நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் திரும்பியதால், மகிழ்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்க்ள 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்..
இவனுங்க முட்டாள்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லையா????இந்த லூசுங்கலேக்கெல்லாம் வீடில சோறு போடுபவர்களை சொல்லணும்.../தலைவர் என்றானுங்க...யாருக்கு எதுக்குடா தலைவன்...இப்டியே இருந்து தங்களுடைய வாழ்கையை தொலைக்க போகிறோம் என்பதை..இவர்களுக்கு...1000 பெரியார் வந்தாலும் புரியவைக்க முடியாது...இந்த லட்சணத்தில்...வல்லரசு ஆக போகிறோம் என்று சொல்கிறோம்...முதலில் அடிப்படை அறிவுள்ள மனிதராகனும்..மீதி அப்புறம் பார்க்கலாம்..
2020 ல் இந்தியா மிக வளர்ந்த நாடாக இருக்கும் என்பதை தெரிவிக்கிறது.
சூப்பர் வேற வேலையே இல்லையா உங்களுக்கு? நடிகனின் பின்னால் ஏன் ஓடறீங்க?
தமிழன் திருந்த மாட்டான்..........திருத்தவும் முடியாது ......அங்கே தினம் தினம் செத்து மடியும் இனத்தை பற்றி கவலை இல்லை இவர்களுக்கு.
பைத்தியக்காரன் அட பாவிங்கலா திருந்தவே மாட்டிங்களா.......செம்மொழி இனமா டா இது....என்ன கொடுமை நக்கீராஆஆ..
மிழ் உள்ளங்களே, என்றைக்காவது உங்கள் வீட்டில் யாருக்காவது உடல் நலம் பதிக்கபட்டால் நீங்கள் இவ்வாறு செய்ததுண்டா, ரஜினிக்காக முடியை கொடிதீர்கள்,இனி குடும்பத்தில் யாரவது நலமில்லாமல் இருந்தால், முடியைத்தவிர வேற எதாவது உடம்பில் உள்ள ஒரு உறுப்பை காணிக்கை இடுங்கள். ரஜினி மகள், திருமனதின்போது யார் யார் திருமணத்தில் கலந்து கொண்டார்களோ அவர்களில் யாராவது மொட்டை அடித்ததுண்டா, நாம் எல்லாம் வெளியில் நின்றும் , டிவியில் , திருமணத்தை பார்துக்கொடும் இருந்தோம். திருந்துங்கள் நண்பர்களே
நாடு முன்னேற இது ஒரு எடுத்துக்காட்டு ஓகே ஆனால் அதே மாதிரி உங்க குடும்பத்தை பார்க்கணும் . இது தலைவரின் வேண்டுகோள்
அட பைத்தியங்களா நீங்க திருந்தவே மாடிங்களா அவன் உங்களுக்கு என்னடா செய்தான் கோடி கோடியாய் அள்ளி கொடுத்து மொட்டையா போடும் முட்டாள்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக