புதன், 12 ஜூலை, 2017

கோபால கிருஷ்ண காந்தி காங்கிரஸ் துணை குடியரசு தலைவர் வேட்பாளர்

காங்கிரஸ் தலைமையிலான துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணகாந்தி தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தும் வேட்பாளரை முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள பாராளுமன்ற இல்லத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு சோனியா காந்தி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியை (மகாத்மா காந்தியின் பேரன்) தேர்ந்தெடுத்து உள்ளன என்றார். 

BBC :நிகாப் அணிய தடை மேல்முறையீட்டு மனுவும் நிராகரிப்பு

பெல்ஜியம் அரசு, இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதற்கு 2011-ம் ஆண்டு விதித்த தடையை மீறி முகத்தை மறைக்கும் துணியை தொடர்ந்து அணிந்து, அத்தடைக்கு எதிராக வழக்குத் தொடுத்த , இரு முஸ்லிம் பெண்கள் தங்களில் சவாலில் தோல்வியடைந்துள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து, அபராதம் மற்றும் சிறை தண்டனையைக் குறித்த அச்சுறுத்தலைத் தவிக்க ஒரு பெண் வேறுவழியின்றி நிகாப் அணிவதை நிறுத்தியதாகவும், மற்றொரு பெண் வெளியில் செல்லாமல் வீட்டிலே நிரந்தரமாக தங்கிவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இரு பெண்களும் கூறியிருந்தனர்.
தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமைகள், மதம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக, அப்பெண்களின் கூற்றுகளை ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றம் நிராகரித்தது. முகத்தை மறைக்கும் துணியை அணிவதற்கு எதிரான சட்டத்தால், மற்றவர்களை விட சில முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படலாம், ஆனால், அது பொது ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய தேவைக்கு பொருத்தமானது என நீதிமன்றம் கூறியுள்ளது

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்


வினவு : சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாட்டு வியாபார்கள் சங்கப் பிரதிநிதிகள், தங்களது தொழிலில் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளையும், தற்போது புதியதாக வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் மாடு விற்பனைக்கான ஒழுங்குமுறை அரசாணையைத் தொடர்ந்து தமிழகத்தில் இத்தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் குறித்துப் பேசியுள்ளனர். இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை “ரெட் பிக்ஸ்” என்ற “யூ-டியூப்” சேனல் பதிவேற்றியுள்ளது.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாட்டு வியாபாரிகளின் சங்கப் பிரதிநிதிகள், மத்திய அரசு வெளியிட்டுள்ள மாடு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை உபயோகித்து தமிழகத்தில் இந்துமுன்னணி, பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மாட்டு வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.

Autism ஆட்டிசம் . .ஒரு புரியாத புதிய உலகம். அங்கு அறிவாளிகளும் இருக்கிறார்கள். வளர்ந்த குழந்தைகளும் வாழ்கிறார்கள்

Bamini Rajeshwaramudaliyar  :ஆட்டிசமும் என் மகனும் நானும்.
மீண்டும் மீண்டும் கதைத்ததை மீண்டும் கதைக்க, கூறிய பதிலை , பலமுறைகள் மீண்டும் சொல்ல எனது நாள் ஆரம்பமாகும். இதுதான் ஆட்டிசத்தின் தன்மை.
ஏன் அப்படி கதைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மகனின் மனதிற்கு ஆறுதல் கொடுத்து அமைதிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
ஆட்டுசம் உள்ளவர்களுக்கு -பதட்டமும்(Anxiety ), மாற்றங்களை விரும்பாத தன்மை உண்டு. -சமுதாயத்தை பற்றிய புரிந்துணர்வுகள் மிக மிக குறைவு.
-அவர்களின் ஐம்புலன்களும் (supper sensitive ) கூர் உணர்ச்சியுடையதாக இருக்கும்.
அவர்களுக்கு அனைத்து சத்தங்களும் (non stop)நிற்காது தொடர்ந்து ஒரே நேரத்தில் கேட்கும் போது, இரைவதுபோல் இருக்கும்.
காற்றின் சத்தம் கூட அவர்களுக்கு கேட்கும். அதனால்தான் காதை விரலால் அடைக்க முனைவார்கள்.
என் மகன் மற்றைய சத்தங்களை கேட்காமல் இருக்க , எந்த நேரமும் earphone போட்டு பாடல் கேட்டுக்கொண்டுருப்பார்.
அமைதியான இரவில் கூட அவர்கள் பலவற்றை உணர்வார்கள்.
இரவில் தெரியும் சிறிய வெளிச்சம் கூட அவர்கள் தூக்கத்தை கலைக்கும்.
அதனால் தூக்கம் குறைவாக இருக்கும். அதனால் பதட்டம் அதிகரிக்கும்.
இவற்றிற்கு எந்தப் பதிலும் கிடையாது.
இது அவர்களின் வாழ்க்கை.

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி By Krishnavel T S

அவாளுக்கு" முதல் மரியாதை தந்து, அள்ளி அள்ளி கொடுத்து ஆட்சி செஞ்சா,
பொற்க்கால ஆட்சி.... இல்லைன்னா, அது இருண்ட காலம். இந்திய வரலாறு இந்த கூற்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.//
களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி By Krishnavel T S
களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்),

வருமானவரி பொறியில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி - மகன்- மாமனார்- உறவினர் என மொத்த குடும்பமும்?

Special Correspondent FB ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது
சந்தேகத்திற்குரிய அமைச்சர்கள் மீது அதிகாரப்பூர்வமாக அல்லாமல் போலீசாரை வைத்து ரெய்டு நடத்தினார். இதில் எடப்பாடி தரப்பினரும் அடக்கம். அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி, எடப்பாடி மகன் மிதுன் மீதும் உறவினர் மொடக்குறிச்சி ராமலிங்கம் மீதும் வழக்குப் பதிவு செய்தார்கள். அது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு ராமலிங்கமும், மிதுனும் கைது செய்யப்பட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு தமிழகத்தில் பெரிய சாலைகள் போடுவது, அரசு கட்டிடங்கள் கட்டுவது, பாலங்கள் கட்டுவது என அனைத்து டெண்டர்களையும் எந்த காண்ட்ராக்டருக்கு தருவதென முடிவு எடப்பாடியின் மாமனார் முருகேசன், இவர்களது உறவினர் மொடக்குறிச்சி ராமலிங்கம் மற்றும் மகன் மிதுன் . இந்த மூவரும்தான் எடப்பாடியின் கஜானா என்கிறார்கள் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள். தற்பொழுது இந்த மூவர் டீமின் பணப்புழக்கத்தைப் பற்றி டெல்லிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மத்தியில் இருந்து ஆணை வந்தால் ரெய்டு நடத்துவோம்'' என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

திருபஞ்சிலி கதிரேசன் அடித்து கொலை ..முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு...

 Vincernt Raj :எவிடென்ஸ் கதிர்: திருச்சி , திருப்பஞ்சிலி கிராமத்தின் சேரிக்குள் றுவன்தான் அந்த வீட்டினை அடையாளம் காட்டினான்.வாழை செடிகள் மலர்ந்து நின்றன.வீட்டுக்குள்ளிருந்து 18 வயது தம்பி ஒருவன் வந்தான்.என்னை பார்த்ததும் கதிர் சார்..உங்களை தெரியும்.நீங்கள்தானே தீண்டாமைக்கு எதிராக போராடி கொண்டு இருப்பவர் என்று என் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டான்.தம்பி நீ யாருப்பா என்றேன்.சார்..கொலை செய்யப்பட்ட கதிரின் தம்பி சார் என்று கண் கலங்கினான்.கதிரின் மனைவியும் அம்மாவும் அப்பாவும் அண்ணன்களும் வரிசையாக வந்தனர்.கதிருக்கு திருமணம் ஆகி 5 மாதம்தான் ஆகிறது.மனைவியின் பெயர் நந்தினி.கள்ளர் சமூகம்.
நுழையும்போதே சாவுவாசனை முகத்தில் அடித்தது.கதிரேசன் என்கிற கதிர் வீடு எங்கே என்று கேட்டேன் .ஒரு சி
என்ன நடந்தது கதிருக்கு? கடந்த 08.07.2017 அன்று காலை சுமார் 6.00 மணியளவில் சாதி இந்துவான தங்கராசு (57) த.பெ.வீரபத்திரபிள்ளை, அவரது மகன்கள் சுரேஷ் (37), பாஸ்கர் (30) ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கதிரேசனை தேடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்துவிட்டு பீரோவை திறந்தும் பார்த்துள்ளனர்.

அக்ரஹார behaviour' என்பது வெறும் பார்ப்பன வெறுப்பா? வரலாறு என்ன சொல்கிறது!

Ganesh Babu '  அக்ரஹார behaviour'! வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.
சென்னை மாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி, அதன் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்து பல சமூகநீதி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அன்றைய சென்னை மாகாணப் பிரதமராக இருந்த ஓமாந்தூர் இராமசாமியாரால் தொடர்ந்து இட-ஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு, 1947-48ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புவாரி உரிமையை 14 சதவீதமாக அவரால் உயர்த்தப்பட்டதும், அதனாலேயே அவர் 'தாடியில்லாத ராமசாமி' (பெரியார்) என்று போற்றப்பட்டதையும் நாம் அறிவோம்.
இட-ஒதுக்கீட்டை இன்றே இத்தனை கடுமையாக வெறுக்கும் பார்ப்பனர்கள், அன்று இன்னும் பலமடங்கு அதிகமாகக் கொந்தளித்திருப்பார்கள் என்பது இயல்பானது. அரசியலில் எதையும் யார் வேண்டுமானாலும் எதிர்த்துப்போராடலாம் என்பதுதானே மக்களாட்சியின் மாண்பு?
அப்படி பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து வகுப்புவாரி உரிமையை எதிர்த்துப் போராடியிருந்தால் நம்மால் புரிந்துக்கொண்டிருக்கமுடியும்.
ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

செவ்வாய், 11 ஜூலை, 2017

ஜவகருல்லா : பியுஸ் கோயல் மன்னிப்பு கேட்கவேண்டும் ... மின்சாரம் வழங்க அணுமின் நிலைய நிபந்தனையா?

மன்னிப்பு கேட்க வேண்டும் : ஜவாஹிருல்லாமத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல்,' அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தினை வழங்க முடியாது என்று கூறியுள்ளார், இது சர்வாதிகாரமானது. இந்த கருத்தை அவர் வாபஸ் பெறுவதோடு மன்னிப்பும் கேட்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று ஜூலை 10 ஆம் தேதி சிறையில் சந்திக்க வந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்,' அமர்நாத் புனித யாத்திரை சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆ.ராசா மீதான வழக்கு தள்ளுபடி.. நீலகிரி தொகுதி தேர்தல் வழக்கு ..

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற
தொகுதி உள்ளிடக்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிட்டார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக பணியாற்றிய ராணி என்பவரை ஆ.ராசா உள்ளிட்ட 41 திமுக வினர் கூட்டாக சேர்ந்து கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு, இது தொடர்பான வழக்கு கடந்த 21.7.2014 அன்று பதியப்பட்டது. இவ்வழக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கபட்டிருந்தது.

ஐ.எஸ் வீழ்ந்தது : அல்-பக்தாதி மரணம் சிரியா போர் கண்காணிப்பகம் அறிவிப்பு

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத
இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு"   டமாஸ்கஸ்: சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.< ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர்.

பிரியா சிங் பால் ... சஞ்சே காந்தியின் மகள் என்று தன்னை அறிமுகப்படுத்தினார்

201707110914189768_sanjay._L_styvpf.gif  சஞ்சய் காந்தியின் மகள் நான் - 48 வயது பெண் டெல்லியில் பரபரப்பு பேட்டி 201707110914189768 sanjayசஞ்சய் காந்தியின் மகள் நான் – 48 வயது பெண் டெல்லியில் பரபரப்பு பேட்டிமறைந்த சஞ்சய் காந்தியின் மகள் என்று தன்னை பத்திரிகையாளர்களிடம் ஒரு பெண் கூறியதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி 1980-ம் ஆண்டு ஒரு விமான விபத்தில் இறந்தார். இந்திரா காந்தியால் 1975-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை குறித்து ‘இந்து சர்க்கார்’ என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரின் வாழ்க்கை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் காந்தியின் வாழ்க்கை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதுபற்றி விளக்க பிரியா சிங் பால் என்ற 48 வயது பெண் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் குழந்தையாக இருந்தபோது ஒரு குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டேன். வளர்ந்த பின்னர் என்னுடைய பெற்றோர் குறித்து கேட்டபோது, எனது தந்தை இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி என்று கூறப்பட்டது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ரூ 350 கோடி சொத்து குவிப்பு .. விசாரணை .

Special Correspondent FB Wing சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால்
தண்டிக்கப்பட்ட குற்றவாளி மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ரூ350 கோடி சொத்து குவிப்பு தொடர்பாக தில்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு அவர் இயக்குநராகவும் இருந்து வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளிக்கும் புகார்கள் இவரைத் தாண்டியே ஜெயலலிதாவுக்குச் செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது.. தில்லியிலுள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் அவரது பெயரில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் பூங்குன்றனுக்கு சொந்தமானதா? ஜெயலலிதாவுக்கு உரியதா? அல்லது சசிகலா குடும்பத்துக்காக பினாமியாக எழுதி வைக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

சலீம் ஷேக் ..அமர்நாத் தாக்குதல்: 50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்!

அமர்நாத் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல்
நடத்திய போது 50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் சலீம் ஷேக்கின் தைரியத்தைப் பாராட்டி ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அவருக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. பலதிசைகளிலிருந்தும் குண்டு மழை பொழிய ஓட்டுநர் சலீம் ஷேக் கடும் தைரியத்துடனும், சாதுரியத்துடனும் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்தை குஜராத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சலீம் ஷேக் ஓட்டினார். அவர் கூறியதாவது: நாங்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக பேருந்தை ஓட்டிச் சென்றேன். அந்த நேரத்தில் கடவுள்தான் எனக்கு தைரியத்தையும் பலத்தையும் கொடுத்தார். நான் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டினேன். குண்டு காயம் அடைந்த 7 பேரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. எனினும் 50 பேர் பத்திரமாக உயிர் தப்பினர், என்றார்.

நடிகை பாவனா மானபங்க வழக்கில் கூட்டு சதி முன்னணி கதாநாயகன் நடிகர் திலிப் கைது

நடிகை, Actress,பாவனா,  Bhavana,  கதாநாயகன், Hero, நடிகர்,  Actor,   திலிப், Dilip,  சினிமா,Cinema, கொச்சி, Kochi, Cochi,கைது,Arrested, நீதிபதி,Judge, ஆன்டோ ஜோசப்,Ando Joseph,  திருக்காக்கரை எம்.எல்.ஏ. பி.டி. தாமஸ் ,Tirakkakkarai MLA PD Thomas, பல்சர் சுனில், Pulsar Sunil,இயக்குனர் லால் ,Director Lal,நடிகை பாவனா மானபங்க வழக்கில் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகன் நடிகர் திலீப்பை போலீசார் நேற்று மாலை கொச்சியில் கைது செய்தனர். இரவோடு இரவாக நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளா மட்டுமல்ல அனைத்து திரையுலகையும் அதிர்ச்சி அடைய செய்த சம்பவம் கடந்த பிப்.,17- இரவு நடந்தது. இரவு 10:30 மணிக்கு டப்பிங் முடிந்து வீட்டுக்கு நடிகை பாவனா சென்று கொண்டிருந்த காரை அங்கமாலி அருகே அத்தாணி என்ற இடத்தில் வழிமறித்து
பல்சர் சுனில் உட்பட சிலர் காரில் ஏறினர். பின்னர் காருக்குள் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்தனர். பின்னர் காக்கநாடு பகுதியில் நடிகையை இறக்கி விட்டு சென்றனர். அவர் அந்த பகுதியில் உள்ள சினிமா இயக்குனர் லால் வீட்டில் அபயம் தேடினார். அவர் சினிமா தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், திருக்காக்கரை எம்.எல்.ஏ. பி.டி. தாமஸ் ஆகியோருக்கு தகவல் கூறிய பி், போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்!

thetimestamil.com   :அ. குமரேசன்: ஏர் இந்தியா விமானங்களின் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்கிற சாதா வகுப்பினருக்கு (எகனாமிக் கிளாஸ்) அசைவ உணவு வழங்கப்படுவது கடந்த ஜூன் நடுவிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பயணிகளுக்கு இனிமேல் அ-அசைவ உணவுகள் மட்டும்தானாம்.
ஆனால் உயர் வகுப்பினருக்கு (பிசினஸ் கிளாஸ், எக்சிகியூட்டிவ் கிளாஸ்) அசைவ உணவும் உண்டாம்.
அசைவ உணவுகள் அ-அசைவ உணவுகளோடு கலந்துவிடுகின்றன. அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு என்கிறது நிர்வாகம். அத்துடன், உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை என்று நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோஹானி கூறியிருக்கிறார்.
நம்ம கேள்விக்கு வருவோம்:
உயர் வகுப்புகளில் அ-அசைவ உணவுகளோடு அசைவ உணவுகள் கலக்காதா? கலக்காது என்றால் அது எப்படி சாத்தியமாகிறதோ அந்த ஏற்பாட்டை சாதா வகுப்பிலும் செய்ய வேண்டியதுதானே?
உயர் வகுப்புகளில் உணவு வீணாகாதோ? செலவு பிரச்சனையில்லையோ? அல்லது அதற்கெல்லாம் சேர்த்து டிக்கெட்டில் தீட்டிவிடுகிறார்களா?
உயர் வகுப்புகளின் பயணம் செய்பவர்கள் யார்? அவர்களுடைய உணவுத் தேவைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை!

சேரி behaviour " சேரி நடத்தை ... பொதுப்புத்தியும் உண்மை நிலையும் .

Shalin Maria Lawrence "சேரி behaviour " சேரி நடத்தை .இப்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணை திட்டிவிட்டார்கள் என்று சொல்லி காலையில் இருந்து எல்லோருக்கும் அப்படி ஒரு கோவம் .
அப்படி பார்த்தால் சேரி என்பது அசிங்கம் என்று உங்களில் ஒவ்வொருவரும் நினைத்து கொண்டிருக்கிறீர்களா ?
அவர் சேரி நடத்தை என்று சொன்னபோது நன்றி சொல்லி இருக்கவேண்டும் .சரி ... நீங்கள் சொல்லாத நன்றியை நான் சொல்லுகிறேன் .
-------------------------------------------------------------------------------------------------
வந்தாரை வாழவைக்கும் சேரி நடத்தை -நன்றி
அடைக்கலம் தேடி வந்தாரை எந்த ஜாதி என்று கேட்காமல் சேர்த்துக்கொள்ளும் சேரி நடத்தை -நன்றி
தீட்டு என்று உள்ளே வந்த எவரையும் ஒதுக்காதது சேரி நடத்தை -நன்றி
ரத்தபந்தம் ,சொந்தபந்தம் வித்தியாசம் பாராமல் பசித்தவயிறுக்கு தன் கால் வயிற்று கஞ்சியை பகிர்ந்து கொடுக்கும் சேரி நடத்தை -நன்றி .
தெருவில் கிடைக்கும் நாய்க்கு முதலில் சோறு வைத்துவிட்டு மிஞ்சியதை உண்ணும் ரிக்க்ஷாகாரரின் சேரி நடத்தை -நன்றி
நீ கொடுக்கும் காசுக்காக இல்லாமல் ,உன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்காக "அய்யா ,அம்மா " என்று அழைக்கும் உன் பணிப்பெண்ணின் சேரி நடத்தை -நன்றி

மீண்டும் பழைய போராட்டக்களமானது நெடுவாசல்!


நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்காக பிப்ரவரி 16ந் தேதி தொடங்கிய
முதல்கட்ட போராட்டம் 22 நாட்கள் திருவிழாவாக நடந்தது. போராட்டத்தை நிறுத்துங்கள் திட்டத்தை நிறுத்துகிறோம் என்று மத்திய, மாநில அரசுகள் தங்கள் பிரநிதிகளாக அமைச்சர்களை அனுப்பியது. அமைச்சர்களும் மாவட்ட நிர்வாகமும் கொடுத்த வாக்குறுதியை நம்பி முதல்கட்ட போராட்டம் 22 நாளில் முடிவடைந்தது. அந்த 22 நாட்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் நெடுவாசலை திரும்பிப்பார்த்தது. மத்திய மாநில அரசுகளை நம்பிய மக்களுக்கு மத்திய அரசின் ஒப்பந்தம் நம்பிக்கை இழக்கச் செய்ததால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் ஏப்ரல் 12ந் தேதி தொடங்கி 91 நாட்களாக நடக்கிறது. இன்றைய போராட்டத்தில் நாம் தமிழர்கட்சி சீமான் கலந்து கொண்டதால் கூட்டம் தாகரித்து மீண்டும் பழைய போராட்டக் களமாகி உள்ளது நெடுவாசல். இன்று முதல் மீண்டும் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று கூறுகிறார்கள். - இரா.பகத்சிங்  நக்கீரன்

நக்கலைட்ஸ்: அதோ பார் வருங்கால இந்தியா ? New India Season 3 | GST Spoof | Nakkalites



மலையாளிகள் நடிகன் திலீப்பின் நிஜமுகம் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள்.

the purported conspiracy behind the abduction and rape of the actress and Dileep's extortion bid complaint. The actress was allegedly raped inside her moving car on February 18 while she was headed for Kochi.

Dimidth Petkovski : மலையாள நடிகர் திலீப் நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் தற்போது கைதாகி உள்ளார்.
திலீப்பின் உண்மையான முகத்தை இப்போது ஏசியாநெட் நியூஸில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
திலிப் ஒரு டான் என்றும் மலையாளப் பட உலகின் கட்டைப் பஞ்சாயத்து ராஜா என்றும் வர்ணிக்கிறார்கள். திலீபை ஒரு சிலர் கொச்சின் தாவூத் என்று கூறுகிறார்கள்.
பல தயாரிப்பாளர்களை மிரட்டிப் பணம் பறித்து 15 வருடங்களாக நடிகன் என்ற முகமூடியில் இத்தனை வஞ்சனைகளையும் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
முதல்வர் பிணராய் விஜயன், சட்டம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தன் கடமையைச் செய்யும் என்கிறார்.
மலையாளிகள் திலீப்பின் நிஜமுகம் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள். கேரளா ஆலுவாவில் மக்கள் களத்தில் இறங்கி, திலீபை விடுதலையோ, ஜாமீனிலோ விடக்கூடாது என்று தெருவில் கோஷமிட்டுப் போராடுகிறார்கள்.
வாழ்க்கையில் இத்தனை ஏண்ட்டி ஹீரோவா என எண்ணி மனம் கனக்கிறது.
பாதிக்கப் பட்ட பாவனா மற்றும் மஞ்சு வாரியருக்கும் ஏனைய தயாரிப்பாளர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்!

எச்ச ராஜாவுக்கும் நிர்மலாவுக்கும் கிடைக்கும் மரியாதை பொன்.ராதாவுக்கு ஏன் கிடைப்பதில்லை?

திமுகவை அரசியல் ரீதியாக பாஜக ஆட்டுவிக்கும்.. விமானநிலைய செய்தி தொடர்பாளர்.. முதலில் நிற்க முடியுமா என பாருங்கள் காரணம் எளிது ஆளும் அதிகாரமிருப்பதால் எதை பேசினாலும் கேட்டுக்கொள்வார்களென எண்ணி பாஜகவினர் அடிக்கும் கூத்து அவர்களுக்கெதிராகவே திரும்பும்.. அதிமுகவின் வீழ்ச்சியில் சுவரேறி குதிக்க நினைக்கும் போது விழும் இடம் பாதாளமென அறியாமல் போவதுதான் வேடிக்கை .. தமிழகத்தில் திராவிட சிந்தனை மக்களின் இரத்ததிலேயே ஊறிப்போனது இங்கே ஜாதி பேசுவான் கோவிலுக்கு போவான் ஆனால் வெறிக்கொண்டு அலைய மாட்டான் இது எல்லா ஜாதி மதத்தினருக்கும் பொருந்தும் சிறுபான்மையினர்கள் கூட குறிப்பாக முஸ்லிம்களம பெருவாரியானோர் திமுகவைதான் பின் துணைப்பார்கள் .. திமுக பாஜகவோடு கைகோர்த்த போது கூட இயக்கங்களை சேர்ந்தவர்களை தவிர பிறர் திமுகவோடு அனுசரணையாக தான் நடந்துக்கொண்டார்கள் கோவத்தை கூட உரிமையோடு கேள்வி எழுப்பினர்..

நிக்கோலா டெஸ்லா ரேடார், ரேடியோ,எக்ஸ் ரே,வாக்கும் ட்யூப் ஆய்வுகளின் முன்னேடி .. இன்று பிறந்தநாள்!


பூ.கொ. சரவணன் நிக்கோலா தெஸ்லா... செர்பியாவில் பிறந்த இவர்
எடிசனிடம் வேலைக்கு சேர்ந்தார். எடிசனின் ஆற்றல் குறைவான நேர்திசை மின்னோட்ட மோட்டாரை தான் சிறப்பாக மாற்றிக் காண்பிக்கிறேன் என சொல்ல, அவர் அப்படி செய்தால் ஐம்பதாயிரம் டாலர் தருவதாக சொல்ல... இவர் முடித்தபொழுது,"அது ஒரு ஜோக்!"என்றார். சம்பளத்தை கொஞ்சமே கொஞ்சம் ஏற்ற கோபமாக வெளியேறினார்.
மார்கோனி உருவாக்கிய ரேடியோ இவரின் பதினேழு காப்புரிமை செய்யப்பட்ட பொருட்களை கொண்டே உருவாக்கப்பட்டது. நேர்திசை மின்னோட்டத்தை (Direct current) எடிசன் பயன்படுத்தி மின்சார விநியோகத்தை செய்துகொண்டு இருந்தபொழுது மாறுதிசை மின்னோட்டத்தை (alternating current) உபயோகப்படுத்தி அதிக தூரம் மின்சாரத்தை மெல்லிய மின்கம்பிகளின் மூலம் கொண்டு செல்ல முடியும் என தீர்க்கமாக சொன்னார். அவ்வாறே எடிசனை விட்டுப்பிரிந்த பின் உருவாக்கி காட்டினார். இவர் சொன்னதை பொய் என்று நிரூபிக்க எடிசன் மாறு திசை மின்னோட்டத்தை நாய்கள் முதலிய விலங்குகளில் செலுத்தி அவை சாவதை காட்டி ஊரை பயமுறுத்தினார். அயனி மண்டலத்தில் இருந்து மின் சக்தியை எடுத்து உலக மக்கள் அனைவருக்கும் மின்சக்தியானது தண்ணீர் போல கிடைக்கச் செய்யலாம் என உறுதியாக சொன்னார்.

BBC: அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி.. காஷ்மீரில் இருந்து வந்த பேருந்து மீது தாக்குதல்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்
மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது திங்கள்கிழமை இரவு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
 இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தத்வாலியா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இரவு கூறுகையில், பட்டிங்கு என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார். மத்திய ரிசர்வ் காவல் படையின் ஜம்மு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடைசியாக வந்த தகவலின்படி 6 அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதாகவும் சில காவலர்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தாகவும் கூறப்பட்டுள்ளது என்றார். அனந்த்நாக் மாவட்டத்தின் பட்டிங்கு என்ற பகுதியில் பல்தால் என்ற இடத்தில் இருந்து மிர் பஜார் பகுதிக்கு அமர்நாத் யாத்ரீகர்கள் அடங்கிய பயணிகளை அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை இரவு பேருந்து சென்று கொண்டிருந்தது. 8.20 மணியளவில் அந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது பற்றி ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) முனிர் கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏழு பயணிகள் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

லாலுவின் மகள் மிசா பாரதிக்கு அமுலாக்கல் துறை அழைப்பாணை

மின்னம்பலம் : பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மகளும்,
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் எம்.பி-யுமான மிசா பார்தி மீது வருமான வரித்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக மிசா பார்தி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக புதுடெல்லியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை 8ஆம் தேதி சோதனை நடத்தினர். இதைதொடர்ந்து, லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தி, அவரது கணவர் சைலேஷ்குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

சசிகலா விரக்தி .. அதிமுக அணிகளின் சண்டையால் மனம் ஒடிந்து ....

சசிகலாவை சிறையில் தினகரனும் அவரது ஆதரவு அ.தி.மு.க.
எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தபோது, தினகரனுக்கு எதிராக திவாகரன் செயல்படுவது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. "சின்னம்மா.. உங்களால் துணை பொதுச் செயலாளரான தினகரன் கட்சியை கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார். அதை நடராஜனும் திவாகரனும் தடுக்கிறார்கள். அம்மா செத்தபிறகும் சிக்கலில்லாமல் கட்சியும் ஆட்சியும் இருந்தநிலையில், அவர்கள் இரண்டு பேர் பேசிய பேச்சுதான் வில்லங்கமானது. நமக்கு எதிராக செயல்பட்ட ஓ.பி.எஸ்.ஸுடன் டச்சில் இருக்காங்க. ஓ.பி.எஸ். தரப்பு கிளப்பிய, ஜெ.வுக்கு விஷ ஊசிங்கிற குற்றச்சாட்டை ஐயா (நடராஜன்) பேசுகிறார்' எனப் புகார் வாசித்தனர்.