வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் சென்னையில் மட்டும் கண்டெறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
திங்கள், 8 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
தஸ்லீமா நஸ்ரின் :இந்து அடிப்படை வாதிகளை மட்டும் ஏன் தாக்குகிறார்கள்? All religions are anti-woman: Taslima Nasrin
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சனிக்கிழமை இலக்கியத்
திருவிழா நடைபெற்றது. அப்போது சகிப்பின்மை குறித்த விவாதத்தின்போது தஸ்லீமா
பேசியதாவது:
இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான்
நினைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் மற்றவர்களின் மத நம்பிக்கையின் மீது
முழு சகிப்புத்தன்மை கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.
இந்தியாவில் மதச்சார்பின்மைக்கும்,
அடிப்படைவாதத்துக்கும் இடையேயும், புதுமைக்கும், பாரம்பரியத்துக்கும்
இடையேயும், சுதந்திரத்தை மதிப்பவர்களுக்கும், மதிக்காதவர்களுக்கும் இடையே
நிலவுவதுதான் உண்மையான மோதலாகும்.
அரசு நிர்வாகத்தில் மதத்தின் குறுக்கீடு இருக்கக்
கூடாது. வங்கதேசத்தில் சட்டமியற்றும் நடவடிக்கையில் மதத்தின் தாக்கம்
காரணமாக, ஹிந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு மதங்களைச் சேர்ந்த பெண்களும்
ஒடுக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது
நடிகர் விஜய் திமுகவுக்கு ஆதரவு......சந்திரசேகருக்கு எம்.பி பதவி?
சென்னை: அதிமுக ஆட்சியில் தன் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மனதில்
கொண்டு, வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக செயல்பட
நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழில் தனக்கென அதிக ரசிகர் மன்றங்களைக்
கொண்டிருப்பது நடிகர் விஜய் தான். எனவே, அவர் தனது ரசிகர் மன்றங்களைப்
பயன்படுத்தி அரசியலில் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக விஜய்
செயல்பட்டார். அவரது தந்தையும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விஜய் ரசிகர்களும் அதிமுகவுக்கு ஆதரவாகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்
பழ.கருப்பையா : ஊழல் என்றால் அம்மா தான். மற்றவர்கள் எல்லாம் சும்மா....
தற்போது அவர் அ.தி.மு.க.வில் இல்லை. எம்.எல்.ஏ.வாகவும் இல்லை. ஆனால், இன்னும் இவர் அரசியலைவிட்டு விலகிவிடவில்லை. அதனால், இவற்றோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த கட்ட பரபரப்புகளுக்கு தனது பேச்சின் மூலம் அச்சாரமிட்டு இருகிறார் பழ.கருப்பையா.
குலாம் நபி ஆசாத் கலைஞர் கூட்டணி பேச்சு வார்த்தை......
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சென்னை வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டசபைத் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸும் திமுக கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக இதுவரை காங்கிரஸ் தரப்பிலிருந்து பெரிய தலைவர்கள் யாரும் கருணாநிதியையோ அல்லது திமுகவின் இதர முக்கியத் தலைவர்களையோ சந்திக்கவில்லை.இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசுவார் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் பல்கலைக் கழக மாணவி கொடூர கொலை: நண்பர் வீட்டு படுக்கையறையில் சடலம் கண்டெடுப்பு
(23) அவரது நண்பரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீட்டு படுக்கையறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் தேதி பல்கலைக் கழகத்திற்கு சென்ற அர்ஜூ சிங் மாயமானார். இது தொடர்பாக மாடல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அர்ஜூ சிங் வகுப்புகள் முடிந்ததும் கடைசியாக அவரது நண்பர் நவீன் காத்ரி உடன் சென்றதை பார்த்தாக மற்ற நண்பர்கள் கூறினர். முன்னதாக, அர்ஜூ சிங் மற்றும் காத்ரி இருவரும் திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அவர்களது குடும்பத்தினர் 4 மாதங்களுக்கு முன்பு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் தொடர்ந்து சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
விசாரணை’ படமும் விஷ்ணுப்ரியா மரணமும்...!
காங்கிரசுக்கு 25 சீட்...சோனியாவிடம் கனிமொழி நேரில்......
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, 25
தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும்; ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் துணைத் தலைவர் போட்டியிடுவது போலவே இருக்கும் எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேச ஆரம்பித்தார். இதனால், காங்கிரஸ் மீது கோபமடைந்த தி.மு.க.,வினர் சிலர் - பா.ஜ., தரப்பிடமும் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சோனியாவை, கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி சந்தித்து பேசியுள்ளார்.
ஸ்டாலின் :அழகிரியை சேர்த்தால் கட்சியை உடைப்பேன்.....தினமலர்
அழகிரியை
சந்தித்தாலோ, அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தாலோ, தி.மு.க.,வை உடைப்பேன்' என, கருணாநிதியிடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாகக் கூறியதால் தான், அழகிரியை, நேற்று, கருணாநிதி சந்திக்கவில்லை என்றும், அவரை கட்சியில் இணைக்க எடுத்த முயற்சி தள்ளிப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சுஷ்மா சுவராஜ் - மனோ கணேசன் சந்திப்பு...மலையக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இலங்கையிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை அவருடன் பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளன.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்த அவர்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்
அரசு பேருந்து லாரி விபத்து 15 பேர் பலி, 20 பேர் படுகாயம்....மதுரை கல்லுப்பட்டியில் பயங்கர விபத்து
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே அரசுப் பேருந்துடன் சிமெண்ட்
எற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 dead, 10 injured in road accident near Tirumangalam நெல்லையில் இருந்து குமுளி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகாபுரியை அடுத்துள்ள சுப்புலாபுரத்தை அடைந்தது. அந்த நிறுத்தத்தில் இருந்து அம்மாபட்டி என்ற இடத்தை கடந்த போது சாலையின் வளைவில் எதிரே வந்த சிமென்ட் லாரியுடன் வேகமாக மோதியது. இதில் இரு லாரியும் பேருந்தும் பயங்கரமாக சேதமடைந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
எற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 dead, 10 injured in road accident near Tirumangalam நெல்லையில் இருந்து குமுளி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகாபுரியை அடுத்துள்ள சுப்புலாபுரத்தை அடைந்தது. அந்த நிறுத்தத்தில் இருந்து அம்மாபட்டி என்ற இடத்தை கடந்த போது சாலையின் வளைவில் எதிரே வந்த சிமென்ட் லாரியுடன் வேகமாக மோதியது. இதில் இரு லாரியும் பேருந்தும் பயங்கரமாக சேதமடைந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பெங்களூரு நாட்கள்...சந்தேகமே இல்லை சுவாரசியமான நாட்கள்தான்
படங்களில்
இரண்டு வகை இருக்கிறது. ஒன்று மூளைக்குள் சென்று அறிவை சுழலவிடுவது.
மற்றொன்று இதயத்திற்குள் சென்று உணர்வுகளை சுழலவிடுவது. இவற்றில்
முன்னதைவிட பின்னதில் இயக்குனர் ’பொம்மரிலு’ பாஸ்கர் கைதேர்ந்தவர். இவர்
இயக்கிய பொம்மரிலு, ஆரஞ்ச், பெங்களூர் டேஸ்(மலையாளம்) உள்ளிட்ட படங்கள்,
அந்த வரிசையில் பல ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமான படங்கள். அந்த
வகையில் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றுவிட்ட பெங்களூர் டேஸ்
திரைப்படம், வசூலில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்த
வேண்டும் என்ற கொஞ்சம் எக்ஸ்ட்ரா டார்கெட்டுடன் ரிலீஸாகியிருக்கிறது.சங்கரன் கோவில், குறிஞ்சாக்குளம் தமிழர்களின் வாழ்வை பறித்த (தெலுங்கர்) வைகோவும் அவரின் சொந்த பந்தங்களும்....
தன்னை ஜாதி வேறுபாடு பார்க்காத திராவிட தலைவனாக தமிழர்கள்
மத்தியில் காட்டிக்கொள்ளும் வை.கோபால்சாமியின் பின்புலத்தை தோலுறிக்கும் பதிவ
.தன்னை ஜாதி வேறுபாடு பார்க்காத திராவிட தலைவனாக தமிழர்கள் மத்தியில் காட்டிக்கொள்ளும் வை.கோபால்சாமியின் பின்புலத்தை தோலுறிக்கும் பதிவு!
நெல்லை மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள இந்த குறிஞ்சாக்குளம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஒரு கிராமம்.... ஜனத்தொகை என்று பார்த்தால் நாயக்கர்களுக்கு இங்கு நாலாவது இடம்தான்.. ஆனால் அதிகாரத்தில் அவர்களே முதலிடம்... ஏற்கெனவே இந்தப் பகுதியில் அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டி பறந்த கலிங்கப்பட்டி வையாபுரி நாயக்கரின் வீட்டிற்கு வந்தவர்களின் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும், வைகோவின் அன்றைய அதிகாரம்..... இந்திராகாந்தி காமராசர் எம்ஜிஆர் கருணாநிதி பக்தவச்சலம் ஜெயலலிதா ஆகியோர்... குருவிகுளம் யூனியன் சேர்மனாக தன் அதிகாரத்தை ஆரம்பித்த வைகோ இவ்வளவு எளிதாக உயர்ந்த அதிகாரபீடத்தை நோக்கி நகர்வார் என யாரும் எதிர் பார்க்கவில்லை...
சனி, 6 பிப்ரவரி, 2016
அதிமுகவும் திமுகவும் ஒன்று என்பவர்கள் அதிமுகவின் கள்ள காதலர்கள்.....
subavee.com :தமிழக அரசியல்
அரங்கில், தி.மு.க.வை எதிர்ப்பதற்கு, இப்போது காரணம்?
ஒரு புதிய உத்தி புறப்பட்டிருக்கிறது. தி.மு.க.வையோ, கலைஞரையோ எதிர்க்கும்போது நேரடியாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.வையோ , ஜெயலலிதாவையோ எதிர்க்கும்போது, இரண்டு திராவிடக் கட்சிகளுமே இப்படித்தான் என்று, தி.மு.க.வையும் சேர்த்தே தாக்குகின்றனர். அதன்மூலம், அ.தி.மு.க.வின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர்.தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஒன்றுதான் என்று திரும்பத் திரும்பப் பல கட்சிகளும், சில தமிழ்த் தேசியக் குழுக்களும் கூறுகின்றன. அவை இரண்டும் ஒன்றல்ல என்பதை இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். அரசியல் அறிந்த அனைவரும் அறிவார்கள். ஏன், இந்தக் குற்றச்சாற்றைக் கூறும் பலரே அறிவார்கள். எனினும் இந்தப் பல்லவியைத் தொடர்ந்து அவர்கள் பாடுவதற்கு என்ன
மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா.. அம்மா ஸ்டிக்கர் பற்றி குஷ்பு கொதிப்பு

சென்னை: அதிமுகவினர் நடத்திய இலவச திருமணத்தின்போது மணமக்கள்
நெற்றியில் அக்கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா படத்தை ஒட்டிய
தொண்டர்கள் செயலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும்,
நடிகையுமான குஷ்பு கண்டித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் அதிமுகவினர் நேற்று 68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி
வைத்தனர். அப்போது மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா போட்டோவை ஒட்டி
வைத்திருந்தனர். இலவச திருமணம் செய்ய வந்த ஏழை மணமக்களை இவ்வாறு, தனிநபர்
போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் அதிமுக
நிர்வாகிகளுக்கு எதிராக கண்டன குரல்கள் எழும்பியுள்ளன.
நடிகை சசிரேகாவை கழுத்தறுத்து கொன்ற வில்லன் நடிகர்..... நாளை முதல் குடிக்க மாட்டேன் கதாநாயகி
சென்னை: சினிமாவில் கதாநாயகியின் கழுத்தை தனியாக அறுத்து கொலை
செய்வதைப் போல தன்னுடைய மனைவியும் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்ற
படத்தின் நாயகியுமான சசிரேகாவை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து
குப்பை தொட்டியில் வீசியுள்ளார் வில்லன் நடிகர் ஒருவர். கள்ளக்காதலை
கண்டித்ததற்காக இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான் அந்த வில்லன் நடிகர்.
நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும்
வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா
சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன்
வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக
படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட
நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இருந்தனர். இப்படத்தின் டிரைலரில் சசிரேகா
சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இருக்கிறது.வைகோவையும் கலைஞர் மன்னிப்பார்.....யாரையும் மன்னிக்கும் பண்பு.....
திருமாவளவன்:ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்: நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்
ஆண்டுக்கு
சராசரியாக 5 ஆயிரம் சந்தேக மரணங்கள் என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் தலித்துகள் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. உண்மையை வெளிப்படுத்த தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,<>தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை தேசியக் குற்ற ஆவண மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியது. இப்போது தமிழகக் காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவுக்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி திரு. ராஜேஷ் தாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் தலித்துகள் சந்தேகமான முறையில் மரணமடைவதாகவும், அதில் 45 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சரிதா நாயர் பலாத்காரம் செய்தவர்கள் பட்டியலை தாக்கல் செய்தார்...
சோலார் விசாரணை கமிஷனில் சரிதா நாயரிடம்
பலாத்காரம் செய்த பிரமுகர்கள் பட்டியல் சோலார் விசாரணை கமிஷனில் ஆஜராகி வரும் சரிதா நாயர் தினமும் பல்வேறு அதிரடி விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆரியாடன் முகமதிற்கு ரூ.40 லட்சமும் கொடுத்ததாக தெரிவித் தார். இதையடுத்து தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியலை சோலார் விசாரணை கமிஷனிடம் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்போவதாக கூறியிருந்தார்.
இதன்படி நேற்று விசாரணை கமிஷனில் ஆஜரான அவர், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் பெயர் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த அம்மணி சோலார் தகடு சதுரங்க வேட்டைநடத்திவிட்டு இப்போ பலாத்கார மொத்த வியாபார பட்டியலை கொடுத்து தப்பிக்க பார்க்கிறாரோ?
தைவான் மற்றும் சீனாவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் தரைமட்டம் earthquake topples buildings in Taiwan city of Tainan

சீனா மற்றும் தைவானில் நிலநடுக்கம்: 17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு மண்ணில் புதைந்தது சீனா மற்றும் தைவானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவிகோலி இது 6.7ஆக பதிவானது. சீனாவின் டைனான் நகரத்தில் 17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு மண்ணில் புதைந்தது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. படுகாயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.nakkheeran,in
மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி..அமெரிக்காவில் மதுரை முத்து
சின்னத்திரையில் கிடு கிடுவென உயர்ந்த நிலையை எட்டிய மதுரை முத்துவை தெரியாதவர்களே இல்லை எனலாம். இவரது இளம் மனைவி விபத்தில் மரணம் அடைந்ததையிட்டு அதிர்ச்சியில் சின்னத்திரையினர் . பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில் இன்று சிவகங்கை பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இவருடைய மனைவி வையம்மாள் சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார், ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துவின் மனைவி வையம்மாள் இறந்துள்ளார். காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டியும் பலத்த காயம் அடைந்தார். வையம்மாள் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற மதுரை முத்துவிற்கு மனைவி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசரமாக விமானம் மூலம் முத்து மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்
Gujarat பாஜக முதல்வர் 400 ஏக்கர் அரசு நிலம், ஒரு சதுரஅடி, 1.50 ரூபாய்க்கு வாங்கினார்
anandi ben patel should resign for land scam in Gujrat. குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலின் மகள் அனர் ஜெயேஷ் பட்டேலுக்கு,
சொந்தமான நிறுவனத்திற்கு சிங்கங்களின் சரணாலயம் உள்ள பகுதியில், 400 ஏக்கர்
அரசு நிலம், ஒரு சதுரஅடி, 1.50 ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு, தாரை
வார்க்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்து, வருவாய்த் துறை பொறுப்பையும் நிர்வகித்து வருகிற, ஆனந்திபென் பட்டேல் முதலில், 400 ஏக்கர் நிலத்தை, தம் மகளுக்கு வழங்கியிருக்கிறார். மேலும், 172 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி, அதை தொழில் செய்வதற்கான விலக்கு அளிக்கும் ஆணையையும் பிறப்பித்துள்ளார். குஜராத் அரசால் வழங்கப்பட்டுள்ள, 572 ஏக்கர் நிலம், அந்தப் பகுதியில், 1,200 கோடி ரூபாய் சந்தை மதிப்புடையதாக கூறப்படுகிறது. இதை, ஊழல் இல்லையென்று சொன்னால், வேறு எது ஊழல்? எனவே, பா.ஜ., எந்த ஊழலையும் செய்யாத யோக்கிய சிகாமணிகள் நிறைந்த கட்சி என, பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து பேசியது போலித்தனமானது.- தினமலர்.com
முதல்வராக இருந்து, வருவாய்த் துறை பொறுப்பையும் நிர்வகித்து வருகிற, ஆனந்திபென் பட்டேல் முதலில், 400 ஏக்கர் நிலத்தை, தம் மகளுக்கு வழங்கியிருக்கிறார். மேலும், 172 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி, அதை தொழில் செய்வதற்கான விலக்கு அளிக்கும் ஆணையையும் பிறப்பித்துள்ளார். குஜராத் அரசால் வழங்கப்பட்டுள்ள, 572 ஏக்கர் நிலம், அந்தப் பகுதியில், 1,200 கோடி ரூபாய் சந்தை மதிப்புடையதாக கூறப்படுகிறது. இதை, ஊழல் இல்லையென்று சொன்னால், வேறு எது ஊழல்? எனவே, பா.ஜ., எந்த ஊழலையும் செய்யாத யோக்கிய சிகாமணிகள் நிறைந்த கட்சி என, பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து பேசியது போலித்தனமானது.- தினமலர்.com
திமுக செல்வகணபதி பாமக ராமதாசை சந்தித்தார்....
பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தி.மு.க.,வின் தேர்தல் பணிக்குழு செயலர்
செல்வகணபதி, நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். கூட்டணியில், பா.ம.க.,வை சேர்க்க, தி.மு.க., நடத்திய வளைப்பு நடவடிக்கையே, இந்த சந்திப்பு என, கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, முதல்வர் வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியை அறிவித்து, சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ம.க., ஆயத்தமாகி உள்ளது. ஊரெங்கும் பொதுக் கூட்டம் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது.தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம், கடந்த சில நாட்களாக, விருப்ப மனுக்களையும் வாங்கி வருகிறது. விரைவில் நேர்காணல் நடத்தி, வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. திட்டுங்க அப்புறம் பேரம் பேசுங்க இதுதான்ட்டா தமிழ்நாட்டு அரசியல்.
10 நாட்களில் கூட்டணி அறிவிப்பு பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில் :''பத்து நாட்களில் பா.ஜ., கூட்டணி பற்றிய அறிவிப்பை தேசிய
தலைமை வெளியிடும்,'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடி வருகையால் தமிழக
பா.ஜ.,வில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களையும்,
நாட்டின் வளர்ச்சியையும் பிரதமர் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அவரது
பேச்சால் விவசாயிகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பயணம் செல்ல உள்ளார். இந்த பயணம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பயணம் செல்ல உள்ளார். இந்த பயணம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




