வெள்ளி, 2 அக்டோபர், 2026

திலீபன் சிலைக்கும் ஒரு தகுதி வேண்டும்

 Vijaya Baskaran  :  சிலைக்கும் ஒரு தகுதி வேண்டும்
ஊருக்கு நூறு பேர். இந்திய நக்சலைட் பற்றி ஜெயகாந்தன் எழுதிய நாவல்.ஒருவரை பயிற்சிக்காக வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்கள். அனைவர் கையிலும் துப்பாக்கிகள். அதைப் பார்த்து நீங்கள் என்னைக் கடத்திச் செல்வதுபோல உணர்கிறேன் என்று கூற அவர்களில் ஒருவன் தனது ஆயுத்த்தை அவரிடம் கொடுக்கிறான். இப்போது எப்படி உணருகிறீர்கள் என கேட்க நான் உங்களில் ஒருவராக உணருகிறேன் என பதிலளிக்கிறார்.
ஒரு போராளி என்பவன் மக்களுக்கானவன். மக்களுக்காக போராடுபவன். அவனைப் பார்த்து மக்கள் பயந்தால் அவன் போராளியே அல்ல.இலங்கையில் நடைபெற்ற போராட்டம் இன முறுகலின் அடிப்படையில் ஏற்பட்டதால் மொழி அடிப்படையில் தமிழ் பேசும் மக்களிடம் ஆதரவு இருந்தது. ஆனால் மக்கள் ஒருபோதும் முழுமையாக நம்பவில்லை.


ஆயுத குழுக்களில் புலிகளைத் தவிர ஏனைய அமைப்புகள் ஓரளவுக்கு மக்களுக்குப் பயந்தே இயங்கினார்கள். இராணுவம் கைது செய்தவன் உயிரோடு திரும்பலாம் அல்லது சிறையிலே உயிர் வாழலாம். ஆனால் புலிகள் கைது செய்த ஒருவன் உயிரோடு திரும்பினால் அதிசயமே. அதுதான் புலிகள்.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை போராட்டம் என்றால் என்னவென்றே புரியாத மந்தைக் கூட்டம்.ஒரு போராளி என்பவன் துணிந்த கொல்லும் ஓர்மம் கொண்டவனாக இருக்கவேண்டும் என்பதே எழுதப்படாத வரைவிலக்கணம்.தன் இனம் அழிந்தாலும் கவலை இல்லை. எதிரிகள் சாகவேண்டும். அதில் ஒரு ஆனந்தம். இப்பேர்பட்ட சமூகத்தில் புலிகள் கதாநாயகர்களாக வந்ததில் அதிசயம் இல்லை.
புலிகள் தாக்குதல்கள் நடாத்தியபோது இறந்த இராணுவத்தின் உடல்களை மட்டுமே கணக்கெடுத்து கொண்டாடியது தமிழச் சமூகம். அதன் விளைவாக கொல்லப்பட்ட தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. புலிகளும் கவலைப்பட்டதும் இல்லை.சனம் செத்தால்தான் உலக நாடுகள் கவனம் திரும்பும் என்ற முட்டாள்தனமான சிந்தனை புலிகளுடையது.
புலிகள் ஒரு மக்கள் இயக்கமோ போராட்ட இயக்கமோ அல்ல. அப்பாவிகளான பொதுமக்களை குவியலாக கொன்ற அமைப்பு ஒரு போராட்ட அமைப்பு அல்ல.மனித இழப்புகளைப் பற்றி கவலைப்படாத அமைப்பு ஒரு விடுதலை இயக்கமா?
சாதாரண மக்களை துரோகி பட்டம் கொடுத்து கொல்லத் தொடங்கியவர்கள் கென் பண்ணை டொலர் பண்ணைகளில் அப்பாவிகளை கொன்று கொலை வெறி ஆட்டத்தை தொடங்கினார்கள்.சகோதரப் படுகொலைகளை நடாத்தி உயிர்களோடு நெருப்பிலே வீசியவர்கள் போராளிகளா? மனிதர்களா?
வீட்டுக்குள்ளே கைது செய்யப்பட்டவர்களை அடைத்து சொந்த தமிழர்களையே குண்டு வைத்து கொன்றவர்கள் போராளிகளா?ஒரு சக இனத்தையே துப்பாக்கி முனையில் வெளியேற்றிய கொடியவர்கள் எந்த வகையில் போராளிகளாக அழைக்கமுடியும்?முஸ்லிம் சமூகத்தையே எதிரிகளாக நினைத்து பிஞ்சுக் குழந்தைகளேயே ஈவிரக்கமின்றி கொன்றவர்கள் போராளிகளா? தியாகிகளா?
ஓயாத அலைகள் புலிகள் என்றார்கள். உண்மைதான் அலை எப்போதும் கரைகளை அரித்துக்கொண்டே இருக்கும். அதை உணராத கூட்டம் ரசித்துக்கொண்டே இருக்கும். புலிகள் இருப்பைக் காட்ட ஒரே வழி ஓயாத கொலைகள்.அதை ரசிப்பதில் தமிழல்களுக்கு இன்பம்.
இந்தக் கொலைகார கும்பலைச் சேர்தவனே திலீபன். இவன் கொலைகாரன். இவனால் பல உயிர்கள் அழிக்கப்பட்டன. குழந்தைகளையே கொன்று குவித்த கொலை வெறியன்.இவனுக்கு பொது வெளியில் சிலை வைத்து வழிபாடு செய்வது அவமானம்.
மதிவதனி உண்ணாவிரதம் இருந்தபோது தடுத்தவர்களில் திலீபனின் பங்கும் உண்டு. அதை தடுத்த இவன் ஏன் உண்ணாவிரதம் இருந்தான்? அவனை ஏன் சாகவிட்டார்கள்? மதிவதனியை காப்பாற்றியவர்கள் திலீபனை காப்பாற்றாமல் விட்டது ஏன்?
உண்ணாவிரதம் இருந்து இறந்த காரணத்தால் போற்ற வேண்டுமா? அப்படியானால் அவனால் கொல்லப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்? யாரிடம் நியாயம் கேட்பது? திலீபனுக்காக கொடி பிடிப்பவர்கள் பதில் தருவார்களா?அவன் செய்த கொலைகளை இல்லை என மறுப்பார்களா?
சிலை வைத்து கொண்டாட திலீபன் போராளியல்ல. மக்களுக்காக வாழ்ந்தவன் அல்ல.அவன் சார்ந்த அமைப்புக்கூட தகுதியானது அல்ல.அவனைவிட உள்ளூர் கொலைகார்ர்கள் மேலானவர்கள். திலீபன் சிலை தவறான முன்னுதாரணம். எனவே அகற்றப்பட்டது சரியானதே. அவன் தகுதியானவன் அல்ல

கருத்துகள் இல்லை: