வியாழன், 28 டிசம்பர், 2017

முத்தலாக் மசோதா பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு ....

Parthiban Pakirisamy : முத்தலாக் மசோதா உள்நோக்கம் கொண்டதா ....?!!
RSS கூடாரம் ஒருநாளும் சாமானியனின் அல்லது சிறுபான்மையினரின் நலன்கருதியோ அல்லது குறைந்தபட்சமாக ஒரு துரும்பைக்கூட கனவில் மறந்தும் கிள்ளிப்போடாது என்பது 1925 ல் இருந்து நாம் பார்த்துவருவதே; இந்நிலையில் முத்தலாக் மசோதா என்கிறபெயரில் பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு புத்திசுவாதீனமில்லாதவன் கூட ஏற்கமாட்டான் எதிர்த்து கேள்விகள் கேட்பான்!
ஆடுகளை என்றுமே ஓநாய்கள் பாதுகாப்பதில்லை! ஒருவேளை அப்படி பாதுகாக்கிறோம் என்று சொல்லுமேயானால் மிகப்பெரிய கொலைகார சதித்திட்டம் அங்கே அரங்கேறப்போகிறது என்றுதான் பொருளேத்தவிர; பொது சிவில் சட்டத்திற்கான அடித்தமிடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கல்ல!
ஒரு மதத்தின் மீது கொண்டுவரும் இத்தகைய செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட மதத்தலைவர்களை அணுகாமல் குறைந்தபட்சம் அவர்களின் ஒட்டுமொத்த எண்ண உணர்வுகளையே கேட்டறியாமல்; சுமார் 20 கோடி மக்கள் வாழும் ஒரு இந்தியத்துணைக்கண்டத்தில் வெறும் நூற்றுக்கும் குறைவான வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, இத்தகைய படுபாதக செயலை செய்கிறார்கள் என்றால்; உண்மையில் இவர்கள் பெண்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் என்று ஒரு பைத்தியக்காரன் கூட நம்பமாட்டான்.

நீதிமன்றம் :லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம் வாடகையை ஏற்காவிட்டால் ..

tamilthehindu :மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

ராஜேந்திரபாலாஜி : ரஜினி பாஜகவுடன் கூட்டணிக்கு அமைக்க வாய்ப்பிருக்கிறது

ரஜினிக்கு அரசியல் சரிப்படாது!மின்னம்பலம் :ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். தொடக்க நாளில் பேசிய ரஜினி, வரும் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். நேற்றைய பேச்சிலும் இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அரசியல் என்றாலே பல சித்து விளையாட்டுகள் தெரிய வேண்டும். ரஜினி ஒரு வெகுளி. அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவருடைய ரசிகர்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளனர். அனைவரையும் சரிசெய்து அரசியல் செய்யும் நிலையை அவர் தாண்டிவிட்டார்.

சசிகலா அடுத்த மாதம் முழுவதும் மௌன விரதம் ?

டிஜிட்டல் திண்ணை!

மின்னம்பலம் : “சின்ன ப்ளாஷ்பேக்...கடந்த நவம்பர் 29ஆம் தேதி சசிகலாவை சந்திக்க பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார் தினகரன். அப்போது சிறைக்குள் நடந்தவற்றை நாம் டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தோம். அதில் ஒரு பகுதி மட்டும் நினைவூட்டலுக்காக...
‘இரட்டை இலையை எதிர்த்து நீ தேர்தலில் நின்றால் அது அக்காவை எதிர்த்து நிற்கிற மாதிரி. அதனால்தான் நான் வேண்டாம்னு சொல்றேன். நாம ஜெயிச்சாலும் இரட்டைஇலை தோற்பதுபோல ஆகிவிடும். இதுக்காகவா அக்கா பாடுபட்டாங்க?அது அவங்க நின்ற தொகுதி. அங்கே அவங்க போட்டியிட்ட இரட்டை இலை தோற்கக் கூடாது என்பதால்தான் சொல்றேன். அடுத்த தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம்... நீ அமைதியாக இரு!’ என்று சொல்லி இருக்கிறார் சசிகலா.
அதற்கு, ’ அடுத்த எலெக்ஷன் வரும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டா அதுக்குப் பிறகு கட்சி இருக்காது. தேர்தலில் போட்டியிடப் போறோம்னு சொல்லிட்டு இப்போ நாம பின் வாங்குறது சரியா இருக்காது. நீங்க சொல்ற மாதிரி இரட்டைஇலையை மீட்க வேண்டும் என்றாலும் அதுக்கு நாம நம்ம பவரை காட்டித்தான் ஆகணும். அதுக்கு தேர்தல்தான் ஒரே வழி...’ என தினகரன் சொன்னாராம். ஆனால், சசிகலாவும், இளவரசியும் சமாதானம் ஆகவே இல்லையாம்.

நடந்ததை விளக்கி பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட முனிசேகர்

கண்ணீருடன் நடந்ததை விளக்கி பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட முனிசேகர்மாலைமலர் :ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் விளக்கி இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48). கொளத்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றார். அவருடன் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் முனி சேகர் மற்றும் 5 போலீசாரும் சென்றனர்.
அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு இரையானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு வந்த தகவலில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது. வடக்கில் இருந்து வந்த ஒவ்வொரு தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே வந்தது. ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும்! கதிரேசன் தம்பதியின் உருக்கமான கடிதம்

நக்கீரன் : நடிகர் தனுஷை தங்களது மகன் என்று கூறிவரும் மேலூர் கதிரேசன் தம்பதியினர் நடிக தனுஷுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். பெற்றோராகிய தங்களை பார்க்க தனுஷை அனுப்பும்படி ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கதிரேசன் தம்பதியின் கடிதம்: ’’பாசமிகு உறவினர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தைதான் அவர்கள்தான் வாழும் தெய்வங்கள் நம் குடும்பம்தான் முக்கியம் என கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன். நம் குடும்ப உறவு மேம்பட நான் பெற்று வளர்த்த என் மகனும் தாங்கள் மருமகனுமாகிய கலைசெல்வன் என்ற தனுஷ் - ஐ தனது பெற்றோராகிய என்னையும், என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துக்கள். - கதிரேசன் மீனாட்சி மேலூர் போஸ்ட் மதுரை மாவட்டம்’’ இது குறித்து கதிரேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் எந்து ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும். பெற்றோரான எங்களை கவனித்துக்கொள்ள தனுஷுக்கு அறிவுறை வழங்கி அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்

முத்தலாக் சட்டம் மக்களவையில் நிறைவேறியது

நக்கீரன் :  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் சட்ட மசோதா இன்று நிறைவேற்றம்! முத்தலாக் சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் எனப்படுவது இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்பிற்கு எதிரானதாக இருந்தது. இஸ்லாமிய பெண் ஒருவரிடம், அவரது கணவர் தலாக் என மூன்று முறை சொன்னால் அது விவாகராத்தாக ஆகிவிடும் என்ற நடைமுறையும் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது. உண்மையில், தலாக் கொடுப்பதற்கு குறிப்பிட்ட கால அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு தலாக்கிற்கும் இடையில் மூன்று மாதங்கள் இடைவெளி விடவேண்டும். அதுவும் பெரியவர்களின் முன்னிலையில் முறைப்படி சொல்லவேண்டும்.
ஆனால், இது காலப்போக்கில் இஸ்லாமிய பெண்களின் திருமணப் பாதுகாப்பிற்கு எதிரானதாக மாறியது. தொலைபேசி வாயிலாக ஒரே தவணையில் தலாக், தலாக், தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வது வரைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்த முறையை மாற்றக் கோரி இஸ்லாமிய பெண்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, அது சட்டமாக இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் முத்தலாக்கை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சுக்ராம் .. ராசா ,,, ஊழலை அணுகும் விதத்தில் இருக்கிறது பார்ப்பன சாதி வெறி?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!: மனுதர்மம்தான் ஆளுகிறது! ஊழல் செய்வதிலும் பார்ப்பானுக்கு சலுகையா?
‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் நேற்று (26.12.2017) 10 ஆம் பக்கத்தில் சேகர் குப்தா அவர்கள் எழுதியுள்ள ‘‘அரசியலில் ஊழல் களுக்கும், சாதிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்ற கடடுரையை அப்படியே எடுத்து வெளியிடுகிறோம். (ஆ-ர்)
ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்கு களில் பிடிபடுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகமா கிறதா? சில உண்மைகளை ஆராய்வோம்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந் ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நிலக்கரி ஊழல் வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மது கோடா, லஞ்சம் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிபு சோரன் ஆகியோர் பழங்குடி வகுப்பினர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலித். லாலு பிரசாதும், முலாயம் சிங்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டவர்கள். அவ்விருவரும் ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் வழக்குகளுக்கு உள்ளானவர்கள்.

Troll Trousers 2.0 - அதிமுகவையும் பாஜகவையும் சமுகவலையில் ஓட ஓட விரட்டி ... சமுக வலை சக்கரவர்த்தி

Troll Trousers 2.0 : இணையத்தில் ஜெயாவிற்கு எதிராக எழுத எல்லோரும் தயங்கிய நேரம்... ஒரு பக்கத்தை உருவாக்கி ஜெயாவின் அராஜகத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி தொடங்கியதுதான் #TrollJaya என்ற பேஜ்.....
ஜெயா மரணித்த பின் அன்று உறக்கம் இன்று தவித்தவர்களில் நானும் ஒருவன்... கொள்கை ரீதியான எதிரியாகத்தான் பார்த்தேனே தவிர மரணனிக்க வேண்டும் என எண்ணியது இல்லை... பக்கத்தை மூடி விடலாம் என்று எண்ணினேன் ஆனால் அடிமையின் ஆட்டம் சசி அன் கோ வின் ஆட்டம் என்னை பக்கத்தை மூடும் எண்ணத்தை மாற்றியது...
முதலில் #TrollPolitical என பெயர் மாற்றி சில நாட்களிலேயே #Trollmafia என பெயர் மாற்றம் செய்து சசிகலா அடிமைகள் பற்றி பதிவுகள் வெளியிட்டு சசி உள்ளே செல்லும் வரை தொடர்ந்தது....
சசி உள்ளே சென்ற பின் நரி கூட்டம் அடிமைகளை அடிமை செய்து ஊர் உள்ளே சிங்கம் என கர்ஜித்து கொண்டு வந்தது அதை என்னால் எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும்...
நமக்குள் இருக்கும் சண்டைகள் பிறகு என மன்னார்குடி கும்பலை பிறகு பார்த்து கொள்ளலாம் என டவுசர்கள் கூட்டத்தை ஒழித்து கட்ட வேண்டும் என #TrollTrousers என பெயர் மாற்றம் செய்தேன்... டவுசர்கள் கிழிக்கப்பட வேண்டும் நம்முடைய தற்போதைய இலக்கும் அதுவே...

சரிகா (கமலஹாசன் ) மும்பையில் வீட்டை இழந்து தவிப்பு ... அமீர் கான் உதவி

அம்மா உதவி வீட்டு பிரச்சனையில் தவித்த கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் உதவி செய்ய முன் வந்துள்ளார். கமல் ஹாஸனும், சரிகாவும் கடந்த 2004ம் ஆண்டு பிரிந்தனர். இதையடுத்து சரிகா மும்பையில் வசித்து வருகிறார். சரிகாவின் தாய் கடந்த நவம்பர் மாதம் காலமானார். அதன் பிறகு சரிகா கோர்ட்டும், கேஸுமாக அழைகிறார்.
அம்மா சரிகாவின் சம்பளத்தை வைத்து அவரது தாய் மும்பை ஜுஹு பகுதியில் அபார்ட்மென்ட் வாங்கினார். ஆனால் அவர் இறந்தபோது அந்த அபார்ட்மென்ட் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் சரிகாவுக்கு இல்லாமல் யாரோ ஒரு குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
சரிகா தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய அபார்ட்மென்ட் தனக்கு இல்லை என்பதை அறிந்த சரிகா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் கோர்ட்டும், கேஸுமாக அழைகிறார்.

உதவி ஆமீர் கானின் சகோதரி நுஸ்ஸத்(நடிகர் இம்ரான் கானின் அம்மா) சரிகாவின் நெருங்கிய தோழி. சரிகா படும் கஷ்டத்தை பார்த்த நுஸ்ஸத் அவருக்கு உதவுமாறு ஆமீர் கானிடம் கூறியுள்ளார்.

20 ரூபாய் நோட்டுகளை வீடுகளில் தேடும் கரைவேட்டிகள் ... யார் எந்த கோஷ்டி என்று தெரியாமல் மக்கள் திகில் !

ஆர்.கே.நகர்ந.பா.சேதுராமன் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னால் ஆர்.கே.நகர் தொகுதியின் பெரும்பாலான மக்கள், பதற்ற மனநிலையில் இருக்கிறார்கள். ரோட்டோர டீக்கடைகளில் ஆரம்பித்து, தெருக்களில் நடந்துபோகும் மக்கள்வரை, அவர்களின் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. குழப்பத்துக்குக் காரணம், 20 ரூபாய் நோட்டும் கரைவேட்டிகளும். கடந்த திங்கள் கிழமை காலையிலிருந்தே, இந்தக் கரைவேட்டிகள்  தொகுதியை முழுமையாக ஆக்கிரமித்து வைத்துள்ளன. “இருபது ரூபாய் நோட்டை யார் வைத்திருந்தாலும் அதை உடனே கொடுத்துவிட்டால் தப்பித்துப் பிழைத்தீர்கள்… இப்போது, ‘எங்களிடம் எதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு, 20 ரூபாய் நோட்டுக்கு ஈடாக 10 ஆயிரம் ரூபாயை வாங்கும்போது மாட்டிக்கொண்டால், தர்ம அடியுடன் ஜெயிலுக்கும் போக வேண்டியதுதான்” என்று மக்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறது ஒரு கரைவேட்டிகளின் பிரிவு.
ஆர்.கே.நகர்அந்தக் கரைவேட்டிகள் நகர்ந்ததும், இன்னொரு பிரிவு கரைவேட்டிகள், “அவங்க அப்படித்தான் சொல்வாங்க. இந்த 20 ரூபாய் நோட்டை நாங்கள் உங்களிடம் எப்படிக் கொடுத்தோம், எந்தத் தேதியில் கொடுத்தோம், கொடுத்தது பகலிலா, இரவிலா என்றே கண்டுபிடிக்க முடியாதவர்கள், இதையா கண்டுபிடிக்கப் போகிறார்கள்… நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். இதைவிட உங்களுக்கு இன்னும் என்னென்ன கொடுக்கப் போகிறோம் என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று வார்த்தையில் தேன் தடவுகிறார்கள். ”பணத்தைக் கொடுக்கும்போது கையும்களவுமாகப் பிடிக்கத் தவறியதுபோல், 20 ரூபாய் டோக்கன்மீது பணம் கொடுப்பது, வாங்குவது தெரிந்தால் இந்தமுறை விட்டுவிடக் கூடாது”  என்று ஒரு குரூப், தொகுதி முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறது.

ராசாவுக்கு பக்கபலமாக நின்ற திராவிட இயக்கங்கள் மீது சில தலித்திய அமைப்புக்கள் ..

Prabaharan Alagarsamy : 2ஜி பொய்வழக்கை முறியடித்து ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை பெற்ற பிறகு, பல முன்னணி தலித்திய செயல்பாட்டாளர்கள், அவரை பாராட்டுகிறார்கள், நேரில் சென்று வாழ்த்துகிறார்கள். நமக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் அதேசமயம் தங்கள் வசதிக்கேற்ப ஆ.ராசாவின் வெற்றியை திரித்துக்கொள்ளலாம் என்று சிலர் நினைப்பது நேர்மையான செயல் அல்ல.
தோழர் எவிடன்ஸ் கதிர், "ஒற்றை ஆளாக நீதி களத்தில் போராடி வென்று இருக்கிறார் ராஜா.தி.மு.க மீதான களங்கத்தை தீர்ப்பு உடைத்து இருக்கலாம்.ஆனால் உடைத்தவர் ராஜா." என்கிறார்.
உண்மைதான், ஒற்றையாளாக நீதி களத்தில் போராடினார் ஆ.ராசா. ஆனால், தமிழக அரசியல் தளத்தில் அவருக்கு துணைநின்றவர்கள் யார் என்பதை அறியாதவரா கதிர்?
இந்த விடுதலைக்கு முன்பு, எப்போதாவது ராசாவிற்கு ஆதரவாக ஒரு வரியாவது எழுதியிருப்பாரா? சில மாதங்களுக்கு முன்பு, நீதிபதி கர்ணன் குறித்து அவர் எழுதிய ஒரு பதிவில், கர்ணன், மாயாவதி, ராசா போன்றவர்கள் தவறிழைத்தவர்கள் என்கிற பொருள்படும்படி எழுதியிருந்தார். அந்த பதிவிலும், ராசாவிற்கு ஆதரவாக நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கு திரு.கவுதம சன்னா அவர்கள், ஆ.ராசாவின் ஆளுமையை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்த பதிவில் அவர், திமுக ஆ.ராசாவை கைவிட்டுவிட்டதாக எழுதியிருக்கிறார். எவ்வளவு ஒரு அபாண்டமான புளுகு இது?
திகார் சிறையில் இருந்த ஆ.ராசாவை திமுக தலைவர் கலைஞரும், ஸ்டாலினும் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கட்சி பொறுப்பில் இருந்து ஆ.ராசா நீக்கப்படவில்லை, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ஆ.ராசாவுக்கு கட்சியின் சார்பில் விமான நிலையத்தில் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது, மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கட்சியின் எந்த ஒரு பொறுப்பாளரும் ஆ.ராசாவை கைவிட்டதில்லை.

தேயிலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை

ஊதிய உயர்வு கோரும் தேயிலைப் பணியாளர்கள்!
மின்னம்பலம் ": மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள 11.1 லட்சம் தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் ஊதியங்களை உயர்த்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கணக்குப்படி மேற்கு வங்கத்திலுள்ள 4,30,000 தேயிலைத் தோட்டப் பணியாளர்களும், அசாமில் 6,80,000 தேயிலைத் தோட்டப் பணியாளர்களும் உள்ளனர். 2015ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி இப்பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் செய்யப்படவில்லை. 1951ஆம் ஆண்டு தோட்டப் பணியாளர் சட்டத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.
தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் தொழிலாளர் செலவுகள் 60 சதவிகிதமாக உள்ளது. ஊதியத்தில் 10 ரூபாய் உயர்த்தினால் உற்பத்திச் செலவு ரூ.6 உயரும் என்றும், இதனால் நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும் ரோசெல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.எஸ்.பேடி பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினி ..... கட்சி இல்லையாம் .. பவுண்டேசனாம் .... சிவாஜி பட பாணியில் சேவையாம் ,,,, ஆர் கே நகர் எபெக்ட்?

டிஜிட்டல் திண்ணை: கட்சி இல்லை, பவுண்டேஷன்!மின்னம்பலம் :ரஜினியின் ரகசிய திட்டம்
அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
“குழந்தைகளை நல்லா வளர்க்கணும். அவங்கதான் நம்ம இன்வெஸ்ட்மெண்ட். ஆக்கபூர்வமான விஷயங்களை சிந்தியுங்க. குடும்பத்தை நல்லா பார்த்துக்கோங்க...’ -இன்று ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு தொடங்கியபோது இப்படித்தான் பேசினார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அரசியலில் என்ன முடிவெடுக்கப் போகிறேன் என அறிவிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்திருந்தார் ரஜினி. அன்று என்ன சொல்லப் போகிறார் ரஜினி என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இன்று காலையில் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு நெருக்கமான சில நண்பர்களும் அங்கே வந்திருந்தார்கள். அவர்களிடம் பேசியபோது சில விஷயங்களைச் சொன்னார்கள். அதுதான் டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அறிவிக்கப் போகும் முடிவு பற்றியது. அவர்கள் சொன்னதை அப்படியே இங்கே சொல்கிறேன்.

கோவையில் ராசாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

கோவை: ராசாவுக்கு உற்சாக வரவேற்பு!மின்னம்பலம்:  2ஜி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கோவை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு அம்மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது,
கடந்த 21ஆம் தேதி வழங்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில் ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி சென்னை வந்த ராசா, கனிமொழி ஆகியோருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரடியாக விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களில் அதுவும் ஒன்றானது.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக கோவை சென்ற ஆ.ராசாவுக்கு, விமான நிலையத்தில் திரண்ட திமுகவினர் மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலினுக்கு வழங்கப்படும் வரவேற்புக்கு நிகராக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக மட்டுமல்லாது திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட இயக்கங்களும் வரவேற்பில் கலந்துகொண்டன.

ரஜினியின் வளர்ப்பு தந்தை : ரஜினிக்கு அரசியலும் வேண்டாம் சினிமாவும் போதும்... பேசாமல் ஒய்வு ,,,



அழகிரி :ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்காது! ..திமுக பதில்...

மின்னம்பலம் :திமுகவில் ஏதோ ஒரு மாற்றம் தேவை என்பதுதான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிரொலித்துள்ளது என்று திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார். அழகிரி தன் இருப்பைக் காட்டவே இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு உடனடியாக திமுக சார்பில் பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் மருது கணேஷ் உள்ளிட்ட 57 வேட்பாளர்களுக்கு டெபாசிட்கூடக் கிடைக்கவில்லை. தோல்வி குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் இது திமுகவுக்குக் கிடைத்த தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்த தோல்வி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர்-27) மு.க.அழகிரி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், "தோல்வியை யாரும் தோல்வியென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கட்சி ஓட்டைப் பணம் சாப்பிட்டுவிட்டது என்று துரைமுருகன் கூறுகிறார். அவர் இப்படிக் கூறலாமா, கட்சியினருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? திமுகவினரை இப்படி கூறினால் எப்படி வருங்காலத்தில் திமுக நிலைத்திருக்கும்?” என்று கேள்விஎழுப்பினார்.
தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

புதன், 27 டிசம்பர், 2017

ஆண் வேடத்தில் 3 பெண்களை திருமணம் செய்த ஆந்திர பெண்


tamiloneindia :திருப்பதி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், தன்னை ஆண் எனக்கூறி வந்தார். ஆண்களை போல் வேடமிட்டு வலம் வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் 3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளார். முதலில் அனந்தபுரம் மாவட்டம் கொத்தச்செருவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
 பின்னர் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 3-வதாக ஜம்மலமடுகு பகுதியில் உள்ள பீமகுண்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், எனக்கு அவசர வேலைகள் உள்ளது. விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்துச் செல்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் எனக்கூறி செல்லும் அவர், பின்னர் திரும்பி வருவதே இல்லை எனத் தெரிகிறது.

BBC : பெனாசிர் படுகொலையில் பின்னணியில் இருந்தது யார்?

ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய முதல் பெண்மணி பேனசீர் பூட்டோ. இவர் கொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறதே தவிர, இவரது கொலைக்கு உத்தரவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலால் எனப்படும் 15 வயதான தற்கொலை குண்டுதாரியால், டிசம்பர் 27-ம் தேதி 2007-ம் ஆண்டு பூட்டோ கொல்லப்பட்டார்.
ராவல்பிண்டியில் நடந்த ஒரு தேர்தல் பேரணியைப் பூட்டோ முடித்துவிட்டுச் சென்றபோது பூட்டோவின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற பிலால், பூட்டோவை துப்பாக்கியால் சுட்டும், தற்கொலை வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார். இந்த தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தாலிபன்களால் பிலால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரான சுல்பிக்கார் அலி பூட்டோவின் மகள்தான் பேனசீர் பூட்டோ. அலி பூட்டோவின் அரசியல் வாழ்க்கையும் விரைவிலே முடிந்தது. தளபதி ஜியா-உல் ஹக்கின் ராணுவ ஆட்சியின் போது அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

ஃபேஸ்புக்கில் இனி ஆதார் அவசியமா? Facebook ஐ பார்த்து பயப்படும் பாஜக !

மாலைமலர் :ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு துவங்குவோர் தங்களின் உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆதாரில் உள்ள பெயரை பதிவு செய்யக் கோரும் அம்சத்தினை சோதனை செய்து வருகிறது. புதுடெல்லி: இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு துவங்குவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய தங்களது ஆதாரில் உள்ள பெயரையே பதிவு செய்ய கோரும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. புதிய அம்சத்தின் மூலம் ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்படும் கணக்குகளை கண்காணிக்க முடியும் ,ஹேக் செய்யமுடியும் , பயனாளர்களை வேவு பார்க்க முடியும். இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் பயன்படுத்திப்பட்டு வருகிறது. உலகளவில் ஃபேஸ்புக் பயனாளிகள் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் புதிய கணக்கு துவங்குவோருக்கு ஆதாரில் உள்ள பெயர் ('name as per Aadhaar') என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆதாரில் உங்களது பெயர் என்ன? ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்தும் போது நண்பர்களால் உங்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். ரெடிட் மற்றும் ட்விட்டர் பயனர்களால் முதலில் கண்டறியப்பட்டது. எனினும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை, ஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் மட்டும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் காணப்பட்டது.

சசிகலா உறவினர்கள் வீடுகளில் மீண்டும் வருமானவரி சோதனை .. மிடாஸ் ஆலையிலும்

tamilthehindu :சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. கடந்த மாதம் நடந்த சோதனைக்கு பின்னர் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.
சசிகலா உறவினர், இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் இல்லம், பள்ளிக்கரணை, தி.நகர், வடபழனி ஸ்ரீசாய் கார்டன்ஸ், படப்பையில் உள்ள மிடாஸ் ஆலை உட்பட 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர கோவையிலுள்ள மைலேரிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடக்கிறது.

தமிழ் ராக்கார்ஸிடம் கெஞ்சி கோரிக்கை வைக்கும் தயாரிப்பாளர்கள் .

Siva - Oneindia Tamil சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இருக்க கோலிவுட் இயக்குனர்களோ படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய இயக்குனர், தயாரிப்பாளர் என்று படக்குழு படாதபாடு படுகிறது. இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை வெளியிட்டு தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். புதுப்படம் ரிலீஸானால் அதை எதிர்பார்த்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு இயக்குனர்கள் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர். வேலைக்காரன் பட ரிலீஸுக்கு முன்பு மோகன்ராஜா கூட தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை வைத்தார். பலூன் ஏதாச்சும் பாத்து பண்ணுங்க பாஸ் என்று பலூன் பட இயக்குனர் சினிஷும் தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2 ஜி கட்டுக்கதை.... வினோத் ராய் ,சு சாமி போன்ற மோசடி பேர்வழிகளின் துணையுடன் பாஜக நடத்திய நாடகம் ,,

மின்னம்பலம் :மிஹிர் ஷர்மா
‘பொய்ச் செய்தி’ என்பதன் சரியான பொருள், எது தவறான ஒன்றோ அதைப் பரபரப்பாக்கி மக்களை உண்மை என நம்ப வைப்பதாகும். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டன் குழந்தைகளைக் கடத்துவதாக வெளிவந்த செய்தி இந்த வகையைச் சார்ந்ததே. உலகமெங்கிலும் இதுபோன்ற ‘பொய்ச் செய்திகள்’ உலா வருகின்றன. இத்தகைய செய்திகள் மூலம் தவறான படிமங்களை உருவாக்க முடியும். பரபரப்பாகச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் ‘பொய்ச் செய்தி’யை உண்மைச் செய்தி போல் உலவவிட முடியும். கும்பலாக யோசிக்க வைக்க முடியும் (கும்பலாக யோசிக்கும்போது (Group Think) ஒருமித்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வதால் அக்கருத்து சரியா, தவறா என்ற விவாதத்துக்கு இடமில்லாமல் தவறான முட்டாள்தனமான நம்பிக்கைகளை உருவாக்க முடியும்).
இதன் வாயிலாக, சமூக வலைதளங்களையும், ஊடகங்களையும் பரபரப்பாக்க முடியும். இதற்கு, சிறியதொரு கதையை அது சிக்கலானதாக இருந்தாலும்கூட பிரமாண்டமான ஊழல் என நிறுவிட அதை மிகைப்படுத்தி மீண்டும் மீண்டும் பரப்ப வேண்டும். இதுதான் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரியின் மின்னஞ்சல் குறித்த விவகாரத்தில் நிகழ்ந்தது.

எடப்பாடி பன்னீர் மீது பாஜக நம்பிக்கை இழந்த பாஜக... தினகரனை மீண்டும் ?

மாறும் டெல்லி ரூட்!மின்னம்பலம் :ட்விட்டுக்குப் பின்னால் உள்ள ட்விஸ்ட்!
 ஆர்.கே.நகர் இரண்டு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சிறு தொகுதி என்றாலும், அதன் தேர்தல் முடிவு தமிழக அரசையே அசைத்துப் பார்க்கும் வண்ணம் அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். விழாக்கள்தோறும் இந்த அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று சொல்லிவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.கே.நகர் மக்கள், ‘எங்களால் அது முடியும்’ என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் டிசம்பர் 25ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில், ஒட்டுமொத்த அதிமுகவின் தோல்விக்கும் திமுக மீது பழிபோட்ட எடப்பாடி - பன்னீர் கூட்டணி, மேலும் தினகரன் ஆதரவு நிர்வாகிகள் பலரையும் கட்சிப் பதவிகளில் இருந்தும், எம்.எல்.ஏ அல்லாதவர்களை கட்சியில் இருந்தும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டனர். இந்த நிலையில்தான் தமிழக பாஜகவின் ‘மென்ட்டர்’ என்று கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி டிசம்பர் 26 அன்று தனது ட்விட்டரில், தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் திறன் அற்றவர்கள் என்ற பொருளில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

ஆறு மாதங்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் தினகரன் ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைதான் அவர் இவ்வாறு விமர்சித்தார். உடனே இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகப் பதிலடி கொடுத்தார். ஆனால் குருமூர்த்தியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பன்னீரும், பழனிசாமியும் இதுவரை இதுபற்றி வாய் திறக்கவில்லை.

தினகரன் ஆதரவாளர்கள் அடாவடி .... 20 ரூபாய் டோக்கனுகுக் பணம் தரமறுப்பு

வெப்துனியா :சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் கடைசி நாள் பிரச்சாரத்தின்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி அதிகமாக இருந்ததால் ஒருசில வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் கொடுத்துவிட்டு, அந்த டோக்கனுக்கு தேர்தல் முடிந்தவுடன் பணம் தருவதாக தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது இந்த நிலையில் தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்ட நிலையில் சொன்னபடி சிலருக்கு ரூ.20 டோக்கனுக்கு பணம் தரவில்லையாம். டோக்கனை கொடுத்து பணம் கேட்டவர்களை தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி மீனாம்பாள் நகர் பகுதியில் உள்ள தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டர் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பணம் கேட்ட மூன்று பேர்களை தாக்கியதாகவும்
கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், தினகரன் ஆதரவாளர்கள் ஜான்பீட்டர் உள்பட நான்கு பேர்களை கைது செய்துள்ளனர். தினகரன் ஆதரவாளர்கள் வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதி அளித்த பணத்தை தராததால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது