வியாழன், 27 ஜூன், 2019

அம்பிகள் ஏன் ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறார்கள்?

ரஜினி ரசிகர் மன்றத்தில் நல்லகண்ணு 
சாவித்திரி கண்ணன் : ஒரே மையப் புள்ளியில் இவர்களின் அரசியல் என்பது நிலை பெற்றுவிடுகிறது. குருமூர்த்தி  துக்ளக்கில் எழுதும் தலையங்கம், கேள்வி பதில் எல்லாவற்றிலும் மீண்டும்,மீண்டும் வலியுறுத்துவது இது தான்; ’’அடேய் அதிமுக பயலுகளே.., ஒத்துமையாக இருங்கடா...ஒங்க கிட்ட ஒத்துமை இல்லாவிட்டால் திமுக வந்துடும்..! அய்யோ...! அப்புறம் எங்க நிலைமை என்னாவது..?’’
ஆயினும், ’அதிமுகவினர் ஒத்துமையாக இல்லாவிட்டால் என்னாவது...?’ என்ற பயமும் இந்த அம்பிகளை ஆட்டி படைக்கிறது.
சமீபத்திய துக்ளக்கில் ஒரு கேள்வியையும், பதிலையும் கவனியுங்கள்.
அதிமுகவின் ஒற்றை தலைமையை ஒரு வேளை ரஜினி ஏற்றால்,அதிமுக பலப்பட வாய்ப்புள்ளதா?

அதிமுக தலைவர்களை ஜெயலலிதா ஒருமுகமாக போக வைத்து கட்டி மேய்த்தார்..! அதில் யாராவது ஒருவர் தலைவராக வேண்டும்,மற்றவர்கள் மந்தியாக அவர்பின்னால் செல்ல வேண்டும் என்பது இன்றைய நடைமுறைக்கு உதவாது....இதை அதிமுகவினர் புரிந்து கொண்டு, சென்ற வாரம் நாம் தலையங்கத்தில் கூறியது போல,கூட்டுத் தலைமை கலாச்சாரத்தை கொண்டு வந்தால், அதிமுக வலுவடையும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

மக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு

/tamil.indianexpress.com : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22 -ந் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பையும் துண்டித்தது.
ஆலையை முடிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உத்தரவு என்பது தவறானது எனவும் ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை.

பாஜவுக்கு தூது விடும் தங்க.தமிழ்செல்வன்: ஓரிரு நாளில் முக்கிய முடிவு அறிவிப்பு


தினகரன் :சென்னை: அதிமுகவில் சேர்ந்தாலும்
ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் குமாரை தாண்டி அரசியலில் பிரகாசிக்க முடியுமா என்ற குழப்பம் தங்க.தமிழ்செல்வனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அதிமுகவில் சேர தயக்கம் காட்டுவதாகவும்,  பாஜவில் சேருவதற்காக தூது விடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக பிளவுபட்டு டி.டி.வி.தினகரன் தனி அணியாக  செயல்பட தொடங்கியதும், அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அமமுக கொள்கை பரப்பு  செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் வலம் வந்த தங்கதமிழ்செல்வன், அந்த அணி சார்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதும், டிவி விவாதங்களில் பங்கேற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையில்  தங்க.தமிழ்செல்வன், தினகரனை திட்டும் ஆடியோ பேச்சு சமூக வலைத்தளங்களிலும், ‘டிவி’ மற்றும் பத்திரிக்கைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தேனியில் கூட்டம்  நடத்த அமமுக நிர்வாகிகளை அழைத்த தங்கதமிழ்செல்வன், அவர்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு சென்று விட்டதை அறிந்து கொந்தளித்தார்.

3 ஆண்டுகளில் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட 27 விமானங்களை இந்தியா இழந்துள்ளது

மூன்று ஆண்டுகளில் 27 விமானங்களை இழந்தது இந்தியா!மின்னம்பலம் :
இந்திய விமானப் படை கடந்த மூன்று ஆண்டுகளில் 27 விமானங்களை இழந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஷிரிபத் நாயக் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்திய போர் விமானங்கள் இழப்பு குறித்து ஜூன் 27ஆம் தேதி மக்களவையில் எழுத்துபூர்வமாக ஷிரிபத் நாயக் அளித்துள்ள பதிலில், “15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட 27 விமானங்களை இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் இழந்துள்ளது. பெரும்பாலும் விபத்துகளில்தான் விமானங்கள் இழக்கப்பட்டுள்ளது. இதில் 11 விபத்துகளில் மட்டும் ரூ.524,4 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

தவிர்க்க வேண்டிய சொற்கள்

தவிர்க்க வேண்டிய சொற்கள்மின்னம்பலம் : ஒரு சொல் கேளீரோ! – 24: அரவிந்தன் :
சில சொற்கள் மொழி அடிப்படையில் சரி, தவறு என்பதைத் தாண்டி, சமூகவியல், அரசியல், மனித உணர்வுகள், பொது நீதி, மனித உரிமை, மொழியின் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் தவிர்க்க வேண்டியவை. அவற்றை இப்போது பார்க்கலாம்:
கற்பழிப்பு – அகராதியிலிருந்தே அகற்றப்பட வேண்டிய சொல் இது. பெண்களின் தூய்மையை, ஒழுக்கத்தை, அவர்கள் உடலை வைத்து மதிப்பிடும் சொல் இது. பலவந்தமான உறவுக்கு ஆளாக்கப்படும் பெண்ணுக்கு அந்த உறவில் எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய உறவால் அவள் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறதே அன்றி, கற்பொழுக்கம் எனச் சொல்லப்படும் நெறி பாதிக்கப்படுவதில்லை.
கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. இரு பாலருக்கும் பொதுவானது. பெண்ணுக்கு மட்டும் கற்பை வலியுறுத்துவது ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ மதிப்பீடு சார்ந்த பார்வை. எனவே பிற்போக்குத்தனமான இந்தச் சொல்லை அடியோடு தவிர்க்க வேண்டும். Rape என்னும் ஆங்கிலச் சொல்லில் ஒழுக்கம் தொடர்பான பொருள் எதுவும் இல்லை.
Rape என்பதற்குப் பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு ஆகிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
Sexual violence தொடர்பான சில சொற்களைப் பார்க்கலாம்.

ஜெகன்:340 கோடி தந்தால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் : ஆந்திரா முதல்வர் அறிவிப்பு

தினமலர் :'தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என்றால், 340
கோடி ரூபாய் தர வேண்டும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டதால், தமிழக பொதுப்பணித் துறையினர், தண்ணீருக்காக தவம் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங் களுக்கு இடையே, 1983ல், ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வருவதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதி  :
இந்த நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயை, ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை புனரமைத்து தந்த பின்னரே, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்யப்பட்டது. அதற்கு முன் வரை, தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து வந்தது. அதனால், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை, சாய்கங்கை கால்வாய் என்று, பொதுப்பணிதுறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்

சமூகநீதி காவலர் வி.பி.சிங் குறுகிய காலமே பிரதமராக இருந்து வரலாற்றில் மிகபெரிய திருப்பு முனையை ..

கதிர் ஆர்.எஸ் : எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள்
சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும்,
பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.

ஆண்ட்ராய்டிடம் விண்டோஸ் வீழ்ந்த கதையை மீண்டும் நினைவுகூர்ந்திருக்கிறார் பில்கேட்ஸ்.

Viakatan -மு.ராஜேஷ் :க&  :  டந்த நூற்றாண்டின்
ஆண்ட்ராய்டு
இறுதியில் பிரபலமாகத் தொடங்கிய கம்ப்யூட்டரை உலகமெங்கும் கொண்டு சேர்த்ததில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு மிகப் பெரிய பங்குண்டு. ஆனால் இன்று கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் சந்தையில் பெரும் பகுதியைக் கையில் வைத்திருக்கும் அவருக்கு மொபைல் மென்பொருள் துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் வில்லேஜ் குளோபல் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் “நான் செய்த மிகப் பெரிய தவறு இதுவாகத்தான் இருக்கும்” என அது தொடர்பாகப் பேசியிருக்கிறார் பில் கேட்ஸ். தப்புக் கணக்குப் போட்ட பில்கேட்ஸ்
2005-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை வாங்கியது. அதை வாங்கும் போது கூகுளிடம் பெரிதாகத் திட்டம் எதுவும் இல்லை. 2007-ம் ஆண்டு முதல் ஐபோனை ஆப்பிள் வெளியிட்ட பிறகு ஸ்மார்ட்போன் சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியது.

உங்களோடு அப்பவே வந்திருக்கணும்!’ – செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்?

செந்தில் பாலாஜி
தங்க தமிழ்ச்செல்வன்துரை.வேம்பையன் 0- vikatan.com/நா.ராஜமுருகன் : தமிழக அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், ‘நான் விஸ்வரூபம் எடுத்தா, அவர் தாங்கமாட்டார்’ என்று பேசியதாக சொல்லப்படும் ஆடியோவும், தொடர்ந்து, ‘தங்கம் எடப்பாடி முயற்சியில் அ.தி.மு.கவுக்கு தாவப்போறாராமில்லே..’ என்ற பரபர தகவலும்தான். இந்த நிலையில், செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசிகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜியிடம் தங்கம், “நீங்க தி.மு.க போனப்பவே, நானும் தி.மு.க-வுக்கு வந்திருக்கணும். இந்நேரம் நானும் உங்களைப்போல மாவட்டச் செயலாளராகவும், ஆண்டிபட்டி அல்லது பெரியகுளம் எம்.எல்.ஏ-வாகவும் ஆகியிருப்பேன்” என்று புலம்பியதாக அதிரிபுதிரி தகவல்கள் றெக்கைக் கட்டுகின்றன.

அ.ம.மு.க-வை கலகலக்கவைத்துவிட்டு, முதலாவதாக கட்சி மாறியது செந்தில் பாலாஜிதான். 41 நாள்களிலேயே செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆக்கினார் ஸ்டாலின். அதோடு, அ.ம.மு.க, அ.தி.மு.க-வில் இருந்து முக்கிய விக்கெட்களை தி.மு.கவுக்கு இழுத்துப்போட செந்தில் பாலாஜிக்கு பல்க் அசைன்மென்டையும் ஸ்டாலின் கொடுத்தார்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன், திருச்சி கே.என்.நேரு ஆகியோரோடு, அந்த அசைன்மென்டில் இறங்கினார் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க தரப்பில் சில எம்.எல்.ஏ-க்களின் மனதை கரைத்து, கலைத்துப்போட்டது இந்த டீம். இந்த நிலையில், அ.ம.மு.க-வில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனைதான் முதல் விக்கெட்டாக வீழ்த்த அப்போதே முயற்சி செய்தார் செந்தில் பாலாஜி.

புதன், 26 ஜூன், 2019

அரசு மதிய உணவு அரிசி ..19.8 தொன் .. ஏற்றுமதிக்காக கடத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ண அமைப்பு

Vigilance and civil supplies officials inspecting the rice stock on the premises of ISKCON at Sagar Nagar in Visakhapatnam on Tuesday.thehindu.com : Visakhapatnam 19.8 tonnes mid-day meal rice seized from ISKCON premises > Vigilance and civil supplies officials inspecting the rice stock on the premises of ISKCON at Sagar Nagar in Visakhapatnam on Tuesday. >Acting on reliable information about the alleged diversion of rice provided by the government for mid-day meal scheme, a team of officials from the vigilance and enforcement, and civil supplies departments conducted a surprise check on the ISKCON premises at Sagar Nagar in the city on Monday night and seized 396 bags of rice weighing around 19.8 tonnes.
The officials said that they found labourers loading rice bags to a lorry and by the time, they raided the premises, around 110 bags weighing around 5.5 tonnes had been loaded. Its estimated market value would be around ₹5.94 lakh, the officials said.

தங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் - வெற்றிவேல் கடும் தாக்கு


தங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் - வெற்றிவேல் கடும் தாக்குமாலைமலர் :தங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். தினகரன் மீது குற்றம் சாட்டிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க.வை சேர்ந்த வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- தங்க தமிழ்ச்செல்வன் பலமுறை தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை. 2009-ல் அவர் அம்மாவையே எதிர்த்து பேசியவர்தான். அவரை அம்மா கூப்பிட்டு எச்சரித்தார். இவர் திடீரென்று மனநிலை
பாதிக்கப்பட்டவர் போல செயல் படுவார். அவ்வப்போது அவரது மூடுக்கு ஏற்ப இருப்பார். இரவு வந்து விட்டால் சொல்ல வேண்டியதில்லை. வேறுமாதிரி இருப்பார். ஆடியோவில் இருப்பது போல் தான் பேசுவார்.
அவர் 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். அம்மா அறிவித்த மாவட்ட செயலாளராக இருந்து எங்கள் கூட வந்தவர். அவரிடம் நானே பலமுறை எச்சரிக்கை செய்து பேசியுள்ளேன். திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று பேசினார். இதை யார் ஒத்துக்கொள்வார்கள். வீழ்த்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அதை சொல்லலாமே. இப்படி பேசினால் எப்படி என்று அவரிடம் பேசினேன்.

அசாம் குடிமக்கள் பட்டியல்: 1 லட்சம் பேர் நீக்கம்


தினமலர் : கவுகாத்தி : அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக அசாமில் குடியேறுபவர்களை கணக்கிடும் பெருட்டு, 1951 ம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இறுதி தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் வரும் ஜூலை 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை

Heavy winds, thunder and pouring rain in most parts of Chennai tamil.oneindia.com - NeelakandanS.: சென்னை: தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக பல பகுதிகளில் மழை பெய்து வருவதால், தலைநகர்வாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, வளசரவாக்கம், அண்ணாநகர் கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த அரை மணி நேரமாக கொட்டி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. திம்மாவரம், பாலூர், சிங்கப்பெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டங்குளத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.

தமிழக முதல்வராகும் அமித் ஷா.. தமிழக அதிகாரிகள் அமித் சாவின் எடுபிடுகள் ?

டிஜிட்டல் திண்ணை:  தமிழக முதல்வராகும் அமித் ஷா?மின்னம்பலம் : அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பில் நிறைய செய்திகள் வந்து கொட்டின. முக்கியம் என்று அடையாளமிட்ட செய்தி நட்சத்திரக்குறியோடு வந்தது.
“அரசாங்க இயந்திரத்தின் இருபெரும் சக்கரங்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ். அதிகார மையங்கள்தான். மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும், எந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐபிஎஸ் அதிகாரிகளும்தான்.
தமிழ்நாட்டில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாத பாஜக, அடுத்த சட்டமன்றத் தேர்தலின் மூலம் சட்டமன்றத்தில் நுழைவது என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காக இப்போதே தமிழகத்தின் இரு பெரும் அதிகார மையங்களான டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் தான் விரும்புபவர்களையே நியமிக்கத் தயாராகிவிட்டது மத்திய பாஜக அரசு.

அதிமுகவை கழட்டி விட்டு திமுக பக்கம் போகும் பாஜக!அதிர்ச்சியில் அதிமுக!

நக்கீரன் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக பெரிய வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து
இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் பாஜக தலைமைக்கு கடும் அதிருப்தியில் இருந்தது. மேலும் இந்த தோல்வி குறித்து தமிழக கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்த பாஜக தலைமை, கட்சி நிர்வாகிகள் கூறிய பதிலால் அதிர்ந்து போயுள்ளனர். அதில் கூட்டணி காட்சிகள் யாரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதிமுக இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியது என்று கூறியுள்ளனர். அதனால் நாடாளுமன்ற தேர்தலை பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் பாஜக தலைமைக்கு எடப்பாடி அரசு மீது கோபம் உள்ளதாக கூறுகின்றனர்.
சமீப காலமாக அதிமுக அரசை பெரிதாக பாஜக கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த கோபத்தை போக்க தமிழக அரசு சார்பாக யாகம் நடத்தியுள்ளனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதிமுக அரசை விமர்சிக்க பாஜக தலைமை தமிழக நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

p ranjithnakkheeran.in - kamalkumar": ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பை பேச்சுரிமை உள்ளது எனக்கூறி ரஞ்சித் தரப்பு முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குழு இனிவரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என அறிவுறுத்தியது. மேலும், அப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறைகளை விதித்து ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

BBC : கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள் வீடியோ


முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ்: 'கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு'> சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பிரேமலதாவிடம் எகிறிய நிர்வாகிகள்.. உங்க சொத்தை மீட்க எங்க பணம் வேண்டுமா?

premalathaவெப்துனியா :பிரேமலதா விஜயகாந்த் ஏலத்திற்கு வந்த சொத்தை மீட்க மாவட்ட நிர்வாகிகளிடம் நிதி திரட்ட முற்பட்டது தோல்வியில் முடிந்துள்ளதாம். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கட்ட வேண்டிய கடன் தொகை ரூ.5.52 கோடியை கட்டாததால் அவரது சொத்துக்களை ஏலத்தில் விடப்போவதாக வங்கி அறிவித்தது. ஏலத்தில் விஜயகாந்திற்கு சொந்தமான வீடு,  ஆண்டால் அழகர் கல்லூரில், நிலம் மற்றும் வணிக கட்டடம் அடங்கும்.
எனவே, தேமுதிக கூட்டத்தை கூட்டிய பிரேமலதா செயளாலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சொத்துகள் ஏலத்தில் வந்திருப்பது பற்றி உருக்கமாக பேசினாராம். பின்னர் ஏலத்திற்கு வந்துள்ள சொத்தை மீட்க நிதி திரட்டி தரும்படி கேட்டாராம்.

எம்.பி ஜோதிமணி, செந்தில் பாலாஜியின் செயல்களால் திமுக - காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ?

karurவெப்துனியா : குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று தெரிவித்தார்.>அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ் நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என். நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது.
அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார். இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது. தமிழகத்தினை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே கோஷ்டி மோதலின் கூடாரமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மானசீக காங்கிரஸ் கட்சியினர் ஏன் ? தி.மு.க வுடன் நாம் ஏன் ? இணைய வேண்டுமென்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

சுகாதாரத்தில் பின்னோக்கிச் சென்ற தமிழகம்: நிதி ஆயோக்!... 3 வதில் இருந்து 9 ஆவது இடத்திற்கு ..

மின்னம்பலம் : சுகாதாரத்தில் பின்னோக்கிச் சென்ற தமிழகம்: நிதி ஆயோக்!சுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் மருத்துவம், சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுவருகிறது. உலக வங்கியின் ஒத்துழைப்புடனும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உதவியுடனும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்படுகின்றன. நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு உண்டாக்குதல், நோய்கள் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இதன்படி 2017-18ஆம் ஆண்டுக்கான சுகாதாரம் குறித்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் நேற்று (ஜூன் 25) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளைக் கொண்ட முதன்மையான மாநிலமாகக் கேரளம் உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த தமிழ்நாடு தற்போது ஆறு இடங்கள் சரிவைக் கண்டு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!

சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!மின்னம்பலம் : அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன்- தினகரன் உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் நடத்தும் உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம் அமமுகவில் இன்னொரு ஆடியோ வெளியாகாமலேயே பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அமமுகவின் மண்டலப் பொறுப்பாளரான பழனியப்பனுக்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, குறிவைத்திருப்பதாக மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அமமுகவின் முக்கியப் பிரமுகரான செந்தில்பாலாஜி போலவே பழனியப்பனையும் தங்கள் பக்கம் கொண்டுவர திமுகவும் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், ஸ்டாலின் மருமகன் சபரீசன் டீம் சேர்ந்து, அமமுக முக்கிய பிரமுகரான தங்கத்தைச் சந்தித்து, ’திமுகவுக்கு வாருங்கள் உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் உங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறோம்’ என்று திமுக நடத்திய பேச்சுவார்த்தையை, நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில், அதிமுகவுக்கு எஸ், திமுகவுக்கு நோ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

நாடு முழுவதும் கல்லூரிகளில் இந்தி பாடம்: பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு


தினத்தந்தி :நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி பாடத்தை கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதுடெல்லி, சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழியை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்நிலையில், அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் முயற்சி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் உயர் கல்வியை நிர்வகிக்கும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) திகழ்ந்து வருகிறது. அந்த அமைப்பு, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்!

Imagenews7.tv  ; மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகன் என்ற வாலிபர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தர்சினி பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த அன்றே புதுமண தம்பதியர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதில் மணமகன் கனகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை மணந்து கொண்ட தர்சினி பிரியாவும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மணமகனின் சகோதரரே இந்த சாதி ஆணவக் கொலையில் ஈடுபட்டது அதிர்ச்சியினை உண்டாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகனும் - தர்சினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகனின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர் தர்சினி பிரியாவின் பெற்றோரும் அவரது உறவினர்களும்.

செவ்வாய், 25 ஜூன், 2019

ஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்

மாலைமலர் :பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக
எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் 8 வரை வேட்புமனு தாக்கல். ஜூலை 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனை. வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 11-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு எம்.பி.யை தேர்வுசெய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.பி.க்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.பி.க்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாகும் வாய்ப்புள்ளது. தமிழக சட்டசபையில் ஜூலை 18-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ் கோபாலன் : I born black and i die black' என்று முழங்குகிறார்.

Ruben Jay :; சுதா ரகுநாதன் மீது கொலை வெறியில் இருக்கும்,சார்ந்தோரும்
சங்கிகளும் இந்த கதையை கேளுங்கள்.
கருப்பு வெள்ளை படத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர் டாக்டர் ஷியாமளா.அவரது அப்பா பெயர் பி.வி கோபாலன்,இந்திய வெளிவிவகார துறை அதிகாரி.அம்மா ராஜம்.ஷியாமளா பள்ளியில் படிக்கும்போது கர்நாடக சங்கீதத்தில் தங்கப்பதக்கமெல்லாம் வென்றவர்.
மேற்படிப்புக்கு அமெரிக்கா போனபோது காதலில் விழுந்தார்.காதலன் பெயர் Donald Harris.அவரும் சுதா ரகுநாதன் மருமகனைப் போலவே கருப்பர்.ஜாமாய்கன் அமெரிக்கன்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.மூத்த மகளுக்கு கமலா என்று பெயரிட்டார், அந்தப் குழந்தை வளர்ந்து வளர்ந்து இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில செனட்டராக இருக்கிறது. கமலா ஹாரிஸ் என்றால் மொத்த அமெரிக்காவுக்கும் தெரியுமளவு பிரபலம்.
அடுத்த அதிர்ச்சி செய்தியை கேளுங்கள்,
வருகிற 2020 நவம்பர் 3 ம்தேதி நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்,ஜனநாயகக் கட்சி வேட்பாளராக டொனால்டு ட்ரம்பை எதிர்த்து நிற்கப்போவது கமலா ஹாரிஸ்தான்.