பிரபாகரனின் 23வது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ,ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் போல வெறுமனே புலிகளிற்கு மட்டுமான நட்புச் சக்தியாகவோ ஈழப் பிரச்சினை குறித்துக் கிஞ்சிற்றும் அறிவில்லாதவராகவோ கலைஞர் இருக்கவில்லை. அவர் ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்திருந்தார். வைகோ அல்லது நெடுமாறன் போல அவர் வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராக இருந்ததில்லை
-- இலங்கை தமிழ்
எழுத்தாளர் ஷோபா சக்தி :
New indian express.com
13-8-2018
மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது 'கண்டிவீரன்' சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன்.
தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதே வேளையிலேயே தி.மு.க.வின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின.
இலங்கையில் தமிழ்த் தேசியமும் தமிழருக்கு சுயாட்சிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முளைவிடத் தொடங்கிய காலமும் இதுதான். இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களின் உணர்வுமிக்க தீவிரத் தொண்டர்களும் தி.மு.கவைப் பின்பற்றியே தங்களது அரசியலை வடிவமைத்துக்கொண்டார்கள். தி.மு.கவின் தனித் தமிழ்நாடு கோரிக்கையும் அதன் பின்னான முழுமையான மாநில சுயாட்சிக் கோரிக்கையும் அந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்க அவர்கள் முன்னெடுத்த மொழிப் பற்று, இனவுணர்வு, பண்டையகால தமிழ்நில அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாவற்றையும் இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள் அப்போது தி.மு.க.வை பின்பற்றியே அமைத்துக்கொண்டார்கள். பிற்காலத்தில் அவர்களது தேர்தல் சின்னமாக தி.மு.கவின் உதயசூரியனே அமைந்து போயிற்று.
அதேவேளையில் தி.மு.க.வின் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சமூகநீதி, சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றையெல்லாம் மிகக் கவனமாக இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொண்டார்கள். ஏனெனில் அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் அதிகாரம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களிடமே இருந்து வருகிறது.
-- இலங்கை தமிழ்
எழுத்தாளர் ஷோபா சக்தி :
New indian express.com13-8-2018