மின்னம்பலம் :தமிழ் ராக்கர்ஸில் இவ்வாண்டு அதிக அளவில் டவுண்லோடு செய்யப்பட்டதெலுங்கு படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சினிமாவுக்கு மிகப்பெரிய சிக்கலைக் கொடுத்துவரும் வலைதளங்களில் ஒன்று தமிழ் ராக்கர்ஸ். புதுப்படங்கள் இந்தத் தளத்திலேயே திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதால் தியேட்டருக்குச் செல்லாமல் மக்கள் இதிலேயே டவுண்லோடு செய்து பார்த்து வருகிறார்கள். இதனால் சினிமாத் துறை பல நஷ்டங்களைச் சந்தித்து வருகிறது. இதை ஒழிக்க சினிமா துறையினர் சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை. காரணம், சில சினிமாக்காரர்கள்தான் இதுபோன்ற தளங்களுக்கு, பின்னால் இருந்து உதவுகிறார்கள் எனும் சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்தாண்டு தமிழ் ராக்கர்ஸ் டோரண்ட் மூலம் டவுண்லோடு செய்யப்பட்ட டாப் லிஸ்ட் தெலுங்கு படங்களின் பட்டியலை ஜெர்மனியைச் சேர்ந்த டெக்ஸிபிகோ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பாகமதி -13,06,53,500 டவுண்லோடுகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், ரங்கஸ்தலம் - 11,00,24,000, பாரத் அனு நேனு - 1.613,404, மகாநடி - 14,99,064, நா பேரு சூர்யா - 12,60,708, தோழி பிரேமா - 10,07,922, சோலோ - 8,42,475, ஜெய் சிம்ஹா - 8,10,964 ஆகிய படங்கள் உள்ளன.
டெக்ஸிபிகோ நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற இணைய திருட்டுகளைக் கண்காணித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக