Vineshbabu R : ராஜராஜ சோழரின் சோழதேசத்தை முன் நின்று இயக்கிய முதன் மந்திரி அநிருத்த பிரம்மராயர் - பிராமணர்
ராஜராஜசோழர் சோழ தேசத்தை ஆள முடிசூட்டி வைக்க ( Start camera சொல்ல) காசுமீரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர் -பிராமணர்
ஆதித்த கரிகால சோழனை கொன்று மதுராந்தகச் சோழரை அரியணை ஏற்றி சோழமண்ணை இயக்கிய சோமன், ரவிதாஸன் போன்றோரும் பாண்டிநாட்டு -பிராமணர்
பல்லாண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வனை புதினமாக எழுதி சோழத்தை நோக்கி தமிழ் வாசகர்களை இயக்கிய எழுத்தாளர் அமரர் கல்கி - பிராமணர்
அதை திரைக்காவியமாக்கி பெரும்பான்மை மக்களிடம் சோழத்தை கொண்டு சேர்ப்பவரும் ரோஜா படத்தை இயக்கிய இயக்குநர் மணிரத்னம் - பிராமணர்
ஆமாம்
முதன்மந்திரிகளாகவோ,
முடிசூட்டுபவர்களாகவோ,
கொலை செய்பவர்களாகவோ,
பின் நின்று ஆள்பவர்களாகவோ,
எழுத்தாளர்களாகவோ,
திரை இயக்குநர்களாகவோ,
காலம் தோறும் பிராமணீயம்
நம்மை தொடர்ந்து இயக்குகிறது.
மன்னனாகவோ ,
மக்களாகவோ,
வாசகர்களாகவோ,
ரசிகர்களாகவோ, விமர்சகர்களாவோ , எதிர்ப்பவர்களாகவோ, ஆதரிப்பவர்களாகவோ,
நாமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே தான் இருக்கிறோம் சிறிதும் கூச்சமின்றி.
சோழதேசத்து நாயகர்கள் எல்லோரும் செக்கச்சிவந்தவர்களாகவோ
இருக்கின்றனர் .
பூணூல் போட்ட பாலமுருகன் போல.
கை தட்டவும், கை கூப்பவும் தான்
கறுப்பர் கூட்டம் என்றென்றும் போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக