செவ்வாய், 4 டிசம்பர், 2012

வெறுப்பரசியல் இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின்


சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்
நீண்ட தகரக் கொட்டகை. அதில் ஆறடிக்கு நாலடியில்  சிறிய அறைகள். அறை முழுவதும் பாகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் சூட்கேஸ்கள் தலையணையாக உள்ளன. சுவரில் ஆணியில் தொங்கும் சட்டைகள், பேண்டுகள். இது நான்கு பேர் தங்கும் அறை. இதுபோல் அடுத்தடுத்து பல அறைகள். வெளியே அனைவருக்கும் குளிக்க ஒரு பெரிய தொட்டி. சுகாதாரமற்ற கழிப்பறைகள். கழிவுநீர் அப்பகுதியில் சாக்கடையாகத் தேங்கி நிற்கிறது.  இவைதான் வடமாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் வானுயர்ந்த கட்டிடங்களை எழுப்பும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்கள்.
கால்களை நீட்டிப் படுக்கக்கூட இடமில்லாமலும், இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டும் உறங்கும் அவர்கள், காலையில் ஒப்பந்ததாரர்களால் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!


சகோதரி மேரி சாண்டிஏசுநாதர்“மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது. நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது. ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன. அந்த அறையின் தரையெங்கும் இரத்தத் துளிகள் …”
- கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான சகோதரி மேரி சாண்டியின் சுயசரிதையான “நன்ம நிறஞ்சவளே ஸ்வஸ்தி” எனும் நூலில் இருந்து…
67 வயதான மேரி சாண்டி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டவர். சுமார் நாற்பதாண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார்.

பீகார் பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம்

  Girls Using Mobile Phones Will Be Fined பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம்: பீகார் பஞ்சாயத்து

பீகார் மாநிலம், கிசன்கஞ்சில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் இனி கிராமத்தில் உள்ள பெண்கள் யாராவது செல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அண்மையில் கோச்சதம் வட்டாரத்தைச் சேர்ந்த சில திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்ததையடுத்து தான் பஞ்சாயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பஞ்சாயத்து தலைவி ஷமீமா காத்தூனைக் கேட்டதற்கு, நான் அந்த கூட்டத்திற்கே போகவில்லை என்று தெரிவித்தார்.
பஞ்சாயத்தின் இந்த முடிவு குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதம் உத்தர பிரதேசத்திலும், நவம்பரில் ராஜஸ்தானில் உள்ள தௌசாவிலும் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.http://tamil.oneindia.in/

திருமா தாக்கு: தொகுதி கேட்டு பேரம்பேசவே ஜாதி தலைவர்களை அணி திரட்டும் ராமதாஸ்

தேர்தலின்போது தொகுதி கேட்டு பேரம்பேசவே ஜாதி தலைவர்களை அணி திரட்டும் ராமதாஸ்: திருமா தாக்கு Posted by: Siva

சென்னை: தேர்தல் நேரத்தில் இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று பேரம் பேசத் தான் பாமக நிறுவனர் ஜாதி தலைவர்களை ஒன்று திரட்டி வருகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது,
ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக பிற ஜாதி அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அந்த கூட்டத்தில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.http://tamil.oneindia.in/

BR. மகாதேவன்: நான் சாதி வெறியை வெறுக்கிறேன்!


இளவரசன் என்ற பறையர் சாதிப் பையனும் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் மனம் விரும்பிச் செய்துகொண்ட திருமணம், அணைந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒரு எரிமலையை வெடிக்கச் செய்திருக்கிறது. இந்தத் துயரமான நிகழ்வு பல விஷயங்களை மறுபரிசீலனைச் செய்யத்தூண்டியுள்ளது.
சாதி உணர்வானது நவீன உலகில் சாதி வெறியாக உருத்திரண்டு வருகிறது. கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லையென்றால் எதிர்காலம் நிச்சயம் மோசமாகவே ஆகும் என்பதற்கு இந்தக் கொடூரத் தாக்குதல் நல்ல உதாரணம். தென் மாவட்டங்களைவிட வட மாவட்டங்களில் சாதி சார்ந்த ஒடுக்குமுறையானது இதுவரையில் குறைவாகவே இருந்துவந்திருக்கிறது. அது காலப்போக்கில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையின் இளம் துளிரை மிதித்து நாசமாக்கிவிட்டிருக்கிறது இந்த நிகழ்வு.
இத்தனைக்கும் வன்னியர்களின் தலைவரான ராமதாஸ், பறையர்களுடன் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக மனப்பூர்வமாக ஏராளமான களப்பணிகள் செய்திருக்கிறார். அவருடைய முயற்சிகள் சாதி வெறியின் நெருப்பை அணைத்துவிட்டிருக்கவில்லை. அதோடு, பாட்டாளி மக்கள் கட்சியும் சமீபகாலமாக கலப்புத் திருமணத்தை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறது. ராமதாஸ் முன்னிலையில் காடு வெட்டி குரு பேசியவையெல்லாம் வெறுமனே அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமாக நிச்சயமாக இருந்திருக்க முடியாது.

தென் சீன கடலில் சீனா அடாவடி!! இந்திய கடற்படை கப்பல்கள் களத்தில் குதிக்கின்றன!

Viruvirupu
இந்தியாவுக்கு சில ஆயில் ப்ளாக்குகள் இங்கே உள்ளன!
“தென் சீன கடல் பகுதியில் உள்ள இந்திய உரிமைகளை பாதுகாக்க, இந்தியக் கடற்படை முழுமூச்சாக செயல்படும். எமது கப்பல்கள் அந்த கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார், கடற்படை தளபதி டி.கே.ஜோஸி.
இந்தக் கடல் பகுதியில் சீன கடல்படை அந்துமீறி நடந்து கொள்வதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின்றன. தென் சீன கடல் பகுதியில் இந்தியாவுக்கு சில ஆயில் ப்ளாக்குகள் (oil blocks) உள்ளன. வியட்நாமினால் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட இவற்றில் சீனாவுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு.
கடற்படை தளபதி டி.கே.ஜோஸி, “அந்தக் கடல் பகுதியில் இந்தியக் கப்பல்களை 365 நாட்களும் நிறுத்தி வைத்திருப்பது சாத்தியமல்ல. ஆனால், இந்திய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், நாம் அங்கு செல்லத்தான் வேண்டியுள்ளது. அங்கே எமது கப்பல்கள் அடுத்த சில தினங்களில் வரைந்து செல்லுமா என்ற கேள்வி எழுந்தால், எனது பதில், ‘ஆம்’ என்பதாகவே இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
இந்தக் கடல் பகுதியில் நடமாடும் மற்றைய நாட்டு கப்பல்களை தடுத்து நிறுத்தப் போவதாக அறிவித்துள்ள சீனா, தென் சீன கடல் பகுதி முற்று முழுதாக தமக்கே சொந்தம் என கூறத் தொடங்கியுள்ளது. இந்தக் கடலில் கடந்த சில நாட்களாக நடமாடிய மீன்பிடி கப்பல்களை சீன எல்லைக் காவல் படையினர் கைப்பற்றி, மாலுமிகளையும் சிறைப்படுத்தி வருகின்றனர்.
அப்படியான சூழ்நிலையில்தான், இந்தியக் கப்பல்கள் அங்கு செல்லவுள்ளன.

தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணியா? "அமையலாம்' என்கிறார், விஜயகாந்த்

கோவை :"தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா' என்ற கேள்விக்கு பதிலளித்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "அமையலாம். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. இப்போதே எல்லாவற்றையும் சொல்ல முடியுமா' என்று, பதிலளித்தார்.
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட தே.மு.தி.க., மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., பார்த்திபன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக, கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று கோவை வந்தார்.
கோவை மத்திய சிறை வாசலில், நிரூபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும், அவற்றை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

நேரடி மானிய திட்டம் புதிய விஷயமல்ல,,மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம்

புதுடில்லி :"நேரடி மானிய திட்டம், புதிய விஷயமல்ல; கடந்த, பட்ஜெட் கூட்டத் தொடரின்போதே, இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது' என, மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளது.
பல்வேறு திட்டங்களுக்காக, அரசு வழங்கும் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை திட்டம் மூலமாக, நேரடியாக, சம்பந்தப்பட்ட பயனாளிகளின், வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.முதல் கட்டமாக, 51 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குஜராத்தை சேர்ந்த, நான்கு மாவட்டங்களும் அடங்கும். இதற்கு, பா.ஜ., தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "தற்போது குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நேரத்தில், மானிய திட்டம் குறித்த, அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்' என, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. http://www.dinamalar.com/

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி

கூடலூர் : கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் "சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, "சூரிய மின் சக்தி' மூலம் மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.http://www.dinamalar.com/

மாற்றுத்திறனாளிகள் தினத்தை புறக்கணித்த அரசு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.தங்கம் சென்னையில் இன்று (03.12.2012) செய்தியாளர்களிடம் பேசியதாவது,அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். கலைஞர் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார்.
உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை அனுசரிக்கக் கூடிய இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முற்றிலும் இந்த அரசு புறக்கணித்துள்ளது. 22 லட்சம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை இந்த அரசு புறக்கணித்துள்ளது. இதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

திங்கள், 3 டிசம்பர், 2012

ராசா குற்றவாளியல்ல..2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்!


Posted Image
  07 செப்டம்பர் 2011 செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது,
கடந்த ஆண்டு நாம் ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்து எழுதியிருந்தபோது, நீதிவான்கள் பலரும் கய்யோமுய்யோவென்று கத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து உனக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்றெல்லாம் குதித்தார்கள். இந்திய ராணுவத்திடம் சும்மா ஒப்புக்கு இருந்த அலைவரிசையை பெற்று, நிறுவனங்களுக்கு விற்றதின் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தார் அ.ராசா என்பது நம்முடைய அப்போதைய வாதமாக இருந்தது.
2008ஆம் ஆண்டு 122 விண்ணப்பதாரர்களுக்கு 22 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 12,386 கோடிகள். சி.ஏ.ஜி. அறிக்கையோ இந்த ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிகளுக்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு கற்பனைத் தொகையை குன்ஸாக அடித்துவிட்டது. மத்திய அமைச்சர் கபில்சிபல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்று அப்போதிலிருந்தே கரடியாக கத்தி வருகிறார்.

ஜாதியை முன்னிறுத்தி இனி அரசியல் நடத்த முடியாது

ஜாதியை முன்னிறுத்தி இனி அரசியல் நடத்த முடியாது - முத்தமிழ் அறிஞர் கலைஞர் சங்கநாதம்!


தர்மபுரிகள் நடக்காமல் இருக்க  நாடெங்கும்
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் தோன்ற வேண்டும்

சென்னை, டிச.3- ஜாதியை முன்னிறுத்தி இனி யாரும் அரசியல் நடத்த முடியாது - தருமபுரிகள் நடைபெறாமல் தடுக்கப்பட நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் - தி.மு.க. தலைவர் கலைஞர். சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்று தி.மு.க., தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றியதாவது:
இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த எழுச்சிமிகு விழா எத்தகைய மகிழ்ச்சியை நம் முடைய உள்ளங்களிலெல்லாம் நிரப்பியிருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பெரியார் திடலுக்கு நடிகவேள் ராதா மன்றத்திற்கு இன்று சிறப்புச் சேர்க்கின்ற வகையில் என்னுடைய இளவல் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர் களுடைய 80-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

valentine day இனிமேல் ஜாதி ஒழிப்பு காதல் ஊக்குவிப்பு நாளாக கொண்டாடப்படும்: கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் கல்யாணசுந்தரம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சம்பத், விடுதலை சிறுத்தைகள் சார்பில் பாலாஜி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் குமரன், மாறன், திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், செயலவை தலைவர் அறிவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்ததும் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:- வன்கொடுமை சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும். இந்த சட்டம் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஜாதிகள் அகல காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். காதலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி உலக காதலர் தினமானது இனிமேல் ஜாதி ஒழிப்பு காதல் ஊக்குவிப்பு நாளாக கொண்டாடப்படும்.
தர்மபுரி, கடலூரில் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். புது வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு வருகிற 9-ந்தேதி தர்மபுரியில் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்...?

டெல்லி: அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் எப்படியும் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற கனவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியைப் பொருத்தவரையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க.. "ராகுல்" காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது காங்கிரசின் 'பொதுப் புத்தி" யாகவே இருக்கிறது...
மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய இருவருக்கும் அப்பால்.... உச்சரிக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்பட வைக்கும் ஒரு பெயர் "ப.சிதம்பரம்". நன்றாக வலது கையை பாருங்கள் குரு மேடு சூரிய மேடு சனி மேடு புதன் எல்லாமே நன்றாக இருக்கிறது உயர பறக்க  சான்ஸ் இருக்கிறது http://tamil.oneindia.in/

தியேட்டர்காரர்கள் அலறல் விஸ்வரூபம் ஒரே நேரத்தில் தியேட்டரிலும் DVD, டிவி யிலும் வெளியிடமுடிவு

விஸ்வரூபம் பிஸினெஸ்.... கமலின் அதிரவைக்கும் முடிவு.. தியேட்டர்காரர்கள் ரெட்கார்ட் பிளான்?




சென்னை: ஹாலிவுட் தயாரிப்பாளரே வியந்து பாராட்டி, ஆங்கிலப் பட வாய்ப்பை கமலுக்கு வழங்கியதாக சொல்லப்படும் விஸ்வரூபம் படம் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிரவைத்துள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் கமல் படத்துக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர் என்று செய்தி வெளியாகும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.
என்ன பிரச்சினை...?
விஸ்வரூபம் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கு மேல் என்று கமல் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இந்தப் பெரும் தொகை கொடுத்து தமிழில் வாங்கி வெளியிட யாரும் தயாராக இல்லை.
சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் கமலின் இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை தமிழக உரிமைக்கு விலை தருவதாகக் கூறியுள்ளார்.
கமலும் அதற்கு ஒப்புக் கொண்டாராம். ஆனால் அதற்கடுத்து அவர் சொன்னதுதான் தயாரிப்பாளரைத் தூக்கி வாரிப்போட வைத்ததாம்.
அதாவது படத்தை ஒரே நேரத்தில் டிவி சேனல்களிலும் வெளியிடுவதாகத் திட்டமாம். மேலும் டிவிடி உரிமையையும் கொடுத்துவிடப் போவதாகக் கூறினாராம் கமல்.
இதைத் தொடர்ந்து மிகுந்த அதிர்ச்சியுடன் தனது பேரத்தை முடித்துக் கொண்டாராம் தயாரிப்பாளர். விஷயத்தைக் கேள்விப்பட்ட தியேட்டர்காரர்களோ, கமல் இந்த முடிவில் உறுதியாக இருந்தால், அவர் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்களாம்...
திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். எதிர்ப்புகளை மீறி தன் முடிவை நடைமுறைப்படுத்துவாரா கமல்?
பார்க்கலாம்!

ராமதாசுக்கு வைகோ கடும் கண்டனம் தலித் அமைப்புக்களை கொச்சை படுத்த வேண்டாம்

சென்னை: தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தை (விடுதலைச் சிறுத்தைகள்) கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது. தமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவர் (பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்) காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம் சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி நத்தம் கொண்டம்பட்டி அண்ணா நகர், ஆகிய தலித் கிராமங்களில், தலித் மக்களின் வீடுகளும், உடைமைகளும், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டன; பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டு, வீடுகள் கொளுத்தப்பட்ட சம்பவம், கண்டனத்துக்கு உரிய அராஜக வெறியாட்டம் ஆகும்.   http://tamil.oneindia.in/

மாணவியை 3 நாள் அறையில் அடைத்து கற்பழித்த போலீஸ்காரர்

தேனி: ஆண்டிப்பட்டி அருகே 9ம் வகுப்பு மாணவியை 3 நாட்கள் அறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்சாமி மகன் கருப்பசாமி(30). திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். அவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அடைக்கன்பட்டியைச் சேர்ந்த காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 9வது வகுப்பு மாணவிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கருப்பசாமி காவ்யாவுக்கு திருமண ஆசை காட்டி சுற்றுலா என்ற பெயரில் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற கருப்பசாமி மாணவியை ஒரு அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக கற்பழித்துள்ளார்.
கருப்பசாமியிடம் இருந்து எப்படியோ தப்பித்த மாணவி தனது ஊருக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

தலித்களை குறி வைத்து ராமதாஸ் தலைமையில் தீர்மானம் போட்டு திரளும் பிற ஜாதி அமைப்புகள்!

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்" தலைமையில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி ஒரு கூட்டம் போட்டு தலித் மக்கள் தொடர்பாக 7 தீர்மானங்களையும் போட்டுள்ளனர்.
தலித் மக்களால் பிற சமுதாய மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இழிவுபடுத்தப்படுவதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தத் தீர்மானங்கள் குறித்த விவரம்:
எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்
அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையுடனும், சம மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், கருத்தும் ஆகும். சாதியின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. குறிப்பாக காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேனறவேண்டும் என்பதுதான் அனைத்து சமுதாயத்தினரின் விருப்பமாகும். இந்தத் துறைகளில் அவர்கள் முன்னேறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. http://tamil.oneindia.in/

என் கணவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்: நீதிபதி மகேந்திர பூபதியிடம் பிரபு மனைவி புகார்

மானாமதுரை: என் கணவரை திட்டமிட்டு போலீசார் கொலை செய்துவிட்டனர் என்று பிரபுவின் மனைவி ரோஜா, விசாரணைக்கு வந்த நீதிபதி மகேந்திர பூபதியிடம் புகார் கூறினார்.
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை மானாமதுரை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் சுட்டுக்கொன்றனர். இது போலி என்கவுன்டர் என்றும் நீதிவிசாரணை வேண்டும் என்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியிருந்தர். இதனையடுத்து இளையாங்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி தலைமையில் நீதிவிசாரணை நடைபெறும் என்று அரசு அறிவித்தது.http://tamil.oneindia.in/

5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமானம்



புதுடெல்லி : முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரத்து 490 கோடிக்கு வரிவிலக்குடன் கூடிய வருவாய் கிடைத்துள்ளது என வருமானவரித்துறை அளித்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உள்ளது. ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் அளிக்கப்படும் நன்கொடைகளை ஒவ்வொரு கட்சிகளும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=32801

France ஸ்டீல் தொழிற்சாலை விவகாரத்தில் Mittel தீர்வு

பிரான்ஸ் ஸ்டீல் தொழிற்சாலை விவகாரத்தில் தீர்வு -லட்சு மிட்டல் உறுதியால் அரசின் முடிவில் மாற்றம்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் லட்சுமிட்டலுக்கு சொந்தமான ஆசெலர்மிட்டல் நிறுவன ஸ்டீல் தொழில்ற்சாலையை அந்நாட்டு அரசு தேசிய உடமையாக்கும் முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது.
ஆர்செலர் என்பது ஒருசர்வதேச ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை. இதனை 2006-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான மிட்டல் ஸ்டீல் கையகப்படுத்தியது. இந்தத் தொழிற்சாலையின் ஃப்ளோரஞ்ச் யூனிட்டை மூடுவதற்கு மிட்டல் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.http://tamil.oneindia.in/

IIT மாணவர்களுக்கு ரூ86 லட்சம் வரை ஊதியம்

மும்பை: இந்திய ஐஐடி நிறுவனங்களில் காம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டைவிட 5 முதல் 10% கூடுதலாக ஊதியம் தர முன்வந்துள்ளன.
ஐஐடி நிறுவனங்களில் காம்பஸ் இண்டர்வியூ வேட்டை தொடங்கியிருக்கின்றன. ஃபேஸ்புக், சாம்சங், கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்தக் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஐஐடியின் ஒவ்வொரு காம்பஸில் இருந்தும் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். முதல் நாளில் சராசரியாக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க இந்நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
வழக்கம்போல ஃபேஸ்புக் நிறுவனமானது ஐஐடி கெளகாத்தி கேம்பஸ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ75 லட்சம் (1,36,000 டாலர்) வழங்க முன்வந்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் 1,10,000 டாலர் வழங்க முன்வந்திருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள தமது நிறுவனத்துக்காக கணிதம் மற்றும் கணிணி அறிவியல் படித்த மாணவர்களுக்கு ஃபேஸ்புக் வலை விரித்து காத்திருக்கிறது. http://tamil.oneindia.in/

கணினி வழி கற்றலில் அரசு பள்ளிகள் அசத்தல்

ஈரோடு :மாநகராட்சி அரசு பள்ளி குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிக்கு நிகராக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கணினி மூலம் கல்வி கற்று தரப்படுகிறது.
தேர்வு:மாணவர்களின், கற்றல் திறனை வலுப்படுத்துதல், படைப்பாற்றலை வளர்த்தல், கடினப்பகுதியை எளிதாக கற்றல், இடைநிற்றலை தடுக்க, கணினி வழிக்கல்வி முறை திட்டம் கொண்டு வரப்பட்டது.இக்கல்வியின் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே நிலவும், தொழில்நுட்ப இடைவெளியை நீக்கி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற குழந்தைகளுக்கு, தரமான கல்வியை அளிக்க இத்திட்டம் ஒரு வாய்ப்பாகும்.கணினி வழிக்கல்வி அளிக்க, "அசிம் பிரேம்ஜி நிறுவனம் (ஏ.பி.எஃப்.,), ஒத்துழைப்பு அளித்து, எஸ்.எஸ்.ஏ., மூலம், அனைத்து யூனியனில் செயல்படும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தேர்வு செய்கிறது.
  Sentamil karthik - NamakkaL to ChennaI,இந்தியா

Sentamil karthik இது போதாது ... இன்னும் முன்னேற்றம் வேண்டும் .. என்று தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இல்லை என்ற நிலை உருவாகிறதோ அன்றே நமது இலக்கு நிறைவடையும் .. அதற்கு அரசு இன்னும் உழைக்க வேண்டும் ... மக்களிடம் அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் .. கல்வி புரட்சி கட்டாயம் தேவை ... http://www.dinamalar.com/

பழைய இரும்பு கொடுத்தால் 15 நிமிடத்தில் அரிவாள் "ரெடி

 ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்
மடத்துக்குளம் :"நடமாடும் இரும்பு பட்டறை' நடத்தி, உடனுக்குடன் மலிவு விலையில் கத்தி, அரிவாளை ராஜஸ்தான் தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தனி குழுவாக வந்து, இரும்பு தொடர்பான பொருட்களை உடனுக்குடன் செய்து தருகின்றனர்.
இவர்கள், ஒரே இடத்தில் தங்கள் தொழிலை செய்யாமல், ஒவ்வொரு பகுதியாக செல்கின்றனர்.ராஜஸ்தான் தொழிலாளர்கள் கூறியதாவது:
எங்கள் மாநிலத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. வேறு தொழிலும் தெரியாது; இதனால், ஒவ்வொரு பகுதியாக சென்று இரும்பு பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.குறிப்பாக, விவசாயத்திற்கு பயன்படும் கலப்பை, கொத்து, மண்வெட்டி, கட்டுமானத்துக்கு பயன்படும் கடப்பாரை மற்றும் அரிவாள், கத்திகளை தயாரிக்கிறோம். மக்கள் கொடுக்கும் பழைய இரும்புகளில், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் செய்து வழங்குவதற்கு, கூலியாக 60 ரூபாய் பெற்றுக்கொள்கிறோம். ஒரு பொருள் செய்ய 15 முதல் 30 நிமிடங்கள் ஆகும். ஆனால், எங்களின் உணவு தேவைக்குக்கு கூட கிடைக்கும் வருமானம் கட்டுபடியாகவில்லை.இவ்வாறு, தொழிலாளர்கள் கூறினர். http://www.dinamalar.com/

கடுங்குளிரில் வெறுங்காலுடன் இருப்பவக்கு காலணி கொடுத்த போலீஸ் 340,000 Likes

லாரன்ஸ் டெபிரிமோ எனும், 25 வயதான இளைஞர், நியூயோர்க் காவல்துறையை சேர்ந்தவர். டைம்ஸ் கொயர் முன்னிலையில் கடுங்குளிரில் வெறும் பாதங்களுடன் அமர்ந்திருந்த வீடில்லாத முதியவர் ஒருவருக்கு ஒரு ஜோடி சப்பாத்துக்களை வாங்கிவந்து கொடுத்தார் இந்த பொலிஸ்காரர். ஒரு சுற்றுலா பயணி தனது ஸ்மார்ட்ஃபோனில் இதனை படம்பிடித்து மறுநாள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.
மறுநாள் நியூயோர்க் காவல்துறையின் உத்தியோக பேஸ்புக்கிலும் பதிவேற்றப்பட்டது. சமூகவலைத்தள பதிவாளர்களின் இதயத்தை தொட்டுவிட்ட இப்புகைப்படம், மறுநாளே 340,000 Likes, 90,000 Shares, 22,000 Comments என காண்பித்தது. அநேகமானோர் இந்த இளம் போலீஸ்காரரை பெருமைப்படுத்தி காமெண்ட் அடிக்க, ஒரு சிலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாமென்றனர்.