இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், "உளவாளி இளவரசி' என
அழைக்கப்பட்டவருமான நூர் இனாயத் கானுக்கு பிரிட்டனில் மார்பளவு
வெண்கலச்சிலை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது, பிரான்ஸில் தங்கி பிரிட்டனுக்காக உளவு பார்த்து வந்தார் நூர் இனாயத் கான்.
பிரான்
ஸில் பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்த போது, அவரது
அதிகாரிகள் அவரை பிரிட்டன் திரும்ப வற்புறுத்தினர். இருப்பினும்
பிரான்ஸ் தோழர்களை தனியே தவிக்கவிட விரும்பாத நூர், தனி ஆளாக
உளவறிந்து வந்தார்.
பின்னர், ஜெர்மனி உளவாளிகளிடம் பிடிபட்டு, 1944ஆம் ஆண்டு தன் 30ஆவது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார். <
திப்பு
சுல்தானின் கொள்ளுப் பேரன் இனாயத்கானின் மகளான நூர், தன் சிறு
வயதில் பிரிட்டனில் கார்டோன் ஸ்கொயர் என்ற இடத்தில்
தங்கியிருந்தார். அந்த இடத்துக்கு அருகில், நூர் இனாயத்கானின்
மார்பளவு வெண்கலச் சிலையை, 2ஆம் எலிபெஸத் ராணியின் மகளான
இளவரசி ஆனி திறந்து வைத்தார்.
"இந்த மாபெரும் தியாகத்தை மக்கள் மறந்து விடக்கூடாது. தன் வீரத்துக்காக அவர் மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளார்' என ஆனி தெரிவித்தார். முஸ்லிம் இனத்தவர் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பெண்மணிக்கு இது போன்ற கௌரவம் பிரிட்டனில் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை. 10 மாத கடும் சித்ரவதைக்குப் பிறகும், நூரிடம் இருந்து உண்மை எதையும் ஜெர்மன் உளவாளிகளால் வரவழைக்க முடியவில்லை. இதனைக் கௌரவிக்கும் விதமாக, நூரின் இறப்புக்குப் பின், பிரிட்டனின் உயரிய விருதுகளுள் ஒன்றான "ஜார்ஜ் கிராஸ்' விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளையின் தலைவர் சரபாணி பாஸன், நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, நூர் பற்றிய பிரசார இயக்கத்தையும் நடத்தி வந்தார்.< இந்த பிரசாரத்துக்கு, பிரிட்டன் பிரதமர் கேமரூன், திரைப்பட இயக்குநர் குரிந்தர் சதா, நாடகக் கலைஞர் நினா வாடியா, சிதார் இசைக்கலைஞர் அனுஷ்கா சங்கர் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தான் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் நூர் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார் என்று பாஸன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக