தருமபுரியில் வன்னியர்
பெண்ணை தலித் பைய்யன் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதால் அந்த
சுற்று வட்டார ஊரையே கொழுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் அம்பேத்கர் படங்களை ஏந்திக்கொண்டு திரண்டனர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்து. தலித் பழங்குடி மக்களுக்குரிய பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுத்திடு. அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை பாதுகாத்திடு. தலித் கிருஷ்துவர்களை sc /ST பட்டியலில் இணைத்திடு. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு உரிய வழ்ங்கிடு என்ற கோரிக்கைகளோடு ஆர்பாட்டம் செய்ய நரசிம்மன் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.

பின் பேசிய சேலம் மாநகர மேற்கு அமைப்பாளர் பிரவீன்குமார்,காஞ்சிபுரம்
போன்ற பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கவுரவ கொலை
என்ற பெயரில் கொடூர கொலை செய்துள்ளனர். நேற்று தருமபுரியில் வன்னியர்
பெண்ணை தலித் பைய்யன் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதால் அந்த
சுற்று வட்டார ஊரையே கொழுத்தியுள்ளனர். இது எவ்வளவு கொடூரமான சாதிய வன்மம்.
இந்த வன்னிய சாதி வெறியை கண்டிக்கிறோம். நீ என்னவா வேணாலும் இரு உயர்ந்த
அந்தஸ்தில் கூட இரு. ஆனால் என் சாதியாக இல்லாமல் தலித்தாக இருந்தால் எனக்கு
நீ தாழ்ந்தவனே என்பது கணிபொறி காலத்திலும் நாம் காட்டுமிராண்டிய
கலாசாரத்திலேயே இருக்கிறோம் என காட்டுகிறது. தலித் மக்கள் அங்கு
பாதுகாப்பாக இல்லை அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. உடனடியாக அங்கு
சுற்றுவட்டார கிராம தலித் மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். ஊரை
எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் திருமணம் செய்த
அந்த ஜோடிக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். ரெண்டாயிரம் மூவாயிரம்
வருசமாக புரையோடி போயிருக்கும் சாதியை ஒழிக்கும் வழியில் முக்கியமான ஒன்று
சாதி மறுப்பு திருமணம் இதற்கு அடிப்படையாக இருப்பது காதல். எனவே அரசு சாதி
மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக