வெள்ளி, 9 நவம்பர், 2012

நாராயணசாமிக்கு தெரியாமலே போய் விட்டதா?'' கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவகளுக்கு Jayalalitha ஆதரவு

சென்னை:""கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்ளை எல்லாம், தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் முதல்வர் ஜெ., என்பது நாராயணசாமிக்கு தெரியாமலே போய் விட்டதா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் அவரது பேட்டி:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை, தி.மு.க., எதிர்ப்பதைப் போலவும், முதல்வர் ஜெ., ஆதரிப்பதைப் போலவும், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேட்டி கொடுத்திருக்கிறார்.   

s.maria alphonse pandian - chennai ,இந்தியா

ஜெயா கூடன்குள விஷயத்தில் என்ன நிலை எடுத்திருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு இரட்டை நிலை புதிராகவே உள்ளது...ஒரு புறம் போராட்டக்காரர்களுடன் "நான் உங்களோடு இருக்கிறேன்" என கூறுவதும் மறுபுறம் அவர்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு அடிதடி நடத்துவதுமாக உள்ளார்....ஒரு புறம் உதயகுமாரை காவல்துறை தேடுவதாக கூறுவதும் உண்மைக்கு புறம்பானது...இதுவரை உதயகுமாரை கைது செய்யாததும் வெட்ககேடானது....கூடன்குள பணிகளை நிறுத்தி வைக்க சொல்லி சட்ட சபையில் தீர்மானம் போட்டதும் ஜெயாதானே?எதிர்ப்பாளர்களுக்கு எதிராக போராட சரத்குமாரை களத்தில் இயக்கியதும் ஜெயாதானே? ஏன் இந்த இரட்டை நிலை? அவரது சின்னம் இரட்டை இலை என்பதற்காக இப்படி நிலையிலுமா இரட்டை நிலை...?உண்மை இப்படியாக இருக்கும்போது...அமைச்சர் நாராயணசாமி ஜெயாவோடு கூட்டணி அமைப்பதற்கு அச்சாரமாக அப்படி பேட்டி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?எப்படியோ திமுகவை விட்டு காங்கிரஸ் போனால் சரிதான்....திமுகவுக்கு நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது..... 
http://www.dinamalar.com/
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் தெளிவு படுத்திய பின் தான், பணிகளைத் தொடர வேண்டும் என, தமிழக அரசு சார்பில், அமைச்சரவைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தவர் முதல்வர் ஜெ.,

கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்ளை எல்லாம், தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் முதல்வர் ஜெ., என்பதும் நாராயணசாமிக்கு தெரியாமல் போய் விட்டதா?கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு, நாங்கள் என்றும் எதிரிகள் அல்ல. நாட்டு மக்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக, விஞ்ஞான ரீதியாக, தமிழகத்தில் தொழில் வளர வேண்டும் என்று நாங்கள் ஆசைப் படுகிறோம். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: