வியாழன், 22 செப்டம்பர், 2011

சென்னை மாநகராட்சி மேயர்


சட்டமன்றத் தேர்தலைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையைத் துவக்காமலே 10 மாநகராட்சிகளுக்குரிய அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இதில், சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார் சைதை துரைசாமி.

கோபமான சோனா, போலீசுக்குப் போய்விட்டார் .

பாலியல் ரீதியாக தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்னிடம் வம்பு செய்து அத்துமீற முயன்றார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சோனா. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி சிகிச்சையும் பெற்றுவருகிறார் சோனா.
என்ன வில்லங்கம்?
சோனா சொல்கிறார்!
""மங்காத்தா' படத்தின் வெற்றியைக் கொண்டாடு வதற்காக அந்தப் படத்தில் நடித்திருக்கும் வைபவ் தி.நகர்ல இருக்கும் தன்னோட வீட்டில் பார்ட்டி கொடுத்தார். "மங்காத்தா' டைரக்டர் வெங்கட்பிரபுவும் அவரோட தம்பி நடிகர் பிரேம்ஜி அமரனும் என்னோட நண்பர்கள். அதனால் அந்த பார்ட்டிக்கு என்னையும் கூப்பிட்டாங்க.
கடந்த புதன்கிழமை இரவு நடந்த இந்த மது விருந்தின்போது தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் திடீர்னு என்மேல பாய்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவமானத்தால் கூனிக்குறுகிப் போனேன். பிழைப்புக்காக கவர்ச்சியாக நடிக்கிறேனே தவிர... நான் தப்பானவள் இல்லை. ஏற் கனவே ஒருமுறை என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினார் சரண். அவரை மன்னித்துவிட்டு அவருடன் பேசுவதைத் தவிர்த்துவந்தேன். இப்போ மறுபடியும் தப்பா நடந்து, எனக்கு மன உளைச்சலை உண்டாக்கிட்டார்.''

புதன், 21 செப்டம்பர், 2011

49 போலி டாக்டர்கள் பிடிபட்டனர் பத்தாவது, 12வது படித்து முடித்து விட்டு டைரக்ட் டாக்டர்கள்

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 49 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்த மாவட்டங்களில் பெருமளவில் போலி டாக்டர்கள் புழங்கி வருவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து இன்று அதிரடி ரெய்டில் நான்கு மாவட்ட போலீஸாரும் குவித்தனர். இதில் 49 போலி டாக்டர்கள் பிடிபட்டனர். இவர்களில் யாருமே கம்பவுண்டராக கூட இருந்தது கிடையாதாம். பத்தாவது, 12வது படித்து முடித்து விட்டு டைரக்ட் டாக்டர்கள் ஆனவர்கள்.

ஏதோ எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு டாக்டர் ஆனவர்களைப் போலவே, பக்காவாக கிளினிக் வைத்து மக்களின் உயிருடன் விளையாடிய இவர்களைப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

போலி டாக்டர் வேட்டை தொடரும் என காவல்துறை தெரிவித்திருப்பதால் பிடிபடாமல் எஸ்கேப் ஆகியுள்ள மற்ற போலிகளும் கிலியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 1ம் தேதி கனிமொழி ஜாமீன்?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்கப்போவதில்லை என்று ராசா அறிவித்துவிட்டார்.

கனிமொழி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
அக்டோபர் 1ம் தேதி கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்.   அப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தால் சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

Imelda Sukumar: நகை அணிந்து செல்லும் சுதந்திரம் கூட அங்கு இல்லை

வெளிநாட்டு பயண அனுபவங்களை விபரிக்கிறார் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா


யாழ்.மாவட்ட அரச அதிபரின் அண்மைய வெளிநாட்டுப் பயணத்தின்போது தங்க நகைகள் அணிந்து வெளியில் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாக அவரே கூறினார்.இது தொடர்பாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்ததாவது:
பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் இருந்து எனது தங்க நகைகளைக் கழற்றி கைப்பையினுள் வைக்குமாறு சொன்னார்கள்.
அத்துடன் அங்கு மலையடிவாரக் கிராமம் ஒன்றுக்குச் சென்றபோது காதிலிருந்த தோட்டைக்கூட கழற்றுமாறு சொல்லி விட்டார்கள்.
பின்பு சுவிஸ் நாட்டுக்குச் சென்றபோதும் அதே நிலைதான். அங்கும் நகைகளைக் கழற்றி வைக்குமாறு சொன்னார்கள்.
அங்குள்ள பெண்களும் நகைகள் எதனையுமே அணியாமல்தான் உலாவுகின்றனர்.
அந்த நாடுகளில் நகை அணிந்து சென்றால் அபகரித்துச் சென்று விடுவார்களாம்.
காதில் தோடு மாட்டியிருந்தால் காதோடு அறுத்துக்கொண்டு சென்று விடுவார்களாம்.
இந்தக் காரணத்தினால் என்னை நகைகளைக் கழற்றி வைக்குமாறு கூறினர்.
தங்க நகை அணிந்து செல்லும் சுதந்திரம் கூட அங்கு இல்லை என்றார் அரச அதிபர்

பிரசாரத்திற்கு திமுக தயாராகிறது அழகிரியுடனும் ஆலோசனை

இடைதேர்தல், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் கருணாநிதி-மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தயாராகி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மு.பரஞ்சோதியை வேட்பாளராக அறிவித்துள்ளது. தி.மு.க. தரப்பில் கே.என்.நேரு போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தல் பணிகளில் அனைத்து கட்சியினரும் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முன்னாள முதல்வருமான கருணாநிதி தேர்தல் பிரசாரத்திற்காக தயாராகி வருகிறார்.

500 மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களம்

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. புதிய பல உத்திகளைக் கையாண்டு ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குரிய மக்கள் ஆதரவை வெளியில் காட்டுவதற்காகவும் சிலர் முயற்சிக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கை சில சந்தர்ப்பங்களில் வெறுப்பினை ஏற்படுத்துகிறது.

மக்களின் நலனே முதல் நோக்கம். தம்பட்டம் அடித்துக்கொண்டு பிரசாரம் செய்யும் வேட்பாளர்களில் ஒருவரின் தேர்தல் பிரசார ஆதரவாளர்களை படங்களில் காண்கிறீர்கள். கிராண்;ட்பாஸில் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட விதம் இது.

200 வங்கி லாக்கர்கள் ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு

ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ

பெல்லாரி: சுரங்க மோசடி ஊழலில் சிக்கியுள்ள கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக இரும்புத் தாது தோண்டும் உரிமம் வழங்கப்பட்டது, சட்டவிரோதமாகஅந்த நிறுவனம் பெருமளவில் இரும்புத் தாதை வெட்டியெடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக ஜனார்த்தன ரெட்டி, அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோருக்கு 200க் வங்கி லாக்கர்கள் இருக்கும் விவரம் தெரிய வந்துள்ளது.

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது கற்பூரம் ஏற்றி வழிபாடு ஐயோ சாமி முடியலே


விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு சொந்தமான எருமை மாட்டுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி பரவியது.
எருமை மாடு எமனின் வாகனம். எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவியது.

FIR on Dhayanithi தயாநிதி மாறன் மீது விரைவில் எப்.ஐ.ஆர் தாக்கல் செய்கிறது சிபிஐ!


Dayanidhi Maran
 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தயாநிதி மாறன் மீது சிபிஐ விரைவில் முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
அடுத்த மாத துவக்கத்தில் இந்த எப்ஐஆர் தாக்கலாகலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கும் விவகாரத்தில் அதன் முந்தைய உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டியதாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அவரை நிர்பந்தித்ததாகவும், அவர் அதை மேக்சிஸ் விற்ற பின் ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியதாகவும் தயாநிதி மீது புகார் உள்ளது.

திருவெறும்பூரை இணைத்தது செல்லாது- உயர் நீதிமன்றம் அதிரடி

திருச்சி மாநகாராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

டவுன் பஞ்சாயத்து நிலையில் இருந்த திருவெறும்பூரை கடந்த மாதம் திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு திருவெறும்பூரில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்து, பாப்பா குறிச்சி, எல்லக்குடி, கீழ்கல்கண்டார் கோட்டை, ஆலத்துர் பஞ்சாயத்துகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

வந்தான் வென்றான் - ஒரே அம்மா... வேறு அப்பாக்கள் விமர்சனம்

Jeeva and Tapsee

அருமையான லொகேஷன்கள், இளசுகளைக் கவரும் காதல் காட்சிகள், துடிப்பான இசை, குறிப்பாக விலாநோக வைக்கும் சிரிப்புக்கு கேரண்டி தரும் சந்தானம்... எல்லாம் இருந்தும், வந்தான்... வென்றானா?

குத்துச் சண்டை வீரரான ஜீவா, ஒரு சிக்கலான நேரத்தில் டாப்ஸிக்கு உதவ, காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் தன் அப்பா சொன்னால்தான் காதல், கல்யாணத்துக்கெல்லாம் சம்மதிக்க முடியும் என கறாராகச் சொல்லிவிடுகிறார் டாப்ஸி.
ஆனால் மும்பை தாதாக்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் தவறுதலாக டாப்ஸியின் பணக்காரத் தந்தை கொல்லப்படுகிறார்.

2ஜி' விசாரணையில் சிதம்பரத்தை சேர்க்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' என்ற, சுப்ரமணியசாமியின் மனுவுக்கு, சி.பி.ஐ.,யும், மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன. "இந்த வழக்கு தொடர்பாக, மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்வது குறித்தோ, கூடுதலாக குற்றவாளிகளை சேர்ப்பது குறித்தோ, விசாரணை கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய முடியாது' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

நடிகை சோனா:சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுகிறேன்


Sona

சென்னை: தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் - தயாரிப்பாளர் பகிரங்க மன்னிப்பு கேட்டால், வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக கவர்ச்சி நடிகை சோனா இன்று கூறினார்.
இந்த விவகாரத்தில் கடந்த இரு தினங்களாக நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் நேரில் போய் கேட்டுக் கொண்டார் சரணின் தந்தை எஸ்பி பாலசுப்ரமணியன்.
சரணின் நண்பர்களும் சோனாவிடம் இதுகுறித்து வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் எஸ்.பி.பி. சரண் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில், "சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித்துள்ளார்," என்றெல்லாம் கூறியிருந்தது, சோனாவை ஆத்திரப்படுத்திவிட்டதாம்.

Dirty Picture க்காக சில்க்காகவே மாறிப் போன வித்யா பாலன்


நடிகை வித்யா பாலன் தி டர்டி பிக்சர் படத்திற்காக சிலக் ஸ்மிதாவாகவே மாறியுள்ளார். அந்த அளவுக்கு கேரக்டரோடு ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.

தி டர்டி பிக்சர் படத்தின் பாடலை படமாக்க வித்யா பாலன் அண்மையில் ஹைதராபாத் வந்தார். ஏற்கனவே அவருக்கு காய்ச்சல் இருந்தும் அதை பெரிதுபடுத்தாமல் நசீருத்தீன் ஷாவுடன் நடித்தார்.

அந்த பாடல் காட்சியை ஒரு தாமரைக் குளத்தில் படமாக்கினர். பாடலை 2 அல்லது 3 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற நிலை. அதனால் வித்யா குளத்தில் 4 முதல் 5 மணி நேரம் வரை காய்ச்சலோடு நடித்தார். இதில் முதல் நாளே அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு இயக்குனர் மிலன் கேட்டுக் கொண்டும் பரவாயில்லை என்று கூறி வித்யா நடித்துள்ளார்.

நக்கீரன் ஆசிரியருக்கு 'இந்தியா டுடே' புகழாரம்!

தமிழகத்தில் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்கவர்களின் பலம் பொருந்தியவர்களின் பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது 'இந்தியா டுடே' பத்திரிகை. 

இந்த வருடமும் அப்பட்டியலை வெளியிட்டுள்ளது, 'இந்தியா டுடே'.

தமிழகத்தின் பலம் மிக்கவர்கள் செல்வாக்கு படைத்தவர்கள் 2011 பட்டியலில் 10 பேர் அடங்கியிருக்கிறார்கள். பத்து பேர் அடங்கிய அப்பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இடம் பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள நக்கீரன் கோபால் குறித்து இந்தியா டுடே, 'புலனாய்வுப் புலி' என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், 'புலனாய்வுப் பத்திரிகைகளுக்கு ஒரு கௌரவ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் நக்கீரன் கோபால். ஏனெனில் புலனாய்வு செய்திகளுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை சமூகநீதிக்கும் தருகிறது நக்கீரன். அதனால்தான் கடந்த ஆண்டின் தந்தை பெரியார் விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கியது. ஏனெனில் புலனாய்வு இதழ் விற்பனை வரலாற்றிலும் சாதனை நிகழ்த்தியவர் கோபால். நித்யானந்தா விவகாரம் இடம்பெற்ற நக்கீரன் 5 லட்சம் பிரதிகள் விற்றது' என்று குறிப்பிட்டுள்ளது.

திரைப்படத்துறையினர் மன்றாட்டம் கேளிக்கை வரியை உயர்த்த வேண்டாம்

சென்னை, செப். 20: கேளிக்கை வரியை உயர்த்த வேண்டாம் என தமிழக மன்றாட்டம் அரசுக்கு யினர் திரைப்படத்துறை வே ண்டுகோள் விடுத்துள்ளனர்.  தமிழகத்தில் கேளிக்கை வரி மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் 15 சதவீதமாகவும் இதர பகுதிகளில் 10 சதவீதமாகவும் நடைமுறையில் இருந்து வந்தது. இதை தமிழக அரசு தற்போது மாநகராட்சிகளுக்கு 30 சதவீதம் மற்ற பகுதிகளுக்கு 20 சதவீதம் என உயர்த்தியுள்ளது.

உரிய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்பும் இணைக்கப்பட வேண்டும்

அரசு – தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் உரிய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்பும் இணைக்கப்பட வேண்டும்


அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டியது முக்கியமானது. தீர்வு காண்பதென்பது தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் அவசியமானது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் கூறினார்.

இலங்கையில் தினமும் 900 கருக்கலைப்புகள்

இலங்கையில் தினமும் 900 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது. இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் கருக்கலைப்புக்கள் வருடாந்தம் இடம்பெறுகின்றன. வருடாந்தம் 3 இலட்சத்து 80 ஆயிரம் பிறப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே கருக்கலைப்புக்களும் அதிகரித்திருப்பதாக சமூக, சுகாதார ஆலோசகர் வைத்தியர் கபில ஜெயரட்ண தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டிலேயே மிகக் குறைவான 660 கருக்கலைப்புக்கள் நாளாந்தம் இடம்பெற்றிருந்ததுடன், 17 உயிர்கள் வருடாந்தம் இழக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கருக்கலைப்பில் 92 வீதமானவை திருமணமான பெண்களுடையது 8 வீதம் திருமணமாகாத பெண்களுடையது.இடம்பெறுகின்ற கருக்கலைப்புக்களில் 27 வீதமானவை 25 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட பெண்களுடையது என கணக்கெடுப்பொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

Who will pay for LTTE’s crimes?

In Libya, the anti-Gaddafi forces are shelling the remaining pockets of resistance with tens of thousands of civilians trapped in them. NATO continues air strikes in spite of heavy civilian casualties in a desperate bid to put an end to the war and get out of the place as soon as possible.
While the Libyan rebels are being assisted by a collective of western governments to the hilt in unleashing hell on enemy positions in their hunt for a dictator on the run regardless of the staggering human cost, Sri Lanka, which eliminated the military muscle of a bloodthirsty terrorist outfit banned in over 32 countries, is being persecuted instead of being praised and helped with its reconstruction and rehabilitation efforts.

President Mahinda Rajapaksa with Clinton


to attend the 66th session of the UN General Assembly in New York participated in the Clinton Global Initiative 2011 Annual Meeting yesterday. Here President Mahinda Rajapaksa receiving a warm welcome from former US President Bill Clinton on the occasion. Picture by Sudath Silva..

TRP எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனது

முர்டோச்சின் ஊடக ஏகபோகம்
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி தரக் குறைவுக்குத்தான் வழிவகுத்திருக்கிறது. பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனது

கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவின் ‘ஊடகப்பரப்பு’ பிரம்மாண்டமான மாறுதல்களைப் பார்த்திருக்கிறது. ஊடகப் பரப்பு என்பது அமெரிக்காவில் வசிக்கும் அர்ஜூன் அப்பாதுரை என்ற இந்திய ஆராய்ச்சியாளரால் முதலில் பயன்படுத்தப்பட்டது. காட்சி ஊடகங்கள் உலகில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், உலகளாவிய பண்பாட்டுப் பாய்ச்சல்களில் பொதுஊடகங்களின் பங்கையும் விவரிக்கவும் பொருத்தவும் பயன்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை வலிமைப்படுத்துவதற்கு ஊடகங்களில் பெரும்பகுதியினர் ஆற்றி வரும் பங்கு பாரட்டப்பட வேண்டிய அதே நேரத்தில் சில செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஓடைகள், இணையத் தளங்கள் செயல்படும் முறைகளில் பல மோசமான போக்குகளையும் பார்க்க முடிகிறது. இவற்றில் “பணத்துக்கு செய்தி”யும் பிற வெளிப்படையான வணிகப் போக்குகளும் அடங்கும்.

சென்னை டாக்டரின் சின்ன சின்ன திருட்டுக்கள் செல்போன்கள் திருடியதை டாக்டர்

சென்னை : மருத்துவமனையில் பணியில் இருந்தபோது நர்ஸ் செல்போனை திருடிய டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் நாராயணன் (31). எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். ரூ.85 ஆயிரம் சம்பளம்.

இந்நிலையில், அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திடீர் திடீரென திருட்டு போனது. டாக்டர் பிரகாஷ் நாராயணன் மீது ஊழியர்கள் சந்தேகப்பட்டனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்தால் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோம்

வடகடலில் மீண்டும் இந்திய மீனவர்களது ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் வடகடல் வளங்கள் பெருமளவில் இந்திய மீனவர்களினால் அள்ளிச் செல்லப்படுவதாகவும் வடமாகாண கடற்றொழில் சமாசங்களின் தலைவர் எஸ். தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் இல்லாது இருந்ததாகவும் மீண்டும் அது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடித்தனத்தை இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு நிறுத்தாவிட்டால் கடலில் இறங்கி இந்திய மீனவர்களைச் சிறைப் பிடிப்போம் என எச்சரித்துள்ளார்.

வடகடல் மீனவ்களின் வளங்களை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தொடர்ந்து அதிகரித்தால் நாங்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கையில் 357 பேர் தூக்குத் தண்டனை கைதிகள்

தூக்கு தண்டனையை நிறைவற்றக் கூடிய வேலையாள் தேவை என்ற விளம்பரத்தை விரைவில் வெளியிடப்போவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவர் கூட தூக்கிலிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை நாட்டின் சட்டத்தில் உள்ளது.
கொழும்பு வெலிக்கந்தை சிறைச் சாலையில் தான் இந்தப் பணிக்கான ஆள் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இருந்தவர் சிறைக்காவலராக பதவி உயர்வு பெற்றுச் செல்வதால் சற்றே கீழ் நிலையில் இருககும் இந்தப் பணி காலியாகி உள்ளது.
உடனடியாக ஆட்களைத் தூக்கில் போடும் எண்ணம் தமக்கு இல்லை என்று இலங்கை சிறைத் துறைத் தலைவர் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார்.