சனி, 11 ஆகஸ்ட், 2012

மமதா பானர்ஜியை கேள்வி கேட்ட விவசாயிக்கு சிறை

பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜியை எதிர்த்து கேள்வி கேட்ட விவசாயிக்கு சிறைவாசம்

கொல்கத்தா: தம்மை எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களையெல்லாம் மாவோயிஸ்டுகளாக - மார்க்சிஸ்டுகளாக பார்க்கும் மனநிலை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு அதிகமாகிவிட்டது போல...
மாவோயிஸ்டுகள் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்த மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் பேல்பஹாரி என்ற இடத்தில் கடந்த புதன்கிழமையன்று மமதா பானர்ஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி சும்மா இருக்கவில்லை. அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமானால் கேளுங்கள் என்று கூறியிருந்திருக்கிறார்.

மாணவி ஆண் நண்பரால் அடித்துக் கொலை! சக மாணவர்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்!

 Hisar: A day after he killed the girl he stalked, 19-year-old Chetan Sheoran appeared remorseless. The accused, a BTech student in Pune, was taken in custody after he stabbed Varsha Yadav, a 19-year-old engineering student, to death at GJUST campus in Hisar when she came out of her hostel to go home for holidays.
ஹரியானா மாநிலம் ஹிசரில் உள்ள ஜிஜஸ்ட் கல்லூரி வளாகத்தில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவி வர்ஷா யாதவ், அவளது ஆண் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதால் கொலை செய்தேன் என்று இந்த படுபாதக செயலைச் செய்த 19 வயதாகும் பிடெக் மாணவன் சேட்டன் ஷியோரன் கூறியுள்ளான். மேலும், தான் கொலை செய்ததை மறுக்கவில்லை என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளான். கொலை நடந்த இடத்தில் ஏராளமான மாணவர்கள் இருந்துள்ளனர் என்றும், ஒருவர் கூட அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ஓடும் காரிலேயே 10 பேர் பலாத்காரம்: பெண் பரபரப்பு புகார்

ஆண் நண்பனோடு சேர்ந்து 10 பேர் வரை ஓடும் காரிலேயே பலாத்காரம்: பெண் பரபரப்பு புகார் டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பனைப் பார்க்கச் சென்றபோது, அவன் தன்னை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், அவனோடு மேலும் 10 பேர் வரை ஓடும் காரிலேயே தன்னை பலாத்காரம் செய்துவிட்டு டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் தன்னை வீசிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த குற்றத்தில் தொடர்புடைய ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் 
ஒரு புறம் பெண் சிசுக்களை கொலை செய்கிறார்கள் மறுபுறம் பெண் என்றால் பேயாய் அலைகிறார்கள் மன நோய் பிடித்த maமக்கள் கூட்டம் நல்ல கலாசாரம்

குறைந்து வரும் பெண்குழந்தைகள் விகிதம்!

 Birth Ratio Situation Goes From Bad கருவிலேயே கொல்லும் கொடூரம்... ஆண் - பெண் குழந்தைகளுக்கு இடையேயான விகிதாச்சார மாறுபாடு அதிகரித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 2011 ம் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இருந்ததை விட 2012 ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மத்தியபிரதேசம், பீகார், உத்தரகண்ட், ஒடிஸா மாநிலங்களில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 2011 ம் ஆண்டு 1000 ஆண்குழந்தைகளுக்கு 912 பெண் குழந்தைகள் இருந்த நிலை மாறி 2012 ம் ஆண்டு 904 ஆக குறைந்துள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 886ல் இருந்து 866 ஆகாவும், பீகாரில் 933 ல் இருந்து 919 ஆகாவும், ஒடிஸாவில் 934 ல் இருந்து 905 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல் அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

அமெரிக்க கார் விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 5 பேர் பலி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில், ஐதராபாத்தை சேர்ந்த 5 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பரிதாபமாக இறந்தனர்.ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் OKLAHOMA CITY -
All ramps have reopened after a fiery crash near the interchange of Interstate 40 and Interstate 35 shut down traffic for several hours.
Around 1 a.m. Friday, a Camaro carrying five people was traveling southbound on Interstate 235. As the car tried to merge onto the ramp toward southbound I-35, the driver lost control. The Camaro flew off the road and onto the southbound ramp from I-40 to I-35.
ஜஸ்வந்த் ரெட்டி சுப்பையாகரி, பனிந்தரா கடே, அனுராக் அந்ததி, ஸ்ரீனிவாஸ் ரவி, வெங்கட். இவர்கள் 5 பேரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வந்தனர். அனைவரும் நேற்று காரில் ஓக்லஹாமா நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது டிராக்டர் டிரெய்லர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
The car slammed into the back of a semi-truck, and went under the trailer. The top of the car was sheared off. The car then spun off the road and burst into flames. All five people inside the Camaro were ejected from the vehicle and died at the scene. The driver of the semi was not hurt.

சுசி ஈமு நிறுவனம் மீது 2 ஆயிரம் பேர் புகார்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஈரோடு: சுசி ஈமு நிறுவனம் மீது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்களை அளித்துள்ளனர். நிறுவன உரிமையாளர் குருசாமியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக செயல்பட்டு வந்த சுசி ஈமு நிறுவனத்தில்  12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சுமார் ரூ.350 கோடி முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு கடந்த மாதம் வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, ஈமு கோழிகளுக்கான தீவனத்தொகையை இந்நிறுவனம் வழங்கவில்லை. திடீரென இந்நிறுவனம் மூடப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தை தொடர்ந்து முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டுவருகின்றனர்.

முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை வைத்து சத்தியமங்கலம் தாளவாடி, ஆசனூரில் சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் இந்நிறுவனம் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏன் போலீஸ் வேனில் குண்டு வீசி கைதி கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுச்சேரி: புதுவையில் கைதி ஜெகனை போலீஸ் வேனில் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் 2004ம் ஆண்டு ரவுடி ஜெயக்குமாரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் தேங்காய்திட்டு ரவுடி ஜெகன் கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 26ம்தேதி காரைக்கால் சிறையில் இருந்தபடி தொழிலதிபர் நரேஷ் பட்டேலிடம் பணம் கேட்டு ஜெகன் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து ஜெகனை கைது செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக காரைக்கால் சிறையில் உள்ள ஜெகனை உருளையன்பேட்டை போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று மாலை காரைக்கால் சிறைக்கு போலீஸ் வேனில் ஜெகனை அழைத்து சென்றனர். உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், காவலர்கள் நாகராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 போலீசார் கைதி ஜெகனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி - கடலூர் சாலை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் வேன் சென்றபோது கார், இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் திடீரென வேனை வழிமறித்து சரமாரி வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஜெகன் படுகாயமடைந்து இறந்தார். 5 போலீசாரும் காயமடைந்தனர்.

சிறுவன் பலி ஜேப்பியார் மீண்டும் கைது? கல்லூரி கழிவுநீர் தொட்டியில்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேப்பியார் மற்றுமொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது 
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜேப்பியார் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த கல்லூரிக்கு ஏஐசிடிஇ அனுமதி உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளும் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான பூந்தமல்லி பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரியிலும் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள பெரிய கழிவுநீர் தொட்டி ஒன்று திறந்து கிடந்தது. கட்டிட வேலை செய்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாம்ராய் (எ) ராம்ஜி என்பவரின் மகன் சஞ்சய் தேஷ்முக் (7) அந்த தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தான்.

தங்க மீன்கள் படத்தைப் பார்த்த போது அழுத கெளதம் மேனன்

தங்க மீன்கள் என்ற படத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் கண்ணீ விட்டு அழுதாராம் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன். அந்த அளவுக்கு அவரை அப்படம் வெகுவாக பாதித்து விட்டதாம்.
சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவதுதான் வழக்கம். ஆனால் சில படங்களைப் பார்த்து சினிமாக்காரர்களே நெகிழ்ந்து போய் விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு படமாக உருவாகியிருக்கிறது தங்க மீன்கள்.
இயக்குநர் ராம் நடித்து, இயக்கியுள்ள படம்தான் தங்க மீன்கள். கற்றது தமிழ் படத்தின் இயக்குநர்தான் ராம். அப்படம் வர்த்தக ரீதியில் வெகுவாகப் போகாவிட்டாலும் கூட நல்ல படம் என்ற பாராட்டைப் பெற்றது. கதைக் கரு, கதையைச் சொன்ன விதம், தைரியம் ஆகியவற்றுக்காகப் பாராட்டப்பட்டார் ராம்.

நித்தி-ரஞ்சிதா நேபாளத்தில், ‘பொறியில் சிக்கிய எலிகள்’ ஆகியது இப்படிதான்!

 தாய்லாந்து உபசரிப்பில் மெய்மறந்த மதுரை  மூத்த ஆதீனம்
Viru News
டில்லி ஏர்போர்ட்டில் பாஸ்போட்கள் சிக்கி விவகாரமான நிலையில், பொறியில் அகப்பட்ட எலியாக தவிக்கிறார் நம்ம நித்தி சுவாமிகள். டில்லி ஏர்போர்ட் விவகாரம், அவரது வெளிநாட்டு எஸ்கேப் பிளானை கெடுத்து விட்டதே அதற்கு காரணம்.
நித்தி-ரஞ்சிதாவும், 30 சீடர்களும் வெளிநாடு செல்லும் திட்டம் பாணால் ஆனது எப்படி? எமக்கு கிடைத்த தகவல்களை வெளியிட முயலும் போதெல்லாம், மாறி மாறி தகவல்களில் ஏதாவது ஒரு ஒரு குழப்பம் வந்து கொண்டிருந்தது. எமக்கு கிடைத்த தகவல்களை உறுதி செய்துகொள்ள முயன்றால், தலைகீழாக வேறு தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.
ஒருவழியாக… இப்போது எல்லாமே, உரிய இடங்களில் போய் பொருந்தியுள்ளன.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

?? ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான்

நாத்திகம்-இராமசாமி________________________
நாத்திகம் இராமசாமி
பேய் பிடிப்பது – பேய் ஓட்டுவது, மந்திரம் போடுவது – செய்வினை வைப்பது – செய்வினை எடுப்பது, தகடு ஓதி வைப்பது – தாயத்து ஓதிக் கட்டுவது, சோதிடம் சொல்லுவது – வாஸ்து பார்ப்பது, பாம்பு கடி – தேள் கடி – பூரான் கடி போன்றவைகளுக்கும், வைசூரி – காலரா – முடக்குவாதம் – சிக்கன் குனியா போன்ற கொடிய நோய்களுக்கும் வேப்பிலை அடித்து, மந்திரம் ஓதித் தண்ணீர் குடிப்பதும் பார்ப்பன இந்து மதத்தின் நீண்ட காலப் பழக்கம் – ஜதீகம் என்று சொல்லி, நடத்திக் கொண்டிருக்கிறார்கள.
இவைகள் எல்லாமே பொய் – மோசடி – ஏமாற்று என்று பச்சையாகத் தெரிந்திருந்தும் கூட, ‘பழக்க வாசனை’ யால் ‘மூளைச்சலவை’ செய்யப் பட்டவர்கள், மனநோயாளிகளாகி, கைப்பணம் இழந்து, தங்கள் எதிர்காலத்தையும் இழந்து வருகிறார்கள்.
அது போன்ற மாபெரும் மோசடியாகக் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான், மலடி பிள்ளை பெறுவாள்…” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, கிறிஸ்துவ மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிக் கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள்!
இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன்–சி. லாசரஸ், சாம் ஜெபத்துரை, பெருங்குடி மோகன் என பலரும் இருக்கின்றனர்.

Air Hostess கீத்திகா மரணம் Ex உள்துறை அமைச்சர் கோபால் கோயல் காண்டாவை கைது பிடியாணை


ஏர்-ஹோஸ்டஸ் கீத்திகா மரண விசாரணை: லேப்-டாப் மர்ம இ-மெயில்கள்!

Viru News கீத்திகா. அதீதமாக உணர்ச்சி வசப்படும் பெண் என்கிறார் காண்டாவின் வக்கீல்.
விமான பணிப்பெண் கீ்த்திகா சர்மா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைம‌றைவாகி உள்ள ஹரியானா முன்னாள் உள்துறை அமைச்சர் கோபால் கோயல் காண்டாவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடிப் பிடிப்பதற்காக போலீஸ் 6 விசேட குழுக்களை அமைத்துள்ளது.
முன்னாள்  அமைச்சர் காண்டா மீது, தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டு, மற்றும் விசாரணைக்கு ஆஜராக மறுத்த குற்றச்சாட்டு ஆகியவை பதிவாகியுள்ளன.
காண்டாவின் வீடு, அலுவலகம் ஆகியவை சோதனைக்கு உள்ளாகியுள்ளன. அத்துடன் அவர் சமீபத்தில் ஆரம்பித்த எம்.டி.கே. இன்டர்நேஷனல் ஸ்கூல், மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டல்கள் சோதனையிடப்பட்டுள்ளன. அவரது தற்போதைய மறைவிடம் குறித்த தடயங்கள் ஏதும், இந்த சோதனைகளில் சிக்கவில்லை.
காண்டாவின் மீதான குற்றச்சாட்டு, அவரது ராஜினாமா, தற்போது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை ஆகியவை, ஹரியானா அரசியலில் பெரும் புயலை கிளப்பி விட்டுள்ளன. காண்டா ராஜினாமா செய்து விட்டாலும், அவரை உள்துறை அமைச்சராக வைத்திருந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன.

ராம்தேவ் உண்ணாவிரதம் ஜோராக 24 மணி நேரமும் உணவு விநியோகம்

 Ramdev Goes Out Followers At Ramlila Maidan ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெகு ஜோராக 24 மணி நேரமும் உணவு விநியோகம்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காமல் போனநிலையில் டெல்லியில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் யோகா குரு ராம்தேவ், "ஸ்கெட்ச்" போட்டு வெற்றிகரமாக கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும், வலுவான லோக்பால் மசோதா தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் 3 நாட்களில் நிறைவேறுமா என்பதைவிட உண்ணாவிரதப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளில்தான் ராம்தேவ் குழுவினர் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் நுழையும் இடத்தில் பதிவு, உணவு- தண்ணீர் ஏற்பாடுகள் பற்றிய தகவலுக்கு தனி அரங்கு என ஏகப்பட்ட அரங்குகளை திறந்து வைத்துள்ளனர். மேலும் 24 மணி நேரமும் பக்காவாக சூடான உணவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்போருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லா கவனிக்கும் கிரானைட் கொள்ளையர்

 Two Buildings Major Granite Company Sealed கிரானைட் கொள்ளையர்களும் அரசியல்வாதிகளும்.. பாவம், இவுங்க ரொம்ப நல்லவங்க!

மதுரை & கிருஷ்ணகிரி: மதுரை மாவட்டத்தைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரானைட் குவாரிகளில் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் nநல்லா
தமிழகத்தில் கிரானைட் குவாரிகளில் பயங்கர மோசடிகள் நடப்பதும், அதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணையாக இருப்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இவர்கள் மீது திமுக அரசோ, அதிமுக அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. காரணம், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை இந்த கிரானைட் கும்பல் நல்ல முறையில் கவனித்துவிடுவதே.

பாலாவின் ’பரதேசி’! எரியும் தணல்’ என்ற மலையாள நாவலைத் தழுவி

அவன்-இவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் ’பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா,தன்ஷிகா,வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எரியும் தணல்’ என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்படும் பரதேசி. தமிழ்நாட்டின் மலைக்கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த பரதேசி, கேரளாவின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மூணார், குற்றாலம் போன்ற பகுதிகளில் கடைசிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது டப்பிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது பரதேசி யூனிட். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா அரவான் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்ஷிகாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் போனதால் தன்ஷிகாவிற்கு எமாற்றமே.ஆனாலும்

சாதனைக்கு பின்னணியில் வேதனை சீனாக்காரன் சீக்ரெட்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபீஜிங்: பண பலம், படை பலம், அதிகாரம் என உலகத்துக்கே ‘அண்ணன்’ அமெரிக்கா. விளையாட்டில் அதிலும் குறிப்பாக ஒலிம்பிக்கில் அவருக்கும் ‘பெரியண்ணன்’ சீனாதான். வல்லரசுகள்கூட பம்மிப் பம்மி முன்னேறும் சூழ்நிலையில், துவக்கத்தில் இருந்தே பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. மாற்றான்தோட்ட மல்லிகையான சீனாவுக்கு முதலில் வாழ்த்துக்கள். அதே நேரம், இந்த சாதனைக்காக சீனா எடுக்கும் அசுர முயற்சி வியப்பைவிட அதிர்ச்சியையே தருகிறது. 5, 6 வயதிலேயே விளையாட்டு பயிற்சியை ஆரம்பித்து விடுகின்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற உடல் ரப்பர் போல வளைய வேண்டும். அதற்காக,  பிஞ்சுக் குழந்தையின் முழங்காலில் பயிற்சியாளர் ஏறி நிற்க, வலி பொறுக்க முடியாமல் அவள் அலறுகிறாள். நானின் நகரில் உள்ள பயிற்சிக் கூடத்தில்தான் இக்காட்சி. பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளை பாடாய் படுத்தும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றன.

Sharuk khanக்கு நோட்டீஸ்! குழந்தைகள் முன்னிலையில் வன்முறை!

மும்பை பாலிவுட் நடிகரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாரூக்கானுக்கு குழந்தைகள் உரிமை அமைப்பு ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையில் வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்றபோது தன்னை தடுக்க வந்த பாதுகாவலரை குழந்தைகள் முன்னிலையில் வன்முறை தூண்டும் விதத்திலும், கொச்சையான வார்த்தையிலும் திட்டியிருக்கிறார். இதை கண்டித்து குழந்தைகள் உரிமை சட்டம் 2005 பிரிவு 14(1)ன்கீழ் வரும் 16-ம் தேதியன்று ஷாரூக்கான் ஆஜராகுமாறு குழந்தைகள் உரிமை அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

எம்ஜியாரின் Goon ஜேப்பியார் கைது காவல்துறை சாதனை

ஜேப்பியார் சிக்கினார்: ‘சிகிச்சை’ என்று படுத்தவர் இப்போது வேலூர் சிறையில்!

Viru News
“கைது செய்யப்படவே மாட்டார். இவரையெல்லாம் தொடக்கூடிய ‘தில்’ இங்கே யாருக்கும் கிடையாது” என்று கூறப்பட்ட அரசியல் செல்வாக்கு தொழிலதிபர் ஜேப்பியாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை. விதிகளை மீறி, அனுமதியின்றி தனியார் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கு அமைத்த போது, சுவர் சரிந்து, பத்து பேர் பலியான குற்றச்சாட்டு இவர்மீது பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட தனியார் கல்லூரியின் உரிமையாளர், ஜேப்பியார்.
கட்டடப் பொறியாளர் அண்ணாதுரை, “கல்லூரி தலைவர் ஜேப்பியார், பணியை விரைவாக முடிக்கும்படி கூறியதன் அடிப்படையில், பணியை வேகமாக செய்ய முயன்றபோது, விபத்து ஏற்பட்டது” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பாலியல் வன்முறை..வளைகுடா நாடுகளுக்கு நேபாள அரசு தடை

காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

உரிமையாளர்கள் ஓட்டம் உணவின்றி ஈமு கோழிகள் இறக்கும் பரிதாபம்

ஈரோடு:பெருந்துறை, "சுசி' ஈமு நிறுவனம் மூடப்பட்டதன் தொடர்ச்சியாக, பெருந்துறையில் இயங்கி வந்த, ஐந்துக்கும் மேற்பட்ட, ஈமு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உணவு, தண்ணீரின்றி இந்நிறுவனங்களில் உள்ள ஈமு கோழிகள் பரிதாபமாக இறக்க ஆரம்பித்துள்ளன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிக அளவு ஈமு கோழி நிறுவனங்களும், பண்ணைகளும் உள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், ஈமு வளர்ப்பு திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், "சுசி' ஈமு நிறுவனத்தில், கடந்த மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படாததால், முதலீட்டு தொகையை திருப்பி கேட்டு, முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"சுசி' ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை, மூன்று நாட்களாக முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருவதால், பெருந்துறை பகுதியில் இயங்கி வந்த, பிற ஈமு நிறுவனங்களும், மூடுவிழா காணத் துவங்கி உள்ளன.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்ஸிகா!

தனது வெகுளித்தனமான சிரிப்பாலும், நடிப்பினாலும் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட ஹன்ஸிகா மோத்வானி .இதுவரை 20 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்  
இன்று தனது 21-வது வயதில் காலெடுத்து வைக்கிறார். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இயலாதவர்களுக்கு உதவ்ய்ம் மனப்பான்மை ஹன்ஸிகா மோத்வானிக்கு இயல்பாகவே அமைந்த ஒன்று. தனது இந்த பிறந்தநாளை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் என்று இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் ஹன்ஸிகா மோத்வானி.சில தமிழ் நடிகைகள் ஏற்கனவே இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் வரிசையில் ஹன்சிகா மோத்வானியும் இப்போது சேர்ந்திருக்கிறார். திரையுலக நடிகர், நடிகைகளும் ஹன்ஸிகாவின் ரசிகர்களும் ஹன்ஸிகா மோத்வானியின்&ட்விட்டர் பக்கத்தில் இடைவிடாது வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஹன்ஸிகாவும் அவர்களுக்கு தவறாது தனது நன்றியை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை ஏப்பம் விட்ட கேரளா அமைச்சர் கணேஷ்குமார்

நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்து விவகாரம்: கேரள அமைச்சர் மீது சகோதரர் புகார் Posted by: Essaki




Actress Srividya S Brother Complaints To Chandy திருவனந்தபுரம்: உயிலில் எழுதி வைத்தப்படி தங்கள் குடும்பத்துக்கு சேர வேண்டிய சொத்துகளை தர மறுக்kகும் பிரபல மலையாள நடிகர, தற்போதைய  அமைச்சர் கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமன் புகார் அளித்தார்.
பிரபல நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2006ம் ஆண்டு இறந்தார். அவருக்கு சென்னை, திருவனந்தபுரத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவர் இறப்பதற்கு முன்பாக உயில் எழுதியுள்ளார்.

ஏன்.. நடராஜன் மீதும் ஒரு வழக்கு போட்டு பார்க்கலாமே!”

முதல்வர் ஜெயலலிதா என் மீது மட்டுமா வழக்கு போட்டார்? உடன்பிறவா சகோதரியின் கணவர் மீதும்தான் போட்டார்! கோர்ட்டில் சந்திச்சா போச்சு” என்று கூறியிருக்கிறார், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது என்பதை எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் இருந்து, மீடியா வரை எல்லோரும் சொல்லிக் காட்டுகிறார்கள் என்ற நினைப்பிவோ, என்னவோ, மீடியாவில் இருந்து முன்னாள் மினிஸ்டர் வரை வழக்கு மேல் வழக்காக போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். “என் மீது மட்டுமா வழக்கு இருக்கிறது? உங்க அத்தனை பேர் மீதும் வழக்கு இருக்கிறதே!”
தமிழக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து அரசியல்வாதிகள், மீடியாக்கள் மீது போடப்பட்ட எந்தவொரு வழக்கிலும், தண்டனை வழங்கப்படவில்லை என்ற நிலையில், தம்மீது போடப்பட்ட வழக்கு பற்றி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Bangalore தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் 46 மாடி

 Mantri Developers Launch Mantri Pinnacle Tallest Towers
 ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக (triplex) இருக்குமாம். இந்த 46 மாடிகளிலும் சேர்த்து மொத்தமே 133 வீடுகள் தானாம்.
பெங்களூர்: தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது.
46 மாடிகள் கொண்ட இந்தக் கட்டத்தை மந்த்ரி டெவலப்பர்ஸ் நிறுவனம் கட்டி வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும்.

1 லட்சம் கோடி இழப்பு!! தமிழக கிரானைட் குவாரி முறைகேடு

பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சீல்!;Posted by: Mayura Akilan



 மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரி நடத்தி அரசின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வருவாய் இழப்பு ஏற்படுத்திய மிகப் பிரபலமான பி.ஆர்.பி கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை கபினி அணை நிரம்பும் நிலையில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து 10,000 கண அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரளாவின் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 20,000 கண அடி அளவுக்கு தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
அணையின் மொத்த கொள்ளவு 2,284 அடி. தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் 2,282 அடி வரை தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி 10,000 கண அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சிம்சா வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும்

jism-2 தான் அந்தப்படம். 'சீன் இல்லை’ என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டாலும், வசூலில் குறைவில்லை. சன்னி லியோனின் இந்தியத் திரைப்பிரவேசம் கடைசியாக நிகழ்ந்தே விட்டது.  
நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ். முன்பாகவே நான்கு முறை இந்தியாவுக்கு வந்திருந்தாலும், இது ஸ்பெஷல் வருகை.
சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பாதிரியார் கைது உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை ஏமாற்றி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
  வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆரணி 28 வயது இளம்பெண். 
இவர், நேற்று ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  பிசியோதெரபி முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனது பெற்றோருடன் கடந்த 2005ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி விஏகே நகரில் வசித்தபோது, ஆரணியில் பாதிரியார் படிப்புக்காக வந்த சித்தூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த டால்வின் கிறிஸ்டிதாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்தோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனால் கர்ப்பம் ஆனேன்.

ஆண்பாவம், மன்மதலீலை ஆகிய 9 படங்கள் மீண்டும்

ஆண்பாவம், மன்மதலீலை, தில்லுமுல்லு ஆகிய படங்கள் மீண்டும் தயாராகிறது தமிழ் திரையுலகில் 1980களில் கலக்கிய ஹிட் படங்களை மீண்டும் தயாரிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.தில்லுமுல்லு, மன்மத லீலை, சட்டம் ஒரு இருட்டறை, அக்னிநட்சத்திரம், சகலகலா வல்லன், ஆண்பாவம், புதியபாதை, அமைதிப்படை, இன்று போய் நாளை வா ஆகிய 9 படங்கள் மீண்டும் தயாராகின்றன.
மன்மத லீலை, சகலகலா வல்லன் படங்கள் கமல் நடித்தவை. தில்லுமுல்லு ரஜினியின் படம், சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்த் நடிப்பில் வந்தது. அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக்கும், ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன், பாண்டியனும் இணைந்து நடித்து இருந்தனர். புதிய பாதையில் பார்த்திபனும், அமைதிப்படையில் சத்யராஜும் நடித்து இருந்தனர். இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் நடித்து இருந்தார்.இப்படங்களுக்கான நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. முன்னணி நடிகர்களிடம் இப்படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது

இயற்கை, விற்பனைக்கு! சென்னைக்கு மிக அருகில்

“தென்பெண்ணை – கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?”
“வாட்…? தென்பெண்ணையா..புதுசா இருக்கே..எதாவது பலகாரத்தோட பெயரா?”
“இல்லைங்க.. பாரதியார் கூட சொல்லியிருக்காரே.. காவிரி தென்பெண்ணை பாலாறு…”
“ஓஹோ…அவர் அப்படி சொல்லிருக்காரா.. ஒருவேளை தென்சென்னை-னு சொல்றதுக்கு பதிலா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி தென்பெண்ணைன்னு சொல்லிருப்பாரோன்னு நினைச்சேன்.”
இதற்கு மேல் தாங்காது என்று அங்கிருந்து நகர்ந்து கொண்டேன். நல்லவேளை “ஹு ஈஸ் பாரதியார்” என்று கேட்காமல் போனார்.
இந்தக் காலத்து கான்வென்ட் பிள்ளைகளிடம் – குறிப்பாக தமிழை மொழிப்பாடமாக எடுக்காத தமிழ் சிறார்களிடம் – அந்தக் கேள்வியையும் எதிர்பார்க்கலாம். நிற்க.
சாத்தனூர் அணைக்கட்டு பற்றித் தெரிந்தவர்களுக்கு கூட அதில் இருப்பது தென்பெண்ணையாற்று நீர்தான் என்பது தெரியாது.

ஜேப்பியார் கைது! கட்டிடம் இடிந்து 10 பேர் பலியான வழக்கு!

கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்த வழக்கில் கல்லூரியின் தலைவர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் "ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் கூடைபந்து விளையாட்டு அரங்கு கட்டும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 06.08.2012 அன்று புதிதாக கட்டப்பட்டு வரும் விûளாயட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் வெளி மாநில தொழிலாளர்கள், 10 பேர் இறந்தனர்.
கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்த வழக்கில் கல்லூரியின் தலைவர் ஜேப்பியார் கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூரில் சிகிச்சை பெற்று வரும் ஜேப்பியார் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

HIgh Court:குழந்தையின் கனவை தகர்த்தவர்கள் அப்பாவிகளா?

சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே சிறுமி விழுந்து பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பள்ளியின் தாளாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளரின் ஜாமின் மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை, தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ருதி, கடந்த மாதம் 27ம் தேதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து, உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானாள்.
ஜாமினுக்கு எதிர்ப்பு: இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தாளாளர் விஜயன், ஆய்வாளர் ராஜசேகரனின் ஜாமின் மனுக்களை, செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதி அக்பர் அலி விசாரித்தார். ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் வாதாடினர்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன.


பூமியின் வட துருவம் தன் நிலையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து விட்டது.
பூமியின் பரப்பில் உள்ள மின் காந்த தன்மையை நிச்சயிப்பது இந்த இரு துருவங்களில் இருக்கும் காந்த சக்தியே


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தம்பா விமான நிலையம் முந்தைய நாள் வரை அமைதியாக இருந்தது, கலகலப்பாக இருந்தது…. ஆனால் அன்று அதே விமான நிலையத்தை கலவரமும், பயமும் மழை மேகம் போல சூழ்ந்து கொண்டது. விமான நிலைய சிப்பந்தி தான் முதலில் அதை கவனித்தார்.
தூரத்தில் இருந்து பார்த்த போது, பிரதான ஓடுதளத்தில் குப்பைகள் சில இருந்தன. தொலை நோக்கு கருவியின் உதவியோடு, அருகில் பார்த்த போது கொஞ்சம் விபரிதமாக பட்டது. அவைகள் பறவைகள். ஒன்றல்ல இரண்டல்ல சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன. மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. தன் மேலதிகாரிக்கு இதை தெரிவித்து விட்டாலும் கூட, இன்னும் அந்த சிப்பந்தி அதை குறித்து யோசித்து கொண்டுதான் இருந்தான். அந்த ஏர்போர்ட் பரபரப்பானது. இந்த மர்ம சாவு குறித்து பல வித ஊகங்கள், பல சிந்தனைகள் என்றாலும் எதுவும் ஒரு ஆணித்தரமான காரணத்துக்கு இட்டு செல்லவில்லை. பல திசைகளில் இதன் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. அனைவரும் இது குறித்து கவலையானார்கள். இந்த மர்ம சாவு, தொடர்கதையாக நீண்டது. அது அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

ஆப்பிரிக்கா நாடுகளில் சீனா முதலீடு அமெரிக்கா எரிச்சல்

Africa’s Development and China’s Imports
China-Africa trade is rising sharply. Only US$3 billion (b) in 1995, it was $55b in 2006, balanced slightly in Africa’s favor. In 2006, China’s trade with Africa was merely 3% of its US$1.76 trillion foreign trade.  By 2008, China’s trade with Africa totaled $107b, now distinctly in Africa’s favor, but China’s foreign trade had reached $2.56 trillion, making trade with Africa still only 4% of its total trade.7 In 2006, China had been in third place, behind the US and France, among Africa’s trade partners, while by 2008 China had leapfrogged over France, but still behind trailed the US, with $140b of trade.  China asserts that its trade is responsible for 20% of Africa’s economic growth.8
ஆப்பிரிக்கா நாடுகளில் சீனா தனது முதலீடு செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அமெரிக்கா சீனா முதலீடு செய்யும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருவாதாக குறைகூறியுள்ளது. ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சீனா, ஆப்பிரிக்கா பகுதியில் முதலீடு செய்வது குறித்து குறை கூறியிருந்தார். இதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. சீனா, ஆப்பிரிக்கா நாடுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது.

பார்ப்பன சாதிவெறி மாணவர்களின் தலைமுடியை வெட்டிய நவீன தீண்டாமை

அத்வானி கருத்தை எதிர்த்து போராடுங்கள் சோனியா காந்தி ஆத்திரம்

 Sonia Loses Cool Over Advani S Remark அத்வானி பேச்சால் கொதித்தெழுந்த சோனியா: லோக்சபாவில் ரகளையோ ரகளை

டெல்லி: கோடிக்கணக்கில் பணத்தை செல்வு செய்து வாக்குகள் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி லோக்சபாவில் தெரிவித்தார். அவரது கருத்தைக் கேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொதித்தெழுந்துவிட்டார்.
நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத் தொடர் இன்று துவங்கியவுடனேயே இரு அவைகளிலும் அஸ்ஸாம் வன்முறை குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நண்பகல் 12 மணி் வரை ஒத்தி வைக்கப்பட்டன.

விரைவில் சிதறப் போகிறது விஜயகாந்த் கட்சி ?.. ஏற்பாடுகள் தயார்??

வெங்காயத்தையும், பழைய சோற்றையும் தின்று பழகிய இந்த விஜயகாந்த், எதற்கும் பயப்பட மாட்டான். என்னை பிடித்து சிறையில் அடைத்தாலும் அதைப் பற்றி கவலைப்படுபவன் அல்ல. கொசுக் கடிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். அங்கேயே படுத்துவிட தயாராக இருக்கிறேன்” என்று வீர முழக்கம் இட்டிருந்தார் விஜயகாந்த் .
ஆனால், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களில் பலர் வெங்காயம் சாப்பிட ரெடியாக இல்லை என்பதுதான் சிக்கல்!
தேமுதிகவை முற்றிலும் சீர்குலைத்து கட்சியைப் பாதியாக உடைத்து பலரை வெளியே இழுக்க முக்கியக் கட்சியின் தரப்பிலிருந்து ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் தேமுதிகவிலிருந்து சில முக்கியத் தலைகள் வெளியேறுவார்கள் என்றும் இந்த பரபரப்புச் செய்தி தெரிவிக்கிறது.
ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் தேமுதிக வைத்திருந்துபோது கூட கட்சி படு கட்டுக்கோப்புடன் இருந்தது. அடுத்தடுத்து வாக்கு வங்கியை கூட்டிக் கொண்டே போனது. இதனால் அக்கட்சியைக் கூட்டணி சேர்க்க அதிமுக ஓடோடி வந்தது. ஆனால் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் கையில் இருந்தும் கூட கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாமல் அக்கட்சித் தலைமை கடுமையாக தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.
அதற்குப் பல காரணங்கள்...
- அதிமுகவுடன் கூட்டணி வைத்து அது ஆட்சியையும் பிடித்து விட்டது. இதுவரை தேர்தலுக்காகப் போட்டியிட்டும், கட்சிக்காக செலவழித்தும் இழந்ததை எப்படியாவது மீட்டு விடலாம் என்று 99 சதவீத தேமுதிகவினர் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் விஜயகாந்த். சட்டசபையில் வைத்து பகிரங்கமாக அதிமுகவினரை நோக்கி கையை முறுக்கி, உதட்டைக் கடித்து, கோபமாகப் பேசி எல்லாவற்றையும் முறித்துப் போட்டு விட்டார் விஜயகாந்த்.

பாலாவின் பரதேசி... 90 நாளில் படப்பிடிப்பு ஓவர்...

சென்னை: யாரும் எதிர்ப்பாராத திட்டமிடல், விறுவிறு வேகத்துடன் தனது அடுத்த படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் பாலா. படத்தின் பெயர் நாம் முதலில் சொன்னது போல பரதேசிதான்.
சேது, நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன் இவனுக்குப் பிறகு பாலா எழுதி இயக்கும் படம் இந்த பரதேசி. இந்தப் படத்தின் தயாரிப்பும் பாலாதான்!
1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் இந்த முறை கூட்டணி அமைத்துள்ளார் பாலா.
கதாநாயகனாக அதர்வாமுரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா தன்ஷிகா நடித்துள்ளனர்.

மத்திய அரசின் அதிரடி செல்போன் இலவசம்

 Govt Scheme Promises Mobile Phone



டெல்லி: வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் அனைத்து ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் 60 லட்சம் குடும்பங்களுக்கு இலவச செல்போன்கள் தரப்படவுள்ளன.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் இந்த திட்டத்தை அறிவிக்க உள்ளார்.
`ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்' என்ற இந்த திட்டத்தின் கீழ் வெறும் செல்போன் மட்டுமல்லாமல், 200 நிமிடங்கள் இலவச டாக் டைமும் அளிக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திட்டக் குழு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சத்துடன், பிரதமர் அலுவலகம் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்து வருகிறது.

சத்தியராஜ், சரத்குமார் மீது வழக்குப் பதிவு எல்லாம் ஈமு கோழி காசுக்காக

ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர்கள், சத்தியராஜ், சரத்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுசி ஈமு நிறுவனம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் விளம்பரப்படத்தில் மாடல்களாக பிரபல நடிகர்கள் சத்தியராஜ், சத்தியராஜ் நடித்துள்ளனர்.
நடிகர்கள் சொன்னால் நம்பி ஏமாறும் மக்கள் அவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரத்தினைக் கண்டு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சுசீ ஈமு நிறுவனம் சொன்னதைப் போல ஊக்கத்தொகையும், போனஸ் பணமும் வழங்கவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனிடையே ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது செக்சன் 420ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது செக்சன் 120 (பி)யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈமு கோழி Faud.. சத்தியராஜ், சரத்குமார், பாக்கியராஜ், பார்த்திபன்

ஈரோடு: நடிகர்களை வைத்து கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்த ஈமு கோழி நிறுவனங்கள் ஊக்கத் தொகை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பணத்தை திரும்ப தர வலியுறுத்தி ஈமு கோழி நிறுவனத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
‘கோழி வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம்'.. இது ஈமு கோழி நிறுவனங்கள் சொல்லும் தாரக மந்திரம். பிரபல திரைப்பட நடிகர்கள் சத்தியராஜ், சரத்குமார், பாக்கியராஜ், பார்த்திபன் தொடங்கி பரவை முனியம்மா வரை ஈமு கோழி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
உள்ளூர் சேனல் வரை உலகச் சேனல் வரை ஈமு கோழி நிறுவனத்தின் இந்த பித்தலாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. அதனை உண்மை என்று நம்பிய அப்பாவி விவசாயிகள் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பட்டை  நாமத்தை சாத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர் பலர். இதனால் ஈமு கோழிகளை வளர்க்கும் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

Sneha:பிரசன்னாவுக்கு வாய்ப்பு கேட்கிறேனா?

சென்னை: பிரசன்னாவுக்கு யாரிடமும் வாய்ப்பு கேட்டு வாங்குவதில்லை என்றார் சினேகா. பிரசன்னா, சினேகா காதல் திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே ‘அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தனர். 
திருமணத்துக்கு பிறகு விளம்பர படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். பிரசன்னாவுக்கு சினேகா வாய்ப்புகளை கேட்டு வாங்குவதாகவும், அவருக்கு வாய்ப்பு தந்தால்தான் நான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி சினேகா கூறியதாவது: நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு கிடைக்கும் கவுரவமாக கருதுகிறேன். இது மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் இருக்கிறது.

காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வங்கி அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சி: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் வங்கி அதிகாரிக்கு 10 வருட சிறை தண்டனையும், ரூ.1.15லட்சம் அபராதமும் விதித்து திருச்சி மகளிர் கோர்ட் உத்தரவிட்டது. திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூரை சேர்ந்தவர் அருண் பிரசாத் (30). தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியின் அதிகாரி. இவருடன் அதே வங்கியில் உறையூரை சேர்ந்த பாத்திமா (29)  பணியாற்றினார். இருவரும் 2006 முதல் காதலித்தனர். இதில் பாத்திமா கர்ப்பமடைந்தார். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி, 2007 ஜூலை 2ம் தேதி தில்லை நகரில் உள்ள மருத்துவமனையில் பாத்திமாவுக்கு,  கருகலைப்பு செய்தார்.

என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌ வரூம்‌ ஆனா‌ வரா‌து…’

பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னா‌‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌. அவருக்‌கு வயது 87.
சமீ‌பத்‌தி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன தொ‌ட்‌டல்‌ பூ‌ மலரும்‌ படத்‌தி‌ல்‌ அவர்‌ வடிவேலுவுடன் பே‌சி‌ய “வரும்‌… ஆனா‌ வரா‌து” என்‌கி‌ற வசனம்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ல்‌லம்‌ பே‌சப்‌பட்‌டது. ‌
வயதைப் பொருட்படுத்தாத உழைப்பாளி அவர். தனது தள்ளாத வயதிலும் கூட, இளைஞனைப் போல தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
இந்‌த வயதி‌லும்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க பே‌சி‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தவர்‌ 07.08.2012 அன்று மதி‌யம்‌ சா‌ப்‌பி‌ட்‌டு படுத்‌தவர் மா‌லை‌‌ 4 மணி‌க்‌கு கா‌லமா‌னா‌ர்‌.

மதுரையில் அம்பேத்கர் சிலைகள் உடைப்பு

 Ambedkar Immanuel Sekaran Statues Vandalised
 மதுரையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் அங்கு பதட்டம் நீடித்து வருகின்றது.
மதுரை அவ‌னியாபுர‌ம் அருகே உள்ள பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் வழியில் உ‌‌ள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை நேற்று (7ம் தேதி) நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். இதே போன்று பெருங்குடி அருகே சின்னஉடைப்பு கிராமத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன், டாக்டர் அம்பேத்கர் சிலைகளையும் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்திவிட்டு தப்பிவிட்டனர்.

ஏன்தான் இவரை MP ஆக்கினார்களோ?

Viru News
தி.மு.க. எம்.பி. மற்றும் நடிகர் (?) ரித்திஷ் இனி தைரியமாக வெளியே தலைகாட்ட முடியும், அட்லீஸ்ட், ஒரு வழக்கை பொறுத்தவரை! நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வழக்கை தவிர அவர்மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி எம்.பி. ரித்திஷூக்கு அவரது தொகுதிக்குள் இருப்பது விசித்திர நிலைமை! மற்றைய தி.மு.க.-வினருக்கு எதிர்க் கட்சிகளில் எதிரிகள் அதிகம் இருந்தால், இவருக்கு அதிகம் இருப்பது வெளியே அல்ல, சொந்தக் கட்சிக்குள்தான்.
தி.மு.க.-வின் மற்றைய முக்கியஸ்தர்களை வழக்கு போட்டு உள்ளே தள்ள, ஆளும் கட்சியும், போலீஸூம் முயற்சி எடுப்பது வழக்கம். இவரது விஷயத்தில் அந்த சிக்கல்கூட யாருக்கும் கிடையாது. இவரது கட்சிக்காரர்களே, இவரை வசமாக மாட்டி விடுவார்கள்.