ஞாயிறு, 9 அக்டோபர், 2011

உலக இசைப் பயணம்-ஹரிஹரன், சங்கர் மகாதேவன்

 சாதகப் பறவைகளின் உலக இசைப் பயணம்-ஹரிஹரன், சங்கர் மகாதேவன் பங்கேற்பு

சாதகப் பறவைகளின் உலக இசைப் பயணம்-ஹரிஹரன், சங்கர் மகாதேவன் பங்கேற்பு

 தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சங்கரின் 'சாதகப் பறவைகள்' இசைக்குழு தற்போது 'வணக்கம் ஐரோப்பா' என்ற தலைப்பில் ஐரோப்பிய நாடுகளை சுற்றிவர கிளம்பியிருக்கிறார்கள்.ஐரோப்பிய இசை நிகழ்ச்சிக்கு முன்பாக இரண்டு நாட்கள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார்கள். இதில் ஹரிஹரன், ஷங்கர் மாகாதேவன், கார்த்திக், சுஜாதா, ஸ்வேதா, ரெனைய்னா என முன்னணி பாடகர்கள் கலந்துகொள்கிறார்கள். இம்மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பெர்மிங்ஹாமிலிருக்கும் என்.டி.அரேனா அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளன்று இந்தி பாடல்களும், இரண்டாவது நாளன்று தமிழ்ப் பாடல்களும் பாடப்போகிறார்கள். அப்பன்ஸ் புரமோஷன்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் சிவ கார்த்திகேயனும், கோபிநாத்தும் தொகுத்து வழங்கப் போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை முடித்துகொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பறக்கும் சாதகப் பறவைகள், இம்மாதம் (அக்டோ பர்) 14ஆம் தேதி ஜெர்மனியிலும் அதைத் தொடர்ந்து 15ஆம் தேதி பாரிஸ், 16ஆம் தேதி சுவிட்சர்லாந்து, 21ஆம் தேதி டென்மார்க், 22 மற்றும் 23ஆம் தேதிகளின் நார்வே என்று மிகப்பெரிய ஐரோப்பா இசை சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல் என்று தமிழ் சினிமாவின் சாதனையாளர்களின் பாடல்களை இந்த இசை நிகழ்ச்சியில் பாட இருக்கிறார்கள். மேலும் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியும் இந்த இசை கலைஞர்களுடன் தனது இசைப் பயணத்தை மேற்கொள்கிறார் என்பது இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு. இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் ஒவ்வொரு நாட்டிலும், திரையுலகில் ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் சாதனையை கெளரவிக்கும் விதமாக அவருக்கு மரியாதை செய்யவும் இருக்கிறார்கள்.

குளோபல் மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் என்ற அமைப்பு நடத்தும் இந்த இசை நிகழ்ச்சிக்கு 'சாதகப் பறவைகள்' சங்கருடன் அவருடைய இசைக் குழுவைச் சேர்ந்த 20 இசைக் கலைஞர்களும் பயணம் செய்ய இருக்கிறார்கள். (டிஎன்எஸ்)

கருத்துகள் இல்லை: