எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார்.
இந்தியாவிலிருந்தும், தாய்லாந்திலிருந்தும் 200 சமையல்காரர்கள் இந்த விழாவிற்காக ஸ்பெயினுக்கு வரவழைக்கப்பட்டனர். ஆறு அடுக்கு கொண்ட 60 கிலோ எடையுடைய திருமண கேக் இந்தத் தம்பதியரால் வெட்டப்பட்டது. திருமண நிகழ்ச்சிகளில் ஒளி அலங்காரங்கள் பிரமிப்பூட்டும் விதமாக இருந்தன.
திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் வானத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் படம்
பிடிக்கப்பட்டனவாம். இந்தத் திருமணத்திற்கான மொத்த செலவுகள் 60 மில்லியன்
யூரோக்களைத் தாண்டியுள்ளதாக ஸ்பெயின் நாட்டுப் பத்திரிகைகள்
தெரிவித்துள்ளன.
இதன் இந்திய மதிப்பு சுமார் 512 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஸ்பெயின்
பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்யப் பட்டால், ஃபோர்ப்ஸ்
கணக்கீட்டின்படி உலகளவில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணங்களில் இது இரண்டாவது
இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்கு முன்னர், கடந்த 1981ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபியின் ஆட்சியாளரான முகமது பின் சயித் அல்நஹ்யான்-இளவரசி சலாமா திருமணமே 76.25 மில்லியன் யூரோ செலவிடப்பட்டு முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
அதே ஆண்டு நடைபெற்ற வேல்ஸ் இளவரசர் திருமணத்திற்கு 53 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக