிராக கலகம்!... ராஜினாமா மூடில் கனிமொழி!
ஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர்கள் .. சாதனை வீடியோ
குஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெளியேற போகிறார்?
க காங்கிரஸில் தீவிரமாக இயங்காமல் ஒதுங்கியே இருந்தார் குஷ்பு.
இந்நிலையில் காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய் ஜா, ‘‘ராகுலுக்கு பதிலாக சச்சின்
பைலட் அல்லது பாஜவுக்கு சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவருக்கு
தலைவர் பதவி வழங்கியிருக்கலாம்’’ என்று தனது டிவிட்டரில்
குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து தனது
டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
புதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்முடி .. வீடியோ
வெள்ளி, 31 ஜூலை, 2020
அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை : இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க கூடும் ...
போகும் முன்னர் எல்லாத் தமிழ் போராளிகளிடமும்,
அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கை தமிழர்களிடமும்
நான் பேசினேன். நீதி மற்றும் சமத்தவத்தைப் பெற போராடும்
இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன், நாங்கள்
கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள்
அனைவரும் புரிந்து கொண்டனர்..
இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காமல்,
இலங்கை தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த
ஒப்பந்தம் வகை செய்கிறது.....
.....


