வெள்ளி, 9 நவம்பர், 2012

நாராயணசாமி 'பல்டி' திமுக-காங் இடையே பிரச்னையை உருவாக்கிய மத்திய அமைச்சர்

 Narayanasamy Clears Air About Controversial திமுக-காங் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் எனது கருத்து திரிப்பு: நாராயணசாமி 'பல்டி'

திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் எனது கருத்து திரித்துக் கூறப்பட்டுவிட்டது என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த நாராயணசாமி, கூடங்குளம் அணு உலைக்கு முன்பு ஆதரவளித்து வந்த திமுக தற்போது பின்வாங்கி விட்டதாகவும், தற்போதும் அதிமுகவே ஆதரவளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திமுக எதிர்ப்பதைப் போலவும், ஜெயலலிதா ஆதரிப்பதைப் போலவும் பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஒன்று! கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு, அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் தெளிவுபடுத்திய பிறகுதான், பணிகளைத் தொடர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா. கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜெயலலிதா.

இவையெல்லாம் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியாமலே போய்விட்டதா?.

நாட்டு மக்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக சொல்கிறேன். என்றைக்கும் கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. விஞ்ஞான ரீதியாக தமிழகத்தில் தொழில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தான் நாங்கள் என்று கருணாநிதி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று மீண்டும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி,
திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் எனது கருத்து திரித்துக் கூறப்பட்டுவிட்டது.
கூடங்குளம் அணு உலைக்கு திமுக எப்போதுமே ஆதரவு அளித்து வருவதாகவே நான் பேட்டியில் கூறியிருந்தேன் என்று 'அந்தர் பல்டி' அடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: