Mohamed Abbas Abs : TTF வாசன் வளர்ச்சி கண்டு பொறாமைல அவன பத்தியே பேசிட்டு இருக்கேன் ன்னு தோணுதா உங்களுக்கு...?
அது தான் இல்ல TTF வாசன் மாதிரி யூடியூப் வழியா சம்பாதிக்கும் எத்தனயோ நபர்கள் இருக்காங்க,சொல்லப்போனா இவன விட அதிக Followers ஓட லாம் இருக்காங்க
அப்படி இருக்கப்போ இவன மட்டும் Target பண்ண என்ன காரணம் னா....வேற ஒன்னுமே இல்ல....இவன் Toxic to the core
இன்னைக்கு அய்யப்பன் ராமசாமி உடனான Interview ல Road Accidents 80% குடியாலயும், ஆடு மாடு குறுக்க வர்றதாலயும் தானே நடக்குது..
.20% தான Overspeed ஆல நடக்குது...அரசாங்கம் 80% பிரச்சினைய தான முதல்ல சரி பண்ணனும் ன்னு கூலா சொல்றான் ...
சமீபத்துல எவ்வளவோ Overspeed Accidents பார்த்தாச்சு... சின்ன பசங்க அவ்வளவு பேரு இவனால Inspire ஆகி சுத்துறாய்ங்க.... இவனுக்கு எத பத்தியும் கவல இல்ல...
சமீபத்துல கூட ஒரு வீடியோ ல " நாம ஸ்பீடா போறது தெரிஞ்சா தான பிரச்சினை ஆகுது,Kmph to Mph மாத்திட்டு ஓட்டுவோம்
அப்போ யாருக்கும் எவ்ளோ கிலோமீட்டர் வேகத்துல போறோம் ன்னு தெரியாது ல" ன்னு சொல்லி Speedometer அ மாத்தி 70Mph வர போறான் 70mph = 113 kmph....
அதே நாரவாய் நாராயணன் Speed Thrills,but kills ன்னு ரெண்டு நாள் முன்னாடி ஊடக பேட்டி ல சொல்றான்...
ஆக இவனுக்கு தன்னை மாற்றிக்கனும் ன்னு துளி கூட சிந்தனை இல்ல...
இந்த விசயங்கள் பத்திலாம் அய்யப்பன் பேசியிருக்கலாம்....
சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு பையன் பக்கத்து வீட்ல பணம் திருடி பெரிய bike வாங்கி மாட்டிகிட்ட செய்தி,
Overspeed ல ஒரு பையன் போய் கட்டுப்பாடு இழந்து சாலையோர தள்ளு வண்டி கடைல மோதி அங்க பலகாரம் சுடும் எண்ணெய் லாம் மேல கொட்டி கடை நடத்தியவரும்,இந்த பையனும் கவலைக்கிடம் ன்னு ஒரு செய்தி....
ரொம்ப தடவி கொடுக்குற மாதிரி Soft ஆன இன்டர்வியூ ஆ தான் இது இருந்துச்சு,
இதுக்கே பதில் சொல்ல சிரமப்பட்டு எந்திரிச்சு போயிட்டான்... இன்னும் வச்சு பொலந்துருக்கலாம் Miss பண்ணிட்டாப்ள...
இப்போ கிடைத்திருக்கும் இந்த புகழ் வெளிச்சத்தை கொண்டு பெரிய நடிகன் ஆகிடலாம் ன்னு கூட அவன்ட சில கணக்குகள் இருக்கு....
முழுக்க முழுக்க தங்கம் தங்கம் ன்னு வாயிலேயே வடை சுட்டு, தன்னை ஆதார்சமா நினைக்கும் பெரும் கூட்டத்தை தனது லாபத்திற்காக சீரழிக்கும் அயோக்கியன் இவன்...
அன்புடன் அப்பாஸி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக