திங்கள், 10 அக்டோபர், 2011

வைகோ: அதிமுகவுடன் கூட்டணி வைத்து பழி்ககு ஆளானோம்

அதிமுகவுடன் கூட்டணி வைத்து பழிக்கு ஆளானதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகரசபை தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் கார்கண்ணன் போட்டியிடுகிறார். சிவகங்கையில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட வைகோ கார்கண்ணனுக்கு ஆதரவாகப் பேசினார்.


அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவுடன் கூட்டணி வைத்து பழி்ககு ஆளானோம். ஆனால் காலம் அந்தப் பழியைத் துடைத்துவிட்டது. சுயமரியாதை, தன்மானம் தான் முக்கியம் என்று தெரிவித்து கூட்டணியை விட்டு வெளியேறினோம். அதனால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தமிழகத்திற்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்க நாங்கள் போராடுகிறோம். முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முடிவெடுத்துவி்ட்டது. அதற்காக அணையில் 2 பகுதியையும் பார்த்து வைத்துள்ளது. புதிய அணை கட்ட ரூ. 666 கோடி நிதியும் ஒதுக்கிவிட்டது. புதிய அணை மட்டும் கட்டப்பட்டால் தென் தமிழகமே வரண்டு போய்விடும்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை காக்க மதிமுக போராடி வருகிறது. 3 பேரை மரண தண்டனையில் இருந்து மீட்கப் போராடுகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை எதிர்த்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை எதிர்த்தும் போராடுகிறது.

உலகில் எங்கு துன்பம் என்று தெரிந்தாலும், அதை எதிர்த்து போராடுகிறோம் என்றார்.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வைகோ தம்பி 3வது முறையாக போட்டி

கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தம்பி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் கடந்த 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் தனது சொந்த கிராமமான குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக

கருத்துகள் இல்லை: