வியாழன், 27 மே, 2010

ஏர் இந்தியாவின் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டுமே 50 விமானங்கள்

மும்பை: உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஏர் இந்தியா ஊழியர்கள் நேற்று தொடங்கிய திடீர் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக இதுவரை ஏர் இந்தியாவின் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டுமே 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 18 ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் அரசின் எச்சரிக்கையையும் மீறி விமான ஊழியர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் இன்றும் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியா முழுவதும் 76 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

டெல்லியில் 24, மும்பையில் 37, கொல்கத்தாவில் 6, பெங்களூரில் 2 விமானங்கள் ரத்தாகி உள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, கோவை, புவனேசுவர், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கு செல்லும் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மாலை அறிவித்துள்ளது. இதையடுத்து வேலை நிறுத்தம் இரவில் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சேவைகள் சீராக பல நாட்களாகும் என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: அஅ லாலி
பதிவு செய்தது: 27 May 2010 12:30 am
நான் திரும்பவும் சொல்லுகின்றேன் எந்த அணியை தொட்டால் அரசுக்கு பிரட்சனை வருமோ அந்த அணி நினைத்ததை சாதித்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. aa lali

பதிவு செய்தவர்: சுப்பு
பதிவு செய்தது: 27 May 2010 12:11 am
air இந்திய விமானம்களை வெளி நாட்டுக்கு வித்துர்டுங்கட நாயளே !

மு.க.ஸ்டாலினை வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் யாரும் வரவில்லை

மதுரை: நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்த​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டுமே அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலின் இரவு 8.30 மணிக்கு விமானத்தில் மதுரை வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,​​ தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர்.​

அவர்களை வரவேற்க முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்,​​ முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் வ.வேலுச்சாமி ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.

ஆனால்,​​ இப்போதைய மதுரை பகுதி திமுக மாவட்டச் செயலாளர்கள்,​​ எம்.எல்.ஏக்கள்,​​ எம்.பி.க்கள்,​​ மேயர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் யாரும் வரவில்லை.​

அவரை வரவேற்பதைத் தவிர்க்க திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளூரிலேயே இல்லாமல் வெளியே சென்றுவிட்டது தெரியவந்தது.

இதனால் ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர்,​​ மதுரை சரக டி.ஐ.ஜி.​, எஸ்.பி.​ உள்ளிட்டோர் தான் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து கார் மூலம் அவர் திருநெல்வேலி சென்றார்.
Post Comments ]
பதிவு செய்தவர்: முத்து
பதிவு செய்தது: 27 May 2010 12:44 am
கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க தூள் தூளாக உடைந்து நொறுங்க வேண்டும். அதை பார்த்து ரசிக்க வேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அவர்கள் தலை எடுக்க முடியாதபடி ஆகவேண்டும். அழகிரி பண்ணிய கொடுமைகளுக்கு ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். ஆஹா ஆஹா நினைக்கவே இன்பமாக இருக்கிறதே.

பதிவு செய்தவர்: வாத்துமண்டை
பதிவு செய்தது: 26 May 2010 11:04 pm
கோரங்குகூ மவன் பெத்த நாயபயல்கள் அல்லவா, அப்படித்தான் இருப்பார்கள். கொலைகிரி அழகிரி, ரவுடி ரஷ்யன் ஸ்டாலின்!

காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்த

சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது.  பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில்.   திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை,  திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுகின்றன.

சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.

ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.


பொ.பியசேன வேண்டுகோள் 2006 முதல் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பபட்டோர் பற்றிய விபரங்களைத்

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் 2006 முதல் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பபட்டோர் பற்றிய விபரங்களைத் தருமாறு அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். தினமும் பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் கண்ணீர்மல்க வந்து கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு தன்னிடம் முறையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் 15.06.2010 க்கு முன்னர் தமக்கு அறியத் தந்தால் தேடவோ அல்லது நஸ்டஈடு பெறவோ முடியுமென கூறுகிறார்.
அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுக்கள் அவர்களின் நடமாட்டங்கள் அதிகமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதன், 26 மே, 2010

விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதைத் தடை

மாணவர்களின் அறநெறிக் கல்வி மேம்பாட்டுக்காக ஞாயிறு மற்றும் போயா விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதைத் தடை செய்வதற்கு ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது.அடுத்த மாதம் முதல் இந்த தடை அமுலுக்கு வருமென ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்யூ தெரிவித்தார்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வது பாதிக்கப்படுகிறது.மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஊவா முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, பல மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆராய்ந்தார். இதன்படி நேற்று முன்தினம் மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது

இலங்கைக்கான விசா அனுமதியினை தளர்த்துவதற்கு மலேசியா தீர்மானம் எடுத்துள்ளது.

இலங்கைக்கான விசா அனுமதியினை தளர்த்துவதற்கு மலேசியா தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் விசா அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ள முடியும் என மலேசியாவின் பிரதி பிரதமர் ரன் சிறீ முஹ்யிட்டின் யச்சின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலைமாதம் முதலாம் திகதிமுதல் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு மாத்திரமின்றி பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குமான விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மலேசியாவின் பிரதி பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மது விளம்பரம்: மோகன்லாலுக்கு காந்தியவாதிகள் கடும் எதிர்ப்பு!

கேரள அரசின் காதி போர்டு கதர் விற்பனை விளம்பர தூதராக உள்ள நடிகர் மோகன்லால் மதுவிளம்பரத்தில் நடித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் காந்தீயவாதிகள்.

அண்மையில்தான் காதி போர்டு வாரிய தூதராக நியமிக்கப்பட்டார் மோகன்லால். கதர் துணிகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது கதர் வாரியம்.

இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கெனவே மது விளம்பரங்களில் தோன்றியுள்ள மோகன்லாலை, மகாத்மா காந்தியின் உயர்ந்த கொள்கைகளில் ஒன்றான கதர் விற்பனை தொடர்பான பொறுப்பில் நியமிப்பதை கேரளாவைச் சேர்ந்த காந்தியவாதிகள் பலர் கடுமையாக எதிர்த்தனர்.

அரசியல் கட்சிகளும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கேரள அரசு எதையும் கண்டுகொள்ளாமல், காதி போர்டு விளம்பர தூதராக நியமித்தது. இதனால் மோகன்லால் இடம் பெற்ற கதர் துணி விற்பனை விளம்பரங்கள் கேரளாவில் பல இடங்களில் தலைகாட்ட துவங்கியது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையே மோகன்லால் தனியார் மது கம்பெனி ஒன்றின் விளம்பரத்தில் நடித்த காட்சிகளும் கேரளாவில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

அதிரடி நீக்கம்!

இதைப் பார்த்த காந்தியவாதிகள் மட்டுமல்லாமல் காதி போர்டு அதிகாரிகளும் கூட அதிர்ந்துவிட்டனர்.

கதர் துணி விற்பனை விளம்பரத்தில் நடிப்பவர் எப்படி மது விற்பனை விளம்பரத்தில் நடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து மோகன்லாலுக்கு எதிராக கண்டனங்களும், அவரை நீக்க கோரி புகார் மனுக்களும் குவிந்தன.

இதைத்தொடர்ந்து மோகன்லால் கதர் விற்பனை விளம்பரத் தூதர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் நடித்து வெளியான விளம்பரக் காட்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மோகன்லாலுக்கு பதிலாக தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் யாரேனும் ஒருவரை விளம்பர தூதராக நியமிக்க கதர் போர்டு முடிவு செய்துள்ளது.

நல்லூர் திலீபனின் உருவச்சிலை... பழி தம்மீது சுமத்தப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
யாழ். நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை கொழும்பிலிருந்து வந்த குண்டர்கள் மூலம் சில அரசியல்வாதிகளால் சேதமாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பழி தம்மீது சுமத்தப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், தீவகம் வேலணை மக்கள் சார்பில் தன்னிடம் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்ற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவையாற்றுவதையே தாம் கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வருகையில், தமது கட்சி மீது பலர் திட்டமிட்ட வகையில் சேறு பூசுவதாகவும் அவர் கூறினார்

சுறா வரை 6 படங்கள் விஜய்க்கு பெரும் தோல்வியையும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும்

சென்னை: சமரசமாகப் போகலாம் என்று விஜய்யும் அவரது தந்தையும் கேட்டுக் கொண்டதால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இன்று நடத்தவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆதி படத்தில் தொடங்கி சுறா வரை 6 படங்கள் விஜய்க்கு பெரும் தோல்வியையும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும் தந்துள்ளன. குறிப்பாக சுறா பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, விஜய்யிடம் 40 சதவிகித நஷ்டஈடு கேட்க முடிவு செய்திருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். விநியோகஸ்தர்களும் தங்கள் பங்குக்கு நஷ்ட ஈடு கேட்டு வந்தனர்.

இந்த நஷ்டஈட்டைத் தராவிட்டால் விஜய்க்கு ரெட் கார்டு போடலாம் என்று அவர்கள் முடிவு செய்து, அதனை பத்திரிகையாளர்களிடம் கூற பிரஸ் மீட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதுபற்றிய செய்திகள் வெளியாக பரபரப்பான சூழல் நிலவியது. விஷயம் அறிந்ததும் உடனடியாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட எஸ் ஏ சந்திரசேகரன், "அவசரப்பட வேண்டாம். உட்கார்ந்து பேசி தீர்த்துக்குவோம். நீங்க இந்த அளவு போக வேண்டிய அவசியமே இல்லை. பிரஸ் மீட்டை கேன்சல் பண்ணுங்க," என்றாராம்.

இன்றே பேச்சு நடத்த வருமாறு விஜய் தரப்பு அழைக்க, உடனடியாக ஒப்புக் கொண்டனர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர்.

இன்று மாலை 3 மணிக்குப் பிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எஸ்ஏ சந்திரசேகருக்கும் பேச்சு நடக்கிறது. இந்த பேச்சின் முடிவை நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சீமான் படத்தில் விஜய்!

இதற்கிடையே, சீமான் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்துடன் சேர்த்து, இன்றைய தேதிக்கு விஜய் கைவசம் நான்கு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

49 பேர் ரத்மலானை இந்துவில் கல்வியைத் தொடர்வர் முன்னாள் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டது

முன்னாள் சிறுவர் போராளிகள் வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாமொன்றை இலங்கை நேற்று செவ்வாய்க்கிழமை மூடியுள்ளது. ஆனால், 52 பேர் அரசாங்கத்தின் பராமரிப்பில் அவர்களின் கல்வி பூர்த்தியடையும் வரை தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 500 சிறுவர் போராளிகள் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அநேகமானோர் தமது குடும்பங்களுடன் சேர்ந்துள்ளனர். 198 ஆண்களும் பெண்களும் கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்தப் புனர்வாழ்வு நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருப்பதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இந்தப் பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்ற ரணசிங்க கூறினார்.

இந்த முகாமை மூடிவிடுமாறு இலங்கை நீதிமன்றம் கடந்த பெப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. "முகாமில் நான் இருந்த வேளை எனக்கு நண்பர்கள் கிடைத்தார்கள். நான் கற்றுக்கொண்டேன். சிங்கள மக்களை நம்ப முடியும் என்று 17 வயதுடைய லக்ஷியா என்ற பெண் கூறினார். இவர் புலிகளின் பெண்கள் படையணியில் 3 வருடங்கள் இருந்தவர்.

எனக்கு போவது துக்கமாக உள்ளது. ஆனால், எனது குடும்பத்திடம் திரும்பிச் செல்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். கொழும்பில் புறநகர் பகுதியான இரத்மலானையிலுள்ள இந்துக் கல்லூரியில் 49 பையன்களும் பெண்களும் தமது கல்வியைத் தொடரவிருப்பதாக ரணசிங்க கூறினார்.

இந்தப் புனர்வாழ்வு முகாம் வாழ்க்கையானது சட்டத்தரணியாகவரும் தனது கனவுகளுக்கு அண்மித்ததாகக் தன்னைக் கொண்டு சென்றுள்ளதாக 16 வயதுடைய கிறஸ்டி கூறினார்.பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்ய விரும்பியிருந்தேன். புலிகள் இப்போது முடிந்துவிட்டனர். ஆட்கள் வந்து என்னை சண்டையிடுவதற்கு திரும்ப அழைத்துச் செல்லமாட்டார்கள் என்று கிறிஸ்டி தெரிவித்தார்.
200 சிறார்கள் பெற்றோர்களிடம் வவுனியா நீதிமன்றத்தால் ஒப்படைப்பு
 விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்துள்ளதாக தடுப்பு முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 200 சிறுவர்கள் நேற்று வவுனியா நீதிமன்றினால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பல மாவட்டங்களையும்சேர்ந்த இச் சிறுவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியப் பிரதிநிதிகளின் வழித்துணையுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் நன்னடத்தைபிரிவு அதிகாரிகளின் ஊடாக அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு இந்துக்கல்லூரியில் இவர்களுக்கான புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும் இவர்கள் புனர்வாழ்வின் போது திருப்திகரமாகச் செயற்பட்டதனாலும் போதுமான புனர்வாழ்வை பெற்றமையினாலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவில் ஆயுத உபகரணங்கள் கண்டுபிடிப்பு..!

இலங்கை இராணுவத்திற்கு தொடர்பாடல் உபகரணங்களை விற்பனைசெய்த ஆயுத விற்பனை முகவர் ஒருவர் அதேவகையான பொருட்களை புலிகளுக்கும் விற்பனை செய்துள்ளார். இந்த உபகரணங்கள் முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு உபகரணங்களில் இராணுவத்தினருக்கு விற்பனைசெய்த சமிஞ்சைகளை தடை செய்யக்கூடிய உபகரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெய்பாதுகாவலர் | அமைச்சரின் துணைவி மேரி லூசிடா வின் தொலைபேசியை

அமைச்சர் மேர்வின் சில்வாவின் பிரத்தியேக மெய்பாதுகாவலர் | அமைச்சரின் துணைவி மேரி லூசிடா வின் தொலைபேசியை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவரை 2500 ரொக்கப்பிணையிலும் 100000 சரீரப் பிணையிலும் விடுதலை செய்துள்ள நீதிமன்று எதிர்வரும் 8ம் திகதி அவருக்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது.

திருடப்பட்ட தொலைபேசியின் பெறுமதி 13500 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய பிரதமராக ி செல்வி கமலா பிரசாத் தெரிவு

Ms.Kamala prasad new prime minister of Trinidada and Tobaco.Ruling party lost this election after 43 years of ruling.

திரிநிடாத் அண்ட் டோபாகோவின் புதிய பிரதமராக ி  செல்வி  கமலா பிரசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் முதலாவது பெண் பிரதமரும் இவரேயாகும்.௪௩ வருடமாக ஆட்சி செய்து வந்த ஆளும் கட்சியை தோற்கடித்து இச்சாதனையை இவர் நிகழ்த்தி உள்ளார்.இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர் நாடு கடந்து பிரதமராக பதவி ஏற்றுள்ளமை உண்மையாக பாராட்டுக்கு உரியது.

செவ்வாய், 25 மே, 2010

ராஜ்யசபா தேர்தல்-கூட்டணி கட்சிகளுடன் ஜெ அவசர ஆலோசனை: வைகோ போட்டியில்லை!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று கூட்டணி கட்சியான மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.மகேந்திரன், கோபு ஆகியோர் இன்று மாலை போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

ராஜ்யசபா தேர்தல் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தப்பட்டது.

சீட் கேட்ட வைகோ-தா.பாண்டியன்?:

ராஜ்யசபா தேர்தலில் 2 இடங்களிலும் அதிமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது.​ ​

இப்போது சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக​ கூட்டணி 4 இடங்களையும்,​​ அதிமுக​ கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்ற முடியும்.

அதிமுக​ தன் சொந்த பலத்தில் ஒரு இடத்தையும் இன்னொரு இடத்தை மார்க்சிஸ்ட்,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ மதிமுக​ ஆகிய கட்சிகள் ஆதரவுடனும் தான் வெல்ல முடியும்.​ ​

இதற்கிடையே அதிமுக​ அணி வெற்றி பெற வாய்ப்புள்ள இரண்டாவது இடத்துக்கு மதிமுக​ பொதுச் செயலாளர் வைகோவும்,​​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் குறி வைத்ததாகத் தெரிகிறது.

இந்த இடத்தில் தங்களை நிறுத்துமாறு இருவரும் ஜெயலலிதாவிடம் கோரியதாகக் கூறப்படுகிறது.

இப்போது பதவிக் காலம் முடியும் 6 எம்பிக்களில் 4 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.​ 4 இடங்களை இழக்கும் அதிமுகவால்,​​ தோழமைக் கட்சிகள் ஆதரவளித்தால் கூட 2 இடங்களை மட்டுமே மீண்டும் பெற முடியும்.​

அதிலும் ஒரு இடத்தை தோழமைக் கட்சிக்கு விட்டுத் தர ஜெயலலிதா தயாராக இல்லை.

இந் நிலையில் தான் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக​ வேட்பாளருக்கு ஆதரவளிக்கக் கோரி ​மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ மதிமுக​ ஆகிய கட்சிகளுக்கு அதிமுக​ தலைமை கடிதம் அனுப்பியது.​

ஆதரவு கேட்டு கடிதம் எழுதிவிட்டதால்,​​ இனி தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்,​​ மதிமுக​ ஆகிய கட்சிகள் வலியுறுத்தாது என்று அதிமுக கருதியது.

ஆனாலும் வைகோவும் தா.பாண்டியனும் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து சீட் கேட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் ஜெயலலிதா அவசர ஆலோசனை நடத்தினார்.

வைகோ போட்டியில்லை!:

இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,

அடுத்த மாதம் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 2 இடங்களிலும் போட்டியிடும். இதற்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, ஆதரவு தெரிவிக்க அவரை சந்தித்தோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.

நீங்கள் போட்டியிடவில்லையா என்று கேட்டதற்கு, ஆதரவு என்று சொல்லிவிட்டோமே, அப்புறம் எப்படி போட்டியிட முடியும் என்றார் சிரித்தபடியே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற மகேந்திரன் கூறுகையி்ல், ராஜ்யசபா தேர்தலுக்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று இன்று அவரை சந்தித்தோம். அதிமுகவுன் எங்கள் கூட்டணி தொடரும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை எதிர்க்கும் வகையில் அதிமுக கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்றார்.

27ம் தேதி மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கும் நிலையில் இனறைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பதிவு செய்தவர்: பாலா
பதிவு செய்தது: 25 May 2010 8:52 pm
சீமானின் அடிபொடிகள் சில ஆள் சேர்க்கும் வேளையில் இங்கு உள்ளது. வைகோவின் தொண்டர்களை பிரிக்கலாம் என்று கனவு கான வேண்டாம்.எங்களிடம் இருந்த புல்லுருவிகள் என்றைக்கோ தமிழக கருணாவிடம் சோரம் போய்விட்டது. இப்போது இருப்பவர்கள் பெரியார் அணை போன்ற உண்மையான அரசியல் பிரச்சினைகளில் உணர்வை மீட்டெடுக்கும் உண்மையானவர்கள் மட்டுமே. கனிமொழி இடம் காசு வாங்கி கட்சி நடத்தும் சீமானை நம்பும் தொண்டர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இலங்கை தமிழர்களே இன்னொரு திருமா உருவாகிறார்.காசு பத்திரம்.மிக பெரும் சதிவலை ...

பதிவு செய்தவர்: ABCD
பதிவு செய்தது: 25 May 2010 8:26 pm
அதான் நேத்து திருப்பதி போய் வைகோவிற்கும், பாண்டியனுக்கும் மொட்டை அடிச்சிட்டு வந்தசில்ல. இனிமே என்ன சீட் கேட்டுகிட்டு?. அடுத்த தடவை திருப்பதி போய் கட்சிக்கும் ஒரு பெரிய மொட்டை போடணும் - ஜெயலலிதா

மக்கள் வழிமறித்துத் தாக்கினர ..விஜய்காந்தின் மகன் பிரபாகரன்

சென்னை: வேன் மீது மோதிய விஜய்காந்தின் மகன் பிரபாகரன் சென்ற காரை பொது மக்கள் வழிமறித்துத் தாக்கினர். தேமுதிகவினர் விரைந்து வந்து அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

தாம்பரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் ஊழியர்கள் 10 பேர் நேற்று வேலை முடிந்து வேனில் கூடுவாஞ்சேரி சென்றனர். வண்டலூர் பூங்கா அருகே ஊரப்பாக்கம் சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் வேனின் வலதுபுரத்தில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இதில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த மோகன், கிருஷ்ணகுமார், பிரியா, கோகிலா ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து வேன் டிரைவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தந்தார். அவர்கள் ரோட்டை மறித்து பைக்குகளை நிறுத்தி காத்திருந்தனர்.

அப்போது அந்த கார் அங்கு வந்தவுடன் அதை மடக்கினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அவர்கள் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தனர்.

காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த 20 வயது வாலிபர், தாக்கியவர்களிடம் சென்று, நான் தேமுதிக தலைவர்- நடிகர் விஜயகாந்ததின் மகன் பிரபாகரன். தெரியாமல் இந்த விபத்து நடந்து விட்டது என்று சமாதானப்படுத்தினார்.

ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. இதையடுத்து தனது வீட்டுக்கு பிரபாகரன் தகவல் தரவே, அப் பகுதி தேமுதிக செயலாளர் கரீமுக்கு தகவல் தரப்பட்டு அவர் கட்சியினருடன் விரைந்து வந்தார்.
அவர் வந்து சமாதானப்படுத்திய பின்னரே தாக்கியவர்கள் கலைந்து சென்றனர். பிரபாகரனையும் டிரைவரையும் காரையும் மீட்டு பத்தரமாக அனுப்பி வைத்தார் கரீம்.

இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு செய்தவர்: Muhammad Ismail H PHD
பதிவு செய்தது: 25 May 2010 8:30 pm
ஒரே ஒரு MLA பதவி இருக்கும் போதே இந்த அளவிற்கு சட்ட மீறலில் ஈடுபட்டால், நாளை CM ஆனால் நாம் கதி அதே கதி தான் போலிருக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நன்மையான விஷயங்களில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து இது போல சட்டமீறலில் ஈடுபட்டால் மதிப்பிழந்து விடுவார்கள். (Mind Voice) - போதும் அடங்கு !!! அதெல்லாம் சங்க கால தமிழர்கள் தான் நேர்மையாக இருந்தார்கள். இப்ப இருப்பது கலியுக டாஸ்மாக் தமிழர்கள் தான். இவர்களுக்கு குவார்ட்டரும், பிரியாணியும் கொடுத்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.

பதிவு செய்தவர்: vijay
பதிவு செய்தது: 25 May 2010 7:27 pm
பத்து கிலோமீட்டர் போன பிறகு பைக்இல் வந்தவர்கள் மறிச்சு நிறுத்தின பிறகு சொன்னத, இடிச்சவங்க கிட்டே மரியாதையா சொல்லி, மன்னிப்பு கேட்டிருந்தா டிரைவர் அடி வாங்காம தப்பிச்சு இருப்பார். பாவம்.

பல தமிழர்களை கே.பி சந்தித்துக் ....ரொஹான் குணரட்ன

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது.                இனிவரும் காலங்களில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்கு,         விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு முகவராக செயற்பட்ட,         கேபி (குமரன் பத்மநாதன்) உதவத் தயாராக இருப்பதாகப் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
இலங்கை மற்றும் உலகத் தமிழர்களுக்கு இடையே உறவுப் பாலம் ஒன்றை அவர் ஏற்படுத்தி வருவதாகவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,
« நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.
இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான – காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?

சுப்பிரமணிய சாமி எதிர்ப்பு! வைகோவுக்கு ராஜ்யசபா 'சீட்'

மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கக் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் வைகோவும், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாணடியனும் சீட் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சாமி,

எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரத்தில் மோசடி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. மோசடி நடக்காது என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய தேர்தல் கமிஷன் உறுதிபடக் கூறவில்லை.

எனவே, எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரத்துக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பணம் எடுக்கும்போது வங்கி ஏ.டி.எம்மில் ரசீது கிடைப்பது போல், ஓட்டளித்ததும் அதன் முழு விவரம் அடங்கிய ஆவணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயர், படத்தை பயன்படுத்த தமிழகத்தில் அரசு தடை விதிக்க வேண்டும்.

அதிமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு ராஜ்யசபா எம்.பி சீட் வழங்கக் கூடாது.

இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவராக உள்ள தயானந்த சரஸ்வதி சார்பில் எனது தலைமையில் 300 வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார்.

பதிவு செய்தவர்: irvanan
பதிவு செய்தது: 25 May 2010 8:25 pm
டேய் சுவாமி , உனக்கு அடுத்த முறை முட்டேய் எறியமடோம்,  தான் எறிவோம்

பதிவு செய்தவர்: malai malai
பதிவு செய்தது: 25 May 2010 8:15 pm
he spoiled chandralekha's life.wht he wants now???

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வாகனங்கள் குவிக்கப்படும் நிலையில் தமது வாகனங்களைத் தேடி மக்கள்



யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து குவிக்கப்படும் நிலையில் தமது வாகனங்களைத் தேடி மக்கள் அலையாய் அலைகின்றனர்.                 கடந்தவாரம் வரையில் 6250 மோட்டார் சைக்கிள்களும்           11ஆயிரம் துவிச்சக்கரவண்டிகளும் 45 ஏனைய ரக வாகனங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டு                மைதானத்திற்கு எதிர்புறமாக திருநகர்செல்லும் வீதிக்கு அருகேயுள்ள வளாகத்தில் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன.
தற்போது உள்ள வாகனங்களை விடவும் மேலும் பத்தாயிரம் மோட்டார் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இதற்கான திகதி குறித்து தெளிவாக கூறமுடியாது என வாகனங்கள் கொண்டு வந்து இறக்கப்படும் வளாகத்தில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது வாகனத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காக வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள் முகாம்களில் இருந்தும் வவுனியா யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி வந்து வாகனங்களை தேடிவருகின்றனர்.       குறித்த திகதியில் வாகனங்கள் கையளிக்கப்படும் என எத்தனையோ   திகதிகள் குறிக்கப்பட்டு அவை கடந்து போயுள்ள நிலையில் தற்போது இம்மாதம் 27ஆம்திகதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு பிள்ளைகளைத்தேடுவது போன் று தமது வாகனங்களின் படங்களுடன்      தேடுதல் நடவடிக்கையில் மக்கள் அலைந்து திரிகின்றனர்.         கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களில் அநேகமானவற்றின் பெறுமதிமிக்க பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் அன்றேல் இல்லாத நிலையிலேயே கிளிநொச்சியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வாகனங்களைத் தேடும் சிலர் கவலை வெளியிட்டனர்.                     இப்படியான நிலையில் வாகனங்களைப்     பார்த்து நொந்துபோவதைவிட தம் உயிராக கருதிய வாகனங்கள் காணாமல் இருந்திருந்தால் பரவாயில்லை என அங்கலாய்க்கும் மக்களையும் கிளிநொச்சியில் வாகனங்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் இடத்தில் காணமுடிகின்றது.
தற்போதும் வவுனியா மெனிக்பாம் முகாமில் இருக்கின்ற 46 வயதுடைய ஒருவர் கருத்து வெளியிடுகையில்,   கடந்த வாரத்தில் கிளிநொச்சிக்கு வந்து தமது வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.            அப்போது அவர் கருத்துவெளியிடுகையில்,
என்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு டரக்டரும் இருந்தன ஆனால் தற்போது எதுவுமே இல்லை இங்கே ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள போதும் என்னுடைய வாகனங்கள் எதனையும் காணமுடியவில்லை. என்னுடைய வாகனத்தை என்னால் இனங்காணமுடியும்.                பிள்ளைகளைப் போன்று பராமரித்த வாகனம் பலவருடங்களாக நான் பராமரித்த வாகனம் அதனை என்னால் இனங்காணமுடியும் ஆனால் இங்கு காணவில்லை இங்குள்ள வாகனங்களைப் பார்க்கும்போது என்னுடைய வாகனத்திற்கு என்னவாகியிருக்குமோ?    என கவலை ஏற்படுகின்றது.    நாங்கள் மாங்குளம் அம்பகாமம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனால் தொடர்ந்தும் வவுனியா மெனிக்பாம்   முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளோம் எமது பகுதியில் இன்னம் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை.
இறுதிப்போரின் போது அநேகர் தமது ஆவணங்களைத் தொலைத்துவிட்ட  நிலையில் எங்கனம் தமது வாகனங்களை மீட்பதெனத்தெரியாது அங்கலாய்க்கின்றனர்.     வாகனங்களைத் திரும்பிப்பெறுவதற்கு தமது வாகனத்தின் அனுமதிப்பத்திரம் அன்றேல் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களுடன் பொலிஸ் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கூறப்படுகின்றது.                            சிலர் தமது வாகனங்களுக்குரிய அத்தாட்சிப்பத்திரங்களை சமர்பித்து வாகனங்களை உறுதிப்படுத்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் விட்டுச்செல்வதையும் காணமுடிகின்றது.                      இந்த வாகனங்கள் உரிமையாளர்களிடம் வாகனங்கள் கையளிக்கப்படும் போது முதலிலே வழங்கப்படும் என அங்குள்ளவர்கள் சுட்டி க்காட்டினர்.
இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலிலும் ஏனைய பகுதிகளிலும்    கைவிடப்பட்டுச்செல்லப்பட்ட வாகனங்களே இவ்வாறு கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.                                  யுத்தத்திற்கு முன்பாக வன்னிப்பகுதியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரிடம் குறைந்தது இரண்டு துவிச்சக்கர வண்டிகள்     காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி வன்னியில் மொத்தமாக ஒருலட்சத்திற்கு அதிகமான துவிச்சக்கர வண்டிகள் இருந்திருக்ககூடும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனைத்தவிர வன்னியில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களும் இருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

காற்றிலிருந்து மின் பிறப்பித்தல் திட்டத்தில் எழுவைதீவில் மின்சாரம் வழங்கும்

காற்றிலிருந்து மின் பிறப்பித்தல் திட்டத்தில் எழுவைதீவில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூக நோக்குடைய பொறியியலாளர்களான அலெக்ஸ் அஞ்ஜலிற்றோ ஜே.அமலேந்திரன் கே. ரட்ணேஸ்வரன் வி.கோகுலசிங்கம் ஆகிய நால்வரும் இணைந்து காற்றிலிருந்து மின் பிறப்பித்தல் என்ற திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆய்வினை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பிரகாரம் எழுவை தீவுக்கு 100 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை வழங்குவதற்கான திட்டத்தை அமுல்படுத்த 50 மில்லியன் ரூபாய் நிதி தேவையென ஆய்வுக் குழுவினர் யாழ். அரச அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் எழுவை தீவில் ஐஸ் தொழில்சாலை தும்புத் தொழிற்சாலை மீன்படி வலைத் தொழிற்சாலை என்பன ஆரம்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதரமும் அதிகரிக்கும். அத்துடன் குறைந்த செலவில் கூடிய வருமானத் தைப் பெறக் கூடிய இத் திட்டத்தினால் இலங்கை மின்சார சபைக்கும் நன்மையளிக்கும். இதனை அமுல்படுத்த இரண்டு ஆண்டுகள் போதும். எழுவைத் தீவில் பரீசிலிக்கப்படும் இத் திட்டத்தின் சாதக நிலையைக் கொண்டு ஏனைய இடங்களிலும் இத் திட்டத்தை மேற்கொள்ள முடியும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

1981 ஆம் ஆண்டு வடக்கின் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளனர்

வடக்கின் யாழ்ப்பாணத்தில் முன்னர் சிங்கள மக்கள் வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.        தற்போது நாட்டில்     அமைதி நிலைமை நிலவுவதையடுத்து    யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் அங்கு குடியேற்றப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மின்சக்தி  அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதாவது வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ்,   முஸ்லிம்,         சிங்கள மக்கள் என அனைவரும் மீண்டும் அங்கு    மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.      மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனை அரசாங்கம் செய்துவருகின்றது.
ஆனால் இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் 1981 ஆம் ஆண்டு வடக்கின் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளனர்.    அவர்கள் அக்காலப்பகுதியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.                  தற்போது அந்த மக்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்திருக்கலாம். எனவே அவர்கள் அனைவரும் அங்கு மீண்டும் குடியேற்றப்படவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
அதாவது தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழல் வேண்டும். அதனை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் முன்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ஒன்லைன் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின் கீழ் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை திறப்பு


கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 1996ஆம் ஆண்டு யாழ் குடா நாடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு யாழ்  நகரில் முஸ்லிம்கள் வசிக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே இப்பள்ளிவாசல் காணப்பட்டது. எனினும் தற்போது யாழ் நகரில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள காரணத்தால் மீள் புனர்நிர்மானத்துடன் இப்பள்ளிவாசல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக் கிழமை யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் வைத்திய முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார். யாழ்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 1713ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் பள்ளிவாசலும் ஆகும். எதிர்வரும் வெள்ளிக் கிழமை இப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள குத்பா பேருரை அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

திங்கள், 24 மே, 2010

சற்றுத் தள்ளி இறங்கியதால் விபத்து நேரிட்டதாக விமான நிலையங்களின்

மங்களூர் விமான நிலையத்தில் ஓடு பாதையின் தொடக்கத்தில் தரை இறக்காமல் சற்றுத் தள்ளி இறங்கியதால் விபத்து நேரிட்டதாக விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு வந்த ஏயார் இந்தியா விமானம் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பு ஆகும். அது கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. மங்களூர் விமான நிலைய ஓடுபாதையின் நீளம் 2.450 மீட்டர். ஓடு பாதையின் முடிவில் உள்ள பாதுகாப்பு பகுதி 90 மீட்டர் நீளம் கொண்டது.
இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் வி. பி. அகர்வால் புதுடில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது மலை உச்சியில் அமைந்துள்ள மங்களூர் விமான நிலையத்தில் தினமும் 32 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஓடுபாதைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. அவற்றை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த பிறகே போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் நல்ல முறையில் இருந்தது. அதன் தரை இறங்கும் என்ஜின்கள் சிறப்பாக இயங்கி வந்தன. அதன் விமானிகள் விமானம் மங்களூரை அடைவதற்கு 10 கி.மீ. இருக்கும் போதே விமானத்தின் வருகை பற்றி விமான கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு 4 கி.மீ. தொலைவில் விமானம் வந்தபோது அது தரை இறங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது காற்று எதுவும் வீசவில்லை. மழையும் பெய்யவில்லை. 6 கி.மீ. தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வெளிச்சம் இருந்தது. விமானம் தரை இறங்க இந்த வெளிச்சம் போதுமானது. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. விமானிகளும் பிரச்சினை எதுவும் இருப்பதாக அபயக்குரல் கொடுக்கவில்லை.
ஆனால் விமானத்தின் சக்கரம் ஓடுபாதையின் தொடக்க முனையில் கால் பதிக்காமல் சற்றுத் தள்ளி கால் பதித்ததால் ஓடுபாதையை தாண்டியும் விமானம் ஓடி பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இவ்வாறு வி. பி. அகர்வால் கூறினார்.

விமானியின் தவறா?

ஆனால் மங்களூர் விமான நிலைய இயக்குநர் பீட்டர் ஆபிரகாம் கூறியதாவது பொதுவாக ஓடுபாதையின் எல்லைக்கு சற்று முன்பே விமானம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த விமானம் எல்லையைத் தாண்டி ஓடியுள்ளது. அதன் உதிரிப்பாகங்கள் சிதறியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும் போது விமானி தனது கணிப்பில் தவறு செய்திருக்கலாம் அல்லது விமானத்தின் பிரேக்கில் கோளாறு இருந்திருக்கலாம். இது பற்றி விசாரணைக்குப் பிறகே தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய விமானங்களை இயக்குவதில் கூடுதல் வெளிநாட்டு விமானிகள் அதிர்ச்சித் தகவல் வார்த்தைகள் புரியாததால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அவலம்
மங்களூரில் விபத்துக்குள்ளான எயார் இந்திய விமானத்தை ஓட்டி வந்தது செர்பிய நாட்டைச் சேர்ந்த விமானி என்பது தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு விமானிகள் இந்திய வான்வெளியில் ஓட்டும் போது இந்திய விமான போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகள் அவர்களுக்கு புரிவதில்லை. என்பது பலகாலமாக பேசப்பட்டு வரும் ஒரு அதிர்ச்சித் தகவலாகும்.
இந்தியாவில் விமானங்களை ஓட்டுவதற்கு பொருத்தமில்லாத சுமார் 560 பைலட்டுகள் (விமான ஓட்டிகள்) பல்வேறு இந்திய விமான நிறுவனங்களில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 5.500 பயணிகள் விமான பைலட்டுகளின் எண்ணிக்கையில் இது 10 சதவீதமாகும்.ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிக்கும் நிறுவனமாகும். இதில் சுமார் 125 வெளிநாட்டு விமானிகள், இந்தியாவில் விமானம் ஓட்டுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 250 வெளி நாட்டு விமானிகள் எயார் இந்தியாவில் பணிபுரிவதாக தெரிய வந்துள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற விமானி ஒருவர் “இந்த பொருத்தமில்லாத விமான பைலட்டுகளை நீக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் இந்தியாவில் பணிபுரியும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். முக்கியமாக தகவல் தொடர்பில் பல பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்படுகின்றன என்று தெரிவித்தார்.
இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது வெளிநாட்டு பைலட்டுகளை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இங்கு போதுமான பயிற்சி பெற்ற பைலட்டுகள் இருப்பதாகவும் அவர்களை பணியில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் பல தடவை இத்தகைய வெளிநாட்டு விமானிகளை நீக்க அரசை வலியுறுத்தியும் விமான நிறுவனங்களின் நெருக்கடியால் அரசு அந்த நடவடிக்கையை எடுப்பதில்லை. இங்குள்ள விமானிகளை பணியில் சேர்ப்பதையும் தாமதப்படுத்துகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

5வயதுக்கு உட்பட்ட ் 26பேரிடம் வர்களது விபரங்கள் எதனையும் பெற முடியாதுள்ளதாகவும்

வன்னியில் இறுதிக் கட்டப்போரின் பொழுது இடம்பெயர்ந்துவந்து தற்போது வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களை அடையாளம்காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தின் பொழுது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தவறவிடப்பட்ட அல்லது சிகிச்கைளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பெற்றோர் உறவினர்களை இழந்த சிறுவர்கள் தற்பொழுது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தினால் வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை அடையாளம்காண உதவுமாறு பெற்றோர்கள் உறவினர்களை வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சிறுவர்கள் பலர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் நிலையில் 5வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 26பேரிடம் அவர்களது விபரங்கள் எதனையும் பெற முடியாதுள்ளதாகவும், இதனால் அவர்களது எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைகளை அடையாளம்கண்டு அவர்களது பெற்றோர் தொடர்பான தகவல்களையும் வழங்கும் பட்சத்தில் அச்சிறுவர்களுக்கான எதிர்கால நடவடிக்கைகளை, மேற்கொள்ள இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர்கள், குழந்தைகளை தவறவிட்ட பெற்றோர் அல்லது பெற்றோர் இறந்த நிலையில் குழந்தைகளை தவறவி;ட்ட உறவினர்கள், வவுனியா மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

மூன்று பிரிவாக செயல்படுகின்றனர். ருத்திரகுமார் ,நெடியவன் தலைமையில் நார்வேயை

நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.   அவர்கள் மூன்று பிரிவாக செயல் பட்டு வருகின்றனர்’ என,  அமைச்சர் கருணா கூறியுள்ளார்.
இலங்கை புனரமைப்புத்துறை இணை அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவருமான கருணா அம்மன் கூறியதாவது: இலங்கைக்கு வெளியில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிலர், நாடு கடந்த அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.                       இவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது.
இவர்கள் மூன்று பிரிவாக செயல்படுகின்றனர்.      ருத்திரகுமார் தலைமையில் அமெரிக்காவை மையமாக கொண்டு ஒரு பிரிவும், நெடியவன் தலைமையில் நார்வேயை மையமாக கொண்டு ஒரு பிரிவும், லண்டனை மையமாக கொண்டு ஒரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
இலங்கையில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல், இவர்களால் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது.   விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முன்னர்                  நடைமுறைக்கு ஒவ்வாத தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.
இத்திட்டம் இறுதி வரை நிறைவேறவில்லை. நாடு கடந்த அரசு என்ற தற்போதையை திட்டமும் இதுபோல் தான் இருக்கும். இந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பு இல்லை.                   இவ்வாறு கருணா கூறினார்.