டெல்லி: தன்னை இந்துவாகக் கருதாத இஸ்லாமியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது மதங்களுக்கு இடையே துவேஷத்தைப் பரப்புவதாக வழக்குப் பதிவு செய்ய தேசிய சிறுபான்மையினர் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஒரு பத்திரிக்கையில் சாமி எழுதியுள்ள கட்டுரையில், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைவரும் 'இந்துக்கள்' என்ற மனப்போக்கு கொண்டவர்களாக மாற வேண்டும். இந்த 'இந்து மத மரபை' ஏற்கும் முஸ்லீம்களை மட்டுமே நாம் பரந்த இந்து சமாஜம் எனப்படும் இந்துஸ்தானில் ஒரு பகுதியாக ஏற்க வேண்டும்.
தன்னை இந்து மத மரபைச் சாராதவர் என்று கருதுவோரை அல்லது வெறும் ஒரு ரிஜிஸ்ட்ரேசன் மூலம் தன்னை இந்தியர்களாகக் காட்டிக் கொள்வோரை (இவர்கள் வெளிநாட்டினர்), இந்தியாவில் இருக்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களது ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தப் பதவிக்கும் அவர்கள் போட்டியிட முடியாதபடி செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார் சாமி.
இதற்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந் நிலையில் சிறுபான்மைக் கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில் சாமி மீது வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த இக் கூட்டத்தில் துணைத் தலைவர் சங்லியானா, உறுப்பினர்கள் எச்.எஸ்.ஹன்ஸ்பல், வினோத் சர்மா, கேகி தாருவாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில், சாமி மீது எப்ஐஆர் பதிவு செய்வது மட்டுமல்லாமல், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக